உயிரானவளே .. பகுதி 2

0
513

வானிலிருந்து இறங்கி வந்த குட்டி தேவதையாய் நின்று கொண்டிருந்தாள்….. (வேற யார் ) நம்ம ஜானு தான் …உள்ளே பார்க்கவும் வெளிய பார்க்கவும்மாக இருந்தாள்…

யாரை தேடுறாள்….??? அவள் செய்கையில் முகிலன் சிரித்து விட்டான்..
சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்….
அவள் பார்த்ததும் சட்டென கப் சிப் வாயில் கை வைக்கவும் ….
முகிலன் கிட்டவந்து அவன் வாயில இருந்த கைய எடுத்து விட்டு சிரிப்பு வந்தா சிரிக்கணும் அங்கிள்…சிரிப்பு பாதில ஸ்டாப்ப ண்ணக்கூடாது னு மம்மி சொல்லிருங்காங்க….. பெரியமனுஷி மாதிரி பேசிய ஜானுவை
முகிலனுக்கு பிடித்துபோனது…. ஸ்மார்ட் கேர்ள்….. வாய்விட்டு பாராட்டினான்..

தேங்ஸ் அங்கிள் என் மம்மி கூட இப்படி தான் சொல்லுவாங்க என சொல்லி விட்டு கலகலனுவென்று சிரித்தாள்…

ஜானு குட்டி எங்க இருக்க… தேடிக் கொண்டு வந்தார் ஜானுவின் தாத்தா… மேஜர் சுந்தரம்… இங்க தான் இருக்கேன் தாத்தா…. குரல் வந்த திசையில் பார்த்த சுந்தரம் யாரோ புதியவருடன் தன் பேத்தி பேசிக்கொண்டுஇருக்கிறாள் யாரது…. தொலைவில் பார்த்ததால் … அவனை அடையாளம் காண முடியவில்லை கண்ணாடி போடாம வந்துட்டோமே ச்ச்சே …. அவரையே நொந்துகொண்டார்

ஆனால்….. !!!
அவரை பார்த்ததும் அதிர்ச்சியில் நின்று விட்டான்……. !!!

ஜானு குட்டி வா டைம் ஆகிடுச்சு…. ஸ்கூல்க்கு மம்மி திட்டுவாங்க…. ஒகே அங்கிள் நா ஸ்கூல்க்கு போய்ட்டு வந்து பேசுறேன் சரியா டாடா பை அங்கிள்….

முகிலன் யோசனையில் ஆழ்ந்தான்… அதே யோசனையோடு ஜானுவுக்கு கை அசைத்தான்….

கோவில் போகலாம்னு வந்த பார்வதி… …முகிலன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறத பாத்துட்டு அதிசியம் பட்டார்…. என்னடா அவ்வளவு வேகமா சாப்பிட்டு கிளம்பினான் …
இங்க நின்னுட்டு இருக்கான்.. டேய் முகிலாஎன தட்டவும்..

அவன் சுயஉணர்வுக்கு வந்தான் .. ஆஹன் மா..

என்னடா அப்பவே அவளோ அவசரமா ஓடுன இன்னும் கிளம்பபாமா இருக்க..

அது .. அது…..? வந்து

என்னடா….. உடம்பு ஏதும் சரியில்லை யா… நெத்தில தொட்டு பார்த்து கொன்றிருந்த போது …
வெளியே வந்தாள் மயூரி….கதவைமூடி விட்டு திரும்பியவளை பார்த்து
பார்வதி சிரித்தாள்.

அவளும் சிரித்தாள்.

என்ன மா ஸ்கூல் கிளம்பிட்டியா.

ஆமா ஆண்ட்டி.

அதே குரல் சடாரென்று திரும்பினான்.

அவனை பார்த்ததும் மயூரி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

இருவரும் பார்வையால் உரசிக்கொண்டார்கள்.

என்னமா… இவன் யாருனு பாக்கறியா என் பையன் தான் சொல்லிட்டுஇருக்கும் போது போன் வரவும்
உள்ளே சென்றாள்.

முகிலன் எட்டிபார்த்தான் அம்மா இன்னும் பேசிட்டுதான் இருகாங்க இப்போதைக்கு வரமாட்டாங்க.

சட்டுனு மயூரியை மூர்க்க தனமா இழுத்து சுவரோட நிக்க வைத்து அவள் மேல் அவன் மூச்சுகாத்து படும் நெருக்கத்தில் நின்றான்.

மயூரி இதை சற்றும் எதிர்பாக்கவில்லை அவளுக்கு மூச்சு வாங்கியது.

முகிலன் ப்ளீஸ்
விடுங்க
என்ன பண்றீங்க.

ஹ்ம் பார்த்தா தெறில கட்டிபிடிச்சிட்டு இருக்கேன்..

விடுங்க முகில் ப்ளீஸ்… அழுதாள்.
உன்னவிட மாட்டேன் டி எப்படி .டி என்ன ஏமாத்த மனசு வந்துதது உனக்கு
உன்னால நா நடைபிணமா வாழுறேனே .
அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லியே ஆகணும்
அழுந்த முத்தம் குடுத்தான்.

அவளுக்கு மூச்சு முட்டியது. அவனோட கோவம் நியாயம்மானது தானே.. நான் தான் ஏமாத்தினேன் அவனை விலக்க முடியாத இயலாமையில் கண்ணீர் விட்டாள்.
அவள் அழுகையை பார்த்ததும் வேகமாக தள்ளி விட்டான்.

போ இங்கேருந்து கோவமாக கத்தினான் ச்சை
அவன்மேலேயே வெறுப்பு வந்தது
உன்ன வேணாம்னு தூக்கி போட்டு போனவள் அவகிட்ட போய் .காலால் எட்டிஉதைத்தான்.

மயூரி உதட்டை கடித்துக் கொண்டு பூட்டிய கதவை திறந்து மூடிக்கொண்டாள் அப்படியே கதவில் மேல் சாய்ந்த படி கதறி அழுதால்……முகிலன் .என்னை மன்னிச்சிருங்க நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் நான் பாவி.. என்ன மன்னிச்சிருங்க திரும்ப திரும்ப அதையே சொல்லி அழுது கொண்டிருந்தாள்……அழுகையுடனே நினைத்தால் என் உயிரில் கலந்த உயிரானவளே முகிலன் அவளின் காதோரம் சொல்லும் வார்த்தையில் …. கதறி அழுதால்……!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here