இருவரிக்கவிதைகள் — சிறுகதைகள்.

0
53

அருள் ஆபிஸ் முடிந்து ஆஸ்திரேலியாவில் பிரிஸ்டன் சாலையில் மிக நெருக்கமான மக்கள் கூட்டத்தின் நடுவே மெட்ரோ ஸ்டேஷன் அருகில் வரும்போது போன் சிணுங்கியது .இந்தியாவில் இருந்து வருவது தெரிந்ததும் நண்பன் தருண் என்ற ஆவலில் “ஹலோ மச்சான் “என்றதும் மறுமுனையில் அமைதியாக “இல்லப்பா நான் மனோகர் பேசறேன்.உன்கிட்ட கொஞ்சம் பேசணும் .ப்ரி டைம்ல கூப்புடுறியா?”என்றதும் போனை கட் பண்ணிட்டு தனது அபார்ட்மெண்ட் போனதும் தனது அறையில் போய் படுத்து கொண்டான் .நீண்ட வருடங்களுக்கு பிறகு அந்த குரல் அவனுக்குள் இருந்த உணர்வுகளை தூண்டிவிட்டது .

இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வெளியில் வந்தவன் அந்த நம்பருக்கு போன் செய்தான் .அவர் போனை எடுத்து”எனக்கு தெரியும் அருள் உனக்கு நான் பேசுனா புடிக்காதுன்னு.ஆனா இனி நான் பேசாம இருக்க முடியாத சூழ்நிலை .அமிர்தா உன்கிட்ட கொடுக்க சொல்லி சில விஷயங்கள கொடுத்துட்டு போயிருக்கா.உன்னோட இரண்டு மாச லீவுக்கு நீ வந்து தான் ஆகணும் .இந்த முறை கண்டிப்பா வரணும் “என்றதும் போனை வைத்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தான் .

அன்று காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னை வந்து இறங்கினான்.தருண் அழைத்து போக காத்திருந்தான் .தருணோடு காரில் போகும்போது “எதுக்குடா நம்பர் கொடுத்த நான் இங்க வரவே வேண்டாம்னு இருந்தேன் .இப்ப பாரு “என்றதும் தருண் “போதும் மச்சான் அப்படியே இருந்துற முடியாது.உன்னோட பீலிங்ஸ் மட்டும் பாக்க கூடாது .”என்றதும் கார் அந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தது.தருணை பின் தொடர்ந்து அருள் நடந்தான் .இரண்டாவது கட்டிடத்தில் புற்றுநோய் மருத்துவ பிரிவு பகுதிக்குள் நடந்தனர்.எவ்ளோ பெரிய கட்டிடம் .நிறைந்து வழியும் நோயாளிகள் .எப்படி இவ்ளோ வேகமாய் இங்கே இவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.சக்கரைவியாதியும்,புற்றுநோயும் இங்க தேசிய வியாதியா என்று தோன்றியது .ஆறிலிருந்து ஆறுபது வரைக்கும் இது பாதித்துள்ளது.

ஒரு நீளமான அறையில் விளிம்பில் அவர் இருந்தார் .அவரை அடையாளம் காண்பதே சிரமமாக இருந்தது .அருளை பார்த்ததும் தனது வேதனை மறந்து சிரித்தார் .அருகில் சென்றதும் அருளை உக்கார சொன்னார் .அவன் முகத்தையே உற்று பாத்த அவர்”எப்படிப்பா இருக்க?”என்றதும் அருள் “நல்லா இருக்கேன் .எப்ப இருந்து இங்க இருக்கீங்க ?”என்றதும் அவர்”நாலு வருஷமா போராடிட்டேன் இப்போ முடியல.இங்க வந்துட்டேன் “என்றவர் சின்ன அமைதிக்கு பிறகு “உன்கிட்ட நிறைய பேசணும் .இங்க வேணாம் .நாளைக்கு வீட்டுக்கு வா “என்றார் .இருவரும் அங்கிருந்து கிளம்பினார் .தருண் வீட்டிற்கு வந்த அருளுக்கு மனோகரின் பழைய உருவங்கள் வந்து வந்து போனது .மறுநாள் மனோகர் ஆட்டோவில் தருண் வீட்டிற்கு வந்தார் .தருண் அழைத்து வந்து அமரவைத்துவிட்டு அருகில் அமர்ந்தான் .

மனோகர் பேச ஆரம்பித்தார் .”அருள் உனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது .தெரிஞ்சுக்கவும் நீ விரும்பல.உங்கம்மாவும் நானும் ஒரே காலேஜ் .அவ காலேஜ் வந்ததும் என் குரூப்ல முதல்ல சிக்குனா.நாங்க தான் ராக் பண்ணுனோம்.எங்கள பாத்ததும் அழ ஆரம்பிச்சுட்டா குழந்தை மாதிரி .இப்பவும் அந்த முகம் அப்படியே நிக்குது .அதுக்கு பிறகு என்னை பாத்தாலே பயந்து ஓடி போயிருவா .கை நிறைய கண்ணாடி வளையல் அவ கூடவே வரும் கலகலப்பு சத்தம் .எவ்வளவு பெரிய கூட்டமா அவ மட்டும் தனியா தெரிஞ்சா .அவள பாக்க பாக்க காதல் விஷம் மாதிரி பரவுச்சு.மறுநாளே அவகிட்ட போய் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு .”ன்னு சொல்லிட்டேன் .

