உயிரானவளே பகுதி 15

0
330

இன்னைக்கோ நாளைக்கோனு இருக்கும் தனது மேடிட்டிட வயிற்றை தடவி குடுத்த படியே .. கார்த்திக் பத்தி நினைத்து கொண்டிருந்தாள்…..

மயூகூட அனுப்ப எவ்வளோ அழகாநடிச்சி பிளான் பண்ணி ஏமாத்தி இருக்கான்… ஏமாந்துட்டோம்.. கண்ணீர் கூட வர மாட்டுது… அவனை நினைக்கையில்… . அனு கர்பம் ஆனதும் அத சொல்ல மயூ சென்னைக்கு வந்து கார்த்திக்கை தேடிய போது தான் அவனின் பிராடு வேலை மயூவுக்கே தெரிந்தது.. அவன் சொன்ன அட்ரஸ் லாம் தேடி பார்த்தும் அப்படி யாரும் இல்லனு பதில் மட்டுமே வந்தது… அனு ஏமாற்ற பட்டுருக்கிறாள்னு தெரிந்ததும் மயூ துடித்து போனாள்….

அனுவிடம் வந்து சொல்லவும்.. அனு எந்த ரியாக்ஸன்னும் பண்ணாம இருந்ததே மயூவுக்கு திக் னு தான் இருந்தது… விசியம் கேள்வி பட்டு கதறுவாள்னு பார்த்தா… இப்படி இறுகி போயிருக்கிறாளே… மனதில் ஒரு வித பயத்தோடவே அனுவை கண்காணித்துக் கொண்டாள்..

கார்த்திக்கின் நினைப்பில் உருக்குலைந்து போனாள்… என்ன ஏமாத்திட்டேயே டா நான் உன்ன உண்மையா தானடா லவ்பண்ணேன் . எப்படி டா என்னை ஏமாத்த மனசு வந்தது நீ குடுத்திட்டு போன பரிசு பாரு டா தன் வயிற்றை தடவிக்கொடுத்தாள்
கண்கலங்கினாள். உன்னாலதான் நான் இன்னும் உயிரோட இருக்கேன் …. வயிற்றில் இருக்கும் குழந்தையோட தடவி கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்… மயூ மட்டும் இல்லனா நான் என்ன ஆகிருப்பேன்… அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது
….
மயூரி….அனுவை ஊருக்கு கூட்டிட்டு வந்த நாளை நினைத்து பார்த்தாள்….

அனுவின் வீட்டிலும் மகள் கெட்டு போய் வந்தது தெரிந்ததும்… அனுவின் அப்பா எவன் கூடவோ கூத்தடிச்சிட்டு எங்கள அவமான படுத்துறதுக்குனே இங்க வந்து இருக்கியா போடி வெளியேனு துரத்தி விடவும்..

அனு இடிந்து போனாள். எங்கே இவளை தனியா விட்டா எதுனா ஏடாகூடமா பண்ணிக்க போறானு பயந்து மயூ தன் சொந்த ஊருக்கே அழைத்து வந்து விட்டாள்..

என்னை தாய்க்கு தாயாய் வளர்த்த அப்பாவா என்னை முஞ்சிலயே முழிகாத வெளியே போனு சொன்னதும் .. அம்மா இல்லாத குறையே தெரியாமல் வளர்த்தாரே அழுகை அழுகையாய் வந்தது …. நா எந்த தப்புமே பண்ணலையே மயூ எனக்கு எதுக்கு இந்த தண்டனை என கதறினாள் அனு.

மயுவும் கண்கலங்கினாள்…
மனசு ஒடிஞ்சு வந்தவளை உங்க பொண்ணா கூட பாக்க வேணாம் ஒரு
மனுஷியா கூட மதிக்க தெரியாதவரா போய்ட்டீங்களே.. உங்க மேல நான் எவளோ மதிப்பு வச்சிருந்தேன் தெரியுமா அதெல்லாம் ஒரு நொடியில் இல்லாம ஆக்கிட்டீங்க ச்சே…. திட்டி விட்டு நிற்கதியாக நின்ற அனுவை அரவணைத்து தன்னுடனே கூட்டிட்டும் வந்து விட்டாள் மயூரி.

