உயிரானவளே.. 5

0
361

டேய்.. கார்த்தி உன்ன எங்களாம் தேடுறது.. இங்க என்ன பண்ணிட்டு இருக்க கேட்டுக்கொண்டே வந்தார்கள்.. சிவாவும் சுந்தரும்.. கார்த்தி யோட பிரண்ட்ஸ்..

கனவு உலகத்தில் இருந்து மீண்டவன் போல்…..

“ஆஹன் ” என்னடா சொன்ன… கேட்டான்..

வேற்றுகிரக வாசி போல பார்த்துக்கொண்டார்கள், சுந்தரரும் சிவாவும் … என்னடா ஆச்சி இவனுக்கு… ஒரு மார்கமாவே இருக்கான்…

டேய்ய்ய்ய் கார்த்தி…??? உன்ன தாண்டா உலுக்கினான்….
கனவு உலகில் இருந்து மீண்டுடவன் .. என்னடா ஏன் கத்துற .. எனக்கு காது கேக்கும் .. எரிச்சல் பட்டான் ஒரு நல்ல கனவை கெடுத்துடனே… கோவம்.. எரிச்சல் கடுப்போட பேசினான்..

நாங்க எவளோ நேரமா கேக்குறோம் “ஆஹன் “.. இத மட்டும் தான் சொல்லுற என்ன ஆச்சி உனக்கு.. சிவா கேட்கவும்…

மச்சி ஒரு பொண்ண பாத்தேன் டா … என்னமா இருக்கா தெரியுமா அவளை மறுபடியும் பாக்கணும்னு தோணுது டா.. என்னா அழகு என்னா கண்ணு ப்ப்பா … என்னை சுண்டி இழுக்குதுடா… கார்த்திபாட்டுக்கு சொல்லிக்கொண்டே போனான்போச்சுடா …

பாவம் அந்த பொண்ணு போயும் போய் இவன் கண்ணுல மாட்டிட்டாலே.. இனிமே அவ தலையெழுத்தே மாறப்போகுது.. யாரோ ஒரு முகம் தெரியா பொண்ணுக்கு வருத்தப்பட்டான் சிவா..

கார்த்திக் பெரிய மல்ட்டி மில்லனர் கோடிஸ்வரன்வீட்டு பையன்…..
பணத்தாலே எதையும் சாத்திக்கும் வல்லமை படைத்தவன்..
இருந்தும் வீட்டுக்கு தெரியாத சில விசயங்கள் கார்த்திக் ஈடுபடுவது உண்டுஅது எந்த விசியமானாலும் வீட்டுக்கு தெரியவிடாமல் பாத்துப்பான்..
வீட்டில் அவன் செல்லம் தான் இருந்தும் அம்மா புவனாவும்.. அப்பா மகேஸ்வரனும் கண்டிப்பானவர்…..அவர் சொல்லுக்கு கட்டுப்படணும்… அது தான் அந்த வீட்டோட நியதி…

கார்த்திக் பிரண்ட்ஸ் லாம் கூட கேட்டு இருகாங்க.. ஏன்டா நீயோ பணக்கார வீட்டு பையன்… அக்ரி கல்ச்சர் ஏன்டா எடுத்து படிக்குற உன்ன மாதிரி பணக்கார பசங்க லாம் இந்த கோர்ஸ் எடுக்க மாட்டங்களே…..??

அவன் என்ன விருப்பம் பட்டா படிக்குறான் … அவர் அப்பா கார்த்திக் இந்த கோர்ஸ் தான் நீ படிக்கணும்னு சொன்ன அவன் என்ன பண்ணுவான் முயன்ற அளவுக்கு போராடுனான் … அவன் முயற்சி எல்லாம் தோல்லவியில் தான் முடிஞ்சுது…

ஏன்மா இப்படி பிடிவாதம் பிடிக்குறாரு அவன் அம்மாகிட்ட பொலம்பாதே நாளே இல்லை …
என்ன டா பண்ண சொல்லுற எல்லாம் அவர் இஷடம் தான்நா என்னடா பண்ணட்டும்.. இப்படி சொல்லி புவனாவும் கழண்டுப்பாள்.

