அது மட்டும் இரகசியம் – 3

0
269

அந்த சப்தம் சாளரத்தின் வழியாகத்தான் வருகிறது எற ஊகித்த விஷ்ணு சாளரத்தைநோக்கிச்சென்றான் அங்கே கிழிந்த ஆடைகளும் பல வருடங்களாக சவரத்திற்கு பழக்கப்பட்டிருக்காத நீண்ட தாடியுடனும் பார்ப்பதற்கு பைத்தியக்காரத் தோற்றத்திலிருந்த ஒருவன் இவனுடைய சாளரத்தையே வெறித்து நோக்கியவாறு “ வந்துட்டியா… நீ வந்துட்டியா… காலம் உன்னை கூட்டிட்டு வந்துடுச்சா…. உனக்காகதான் நான் காத்துகிட்டு இருந்தேன் … பிறவியின் நோக்கத்தை நிறைவேற்ற வந்துட்டியா “ என்றவாறு உளறிக்கொண்டிருநதான் . விஷ்ணு ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாலும் இதையெல்லாம் கூறியவன் ஒரு புத்தி ஸ்வாதீனமில்லாதவன் என்பதை உணர்ந்து “அடச்சை இதுக்கா இப்படி பயந்தோம் கொடுமைடா சாமி” என்று தன் நிலைமையை எண்ணி சிரித்துக்கொண்டான்.

மறுபடியும் கட்டிலில் சென்று படுத்தான்.மெல்ல உறங்கியும் போய் ஆழ்ந்த துயிலில் அகப்பட்டுக்கொண்டான் நம் நாயகன்.

தன் காதலியைக் காண ஆவலுடன் ஓடி வரும் காதலனைப் போல ஆதித்யனும் ஓடி வந்து பொழுது புலர்ந்துவிட்டது என அனைவருக்கும் உணர்த்திக்கொண்டிருந்தான்.

ராம்,பாலா,ஜீவா மூவரும் சீக்கிரமே தயாராகி அவர்கள் அறையினின்று வந்தனர்.”என்னடா நைட் எல்லாரும் நல்லா தூங்கனீங்களா? ஏதாவது அசௌகரியமா இருந்துதா? இருந்தா சொல்லுங்கடா சரி செய்துடலாம்”. என்று ராம் கூறினான்.

“அட நீ வேற ஒரு பிரச்சனையும் இல்ல நல்லா தூங்கினேன்டா மச்சி…..”. என பாலா சொன்னான்.

“ஆமாம்டா எனக்கும் செம தூக்கம். சூப்பர் கனவு கூட வந்துச்சு தெரியுமா?”என்று ஜீவா சொன்னான்.

“அப்படி என்ன கனவு வந்தது உனக்கு” என ராம் கேட்டான்.

“ஹிஹி ஆலியா பட் கூட கேண்டில் லைட் டின்னர் சாப்பிர மாதிரி வந்ததது மச்சி” என அசடு வழிய கூறினான் ஜீவா.

“அட கிராதகா கனவில கூடவாடா நீ சாப்பாட்டை மறக்க மாட்ட” என சிரித்துக்கொண்டே கூறினான் பாலா.

” பொறாமையில பொங்காதடா……அங்க ஒருத்தன் இன்னமும் எழுந்துக்காம கும்பகர்ணன் தம்பி போல தூங்கிட்ருக்கான் வா அவனை எழுப்பலாம்” என சொன்னான் ஜீவா.மூவரும் விஷ்ணுவின் அறையை நோக்கி சென்றனர்.

அவர்களின் கூற்றை மெய்ப்பிப்பது போலவே நம் விஷ்ணுவும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.கதவைத்தட்டும் சப்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தவன் போய் கதவைத்திறந்தான்.நண்பர்கள் மூவரையும் கண்ட விஷ்ணு புன்முறுவலித்தான்.

அவர்களும் காலை வணக்கத்தை தெரிவித்தபடி அறைக்குள் நுழைந்தனர்.

