Home Blog
ஸ்ரீரங்கத்து ராட்சசி கதை முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் திரில்லரை அடிப்படையாகக் கொண்டு எழுதி இருக்கிறேன். இதில் இருக்கிற அனைத்தும் என்னுடைய சொந்த கற்பனை மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல. வெறும் புனைவுக் கதை. இந்த கதையை படித்து விட்டு வாசகர்கள் தங்களுடைய கருத்தை என்னுடைய மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளலாம். madhumathibharath@gmail.com   அன்புடன், மதுமதி பரத்     அத்தியாயம் 1   பச்சை பளிங்கு கற்களினால் செதுக்கியது போல இருந்த  அரங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம்...
Madhumathi Bharath Tamil Novels
அத்தியாயம் 15 ‘***** பழங்குடி கிராமத்தில் கொடிகட்டி பறக்கும் விபசாரத் தொழில்... உள்ளூர் மக்களின் பலத்த ஆதரவோடு’ என்ற தலைப்புக்குக் கீழே கௌதமும் மருதாணியும் இணைந்திருக்கும் அந்த போட்டோ வெளியாகி இருக்க... முற்றிலும் உடைந்து போனான் கெளதம். அது ஒரு நாலாந்தர பத்திரிக்கை தான். அந்த விஷயம் அவனுக்குத் தெரியும். இவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லையே. அவனுக்கு நன்றாகத் தெரிந்தது இது அந்த குமரனின் வேலை தான் என்று... அவனது இந்த செயலுக்கு...
Madhumathi Bharath Tamil Novels
குமரன் விசாலத்திடம் அங்கே தான் பார்த்த காட்சிகளை ஒன்று விடாமல் விலாவாரியாக பற்ற வைத்துக் கொண்டிருந்தான். அவன் சொல்ல சொல்ல விசாலத்தின் கண்கள் அதீத மகிழ்ச்சியில் பளபளக்கத் தொடங்கியது. குமரன் அத்தோடு மட்டும் நிறுத்தாமல் மருதாணியும், கௌதமும் கட்டிலில் அமர்ந்து கொண்டு ஒருவரையொருவர் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகிய தருணத்தை தன்னுடைய மொபைலில் அவன் பதிவு செய்திருந்த கோணம்  காண்போரை முகம் சுழிக்க வைக்கும் விதமாக இருந்தது. கௌதமும்,...
Madhumathi Bharath Tamil Novels
  பொழுது விடிந்த பிறகும் கூட படுக்கையை விட நகராமல் அப்படியே சுருண்டு படுத்திருந்தான் கெளதம்.  அவனுக்கு வெளியே கிளம்பிப் போகவே மனமில்லை. சீக்கிரமாக வெளியே கிளம்பிப் போய் வேலையை முடித்தால் அடுத்து என்ன நடக்கும்? ஊரை விட்டு கிளம்ப வேண்டுமே... மருதாணியை விட்டு எப்படி போவது? மருதாணியின் கண்களில் எந்த அளவிற்கு நேசத்தைக் கண்டானோ அதே அளவிற்கு நேர்மையையும் பார்த்து இருக்கிறான். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய சுய மரியாதையை இழக்க...
Madhumathi Bharath Tamil Novels
அத்தியாயம் 12 இரவு உணவை கௌதமிற்க்காக தயாரித்து வைத்து விட்டு வெகுநேரம் காத்திருந்தாள் மருதாணி. மதியம் அவளது அத்தை கண்ணம்மா வந்து போன பிறகு வீட்டை விட்டு கிளம்பியவன் அதன் பிறகு இதுவரை வீட்டிற்கு வந்து சேரவில்லை. கெளதம் அங்கே வந்த இத்தனை நாட்களில் ஒருநாள் கூட இப்படி தாமதமாக வந்தது கிடையாது. பழகாத இடம்... அதிலும் காட்டுப் பகுதி என்பதால் எப்பொழுதும் ஆறு மணிக்கு மேல் அவன் வெளியே...
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும் புரிஞ்சுதா?” என்றார் குரலில் கண்டிப்புடன். “முதல்ல அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா?” “எடு விளக்கமாத்த.... இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகப் போகுது... இன்னமும் என்ன கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம அவன், இவன்னு பேசிக்கிட்டு இருக்கே...” என்று அவளை வறுத்து எடுத்த காமாட்சியின்...
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி இருக்கான்.ஒருவேளை நீங்க தேடுறதை நிறுத்திட்டா...அவங்களுக்கு பதிலா வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டா இந்தப் பிரச்சினையில் இருந்து ஈஸியா வெளி வந்திடலாம்.அதுவும் இல்லாம...”சம்ஹார மூர்த்தியின் இமைக்காத பார்வையில் ஒரு நொடி தயங்கியவன் மீண்டும் பேசத் தொடங்கினான். “அந்தப் பொண்ணைத் தேடுறதுக்காக இவ்வளவு செலவு செய்யணுமா? இத்தனை விமானம்...இத்தனை ஆட்களுக்கு சம்பளம்...அது தவிர...
தீண்டாத தீ நீயே- சில துளிகள்😊 “நா...நான் என்ன செஞ்சேன்” “எதுக்கு இப்போ பயந்து போய் கார் கதவில பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு வர்ற” “ட்ரெஸ் எல்லாம் சேறா இருக்கே...அதுதான்...” “பொய் சொல்லாதே...முகத்தில் பயமும் டென்ஷனும் டன் கணக்கா வழியுது” “இன்னைக்கு பங்க்ஷன்ல நான் பாடணும்...ஆனா டிரஸ் எல்லாம் இப்படி...” “ஸோ...வாட்?” என்று கேட்டவன் அழகாக ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க ஒரு நிமிடம் தன்னை மறந்து பார்த்தவள் டக்கென தலையை குனிந்து கொண்டாள். “எனக்கு தெரிஞ்சு பாடுறதுக்கு...
ஹாய் மக்களே, என்னுடைய கதைகளை ஆடியோவாக பதிவதற்கு youtube ல் புதிதாக ஒரு channel தொடங்கி இருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம். உங்களது நிறை குறைகளை கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்தால் என்னை திருத்திக் கொள்வேன். Madhu Tamil Novels https://www.youtube.com/channel/UC8WOXAmnDNvhxiLyJu36NaQ
மது ஹேப்பி... கொரோனாவினால் தான் இந்த கால தாமதம்.அதை புரிந்து கொண்டு காத்திருந்த வாசகர்களுக்கும், பிரியா நிலையம் ராஜசேகர் சாருக்கும் என்னுடைய வந்தனங்கள். சரி கதையைப் பத்தி குட்டியா சொல்லட்டுமா? மனநிலை பாதிக்கப்பட்டு,பின்நாளில் சரியான பெண் நாயகி பொழில் அரசி, அவளின் ஒரே சொந்தமான அவளின் அப்பா நேரில் கூட...

மேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்

X
Don`t copy text!
error: Alert: Content is protected !!