உயிரானவளே 1

0
606

பிரண்ட்ஸ் நான் குரு நாவல் போட்டிக்காக இந்த ஸ்டோரி எழுதி இருக்கேன் படிச்சி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்…நாவல் பெயர்… உயிரானவளே….

இளம் வெயில்… அதிகாலை தூக்கம் சொர்கம் தான் அத அனுபிவிக்கறவங்களுக்கு மட்டும் தான் அந்த சுகம் தெரியும் ஆஆஅம்ம்ம்ம் ஆழ மூச்சு எடுத்து எழுந்து உட்ட்கர்ந்தான்… முகிலன்…
நைட் புள்ள ஹெவி வ்ர்க் ப்ராஜெக்ட் அது அவன் தான் முடிக்கணும் முடிச்சிட்டு இயர்லி மார்னிங் தான் வந்தான்… முகிலன் மென்பொருள் வ்ர்க்
பண்ணறவன் .. டீம் லீடர்… குளிச்சிட்டு கிளம்பனும்….ஹ்ம்ஹும் இப்படியே இருந்தா… மறுபடியும் தூங்க சொல்லும்… முகிலா கம் பாஸ்ட் ரெடி ஆகிடு அவனுக்கே சொல்லிக்கொண்டே எழுந்து குளியல் அறைக்கு பக்கம் போகும் வேலையில் பேச்சு குரல் கேட்கவும் அங்கே தேங்கி நின்றான்…
மம்மி… எனக்கு பிங்க் கலர் தான் பாபி டால் வேணும்… அது தான் பாலா க்கு பிடிக்கும் மம்மி…. என் ஸ்வீட் மம்மி தான ..தாடைய கொஞ்சிகிட்டே கன்னத்துல முத்தம் குடுத்தாள்.ஜானு என்கிற ( ஜானவி ) பக்கத்து போர்சன் ல நடக்கும் உரையாடலை கேட்டு நின்றான்…பதில் . என்ன வருதுனு கேக்க…(.அவன் மனசாட்சி கேட்டது டேய் முகிலா உனக்குக்கொஞ்சம்மாச்சும் இங்கிதம் இருக்கா இப்படி அடுத்த வீட்டு கதையை கேக்க இப்படி காத தீட்டி வச்சிக்கறியே உனக்கு வெக்கமா இல்லை.. ஈஈஈ இல்லை நானா போய் கேட்டேன் அதுவா காதுல வந்து விழுது … உன் காதுல விழுந்தாலும் தட்டி விட்டு போகவேண்டிதானே இப்படிதான் உன் காததீட்டி வச்சி கேக்க சொல்லுதா… ஹேய் சும்மா இரு…. நொய் நொய்னு எதுனா சொல்லிக்கிட்டு அதட்டல் போட்டதும் கப் சீப் ஆகிவிட்டது மனசாட்சி….

…ஹே வாலு மம்மி கிட்ட எப்படி கேட்ட கிடைக்கும்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்க……. ஸ்மார்ட் கேர்ள்…. பொண்ண கொஞ்சிட்டே கலகலவென்று சிரித்தாள்… மயூரி..
ஏனோ அந்த பேச்சு சிரிப்பு எல்லாம் …முகிலனுக்கு பரிச்சயம் ஆன மாதிரியே இருந்ததது… . அப்படியே உறைந்து நின்றான்..ஒரு வேல அவளா இருக்குமோ…?? இல்லை அவளா இருக்க கூடாது…..?? முதல்ல யாருனு தெரியணும் அவசரமா குளிச்சிட்டு கிளம்பி வெளியில் வந்தான்…..
என்னடா அதுக்குள்ள கிளம்பிட்ட கையில் காபியோட வந்தாள் முகிலனோட அம்மா பார்வதி… வந்ததே விடிய காலைல தான் அதுக்குள்ள ஓடுற…. இந்தா இந்த காபி குடி ரூம் வச்சிருக்கான் பாரு எப்படி…. விழுந்து துணியெல்லாம் ஒழுங்கா எடுத்துவச்சிக்கிட்டே புலம்பிக்கொண்டிருந்தால் .. ஹ்ம்ம் காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டுட்டா வரவா பாடு இவன் பாடு னு அக்கடான்னு இருக்கலாம்னு பாத்தா எங்க அசைய மாற்றானே…என்னென்னவோ சொல்லி பாத்துட்டேன் கெஞ்சி பாத்துட்டேன் எதுக்கும் பிடிக்குடுக்காமலே நழுவுறான்…. ஹ்ம்ம் எல்லாம் என் தலைவிதி….. அவள் புலம்பல் எதுவும் அவன் காதில் விழுந்தா தானே… அவன் சிந்தனை எல்லாம் காலையில் கேட்ட சிரிப்பு சத்தத்தை நினைத்துக்கொண்டிருந்து….அரக்க பறக்க சாப்பிடறத பாத்ததும் பார்வதி திட்டினாள்.. மெல்லமெல்லசாப்பிடு …. எதுக்கு இவ்வளவு வேகமா சாப்பிடற… பொறயேறிக்க போகுது சொல்லி வாயைமூடவில்லை… முகிலனுக்கு பொறையேறிவிட்டது…..பாத்தியா சொன்னேன்ல … இந்த தண்ணிய குடி என்னடா அவசரம்.. உனக்கு
அம்மா …. என் அவசரம் எனக்கு .தான் தெரியும் …
ஹுக்கும் போடா … டேய்…
முகத்தை தோள்பட்டையில் இடித்துபோய்விட்டாள். சமையறைக்குள்… அம்மாவுடைய செய்கையில் ….. சிரித்துக்கொண்டே கை கழுவிட்டு சமையறையில் பக்கம்
சென்றான் …..
என் செல்ல அம்மாவே கோச்சிக்காதிங்க உங்க மகன் தானே …… பின்னாடி இருந்து கட்டி கொண்டு கொஞ்சி கொண்டிருந்தான் …அவன் செய்கையில் சிரித்து விட்டார் போடா போக்கிரி….
ஐய்யா ….. அம்மா சிரிச்சிட்டாங்க…. கட்டிக்கொண்டான்….
சரிம்மா நான் கிளம்பறேன்….. டைம் ஆகிடுச்சு…
சரிடா பாத்து போய்ட்டு வா வண்டிய வேகமா ஒட்டாத சரியா….
ஹ்ம்ம் ஓகே மா…. வெளிய வந்தவன் பக்கத்து போர்சன்ன பார்த்தவுடன் நின்று விட்டான்……… FB_IMG_1550741569855|500x500

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here