ஆரோக்யம்

0
16

தினமும் ஒரு குட்டி கதை

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.

என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார்.

பீர்பாலை பார்த்தார்.

பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.

கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

? பயம் ஒரு பெரிய நோய்.

நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

? அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு:-
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார்.

சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன்.

அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

?

? சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here