என் செல்லக் கோபமும்
செல்லாக் காசாய் உன் முன்!!!
என் அடங்காத் திமிரும்
அடங்கிய காளையாய் உன் முன்!!!
என் அளவிலா அன்பும்
அணுவானது உன் முன்!!!
என் கட்டுக்கடங்காத காதலும்
கவி பாடுது உன் முன்!!!
என் ‘நான் ‘என்ற சர்வமும்
நீயே ஆனது உன்முன்!!!
Facebook Comments