உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 15

0
311

“ரவி நான் சொன்ன மாதிரியே எல்லாம் செஞ்சாச்சு தானே…”
“ஆமா டாக்டர்.. எல்லாமே ரெடி.. அந்த காலேஜின் பிரின்சிபால் எனக்கு ரொம்ப வேண்டியவர்… அவர்கிட்டே பேசி ப்ரியா அங்கே எக்ஸாம் எழுத பெர்மிஷன் வாங்கி இருக்கேன். ஆனா டாக்டர்… ப்ரியா அங்கே ஏதாவது வித்தியாசமா நடந்துக்கிட்டா என்ன செய்வது?” லேசான பயம் இருந்தது அவன் குரலில்.
“நான் பக்கத்தில் தானே ரவி இருப்பேன்.. அப்புறம் என்ன பயம்?”
“எனக்கு என்னவோ டென்ஷனா இருக்கு டாக்டர்” வேர்த்து வடிந்த முகத்தை கர்சிப்பினால் ஒற்றி எடுத்தான் ரவி…
“இவ்வளவு டென்ஷன் வேண்டாம் ரவி.. எவ்வளவு பெரிய ஆள் நீங்க… ப்ரியாவின் விஷயத்தில் இவ்வளவு டென்ஷன் தேவை இல்லை. நீங்க ப்ரியா மேல காட்டுற அன்பையும், அக்கறையையும் பார்க்கும் பொழுது எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்கு.. நீங்க பயப்பட வேண்டாம்.
இப்போ நாம செய்யுற முயற்சி மட்டும் சக்சஸ் ஆகிடுச்சுன்னா…. கண்டிப்பா ப்ரியாவை காப்பாத்தி விடலாம். அந்த எக்ஸாமை அவ எழுதி முடிச்சிட்ட மாதிரி இப்போ அவளோட மனசை நாம நம்ப வைக்கணும். அப்படி செஞ்சிட்டா அதுக்கு அப்புறம் ப்ரியாவை நாம சீக்கிரமே குணப்படுத்திடலாம்” என்று நம்பிக்கையுடன் பேச ரவிக்கும் அவரது பேச்சில் நம்பிக்கை துளிர் விட்டது.
எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு ரவி கல்லூரி வாசலிலேயே தன்னுடைய காருக்குள் காத்திருந்தான். பரீட்சை முடியும் முன்னே ஜெயாவிடம் இருந்து அழைப்பு வர… வேகமாக எடுத்து பேசினான்..
“ரவி ப்ரியா எக்ஸாம் எழுத சொன்னதும் கொஞ்ச நேரம் எழுத முயற்சி செஞ்சா.. அப்புறம் அவளோட முகமெல்லாம் ரொம்ப குழம்பிப் போய் அப்படியே மயங்கி விழுந்துட்டா… அவளை உடனே என்னோட ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும்” என்று சொல்லவும் மின்னல் வேகத்தில் விரைந்து செயல்பட்டான் ரவி.
ஆஸ்பிடலில் இருந்த ப்ரியாவிற்கு அளிக்கப்பட்ட கவுன்சிலிங்கின் விளைவால் ப்ரியா கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விட… அதன்பிறகு அவளுக்குத் தெரியாமல் அவளை வந்து பார்ப்பதை ரவி நிறுத்திக் கொண்டான். சொன்னபடியே மகேசனிடம் அவளை நல்லபடியாக ஒப்படைத்த ரவி தன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் அழித்து விட்டு இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து போனான்.
ரவி தன்னை காப்பாற்றிய விவரங்களை ப்ரியாவிடம் தெரிவித்த மகேசன் ரவியைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க மறுத்து விட.. சோர்ந்து போனாள் ப்ரியா. அடக்கி வைக்கும் பொழுது திமிறிக்கொண்டு மேலே எழுவது இயற்கை தானே… எல்லாரும் ரவியை பற்றி மறைக்க மறைக்க, அவனை எப்படியாவது கண்டுபிடித்து அவனையே திருமணம் செய்து கொள்வது என்ற எண்ணத்திற்கு வந்து விட்டாள் ப்ரியா.
இதெல்லாம் ஒரே நாளில் நடக்கவில்லை. தினமும் ஜெயாவிடம் பேச்சுக் கொடுத்து ரவி தன்னை அன்புடனும், அக்கறையுடனும் பார்த்துக் கொண்டதையும், பாத்ரூமில் அன்று நடந்த விஷயம் உள்பட எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டவளுக்கு, அவன் தனக்காக செய்த அத்தனை நிகழ்வுகளும் அவன் மேல் அவளுக்கு மதிப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை… காதலையும் சேர்த்து மனதில் விதைத்தது.
ஆனால் உடனடியாக அவளால் அவனைத் தேடி செல்ல முடியாமல் அவளுக்கு தடைகள் விதித்தார் மகேசன்.
“முதலில் உன்னுடைய படிப்பை முடி.. அதன்பிறகு நம்முடைய சொத்துக்களை மீட்டாக வேண்டும்.. உன்னை கல்யாணம் செஞ்சு கொடுக்கும் பொழுது ஊரே பார்த்து மூக்கில் விரலை வைக்கணும் .. பெத்த என்னோட மனசும் குளிர உன்னை அனுப்பி வைக்கிறேன். அதுவரை பொறுத்திரு..” என்று சொன்னவரின் வார்த்தைகளை மீறாமல் நல்லபடியாக படிப்பை தொடர்ந்தாள்.
அவளால் அவள் ஆசைப்பட்ட மருத்துவப்படிப்பை படிக்க முடியவில்லை. மனநிலை சரியில்லாத பெண்ணை மருத்துவ துறையில் அனுமதிக்க முடியாது என்று பலரும் சொன்னதால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டு வேறு ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கத் தொடங்கினாள் ப்ரியா.
இதோ இப்பொழுது வேலை பார்த்து தன்னுடைய சம்பள பணத்தை எல்லாம் அப்படியே கேசுக்காக தந்தையிடம் கொடுத்து விடுகிறாள். தன்னுடைய திறமைகளை நிரூபித்த வண்ணம் ரவியைத் தேடிக் கொண்டிருக்கிறாள் ப்ரியா… அதாவது நம் கதையின் நாயகி சக்திப்ரியா…

 

 

 

 

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here