அனுக்கு என்ன ஆச்சு . முகிலன் சொல்லுங்க அனு எழுந்திரு டி நா ஊருக்கு போகல டி என் செல்லம்ல எழுந்திரு……
தான் !””…. என்ன சொல்லிபுலம்புறோம்னு தெரியாமலே அனுவையே கட்டிகொண்டு கதறி கொண்டுருந்தாள்.
அனுவை கவனிக்காமல் அவள் பாட்டுக்கு புலம்பிட்டே இருக்கவும்.. அழுது கொண்டிருக்கவும் ..
முகிலனுக்கு மயூவை எப்படி சமாதான படுத்துறதுனு புரியாமல் நின்னுட்டு இருந்தான்…
அனுவின் நிலமையை பார்த்ததும் கண்கலங்கிட்டது…
ச்சே”” துரு துருனு இருந்த பொண்ணு … இப்படி நாரா கிழிந்துபோய் கெடக்குறளே…அவளை இப்படி ஆக்குனவனை…. பல்ல கடித்து கை முஷ்டி இறுக்கி கொண்டான்….
அனுவை பார்த்ததும் மனசு வலித்தது..
மயூ ப்ளீஸ் காம் டவுன்.. டா முதல்ல அனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் …. வா மயூ … போலாம்.
என் அனுக்கு என்ன ஆச்சி முகில் நா கோவில் போகும் போது நல்லதானா இருந்தா…முகிலன் சட்டை பிடித்து கேட்டுக்கொண்டிருந்தாள். …
மயூ ..எல்லாம் அப்பறம் சொல்லுறேன் .உனக்கு.. …
இப்போ பேசுற நேரம் இல்லை …
அனுவை எவளோ சீக்கிரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக முடியுமோ அவளோ சீக்கிரமா கொண்டு போனும் .. . …. இல்லனா அனு நமக்கு கிடைக்க மாட்ட மயூ புரிஞ்சிக்கோ…
மயூவுக்கு முகிலன் ஏன் இப்படி சொல்லுறான்னு புரியாமல் அனுவை அப்பதான் முழுதாய் கவனித்தால் .. அவ டிரஸ் எல்லாம் பார்த்ததும்..
மயூரி அதிர்ச்சியில் தொய்ந்து விழுந்தாள்.
முகிலன் அனு… அவ… மயூ பினாத்தினாள்…
மயூ பி ரிலாக்ஸ்….இந்த சமயத்தில் தான் நீ ஸ்டார்ங்கா இருக்கனும்.. அனுக்கு நீ தான் ஆறுதலா இருக்கனும் மயூ புரிஞ்சிக்கோ எமோஷனல் ஆகாத… வா…
ஹ்ம்ம்ம் முகில்..
முகிலனுக்கு தெரியும் இது போலீஸ் கேஸ் தான் ஆகும் னு … இருந்தாலும் அனுக்கு முத்தல்ல டீரிட்மென்ட் தான் முக்கியம்.. அதான் அவன் பிரண்ட் இருக்குற ஹாஸ்பிடல் லா பார்த்து அனுவை அட்மிட் பண்ணான்..
அவன் நேரமோ என்னமோ அவன் பிரண்ட் ட்ரைனிங்க்கு போயிருந்தான்..
அதனால அதர் டாக்டர் டீரிட்மென்ட் குடுக்கும் போது அந்த டாக்டர் கேட்ட கேள்விக்கு முகிலனால பதில் சொல்ல முடியாமல் திணறினான்…
டாக்டர் என் பிரண்ட் இந்த ஹாஸ்பிடல் ல தான் டாக்டரா இருக்கானு சொன்னதுக்கு அப்பறம் தான் அந்த டாக்டர்.. பொம்பள அனுவுக்கு டிரிட்மென்ட் கொடுக்கவே சம்மதிச்சது ….
ஸ்ஸ்ஸ் ப்பா……
அப்பவும் போகும் போதே அந்த டாக்டர் சொல்லிட்டு போச்சு இது போலீஸ் கேஸ் நா இப்போ டிரிட்மென்ட் குடுக்கிறேன் நீங்க முத்தல்ல கம்பளைண்ட் குடுத்துட்டு வாங்க .. சொல்லிவிட்டு ஒரு முறைப்போடவே சென்றாள்.
நல்ல வேல மயூ கூட இருந்தாள்.. இல்லனா இந்த
டாக்டர்ரே என் கேரக்டர் ர ஸ்பாயில் பண்ணிருக்கும்…
. ஏன் தான் இப்படி இருக்காங்களோ .. ஒரு ஆண் பொண்ண கொண்டு வந்து ஹாஸ்பிடல் ல சேர்த்த உடனே தப்பான கண்ணோட்டத்தோடு பாக்குறது… ஏன் அது பிரண்ட்ஸவோ இருக்கலாம், இல்ல சிஸ்டர்ரஇருக்கலாம், அதுவும் இல்லையா ரோட்டில் போகும்போது இப்படி யாருக்காவது ஏற்பட்டு கொண்டு வந்தாலும் இப்படி தான் பாப்பாங்க போல… ச்சே.. படிச்சவங்க தானே.. மனதில் பொறுமிட்டு இருந்தான்… முகிலன் அனு வை அட்மிட் பண்ண டாக்டர்ர பாக்க போனபோது அந்த டாக்டர் கேட்ட கேள்வி எல்லாம் முகிலனுக்கு கடுப்பேற்றிருந்தது….
திக்பிரமை பிடிச்ச மாதிரி அமர்ந்துஇருந்தாள் மயூரி.