இதுவரையில் பயந்துட்டு இருந்தவ.அதுகப்புறம் என் முன்னாடி வரவேயில்லை .அவள பாக்கவே முடியல.என்னால பாக்காம இருக்கவும் முடியல .அவ வீட்டு பக்கம் போய் தேட ஆரம்பிச்சேன் .காதல் தைரியத்த தானா கொடுக்கும் .ஒரு வழியா கண்டுபுடுச்சேன் .பைத்தியம் மாதிரி அவ வீட்ட சுத்தி சுத்தி வந்தேன் .அவ வெளிய வரல.சாய்ந்திரம் வந்தா அவ பின்னாடியே போனேன் .ஒரு வீட்டுக்கு பின்னாடி அழைச்சுட்டு போய்”ஏன் இப்படி சுத்தி சுத்தி வர்றீங்க?எங்க வீட்ல தெரிஞ்சா அவ்ளோ தான்.எனக்கு படிக்கணும்னு ஆசை.என் பின்னாடி வராதீங்க”சொல்லிட்டு அழுதா.குற்ற உணர்ச்சி என்னை கொன்னுட்டு இருந்தது .அவகிட்ட இருந்து விலகிட்டேன்.

காலேஜ்ல அவ பாதையை விட்டு விலகியே இருந்தேன் .மனசுக்கு புடிச்ச பொண்ணுகிட்ட இருந்து மறஞ்சு வாழ்றது அவ்ளோ வலிக்கும்னு அப்ப தான் தெரிஞ்சுகிட்டேன் .ஏதோ தனிமையில் இருக்குற மாதிரி தோணும் .மூணு மாசத்துக்கு அப்புறம் ஒரு நாள் கிரவுண்ட் இருந்த என்னை பாக்க வந்தா .நான் அவள பாத்து கிளம்பும் போது “நில்லுங்க அன்னைக்கு பயந்து போய் அப்படி சொன்னேன் .ஆனா எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு .”என்றதும் மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம் .கண்ணு கூட கலங்கி போச்சு முதல் தடவையாக .அப்புறம் என்ன காலேஜ் லவ் செம ஜாலியா போச்சு .நான் படிச்சுட்டு பக்கத்து பேக்டிரில வேலைக்கு போனேன் .சாய்ந்திரம் சரியாக அவள பாக்க காலேஜ்க்கு வந்திருவேன்.

அவளும் காலேஜ் முடிச்சா.அவ வீட்டுக்கு பொண்ணு கேட்டு போனேன் .இரண்டு தடவை என் பெத்தவங்களோட போனேன் .நான் மட்டும் தனியா பல தடவை.அவங்களுக்கு தர பொண்ணு தர விருப்பம் இல்ல.நாங்களா எங்க வாழ்க்கைய அமைச்சுக்க முடிவு செஞ்சோம் .விஷயம் தெரிஞ்சு பெரிய பிரச்சனையாச்சு.என்னை போலிஸ்ல புடுச்சு கொடுத்துட்டு அவளுக்கு அவசர அவசரமாக கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க .திரும்பி நான் வரவேயில்லை .இங்க வந்து இருந்துட்டேன் .வருஷங்கள் வேகமாய் போயிருச்சு .நான் கல்யாணத்த பத்தி யோசிக்கவேயில்லை.

ஒரு நாள் உங்க மாமா என்னை பாக்க வந்தார்.அப்ப தான் உங்க அப்பா மாரடைப்புல இறந்துட்டார்ன்னு தெரிஞ்சது .உங்க அம்மாவோட மனநிலை மோசமா இருந்தது .அடுத்தடுத்த இழப்புகள் மனதிடத்த அசைத்து பாத்துரும்.உங்க அம்மாவ பாக்க வந்தேன் .உங்கம்மாவ அந்த நிலையில விட்டுட்டு வர மனசு வரல.கூடவே இருந்தேன்.நான் உங்க அம்மா கூட இருந்தது உனக்கு பிடிக்கல.விலகியே இருக்க ஆரம்பிச்ச.படிக்க போன நீ திரும்பி வரவே விரும்பல.அதுகப்புறம் உங்கம்மாவோட இறப்புக்கு தான் வந்த.ஒரு விஷயம் அருள் உங்கம்மாவோட கடைசி நிமிஷம் வரையில் நான் ஆதரவா மட்டும் இருந்தேன் .எங்களுக்குள் எந்த உறவையும் ஏற்படுத்திகிட்டு வாழல நாங்க .நேர்மையான காதலர்களா மட்டும் தான் இருந்தோம் .

இப்ப மட்டும் ஏன்?இதை பத்தி சொல்றேன்னா எனக்கு நீ கொள்ளி வைக்கனும் .எனக்குனு யாருமே இல்ல .நீ தான்டா என் வாரிசு .என்னை அனாதையா விட்றாத அருள் .என்றவர் கண் கலங்கி போனார் .அவரை என் மார்போடு அணைத்து கொண்டு “என் வாழ்க்கையில எவ்ளோ பெரிய அரவணைப்பை இழந்திருக்கேன்னு இப்ப தான் புரியுது அப்பா”என்று அழ தொடங்கினேன்.நீண்ட வருடத்திற்கு பிறகு அழ தொடங்கி இருக்கிறேன் .

என் அப்பாவுடன் ஆஸ்திரேலியா வந்தேன் .புற்று நோய்க்கு மருத்துவம் பார்த்து கொண்டு இருக்கிறேன் .அன்பு மீது இப்போது தான் நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது .

[முற்றும் ]

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here