அ(இ)வளுக்கென -2

0
21

அவன் அறைக்கு சென்று எக்ஸ்கியூஸ் மீ சார் என்க , அங்கே சிவந்த கண்களோடு கோபக்கனலாய் நின்றிருந்தான் தூயவன் …

ஒரு நொடி அவனது பார்வையை கண்டு உள்ளுக்குள் நடுங்கியவள் …. மறுநொடி தன்னை மீட்டெடுத்துக்கொண்டு ….நடுங்கும் உதடுகளுடன் …..

” சார் என்னை வர சொல்லிருந்தீங்கன்னு பியூன் வந்து சொன்னாரு …. கூப்டருந்திங்களா சார் ???? ” என்று வினவ …ஒரு நொடி அவளது பால் முகத்தில் மெய்மறந்து நிலைத்து நின்றவன் அடுத்தநொடி தன்னை மீட்டுக்கொண்டு ……

“நீங்கதான் மிஸ்ஸஸ் .மென்மொழியா ???? “

மென்மொழி : எஸ் சார் …. ஆனா , நான் மிஸ்ஸஸ் மென்மொழி இல்லை …மிஸ் .மென்மொழி ….

தூயவன் : ஓஹ் ….உங்களதான ஆர்கானிக் கார்டன் இன்ச்சார்ஜ் போஸ்ட்ல போட்ருக்கோம் ????

மென்மொழி : ஆமாம் சார் …..

தூயவன் : உங்களுக்கு அதை பராமரிக்குறது பத்தி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாம் காலையிலே சொல்லிருப்பாங்களே ….. அது எதாவது உங்க மண்டைல ஏறுச்சா ????

அவன் அவ்வாறு கேட்கவும் சட்டென்று கோபம் வர …அதை முயன்று கட்டுப்படுத்தியவள் …..

மென்மொழி : எனக்கு எல்லாமே நியாபகம் இருக்கு சார் …இப்போ எதுக்கு என்னை கூப்பிட்டீங்க ?????

தூயவன் : நியாபகம் இருக்குனு சொன்னா மட்டும் போதுமா ???? சொன்னதை கேட்டு அதுபடி செய்ய மாட்டீங்க அப்படித்தானே ??

மென்மொழி : சார் நீங்க என்ன சொல்றிங்கனு எனக்கு புரியல ….. ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார் ….

தூயவன் : மிஸ் .மென்மொழி ….. இந்த ஸ்கூல் இன்னைக்கு நம்பர் 1 ஸ்கூலா இருக்குறதுக்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா ???? இந்த ஸ்கூல்ல நாங்க பீஸ் கலெக்ட் பண்றதில்ல …… அதுனால எல்லாரும் இங்கேவந்து படிக்கிறாங்கனு நினைக்குறிங்களா ????? இந்த ஸ்கூல்ல ஒரு குழந்தைய செலக்ட் பண்றதுக்கு நாங்க என்ன பண்றோனு தெரியுமா ???? இந்த ஸ்கூல்ல நாங்க கிளாஸ்ரூமை விட அந்த ஆர்கானிக் கார்டெனை அதிகமா மதிக்கிறோம் …. புதுசா வந்த உங்களை நம்பி அந்த பொறுப்பை ஒப்படைச்சது எங்க மேனேஜ்மென்ட் தப்பு தான் ….. ஒரு லாக் ஒழுங்கா பண்ண தெரியலை …… அங்கிருந்த மாடு எல்லாம் … ஆர்கானிக் கார்டன் காய்கறி பகுதியை நாசம் பண்ணிருச்சு … உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இல்லை அக்கறை இருந்துருந்தா இப்படி நீ நடந்துக்குவியா ?????? அவன் ஒருமையில் தாவி திட்ட தொடங்க ….. அதற்கு மேலும் அங்கு நிக்க முடியாமல் மென்மொழி சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட ….. பேசிட்டு இருக்கும்போதே போறா பாரு …..எல்லாம் திமிரு ….எல்லாம் திமிரு ..என்று பொரிந்துகொண்டிருந்தான் ….

