உனக்கான வாழ நினைக்கிறேன்

0
40

உனக்கான வாழ நினைக்கிறேன்

என்னுயிரின் நகலென
என்முன்னே வந்தவனே
என்னவளும் அன்பினிலே
என்பாசம் ஒளித்துகொண்டாள்

உன்வசந்தம் எதிர்நோக்கி
ஒவ்வொரு நிமிடமும்
உழைப்பிலேயே திரிந்தேனே
உன்னுலகை அழகாக்க

வருடங்கள் ஓடிடவே
வயோதிகமும் வந்திடவே
வருத்தங்கள் சேர்ந்ததடா
வலிக்கொண்ட மனதினிலே

இமைகளிலே உன்நினைவும்
இதயத்தில் உன்வாழ்வும்
நிலைபெற்று நிற்கயிலே
நிம்மதியாய் இறப்பேனா?

அன்புள்ள மகனே!

உனக்காக வாழ நினைக்கிறேன்
என்கடமை முடித்துவிட்டு
ஈமகடமையை ஏற்றுக்கொள்ள…..

      - சேதுபதி விசுவநாதன்
Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here