முகிலன் பக்கத்தில் உக்காந்து மயூ …. கூப்பிட்டான்…
மயூவிடம் அசைவில்லாமல் போகவும்..
மறுபடியும் கூப்பிட்டான்..
ஹான்…. முகில்.. உதடு துடிக்கவும்…
உஷ்… வாயில் கை வைத்து அதட்டினான்..
உதட்டை கடித்து அழுகையை.. கட்டுப்படுத்தினாள்.அனுவை என்னால இப்படி பாக்கமுடியல.. முகிலன்
தோள்மேல் சாய்ந்து கொண்டாள்.
முகிலனும் வருத்தம் வருத்தபட்டுகொண்டிருந்தான்..
ஒன்னும் ஆகாது மயூ .. டா … ரிலாக்ஸ்சா இருக்க ட்ரை பண்ணு டா.
அனுக்கு இந்த நிலைமை வர யார் காரணம் ..??முகில்.
தெரில மயூ …?
நீ என்கிட்ட கோச்சிக்கிட்டு கோவமா போயிட்ட… எனக்கு என்ன பண்ணுறது னு தெரியாமல் முழிச்சுட்டு இருந்தேன்.. மயூ சரி உன்கிட்ட மறுபடியும் பேசுனா நீ சமாதானம் ஆகலாம்னு நெனச்சேன்.. அதான் அனு வீட்டுக்கு வந்தேன்..
முகிலன் இங்க தான் ஒரு தப்பு பண்ணிட்டான்… அனு பேசுனாங்க.. மயூ அதான் வந்தேன்னு சொல்லிருக்கலாம் முகிலன்.. அத சொல்லாம விட்டது முகிலன் தப்பு எங்கே அனு சொல்லி தான் என்ன பாக்க வந்திங்க அப்ப கூட நீங்க பேசுனது தப்பு னு புரிஞ்சி வரலயேனு மயூ நெனைச்சிட போறாளோனு நினைத்து முகிலன் அனு கால் பண்ணது மறைச்சிட்டான்.. அவன் சொல்லிருந்தா…?
பின்னாடி வர போகும் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து இருக்கலாம்…
முகிலன் அத சொல்ல தவறி விட்டான்…..
டாக்டர் வெளியே வரவும்.
. முகிலனும் மயூவும் டாக்டர்ரிடம் சென்றார்கள்… டாக்டர் அனு க்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர்… மயூ அழுகையோட வே கேட்டுக்கொண்டிருந்தாள்…
அவங்க அன்காஷியஸ்ல இருகாங்க … இப்போதைக்கு அவங்களுக்கு மனதைரியம் தான் தேவை…
நெகடிவ்வா எதுவும் பேசாம பாஸிட்டிவா பேசி மனதை திட படுத்துங்க.. அது தான் முக்கியம் ..
. வார்டுக்கு மாத்திடுவாங்க . பாத்துக்கோங்க…
டாக்டர் சொல்லிட்டு செல்லவும்…
மயூவுக்கு … பழைய அனுவை பாக்கணும் போல ஏக்கமா இருந்தது… அனு அனு… சொல்லியபடியே சரிந்து அமர்ந்தாள்..
உஷ் மயூ டாக்டர் என்ன சொல்லிட்டு போறங்கனு நீ என்ன பண்ணிட்டு இருக்க.. கொஞ்சம்கோவத்தை காட்டி கடுமையவே பேசினான். அவனுக்கும்கஸ்ட்மா தான் இருந்தது இப்படி பேசுறோமே னு .அவளே மனசு நொந்து போயிருக்கா..
இந்த நேரதுல இப்படி பேசுனா தான் மயூ யோசிச்சு பார்ப்பாள் ….
தெளிவான முடிவு எடுப்பாள்னு நினைத்தான்..
அவன் நினைத்தது போலவே .. மயூவும் அழுறத நிறுத்திவிட்டு கண்ணா துடைத்துக்கொண்டே இதுக்கு அப்பறம் என்ன பண்ணணும் னு யோசனை பண்ணினாள்..
நாமளே இப்படி அழுதுட்டு இருந்தா அனுவும் என்ன பாத்துட்டு அழுவா பழைய படி மாறமாட்ட….
.மனதை திடப்படுத்திகிட்டு … அனுவை பார்க்க போனாள்.. அங்கே போகும் வரை தான் அவளோட திடம் எல்லாம் … அனுவை பார்த்ததும் குபுக் னு கண்ணீர் வந்து எட்டி பார்த்தது…
மயூ…. காம் டவுன்… முகிலன்… சொல்லவும்…
கண்ணீரை.. கட்டுப்படுத்தினாள்..
அனுவிடம் சென்றால்.. அனு மெதுவாக தலையை கோதிய படியே மெல்லமாக அழைத்தாள்.
மெதுவா கண்திறந்து பார்த்த அனு சுத்தி பார்வையை சுழல விட்டாள்..
நம்ம எங்க இருக்கோம் என்ன இடம் இது யோசனையோடுவே மயூவை பார்த்தாள்.
அழுதுஅழுது வீங்கிய முகத்தோட நிக்கறவளை பார்த்ததும் பேபி எதுக்கு அழுறா…
யோசனை பண்ணிட்டே திரும்பியவள்.. முகிலனை பார்த்த நொடியில் அனு அதிர்ச்சியில் கை தன்னிச்சையாக அவள் மார்பில் மறைத்து கொண்டது முகிலன் நீ.. நீங்க போ.. போய்டுங்க ….கத்திக்கொண்டிருந்தாள்
அவளின் செயலில் முகிலன் மட்டும் இல்ல.. மயூவும் அதிர்சிக்குள்ளானாள்…