வெளியே சென்ற மேனு ( மென்மொழி …..இனிமேல் இப்படி சொல்லிக்குவோமா ???? மேனு நல்லா இருக்கா ???கை வலிக்குது பா …..ஹாஹா …) நேராக ரெஸ்ட்ரூமில் புகுந்து ….. கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைக்கமனமின்றி முகத்தில் தண்ணீரை அடித்துக்கழுவியவள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வகுப்பறைக்கு திரும்பி எந்த உணர்வுமின்றி குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்க …… அப்பொழுது அங்கு ரவுண்ட்ஸ் வந்த தூயவன் கண்களில் இவள் பட …. மெதுவாக ஜன்னலின் அருகில் நெருங்கி நின்றவன் …அவளது ரைம்ஸ் அவளுக்காகவே எழுதியதுபோல் தோன்ற ..வெகுநாட்களிற்கு பின் அவளது செய்கையில் தன்னை மறந்து நின்றிருந்தவன் …..ஸ்கூல் பெல் அடிக்கவும் …… தன் நினைவுகளிலிருந்து வெளிவந்து ….. தன்னை யாரும்கவனிக்கிறார்களா என்று தனது பார்வையை சுழலவிட்டான் …குழந்தைகள் வீட்டிற்கு செல்வதற்காக வகுப்பறை வாயிலில் வரிசையாக நிற்க …அவர்களை ஒருநொடி பார்வையிட்டவன் …. மென்மொழி கைப்பையுடன் அவர்களை வரிசையாக நிற்கவைத்துக்கொண்டிருப்பதை பார்க்க …அவளது கைப்பையில் மாட்டி இருந்த கீச்சையின் டிசைனை கவனித்தவன் பார்வை சட்டென்று கடுமையை தத்தெடுத்துக்கொண்டன ….. நேராக ஆர்கானிக் கார்டன் சென்று அங்கிருந்த பெஞ்ச்சு ஒன்றில் அமர்ந்து தலையை வாகாக சாய்த்துக்கொண்டான் …..

” அவனது மனதில் ஆயிரம் ஆயிரம் நினைவலைகள் வீச …அதன் தாக்குதலை தாங்கமுடியாத அவனது மமனது அவ்வளவு கட்டுப்பாட்டை மீறியும் விழிநீரை சுரந்தது ….. தன்னைகட்டுப்படுத்த முடியாமல் …முழங்கால்களில் கையை ஊன்றியவன் உள்ளங்கைகளில் முகத்தை புதைத்து தன்னை நிலைப்படுத்த முயன்றுகொண்டிருக்க …சட்டென அவன் கால்களை கட்டிக்கொண்டு கெஞ்சும் முத்துவை பார்த்தவன் ….”முதலே எழுந்திரிங்க அண்ணா …….நீங்க எதுக்காக இப்படி பண்றிங்க ?????” என்ற அவனது கேள்விகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் “என்னை மன்னிச்சுடுங்க தம்பி ….உங்களுக்கு இந்த கார்டன் எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சும் நான் இப்படி பண்ணிட்டேன் ….இந்த ஒரே ஒரு தடவை என்னை மன்னிச்சிருங்க ….”

தூயவன் : நீங்க எதுக்கு அண்ணா மன்னிப்பு கேக்குறீங்க ???

முத்து : தம்பி …அது வந்து ….. காலையில வீட்டுல கொஞ்சம் பிரச்சனை ..அவமேல இருக்க கோவத்துல …….. வவரும்போது டாஸ்மாக் போயிட்டு வந்தேன் ….போதையில கதவை ஒழுங்கா சாத்தாம விட்டுட்டேன் ….. என்னை மன்னிச்சிருங்க தம்பி …..இனிமேல் இந்த மாதிரி நடக்காது …..

