Saturday, November 23, 2019
Home Blog
“தையல்...இங்கே வா” குளியல் அறையின் உள்ளே இருந்து குரல் கொடுத்தான் இளவரசன். ‘ஹையோ...மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா?...காலையில் இருந்து இவன் செய்யும் அக்கப்போருக்கு அளவில்லாம போச்சே...’ என்று நொந்து கொண்டவள் வேண்டாவெறுப்பாக குளியல் அறையை நோக்கி சென்றாள்.எதற்கும் இருக்கட்டும் என்று ஜாக்கிரதையாக இரண்டடி தள்ளி நின்றே அவனிடம் பேசினாள். “எதுக்கு கூப்பிட்டீங்க? சீக்கிரம் சொல்லுங்க..எனக்கு நிறைய வேலை இருக்கு”
பெரிதாக யாரிடமும் எந்தப் பேச்சும் கொடுக்காமல் அமைதியாகவே தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான் அக்னிபுத்திரன். இரவு உணவுக்கு சாப்பிடும் பொழுது கூட எதிரில் நின்று அவனுக்கு பரிமாறிய அருந்ததியின் பக்கம் அனாவசியமாகக் கூட அவன் பார்வை திரும்பவில்லை. சிவநேசனுக்கோ மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி... கண்டிஷன் எல்லாம் போட்டு அன்று அத்தனை விறைப்பாக பேசினாலும் இன்று...
அத்தியாயம் 5 அக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே அவன் மனக்கண்ணில் மாறி மாறி வந்து போனது. தன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு பெண்ணை இப்படி செய்து விட்டோமே என்ற தவிப்பு அவனை தூங்கவிடாமல் செய்தது. அவளை அப்படி...
thanalai erikum panithuli madhumathi bharath Tamil novels
அத்தியாயம் 2 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி அளவில் வீட்டை விட்டு பெட்டி, படுக்கையுடன் கிளம்பிக் கொண்டு இருந்தான் கெளதம். மரகதத்தின் கண்ணில் இருந்து எப்பொழுதும் போல கண்ணீர் ஆறாக பாய்ந்து ஓடிக் கொண்டு இருந்தது. “மரகதம்... இப்போ எதுக்கு இப்படி கண்ணில் ஜூஸ் பிழியற? அவன் அமெரிக்காவுக்கு போனப்போ அழுதே... அதுலே...
அக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே அவன் மனக்கண்ணில் மாறி மாறி வந்து போனது. தன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு பெண்ணை இப்படி செய்து விட்டோமே என்ற தவிப்பு அவனை தூங்கவிடாமல் செய்தது. அவளை அப்படி நடத்தியதற்காக...
அத்தியாயம் 4 நடு வீட்டில் ஒரு பெரிய போர் ஆரம்பம் ஆவதற்கான அறிகுறிகள் தெரிந்தது அருந்ததிக்கு . சிவநேசன் கொதித்துப் போய் இருந்தார். அவருக்கு கோபம் வருவது வெகு அரிதான நேரங்களில் மட்டுமே... அப்படியே வந்தால் எதிரில் இருப்பவர்களின் கதி  அதோகதி தான். அவர் மட்டும் அல்ல......
பெரியவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு இளவரசனின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது.பண்ணை வேலைகளை முடித்து விட்டு முடிந்த அளவு சீக்கிரம் வீடு திரும்பினான்.மாலைப் பொழுதில் வீட்டு முற்றத்தில் எல்லாருடனும் சிரித்துப் பேசினான். சிறுவயதில் தான் அடித்த லூட்டிகள்,தந்தையிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னர் தப்பிக்கும் விதம் என்று எல்லாவற்றையும் அழகாக அபிநயித்துக் காட்டி அந்த வீட்டையே கலகலப்பாக மாற்றினான்.
தனி அறையில் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து இருந்தவளின் கை, கால்கள் உதறிக் கொண்டு இருந்தது. 'எத்தனை தூரம் போராடி என்ன பயன்? கடைசியில் கல்யாணம் நடந்துடுச்சே.தப்புவதற்கு வழியே இல்லாமல் இப்படி அந்த ராட்சசனிடம் மாட்டிக் கொண்டேனே...' ஒரு வாரமாக தூங்காமல் இருந்ததாலும் ஒரு பொட்டு தூக்கம் இல்லை அவள் விழிகளில்...
அருந்ததி அந்த வீட்டின் செல்ல இளவரசி... அவளை அந்த வீட்டில் யாரும் கண்டித்துக் கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று காரில் இருந்து இறங்கவே முடியாமல் தடுமாறி நடந்து வந்தவள் வாசல்படியில் கால் வைக்கும் முன்னரே கால் பிசகி கீழே விழுந்து வைத்தாள். “அருந்ததி” என்று ஒரே குரலில் தாயும் , தந்தையும் பதட்டத்துடன் ஓடி வந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
அத்தியாயம் 3 வெளியே அக்னிபுத்திரனுடன் முகம் மலர கிளம்பி சென்ற அருந்ததி சில மணி நேரங்கள் கழித்து வீட்டுக்குள் நுழைந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார் சிவநேசன். “என்னடி இப்படி வந்து நிற்கிற...” என்று மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து போய் கேட்டார் அருந்ததியின் அம்மா கோகிலா. “அம்மாஆஆ....”