“என்னடா நல்ல தூக்கம் போல இருக்கே….இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருக்க. சீக்கிரம் ரெடியாகிட்டு வா இன்னைக்கு கோவிலுக்கு போகனும்னு அம்மா நேத்தே சொல்லிட்டாங்க…..”என்று ராம் கூறினான்.

விஷ்ணு “நைட் தூங்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சுப்பா அதான் சீக்கிரம் எழ முடியல.ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் குளிச்சிட்டு வந்திட்றேன்” என்றான்.அவன் குளித்து முடித்து வரும் வரை விஷ்ணுவின் அறையிலேயே நண்பர்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.

விஷ்ணுவும் சிறிது நேரத்தில் குளித்து முடித்து தயாராகினான்.ராம் திடீரென நினைவு வந்தவனாய் “டேய் மச்சி நைட் என்கிட்ட ஏதோ கேட்கனும்னு சொன்னியே என்னடா அது” என்று கேட்டான்.

விஷ்ணுவும் “சரி நாம இப்பவே கேட்டுடலாம்” என மனத்தினில் நினைத்த வினாடி வேலைக்காரப் பெண் அஞ்சுகம் “சின்னய்யா…..பெரியய்யா டவுன்ல இருந்து வந்துட்டாரு. அம்மா உங்களையும் உங்க சிநேகிதக்காரங்களையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்கய்யா” என்றாள்.

விஷ்ணுவின் இப்போதைய நிலை என்னவாக இருக்கும் என்பது தங்களுக்கே தெரிந்திக்கும்.

அனைவரும் ராமின் அப்பாவைப் பார்ப்பதர்க்காக
சென்றனர். ஈஷ்வரபாண்டியன் ….ராமின் அப்பா. பெயருக்கேற்றாற் போன்று கம்பீரமான தோற்றம். ஊரின் பெரிய புள்ளி என்றால் தோற்றமும் தோரணையாக இருக்க வேண்டும் அல்லவா?அந்த லட்சணத்திலிருந்து சிறிதும் பிசகாமல் இருந்தார் ஈஷ்வரபாண்டியன்

” என்னப்பா எல்லாரும் சௌக்கியமா இருக்கீங்களா? பிராயணம் சௌகரியமா இருந்ததா?என்று அன்புடன் விசாரித்தார்”.கௌரி அனைவரையும் காலை உணவை சாப்பிட அழைத்தார். காலை உணவாக வெண்பொங்கல் ,இட்லி ,சாம்பார், தோசை,இடியாப்பம் என்று தென்னகத்தின் அனைத்து பிரபலமான சிற்றுண்டிகளையும் செய்திருந்தார் கௌரி. அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

பின்பு நண்பர்கள் அனைவரும் அவ்வூரின் சிவன் கோவிலுக்கு கிளம்பி சென்றனர். அவ்வூரில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். அகத்திய மாமுனி பூஜித்த கோவில் என்பதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.புராதான கோவில் என்பது பார்த்தமட்டிலேயே அனைவருக்கும் விளங்கியது.

ராமை பார்த்தவுடன் அங்கிருந்த கோவில் பட்டர் முகமலர்ச்சியுடன் வரவேற்றார்.தர்மகர்த்தா மகன் என்பதாலும் அவர்களுக்கு ஏகபோக வரவேற்பு இருந்தது.

தரிசனம் முடிந்து அனைவரும் திரும்பி வரும் வழியில் ஒரு பாழடைந்த மண்டபம் தென்பட்டது.அதன் வாயிலில் யாரோ அமர்ந்திருந்தர்.அந்த நபரைப் பார்த்த விஷ்ணுவிற்கு அது யார் என ஓரளவு யூகிக்க முடிந்தது.நேற்று இரவு அவனின் தூக்கத்தை கலைத்து மட்டுமல்லாமல் அவனை பயம் கொள்ளவும் செய்த அந்த பைத்தியக்காரனின் உருவத்தை விஷ்ணு அவ்வளவு எளிதில் மறக்கவில்லை.

