அது மட்டும் இரகசியம் – 18

0
430

அந்த மோதிரம் ராமினுடையது என்ற ஜீவாவின் பதிலில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் விஷ்ணு. “ டேய் …டேய் விஷ்ணு…என்னடா ஆச்சு … ஏன் இப்படி டென்ஸ்டா இருக்க? சொன்னாதானே தெரியும்.சொல்லுடா விஷ்ணு …” என விஷ்ணுவை உலுக்கியபடி கிட்டத்தட்ட கத்தியேவிட்டான் ஜீவா .

ஜீவாவின் சத்தத்தில் தன்னிலைக்கு வந்த விஷ்ணு “ ஒன்னும் இல்லைடா “ என்றவாறு அவ்விடத்திலிருந்து நகர எத்தனித்தான். அவனுக்கு முன்பாக சென்று அவனின் வழியை மறித்த ஜீவா “ இங்க பாரு விஷ்ணு … நான் உன் ஃப்ரண்ட் உன் கூட ஸ்கூல் டேஸ்ல இருந்து பழகிட்டு வரேன். நீ எந்த எந்த சமயத்துல எப்படி எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு எனக்கு நல்லாவே தெரியும் .எனக்கு தெரிஞ்ச வரையில் நீ இப்படி விசித்திரமா நடந்துகிட்டதே இல்லை. இப்படி நீ வியர்டா நடந்துகிட்டு இருக்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா ஒரு ஸ்ட்ராங்க் ரீஸன் இருக்கும் . என்கிட்ட உண்மையை மறைக்க ட்ரை பண்ணாத விஷ்ணு … ப்ளீஸ் சொல்லு என்ன விஷயம் “ என வருத்தத்துடன் கேட்டான்.

ஜீவாவின் கெஞ்சல் விஷ்ணுவின் மனதைப்பிசைய அவனிடம் சொல்லிவிடலாம் என நினைத்து தான் அவ்வூரிற்க்கு வந்தது முதல் இன்று வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினான் அந்த மோதிரம் தவிர. இவையனைத்தையும் கேட்ட ஜீவா “ “ என்னடா சொல்ற விஷ்ணு … எல்லாம் ரொம்ப ஆச்சரியமா இருக்குடா… ஏதோ மாயாஜால படம் பார்த்த மாதிரி இருக்கு விஷ்ணு… இதை ஏன் முதல்லயே சொல்லலைடா ? “ என ஆச்சரியத்துடனும் கேள்வியுடனும் முடித்தான் .

“ எப்படிடா நான் இதை வெளிய சொல்ல முடியும் . நீயே நான் சொன்ன பிறகு மாயாஜால கதையில வர ஸீன்ஸ் போல இருக்குன்னு சொல்ற … அன்னைக்கு வேதாகிட்ட சொன்னபோது அவ ஏதோ ஹிஸ்டாரிக்கல் கதையைப்படிச்சிட்டு உளறிட்டு இருக்கேன்னு சொல்றா…இந்த லட்சனத்துல நான் எப்படி நார்மலாகவும் எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லிட்டும் இருக்க முடியும் …ஜஸ்ட் ஒன் செகண்ட் திங்க் ஆஃப் இட்… யூ வில் ரியலைஸ் மை சிச்சுவேஷன் “ என விஷ்ணுவும் தன் பக்க நிலைமையை விளக்கினான் .

“ கொஞ்சம் பொறுடா…நீ பாட்டுக்கு பேசிட்டே போற … நான் உன்னை நம்பவேயில்லைன்னு எப்படா சொன்னேன். எனக்கு இந்த பூர்வஜென்ம புனர்ஜென்ம விஷயங்கள்ல எல்லாம் நம்பிக்கையோ ஈடுபாடோ இன்னைக்கு காலையில் வரைக்கும் இல்லைடா … ஆனா உன்கிட்ட பேசின இந்த நிமிஷத்திலிருந்து நான் இதை நம்பறேன் .கண்டிப்பா அந்த மரகதலிங்கத்தை கண்டுபிடிக்க உனக்கு நானும் ஹெல்ப் பண்றேன்டா” எனக் கூறினான்.