தன் மனம் சுணங்கியவன் ….. 40 வயதை கடந்தும் ஒரு பக்குவத்தை பெறாத அவரை கண்டு மனம் கொதித்தது …இருந்தும் அவனுடன் 15 வருடங்கள் பயணித்தவரை விட்டுகொடுக்க மனமின்றி

“சரி அண்ணா …நீங்க போங்க ……” என்று சொல்லியவன் …..”இவரு கவனக்குறைவா விட்டா …அவ கடைசியா ஒருமுறை சரிபார்த்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காதென்று அவனது மனதிற்கே சப்பைக்கட்டு கட்டிக்கொண்டான் …..

நேராக வீட்டிற்கு சென்ற மேனுவிற்கு மனம் கனத்திருந்தது ….முதல் நாளே இவ்வாறு நடந்ததை மனம் உருபோட்டுக்கொண்டிருந்தது ….

மேனுவின் துக்கம் மேவிய முகம் சந்தனிற்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தியது …தனது அக்காவின் வாழ்கைக்காக தான் எடுத்த முயற்சி அவளை வாடுகிறதோ என்று யோசித்தவன் …அவளிடம் பேசினால் தெளிவு கிடைக்குமென்று நம்பி அவளிடம் …

“மேனு அக்கா …..முதல் நாள் பள்ளி அனுபவம் எப்படி இருந்துச்சு ????? எந்த

ஸ்டாண்டர்க்கு நீ கிளாஸ் எடுக்குற ??? உனக்கு பிடிச்சிருக்கா என்று இவன் அடுக்கிக்கொண்டே சோபாவில் அமர்ந்தவன் மடியில் சாய்ந்தவள் …அன்று காலையிலிருந்து நடந்தவை அனைத்தையும் அவனிடம் கூறினாள் …..இவள் ககூறுவதை கேட்டவன் மனதில் தானும் நிறைமதியும் போட்ட திட்டம் இவ்வாறாக மாறிவிட்டதை எண்ணி வருத்தம்கொண்டது ….. நிறை இன்று கண்டிப்பாக வீட்டிற்கு வருவாள் என்று நம்பியவன் தனது அக்காவிற்கு சமாதானம் கூறி அவளது முடியை கோதிவிட …. பள்ளியில் நடந்த குழப்பத்தை யோசித்துக்கொண்டே கண்ணயர்ந்த்தாள் மேனு …

” மினுக்க்ஸ் …ஹே மினுக்க்ஸ் என்று கூவிக்கொண்ட வந்த நிறைமதியை நோக்கி வாயில் ஒரு விறல் வைத்து அமைதியாக இருக்குமாறு பணித்தவன் …. மெதுவாக மேனுவின் தலையை தலையணையில் சாய்த்துவிட்டு விலகி வந்து நிறையிடம் பேசத்துவங்கினான் …..

நிறை : என்னடா ….எதாவது சொன்னாளா ????

சந்தன் : எங்க அக்கா ??? எனக்கு என்னவோ அவங்க சேருவாங்கனு நம்பிக்கை வரவே மாட்டிங்குது என்று மேனு கூறியதை நிறையிடம் ஒப்பித்தான் ….

இவன் கூறியதை எல்லாம் கூர்ந்து கேட்டவள் கலகலவென சிரிக்க சந்தன் அவளை வினோதமாக பார்த்தான் …..

நிறை : சந்தன் ..சந்தன் …. நீ சின்ன பையன்னு அப்பப்போ நிரூபிக்குற பாத்தியா …….என்று அவனிடம் “மோதலில் ஆரம்பிச்சா காதலில் தான் முடியும் தம்பி …அதுவும் இல்லாம என்று அவன் காதில் வழவழக்க ….சந்தனின் முகம் பிரகாசமானது ….

“சொல்லாமல் செய்யும் காதல் கனமானது ….

சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது ..

சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது ….

இந்த சோகம் தானே காதலிலே சுகமானது…

வாசனை வெளிச்சத்தை
போல அது சுதந்திரமானதும்
அல்ல ஈரத்தை இருட்டினை
போல அது ஒளிந்திடும்
வெளி வரும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது
காதல்…..!”

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here