விஷ்ணு ராம் அந்த பைத்தியக்காரன் யாருடா? நைட் ரொம்ப பயங்கரமா கத்திகிட்டும் ஏதெதோ உளரிட்டும் போயிருந்தான்.இவன் போட்ட சத்தத்துல நானே பயந்துட்டேன்டா……ஏன் அப்படி கத்தினான்?” என ராமிடம் வினவினான்.

“என்னது நைட் உனக்கு இவனோட சத்தம் கேட்டுச்சா .எனக்கு எதுவும் கேக்கலையேடா”. என ராம் கூறினான்.

“சரி விட்றா பைத்தியம் தானே அவன் என்ன பன்றான்னு அவனுக்கே தெரியாது .ஏன் கத்திட்டு போனான்னு ராம்கிட்ட கேட்டா அவனுக்கு என்ன தெரியும் ?”என்று ஜீவா சொன்னான்.

அதற்குள் ராமிற்கு தெரிந்தவர் யாரோ வரவே அவருக்கு தன் நண்பர்களை அறிமுப்படுத்தினான் ராம். அவருடன் நம் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

விஷ்ணு அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் அப்பைத்தியக்காரன் இருக்கும் மண்டபத்தின் அருகில் வந்தான். அப்பைத்தியக்காரன் ஏதோ ஒரு விதத்தில் இவனை பாதித்தருந்தான் . அவனைப் பார்த்தாலே இரக்கம் தோன்றியது . “ பேசாமல் ராம்கிட்ட பேசி இவனை ஏதாவது மெண்டல் அசைலம்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பண்ண சொல்லலாம் “ என ஒரு மருத்துவனாக யோசிக்க ஆரம்பித்தான்.

பின்னர் அப்பைத்தியக்காரனிடம் ஏதாவது பேச்சு கொடுக்கலாம் என நினைத்து அவனின் அருகே செல்ல விஷ்ணு எத்தனிக்கும்போது அம்மா……..என்றொரு அலறல் சப்தம் கேட்டது.

அலறல் சத்தம் வந்த திசையை பார்த்த விஷ்ணுவின் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை…..அங்கு வேகமாக வந்த கார் ஒன்று பாலா மீது மோதியது. பாலாவின் மீது மோதுவதற்குள் காரின் வேகம் சற்று குறைந்தால் அடி பலமாக படவில்லை. இதை பார்த்த நண்பர்களுக்கு மூச்சே நின்று போனது போல இருந்தது.நிலைமையை சட்டென்று சுதாரித்த விஷ்ணு அவனை நோக்கி ஓடினான் .

ராமும் ஜீவாவும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தனர்.ஓடிவந்த விஷ்ணு பாலாவை மடியில் தாங்கிக்கொண்டான்.சட்டென்று ஜீவாவும் ராமும் தன்னிலைக்கு வந்தனர்.அதற்குள் அங்கு ஒரு கூட்டமே குழுமிவிட்டது.

இதற்கிடையில் காரை முற்றுகையிட்ட அவ்வூர் மக்கள் காரின் ட்ரைவர் சீட்டில் இருந்த பெண்ணை பார்த்து “என்ன மா நீ அநியாயத்துக்கு பண்றதையும் பண்ணிட்டு இப்போ கார விட்டு கூட இறங்காம உட்கார்ந்துட்டு இருக்க வெளிய வா மா” என்று வசைமாரி பொழிந்தனர். இதற்க்குள் பாலாவும் தன்னை சுதாரித்து எழுந்து நின்றான்.