“ ரொம்ப தேங்க்ஸ்டா ஜீவா ! என்னை நம்பினதுக்கு … பட் இது என்னோட பிரச்சனை … நானே இதை பார்த்துக்குறேன் . நீ எதுக்கு தேவை இல்லாம இந்த விஷயத்துல வந்து மாட்டிக்குற … “ என கூறிக்கொண்டே வந்த விஷ்ணுவை இஞடைமறித்த ஜீவா “ இன்னொரு முறை என் பிரச்சனை உன் பிரச்சனைனு பிரிச்சு பிரிச்சு பேசிக்கிட்டு இருந்தா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்டா … எப்ப இருந்து நீ நான்னு பிரிச்சு பேச கத்துகிட்ட விஷ்ணு… அதெல்லாம் எனக்கு தெரியாது அந்த லிங்கத்தைக் கண்டுபிடிக்கிற வரை நான் உன் கூடதான் இருப்பேன் “ என்று கூறினான்.

தன் நண்பன் தன் மீது கொண்ட அக்கறையையும் பாசத்தையும் அதீத நம்பிக்கையையும் நினைக்கையில் விஷ்ணுவின் மனது புளங்காகிதம் அடைந்தது. தன் நண்பன் தன்மீது கொண்ட அன்பில் மெய்சிலிர்த்து நின்றவனின் கவனத்தை கலைத்தது ஜீவாவின் சந்தேகக் குரல் “ விஷ்ணு … எல்லாம் சரிடா…ஆனா நீ ஏன் தேவை இல்லாம ராமோட மோதிரத்தை எடுத்து வச்சிட்டிருக்க?.ராமோடதுன்னு தெரிஞ்ச உடனே ஏன் அவ்வளவு ஷாக் ஆகிட்ட? என வினாவோடு முடித்தான் ஜீவா.

விஷ்ணுவோ சற்று தயக்கத்துடன் “ ஜீவா… நான் அந்த மரகதலிங்கம் இருந்த இடத்தில இருந்தது இந்த மோதிரம்தான்டா … இந்த மோதிரத்தோட சொந்தக்காரன்தான் மரகதலிங்கத்தை எடுத்துருப்பான்னு நினைச்சுதான் இந்த மோதிரத்தை எடுத்து வச்சிட்ருந்தேன்… ஆனா இந்த மோதிரம் ராமோடதுன்னு நீ சொன்ன உடனே ஐ வொண்டர்ட்… ஐ கான்ட் பிலீவ் இன் மை ஓன் இயர்ஸ்டா….”.எனக் கூறினான்.

விஷ்ணு கூறியவுடன் அதிர்ச்சி தாங்காமல் “ என்னடா சொல்ற விஷ்ணு… இது எப்படி அங்க போயிருக்கும் … அந்த இடம் எப்படி ராம்க்கு தெரியும். உளறாதடா…” என சொன்னான் .

அததான் ஜீவா நானும் முதல்ல உன்கிட்ட சொன்னேன்… அந்த இடத்துக்கு எப்படி ராமோட மோதிரம் போயிருக்கும்.”

ஜீவாவோ தலையில் கைவைத்துக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான் .சில நொடிகளுக்குப்பிறகு விஷ்ணுவை நோக்கியவன்

“மச்சி…. இது நல்லா பொருமையா கையாள வேண்டிய விஷயம்… சட்டுன்னு எந்த முடிவுக்கும் வந்துட முடியாது… முதல்ல ராமோட ஆக்டிவிட்டீஸ கவனிக்க ஸ்டார்ட் பண்ணலாம் அப்பதான் சரியா இருக்கும் “ என்றான் .