கார்த்திக் திட்ட தீட்டி அனுவை கழட்டிவிடுவான்னு மயூரியும் நெனைக்க வில்லை.. அனுவும் நினைக்கல… எல்லாம் விதி..

அவனின் திட்டத்தை சிவாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்
சுந்தரம் ஊரோட போயிட்டான் டா.. நீயும் எங்கயாவது போய்டு சிவாவிடம் கடுப்போட கூற..

டேய்ய்… நீ முன்னாடி போட்ட திட்டமே சொதப்பிடுச்சு இதுல மறுபடியும் ஒரு திட்டமா என்னால அடிலாம் வாங்க முடியாது டா .சாமி ஆள விடு..

டேய் சிவா அதெல்லாம் இந்த தடவ சொதப்பாதுடா.

ஹ்ம்…. என்ன திட்டம்னு சொல்லுடா.. முதல்ல

சொல்லுறேன் அதுக்கு தான உன்ன கூப்பிட்டேன் அதுக்குள்ள அவசரப்படுற.
எனக்கு ஒரு அப்பா அம்மாவ ரெடி பண்ணி கொடு…

என்ன…..?
சிவா நெஞ்சில் கை வைத்து உக்காந்து விட்டான். அட பாவி என்னமோ
கடலை மிட்டாய் கேக்குற மாதிரி அம்மா அப்பாவா ரெடி பண்ணி தான்னு சொல்லுற…. என்ன பாத்தா உனக்கு எப்படி டா தெரிது சிவா பொறியவும்.

டேய்.. நிறுத்து முதல்ல நான் சொல்லுறத கேளு நாளைக்கு அனுவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேனு சொல்லிருக்கேன்.. அங்க நாம ரெடி பண்ண அப்பா அம்மாவை அனுக்கு அறிமுகம் படுத்துறோம்..

என்னது,.. படுத்துறோமா…? நான் அங்கலாம் வர மாட்டேன் அதெல்லாம் உன் வேலை நீயே பாத்துக்கோ..

சரி சரி நீ அம்மா அப்பா மட்டும் தயார் பண்ணு மத்தது நான் பாத்துக்கறேன்.

ஹ்ம் அப்புறம்..

அந்த டூப்பிளிகேட் அப்பா அம்மா அனுவையும் என்னையும் ஏத்துக்க மாட்டேன்னு சொல்லி திட்டி துரத்தி விடனும்.

அத உன் ஒரிஜினல் அம்மா அப்பாவே செய்வாங்களே டா.

டேய்ய்….. குறுக்க குறுக்க பேசாத டா பல்லை கடிக்கவும்…

சரி சரி கோவப் படாத சொல்லு..

ஹ்ம் ..நீ சொல்லுறதும் சரி தான்.. என் அம்மா கூட ஒகே டா அப்பாவை நினைச்சா தான் அடி வயிறுலாம் கதி கலங்குது…

ஹ்ம்ம் புரிது டா … நீ சொல்லு.. டுப்பிலிகேட் அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்து அனு முன்னாடி நிறுத்தியாச்சு அப்புறம் மேல சொல்லு…

அவங்க கன்னா பின்னானு பேச நான் கோவப்பட்டு அனுவை மயூ ஊருக்கே அனுப்பிடுவேன் எப்புடி..

ஹ்ம்.. இதுல எனக்கு ஒரு சந்தேகம்..?

கேளு..

அது எப்படி மயூ ஊருக்கு அனுவ அனுப்ப முடியும் …?? உன் அப்பா அம்மா திட்டுறது உனக்கும் அனுக்கும் தான தெரியும்.. இதுல மயூ எங்க வந்தாள்??

ஹாஹா.. அங்க தான் என் மாஸ்டர் பிளானே இருக்கு.. நானும் அனு மட்டும் போக மாட்டோம் கூடவே மயுவும் கூட்டிட்டு தான் போவேன் .. அங்க நடக்குற கலவரத்துல மயூவே வாங்க நாம ஊருக்கே போய்டலாம்னு சொல்லிடுவா… எப்புடி என் திட்டம் நல்லா இருக்கா….