காரை விட்டு இறங்கிய அப்பெண்ணை கண்டவுடன் விஷ்ணுவின் கோபம் எல்லை மீறியது. “இடியட் அறிவு இருக்கா உனக்கு இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஒட்டிட்டு வருவியா? உனக்குலாம் யார் லைசென்ஸ் கொடுத்தது ? இவனுக்கு மட்டும் ஏதாவது ஆகிருக்கட்டும் நடக்கிறதே வேற மாதிரி இருந்துருக்கும் “.என்று கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான். ராம் அப்பெண்ணை பார்த்து அதிர்ந்து வேதா நீயா ? ஏன் இப்படி இவ்ளோ ஸ்பீடா ஒட்டிட்டு வந்த டிரைவர் எங்க அத்தை மாமா வரலியா என்று கேட்டான்.

அவள் அருகில் நின்றிருந்த ட்ரைவரை பார்த்து “யோவ் அவ கார் ஓட்றதுக்கு உனக்கு எதுக்குயா சம்பளம் தராங்க?” என ராம் திட்டிக்கொண்டிருந்தான்.”சார் ……மேடம்தான் நான் கொஞ்ச தூரம் ஓட்றேன்னு என்கிட்ட இருந்து காரை வாங்கிட்டாங்க” என பதட்டத்துடன் கூறினான்.

இவ்வளவு நேரம் விஷ்ணு திட்டியதில் சிலையென சமைந்திருந்தவளை ராமின் குரல் கலைத்தது….”இல்ல ராம் நீ தூரத்தில இருக்கும்போதே உன்னை கண்டுபிடிச்சிட்டேன். சும்மா உன்ன பயமுறுத்தலாம்னு உன்னதான் இடிக்கிரமாதிரி வந்தேன்.ஆனா நீங்க இடம் மாறி நின்னுட்டீங்க. திடீர்னு என்னால காரையும் கன்ட்ரோல் பண்ண முடியல அதனால இப்படிஆகிடுச்சு ராம் ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி என பாலாவிடம் மன்னிப்பு கேட்டாள். சாரி சார் இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை” என விஷ்ணுவிடமும் கூறினாள்.

வேதா ராமின் அத்தை மகள் . பெங்களூரில் வாசம் செய்பவள். பி.எஸ்சி பயோடெக்னாலஜி மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறாள். இந்த கோடை விடுமுறையை கழிக்க தன் மாமாவின் வீட்டிற்கு வரும் வழியில் இப்படி ஆகிவிட்டது.

ராம் விஷ்ணுவிடம் “டேய் விஷ்ணு இவ என் கசின் டா.என் அத்தை டாட்டர் டா தெரியாம செஞ்சிட்டா விட்டுடா” என்று விஷ்ணுவிடம் கூறினான்.

“உங்க அத்தை பொண்ணுணா இப்படி செய்யலாமா? இவ்வளவு வளர்ந்திருக்காளே கொஞ்சமாவது அறிவு வேண்டாம்? இவ தெரியாமயா பண்ணிருக்கா ? வேணும்ணே பண்ணிருக்கா. எதுல விளையாடனும்னு அறிவில்லை? ” என மறுபடியும் ஆரம்பித்தான் விஷ்ணு.

பாலா விஷ்ணுவிடம்” சரி விடுடா பீ கூல் சின்ன ஸ்க்ராட்ச்தான் ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்தாலே சரியாகிடும். இங்க சீன் கிரியேட் பண்ண வேணாம் வீட்டுக்கு போகலாம் வா என கூறினான்”.

வீட்டிற்கு சென்றவர்கள் பாலாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அவரவர்களின் அறைக்கு சென்றனர். விஷ்ணுவின் பின்னோடு வந்த ஜீவா விஷ்ணுவிடம்” விஷ்ணு நீ அந்த பொண்ண ரொம்ப திட்டிட்டபா .அட்லீஸ்ட் சாரி ஆவது கேட்ருக்கலாம் “என்று கூறினான்.

” ஹ்ம்ம் ஆமாடா ரொம்ப திட்டிட்டேன். ஆனால் சாரி கேக்க மாட்டேன். அவ பண்ணது தப்பு அதனால திட்டினேன். நான் ஏன் சாரி கேக்கனும்” என்பது விஷ்ணுவின் பதிலாக அமைந்தது.

