அது மட்டும் இரகசியம் – 2

2
419

அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.
காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த மகிழுந்தின் உள்ளே மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.அவர்களின் தோற்றத்திலேயே அவர்கள் நவ நாகரிக இளைஞர்கள் என்பது தெரிந்தது.

“டேய் மச்சி நம்ம ராம் சொன்னபோது கூட நான் நம்பிக்கை இல்லாமதான்டா இருந்தேன் ஆனா இப்ப நம்பரேன்டா எவ்வளவு அழகா இருக்கு இந்த கிராமம்” என்று சிலாகித்து கூறினான் ஜீவா.

“நான்தான் சொன்னேன்ல எங்க ஊரு சூப்பரா இருக்கும்னு நீங்கதான் கிராமத்துல நெட் கிடைக்காது,ஸ்னாப்சாட் யூஸ் பண்ண முடியாது,வாட்ஸாப் செய்ய முடியாதுனு உயிர வாங்கிட்டிங்க.இப்போ பாருங்க ட்யூட்ஸ் எங்க ஊரின் அழகை” என்று கூறி நண்பர்களிடம தன் ஊரின் பெருமையே நூற்றி எட்டாவது முறையாக கூறினான் ராம்.

“சரி சரி இப்ப என்ன உங்க ஊருக்கு வராமயா போய்ட்டோம் .ஏதோ ஆசைப்பட்டு கூப்பிட்டன்னு வந்துட்டோம்ல. நான்லாம் வந்தது உன் ஊருக்குதான்டா பெருமை என் எருமை “ என்று கூறி ராமினை வம்பிற்கு இழுத்தான் பாலா .

காரை ஓட்டிக்கொண்டிருந்த விஷ்ணு இவர்களின் சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டு வந்தான்.அவனுக்கும் அந்த கிராமிய சூழல் மனதினுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பிரபலமான கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தனர்.பயிற்சி மருத்துவர்களாக புகழ்பெற்ற மருத்துவ மனையில் பணிபுரியவிருக்கின்றனர்.

அதற்கு முன் கோடை விடுமுறையை ராமின் சொந்த ஊரான விடையூரில் கழிக்க முடிவெடுத்தனர்.அதன்படி விஷ்ணுவின் காரில் பயணத்தை மேற்க்கொண்டனர்.அப்பொழுது நடந்த உரையாடல்களைத் தான் நாம் இவ்வளவு நேரம் பார்த்தோம்.

அந்த ஊரின் அழகை ரசித்துக்கொண்டே வந்த விஷ்ணுவின் கண்களுக்கு ஒரு வித்தியாசமான இடம் புலப்பட்டது. அது ஒரு குன்று அதில் பல விசித்திரமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

“டேய் ராம் அது என்னடா அந்த குன்று ரொம்ப வித்தியாசமா இருக்கு” என ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டான்.அக்கேள்வியை கேட்ட மாத்திரத்தில் ராமின் முகம் சுருங்கியது.உடனே பேச்சை திசை திருப்பினான் ராம்.

இதை கவனித்த விஷ்ணு சட்டென்று ஏதும் கேட்காமல் அமைதியானான். ஆனால் மனதிற்குள் அந்த குன்றைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் வளர ஆரம்பித்தது.

விஷ்ணுவின் மனதினில் உருவான ஆர்வத்தினை அறியாத ராம் அப்பாடா நல்ல வேளை பேச்சை மாத்திட்டோம் இல்லைன்னா அந்த கிரகம் பிடிச்ச குன்றை பத்தி சொல்லியிருக்கனும் என பெருமூச்சுவிட்டான்

“டேய் ராம் உங்க வீடு வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்குடா”என்று ஜீவா கேட்டான்.

“மச்சி இன்னும் 15 மினிட்ஸ் தான்டா அதுக்குள்ள நம்ம வீட்டுக்கு போய்டலாம்” ராம்.

ராம் கூறியது போல 15 நிமிடங்களில் அவனின் வீட்டை அடைந்தனர். அதைப்பார்த்து யாரும் வீடு என்று சொல்ல மாட்டார்கள் ஏனேனில் பார்பதற்கு அரண்மனை போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது அவ்வீடு.