ஹ்ம்… நீ திட்டம் எல்லாம் நல்லா தான் டா பண்ணுற ஆன கடைசில தான் சொதப்பிடுற.. அனு விசயம் போல..

ப்ச்.. விட்றா.. நடந்தது முடிஞ்சு போச்சு இனி நடக்க போறத பத்தி பேசுவோம்…

ஹ்ம்..

சொன்னது நியாபகம் இருக்கட்டும் நாளைக்கு நான் அனுவை கூட்டிட்டு வரும் போது ஏற்பாடு பண்ணி வச்சுருக்கிற டூப்பிளிகேட் அப்பா அம்மா பேசுற பேச்சுல அனு ஓடி போய்டணும்… சரியா….

ஹ்ம் சரி டா … ஆனா மாட்டுனோம் வை நம்ம கதை அவ்ளோ தான் டா பாத்துக்கோ.கண்ணுல கலவரத்தோட சொல்ல..

அதெல்லாம் ஒன்னும் மாட்ட மாட்டோம்.. நீ தைரியமா இரு..

சரி டா.. எப்ப வரணும்னு சொல்லு அப்ப தான் ஆள் தயார் பண்ணி ரேட் பேசி கூட்டிட்டு வர முடியும்..

பணம்லாம் கணக்கு பாக்காத எவ்ளோ கேக்குறாங்களோ கொடுத்துறேன் … பணம்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை நான் சொன்ன மாதிரி நடக்கணும் அது தான் முக்கியம் எனக்கு புரிதா..

சரி டா..

ஹ்ம்… இப்போ நான் ஹாஸ்பிடல் தான் போறேன்..

அனுவ பாக்கவா..

இல்லை டா மயூவை பாக்க.. கண்ணடித்து கொண்டே கிளம்பினான்..

அட பாவி.. ஹ்ம் இவன் பண்ணுற அழம்பலுக்கு அளவே இல்லை.

என்ன வேற மாட்டி விடறானே… இத மட்டும் செஞ்சு குடுத்துட்டு சுந்தரம் போன மாதிரி நானும் இவன் கண்ணுல அகபடாம ஓடிட வேண்டியது தான்… மனதில் முடிவு செய்து கொண்டான்..

ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தார்கள் மயுவும் அனுவும்… கார்த்திக் உள்ளே வருவதை அனு பார்த்துட்டாள்..

அனுவின் முகத்தை எதேச்சயாய் கார்த்திக் பார்க்க அவள் முகம் சட்டென சிவந்து போனது…..
அவள் வெட்கப்பட்டு நிற்பதை கார்த்திக் ரசித்தான்.

முதல் முதலாய் கார்த்திக் தன்னை ரசித்து பார்க்குறதை பார்த்ததும் அனு இன்னும் வெட்கப்பட்டாள்.

அட …. இதுவும் நல்லா தான் இருக்கு கார்த்திக் உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு டா என நினைத்து கொண்டே அவளை ஒரு மார்க்கமாய் பார்க்க …. அனு இன்னும் தலையை கவிழ்ந்து கொண்டாள்… பூமிக்குள் புதையல் தேடி எடுப்பது போல…

அவளையே பார்த்துட்டு இருந்தான் … சட்டுனு மயூ உள்ள வரவும் இருவருக்கும் உள்ள மோன நிலை கலைந்தது….

கார்த்திக்கே… ச்சே இப்படியா பார்ப்ப அதுவும் மயூ இருக்கும் போது முட்டாள்.. அவனையே திட்டிக் கொள்ள….

அதன் பிறகு அனு பக்கம் பார்க்காமலே நின்று கொண்டான்..