“ எஸ் ஜீவா… அதான் சரின்னு எனக்கும் தோனுது . பட் என்னால இப்பவும் நம்ப முடியலடா…. தலையே வெடிக்கிற அளவுக்கு இருக்கு … “ என்றான் விஷ்ணு .

“ என்னடா நம்ப முடியல…தலை வெடிக்கிற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை விஷ்ணு… என்ன சீரியஸா பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் “ என்றபடி அறைக்குள் நுழைந்தான் ராம்.

சட்டென்று கையில் இருந்த மோதிரத்தை பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டு மறைத்துக்கொண்டான் ஜீவா . திடீரென்று ராம் அறைக்குள் வருவான் என இருவரும் எதிர்பார்த்திராத காரணத்தால் சற்று திணறித்தான் போனார்கள் .

“ அது ஒன்னும் இல்ல மச்சி … சும்மாதான் பேசிட்டு இருந்தோம்… அப்படி ஒன்னும் பெரிய விஷயம் இல்ல … சரி அதை விடு சாப்பாடு ரெடி ஆகிடுச்சா ? சாப்பிட போகலாமா ? ..ரொம்ப பசிக்குதுடா … வா வா கிளம்பலாம்” என்றபடி பேச்சை திசை திருப்பினான் விஷ்ணு .

“ அது எப்பவோ ரெடி ஆகிடுச்சு தடிமாடு … நீங்கதான் சாப்பிட வராம இங்க வட்ட மேசை மாநாடு போட்டுக்கிட்டு இருக்கீங்க … “ என்று அங்ஙலாய்த்தவனின் வாயைப் பொத்தி “ போதும்டா…பசியே போய்டும் போல இருக்கு புறப்படலாமா சாமி….” எனக் கேட்டான் ஜீவா .

சாப்பாட்டு மேசையை அலங்கரித்துக்கொண்டிருந்த தென்னிந்தியவகை சிற்றுண்டி அங்கு வந்தவர்களின் நாசியை வருடி நாவின் சுவையரும்பை மலரச்செய்துகொண்டிருந்தது. அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் ராமின் தந்தை ஈஸ்வரபாண்டியன் அவ்விடத்திற்கு வரவும் சரியாக இருந்தது .அங்கு வந்த ஈஸ்வரபாண்டியன் தன் தனயனிடம் “ தம்பி … திருவிழாக்கு செய்ய வேண்டிய வேலை எல்லாம் நான் நேத்து சொன்னேனே அதை எல்லாம் முடிச்சிட்டியாப்பா ? “ என்று கேட்க ஆரம்பித்தார்

“ முடிச்சிட்டேன்ப்பா… இன்னும் ரெண்டு மூனு வேலைதான் மீதம் இருக்கு …. அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்ப்பா….”

“ சரி…சரி… சீக்கிரம் சாப்பிட்டு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் லேட் ஆக்காம சீக்கிரம் முடிக்க பாரு தம்பி… திருவிழா தேதி நெருங்கிட்டே இருக்கு … அக்கம்பக்கத்து ஊர்ல இருந்து கூட நம்ம ஊர் திருவிழாவ பார்க்க ஜனங்க வருவாங்க … யாரும் ஒரு குறையும் சொல்லாதமாதிரி நம்ம ஊர் திருவிழா நடக்கனும் புரியுதா தம்பி” என அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் .

அவர் அங்கிருந்து சென்றவுடன் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்த ராம், “ மச்சீஸ்… ஐ ஹேவ் டூ லீவ் நவ்டா … டைம் ஆகிடுச்சு … நான் திருவிழாக்கான ஏற்பாடெல்லாம் செய்ய ஆரம்பிக்கனும்… நீங்க மெதுவா சாப்பிட்டு அப்புறம் எனக்கு கால் பண்ணுங்க நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்துட்றேன் “ என படபடவென்று பேசிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான். அவன் சென்ற திக்கையே பார்த்துக்கொண்டிருந்தனர் விஷ்ணுவும் ஜீவாவும்.

தொடரும்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here