“உன்னை பத்தி தெரிந்தும் உன்கிட்ட சொன்னேன் பார் என்னை சொல்லனும்” என தலையில் அடித்துக்கொண்டான்.

“தெரியுது இல்ல அப்புறம் என்ன ? போய் வேற வேலை இருந்தா பாரு நான் ரெஸ்ட் எடுக்கனும்” என்று சிரித்துக்கொண்டே கூறினான் விஷ்ணு. அவனை முறைத்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினான் ஜீவா.

அதே நேரம் வேதாவின் அறையில் வேதாவோ “ச்ச ராம்கிட்ட விளையாட போனது என்னோட தப்பு…நான் நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு….இப்படி கண்டவன் கிட்ட பேச்சு வாங்கனும்னு என் தலையில் எழுதியிருக்கு போல . சரியான திமிர் பிடிச்சவன் அத்தனை முறை சாரி கேட்டும் பரவாயில்லைனு சொன்னானா? இந்த லட்சனத்துல இவன் இந்த வீட்டுலதான் இருக்கபோறானாம். ஓ கடவுளே இந்த முசுட சீக்கிரம் இங்க இருந்து அனுப்பிவிட்டுடு “என்று கடவுளிடம் ஒரு அப்ளிகேஷனையும் போட்டு வைத்தாள்.


மொபைலில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணு கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான். வேலைக்காரன் மூர்த்தி தேநீர் கொண்டுவந்திருந்தான்.அவரை உள்ளே
வரசொன்னான். அவன் கொண்டு வந்த தேநீரை பருகியவாரே “நீங்க இங்கே எவ்வளவு நாளா வேலை செஞ்சிட்டு இருக்கீங்க?” என வினவினான்.

” ராம் தம்பி சின்ன பிள்ளையா இருக்கும்போதே நான் இங்க வேலை செய்றேன் தம்பி “என கூறினார்.

“உங்க சொந்த ஊர் இந்த ஊர் தானா?” என விஷ்ணு கேட்டவுடன் “ஆமா தம்பி இந்த ஊர்தான் என் சொந்த ஊர் .பிறந்தது,வளர்ந்தது எல்லாம் இங்கதான்”.எனசொன்னார் மூர்த்தி.

நடந்த களேபரத்தில் அந்த குன்றைப்பற்றி மறந்திருந்த விஷ்ணுவிற்கு திடீரென்று அதைப்பற்றி இவரிடமே கேட்கலாம் என நினைத்தான். பின் அவரிடம் “அப்போ இந்த ஊரோட எல்லையில இருக்க குன்றைப்பற்றி உங்களுக்கு தெரியும்தானே ?” என கேட்டான்.

அக்கேள்வியை அவன் கேட்டவுடன் பீதி படர்ந்த முகத்துடன் “எங்க தாத்தா சொல்லி தெரியும் தம்பி .இப்போ அதப்பத்தி ஏன் யோசிச்சிட்டு இருக்கீங்க ? உங்களுக்கு அதைப்பத்தி தெரிய வேண்டாம் தம்பி படுத்து ரெஸ்ட் எடுங்க” என்றார்.

“இப்படிலாம் சொல்லி என்கிட்ட இருந்து தப்பிக்கமுடியாது.அது எவ்வளவு பெரிய கதையா இருந்தாலும் பரவாயில்லை நீங்க இன்னைக்கு சொல்லியே ஆகனும். ப்ளீஸ் மூர்த்தி சொல்லுங்க” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.

“என்ன இந்த பிள்ளை இப்படி அடம்பிடிக்கிறதே என நினைத்தவர். சரி சொல்றேன் ஆனா இதை நான்தான் உங்களுக்கு சொன்னேன்னு யார்கிட்யும் சொல்லக்கூடாது “என்றார்.

“இன்றைய தேதியில இருந்து சுமார் பலநூறு வருஷத்துக்கு முந்தி “என ஆரம்பித்தவரை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

தொடரும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here