அனுதான் … கார்த்திக் தன்னை பார்ப்பானானு அவன் பார்வைக்காக ஏங்கினாள்…. ஹ்ம் எங்க இந்த பக்கம் திரும்ப கூட மாற்றானே… எல்லாம் இவளால வந்தது இவளை யாரு உடனே வர சொன்னது இப்போ தான் என்னை உரிமையோடு பார்த்துட்டு இருந்தான் அது பொறுக்காதே இவளுக்கு… உடனே மூக்குல வேர்டுத்துடும் மனதுக்குள்ளே மயூவை அர்ச்சனை செய்தாள்.

மயூவோ… கருமே கண்ணாக எல்லா பொருளும் சரியா இருக்கானு செக் பண்ணிட்டு போலாமாடி அனுவிடம் கேட்க…

ஹ்ம்ம்ம்… தலையை மட்டும் ஆட்டினாள்…

உடனே கார்த்திக் மயூ நான் வீட்டுல பேசினேன்.. அப்பாவும் அம்மாவும் என் மேல பயங்கர கோவமா இருக்காங்க என்ன சொன்னாலும் அவங்க சமாதானம் ஆகல… இப்போ என்ன பண்ணுறது மயூ… கார்த்திக் சொல்ல

முதல்ல கார்த்திக் மயூனு கூப்பிட்டது மயூரிக்கும் அனுவுக்கும் பிடிக்கல… அடுத்தது அவன் சொன்ன விசயம் நம்புற மாதிரி இல்லனு மயூ பார்வையாலே காட்டினாள்…

கார்த்திக் வீட்ல பேசிட்டேன்னு சொல்லவும் அனு சந்தோசபட்டாள்… ஆனால் அவங்க ஒத்துக்கல திட்டி அனுப்பிட்டாங்கனு சொல்லவும் அனு முகம் சுண்டி போனது.

நீங்க சொல்லுறது நம்புற மாதிரி இல்லையே சந்தேகமாய் மயூ பார்க்க…

அய்யோ மயூ நான் உண்மையா தான் சொல்லுறேன் உங்களுக்கு நம்பிக்கை வரலைனா நாளைக்கு வாங்க போய் பேசலாம். அனு கூட நீங்களும் வாங்க கூட்டிட்டு போறேன். அப்பதான் நான் சொன்னது பொய் இல்லனு தெரியும் என்ன நம்புவீங்க…

கார்த்திக் தான் இவ்ளோ தூரம் சொல்லுறாரே மயூ நாளைக்கு நாம போய் பேசுவோம் என அனு சொல்லவும் …

மயூவுக்கும் அது தான் சரினு பட்டது..சரி போலாம்.. வாங்க கிளம்பலாம்…. அனு வீட்டுக்கு வந்தததும் மயூ ஊருக்கு கால் பண்ணி என்ன நடந்தது எல்லாத்தையும் சொன்னாள் ஒன்ன தவிர, இது தனக்கு நேர்ந்து இருக்க வேண்டியது என்பதை மட்டும சொல்லாமல். மறைத்து விட்டாள்…

மறு நாள் கார்த்திக் காலையே வந்துவிடவும் மயுவும் அனுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க நான் சொன்ன நம்ப மாற்றிங்கல அதான் உங்கள கையோட கூட்டிட்டு போக வந்து இருக்கேன் வாங்க னு சொல்லி அழைத்து போனான்..

அங்கே சிவா செட் பண்ணின டூப்பிளிகேட் அப்பா அம்மா எவளோ கேவலமா பேச முடியுமா அந்த அளவுக்கு வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாம பேசி தள்ளவும் அனு நொந்து போனாள்…

ஒரு பணக்கார பையன் உங்கிட்ட கொஞ்சம் சிரிச்சு பேசிட்டா போதுமே அப்படியே அவன வளைச்சு போட பாப்பியே என நாக்கில் நரம்பில்லாம பேச அனு கூனி குறுகி துடிச்சு போய் போனாள் ….

போதும் நிறுத்துங்க மா தப்பு பண்ணது உங்க பையன்.. பையன ஒழுங்கா வளர்க்க துப்பில்லை … நீங்க அனுவை பத்தி பேசுறீங்க… கொஞ்ச மாச்சும் பெரிய மனுஷங்க மாதிரி பேசுங்க … பணம் இருந்தா மட்டும் போதாது.. நல்ல மனசும் இருக்கனும்..உங்க கிட்ட அது கொஞ்சம் கூட இல்லை …. நீங்க எல்லாம் பெரிய மனுஷங்களா ச்சே …. என கூறி விட்டு கோவத்தோட அனுவை அழைத்து கொண்டு மயூரி வந்துவிட..