ராமின் குடும்பம் விடையூரில் புகழ்பெற்ற குடும்பம் .காலம் காலமாக அவ்வூர் சிவன் கோவிலில் தர்மகர்த்தாவாக இருப்பவர்கள்.விடையூரில் உள்ள அநேக இடங்கள் இவர்களுடையது
பல நாட்கள் கழித்து வரும் பிள்ளைக்காக அவன் வீட்டில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

வீட்டினுள் நுழைந்தவுடன் வந்த சமையலின் நறுமணம் ஜீவாவின் நாசியைத் துளைத்தது.” நண்பா இன்னைக்கு உங்க வீட்ல செம விருந்து போல வாசமே கமகமனு வருதே “என்றான்

“டேய் சாப்பாட்டு ராமா வாசனைய வச்சே கண்டுபிடிக்கிறயேடா அல்டிமேட் மச்சி நீ.ஆனா ஒரு தப்பு செய்துட்ட டாக்டர்க்கு படிச்சதுக்கு பதிலா போலீஸ் ஆகிருக்கலாம் மொப்ப நாய் செலவாவது மிச்சமாகியிருக்கும் கவர்ன்மென்ட்க்கு” என்று விஷ்ணு ஜீவாவை கேலி செய்தான்

“ஹே ஷட்டப் மேன் ஐயம் நாட் சாப்பாட்டுராமன் ஜஸ்ட் ஃபூடி” என்று பெருமையாக சொன்னான்.

“ஹிஹி ஃபேஸ்புக் மீம்ஸ் தானே இது .சொந்த டயலாக் பேசுடா இப்படி கடன் வாங்கி பேசாதடா” என மறுபடியும் ஜீவாவின் காலை வாரினான் விஷ்ணு .

இதனிடையில் இவர்களின் சம்பாஷணையை கேட்டவாறு சமையல் அறையிலிருந்து வந்த ராமின் தாய் கௌரி முகமலர்ச்சியுடன் அனைவரையும் வரவேற்றார்.

“டேய் தம்பி எப்படிப்பா இருக்க? நல்லா சாப்பிட்ரியா இல்லையா ?போன முறை வந்ததவிட இப்போ ரொம்ப இளைச்சிட்டியே ” என்றவரை இடைமறித்த பாலா “அம்மா நாங்களும் வந்துருக்கோம் எங்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே” என்றான்.

“என்ன தம்பி இப்படி கேட்டுட்ட உங்களை கவனிக்காம இருப்பேனா? ராம்கிட்ட ஃபோன்ல பேசும்போது உங்ககிட்ட பேசாம இருந்தாலே என்ன உண்டு இல்லைன்னு செய்துடுவீங்க இப்போ கேக்கவா வேணும்”என சிரித்துக்கொண்டே கேட்டார்.

“சரி சரி நேரம் ஆகிடுச்சு சாப்பிட வேணாமா? உங்களுக்காக ரூம்ஸ் ரெடி செஞ்சி வச்சிருக்கேன் போய் குளிச்சுட்டு வாங்க” என்றார்.நால்வரும் குளிக்க சென்றார்கள் அப்போது ராமை மட்டும் கௌரி தனியாக அழைத்தார்.

” தம்பி வரும்போது அந்த குன்றை பத்தி பிள்ளைங்க ஏதாவது கேட்டாங்களாப்பா?” என பதட்டத்துடன் கேட்டார்.”ஆமாம்மா விஷ்ணு கேட்டான் நான்தான் பேச்சை மாத்தி அவனை திசை திருப்பிட்டேன்” என்றான் ராம்

“ஹப்பா நல்ல வேலை செய்த தம்பி பாவம் பசங்க இங்க சந்தொஷமா இருக்க வந்துருக்காங்க அவங்களுக்கு அந்த பீடை பிடிச்ச குன்றை பத்தி தெரிய வேண்டம்பா ” என்றார்.

ராமினை அழைக்க அப்போது அங்கு வந்த விஷ்ணு அவர்களின் உரையாடல்களை கேட்க நேரிட்டது. அக்குன்றின் பின்ணணியில் அப்படி என்ன மர்மம் இருக்கிறது என அறியும் ஆவல் விஷ்ணுவின் மனதில் விஷ்வரூபம் எடுத்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here