கார்த்திக் மனதுக்குள் சக்ஸஸ்னு நினைத்து கொண்டான்… வெளியே சோகமாய் முகத்தை வைத்து கொண்டே

மயூ நான் இங்க இருந்து அப்பா அம்மாவ சமாதானம் பண்ணி ஊருக்கு கூட்டிட்டு வரேன் … நம்புங்க ப்ளீஸ் அது வரை அனுவுக்கு பாதுகாப்பா நீங்க தான் இருக்கனும்… இருப்பீங்களா… பாவமாய் கேட்கவும் …

அனுவ பத்தி நீங்க கவலைபடாதீங்க கார்த்திக் நான் பாத்துக்கிறேன்.. நீங்க எவளோ சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கிரம் உங்க அப்பா அம்மாவ சமாதானம் பண்ணி கூட்டிட்டு வாங்க … அது வரைக்கும் அனு என்கூடவே இருக்கட்டும்… நான் பாத்துக்கறேன்..

இது இது தான்டி எதிர் பாத்தேன் … குட் நீயே சொல்லிட்ட….. திரும்பி அனுவை பார்த்தான் அவள் எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்…
இவளை இன்னியோட தல முழுகிட வேண்டியது தான்…

அப்போ மயூ வேணாமா… கார்த்திக்கின் உள் மனசு கேள்வி கேட்க … இவள் எங்க போக போறா… அதான் அந்த முகிலன் கழட்டி விட்டு போய்டானே…. எப்படியோ இவ எனக்கும் கிடைக்கல அவனுக்கும் கிடைக்கல… அது போதும்.

அனு கிளம்பும் போதும் ஏக்கமாய் கார்த்திகையே பார்த்துகொண்டிருந்தாள் .. அந்த பார்வையில் யார் கை விட்டாலும் நீ மட்டும் என்ன கை விட்டுடாத என்ற ஏக்கம் இருந்தது…

கார்த்திக்கும் அவளின் பார்வை என்னமோ செய்ய இருந்தும் அந்த பார்வையை அலட்சிய படுத்தினான்…. அவள் பக்கம் பார்வையை திருப்பாமல் இருந்து கொண்டான்.

பஸ் கிளம்பியதும் உடம்பு பாத்துக்கோ அனு …… பை.. இவ்வளவே அவன் பேசினது அனுவிடம்..

ஹ்ம்ம்ம்…தலையை மட்டும் அசைத்தாள்…

பஸ் கிளம்பினதும் பெரு மூச்சு விட்டான் அப்பாடா ஒரு வழியா போய் சேர்ந்துட்டாள்… இனி நாம இந்த ஊருலயே இருக்க கூடாது எங்க போகணும்னு முடிவும் பண்ணி விட்டான்…..

ஊர் போனதும் மறக்காம கால் பண்ணு மயூ அனுவை பத்திரமா பாத்துக்கோ நான் அடிக்கடி வந்து பாக்கறேன் என கூறினான். அனுவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் மயுவிடமே எல்லாம் சொல்லி முடித்தான்….

நேராக வீட்டுக்கு வந்தவன் நான் வெளி நாட்டுக்கு போறேன் என சொல்லவும்.. கார்த்திக்கோட அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

அம்மா தான் என்னடா திடிர்னு வெளி நாட்டுக்கு போறேனு சொல்லுற எனக்கு இருக்கிறதே ஒத்த புள்ள நீயும் போயிட்டா நான் என்னடா பண்ணுவேன் கண்கலங்க…

எதுக்கும் நான் மசிய மாட்டேன் நான் வெளி நாட்டுக்கு போயே தீருவேனு விடாப் பிடியாய் கிளம்பியும் போய் விட்டான்…FB_IMG_1554957482330|500x500

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here