எவளோ முயற்சி பண்ணியும் கார்த்திகால் எதுவும் பணமுடியவில்லை.. விதியேனு அவனும் படிக்க வந்துவிட்டான்…

மயூரியை இழுத்து கொண்டு போகும் போதே திட்டிக்கொண்டிருந்தாள்……
மூஞ்சியும் முகரையும் பாரு பெரிய ரோமியோ னு நினைப்பு என்னமா லுக் விட்றான்.
..( அனு மனசாட்சி கேள்வி கேட்டது அவன் நல்லா தானடி இருந்தான் செம ஸ்மார்ட்டா ஹீரோ மாதிரி தான இருக்கான் அவன் முஞ்சிக்கு என்ன குறைச்சல் னு இப்படி பொறியுற.. ஹுக்கும் ஆல் நல்லா தான் இருக்கான்… அது என்னதேவைக்கு… எல்லா பையன்களும் மயூரியே லுக் விட்றானுங்க செம கடுப்பாகுது..நாமலும் மாய்ஞ்சு மாய்ஞ்சு என்ன டிரஸ் பண்ணினாலும் மயூ இருந்தா ஒருபையனும் கண்டுகிறது இல்லை ….. பொறாமையால் பொறிஞ்சி தள்ளிட்டு இருந்தாள் அனு..இது ஒன்னும் புதுசா நடக்கற மாதிரி ஏண்டி பீல் பண்ணுற எப்பவும் நடக்கறது தான … ஆமாமா எப்பவும் நடக்கிறது தான்.. இல்லனு சொல்லல… ஆனா அவனை எனக்கு பிடிச்சிருக்கே. அதான் கடுப்பாகுது….ஓ.. என்ன ஓ நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு நானே பாத்துக்கிறேன்..ஹெல்ப் கேக்கும் போது வந்து சொன்ன போதும் இப்போ கிளம்பு) .. ..யார டி இப்படி திட்டிட்டு வர மயூரி கேட்டுட்டே வந்தாள்..

” ஹ்ம்ம் “எல்லாம் அந்த விளங்காதவன் தான்.

யார் டி விளங்காதவன் மயூ க்கு சுத்தமா புரியவில்லை..

அப்பவும் அனு திட்டிக்கொண்டே வரவும் ..

ஹேய் நில்லுடி யார சொல்லுற விளங்காதவனு எனக்கு தெரிஞ்சாகணும் சொல்லுடி மயூ கோவமாய் கேட்கவும் …

எல்லாம் உன்ன தாங்கி பிடிச்சான் பாரு அவனை சொன்னேன்..

இதை சொன்னதும் மயூரிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..

நட்பு என்பது ஒரு வரம் அது எல்லார்க்கும் அமைவது இல்லை… அதை அமைய பெற்றவர்வகள் பாக்கியசாலிகள்…
..
அப்படி அமைய பெற்ற அனுவும் மயூரியும் கார்த்திக்கின் வரவால் நட்பில் விரிசல் ஏற்படபோவதை அறிவார்களா..

அனு யோசிக்க மறந்தால்… தன் தோழியின் மனதிலும் காதல் இருக்கிறது.. .
அவள் உயிர் மூச்சு முகிலன் தான் என்பதையும் மறந்தாள்.. அவள் கண்ணுக்கு தெரிந்ததெல்லாம்…

கார்த்திக் மட்டுமே கார்த்திக்கை
[Uploading: IMG-20190301-WA0021.jpg…]() மயக்கிவிட்டாள்…பெரிய சாகசகாரியாக காட்சி தந்தாள்.. ..அந்நேரம் வரை தோழமையால் பழகியவள்… யாரோ போல தோன்றியது அனுவின் குற்றமா மயூரின் குற்றமா…

அனுவின் மனதில்.. நாம் ஒட்டாத இடத்தில் வந்துவிட்டோம்னு அறியாமல் … தன் தோழியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.. மயூரி

என்னடி நான் பாட்டுக்கு கேக்குறேன் நீ என்னவோ யோசனையில் இருக்க… சரி வா பங்கசன் ஆரம்பிக்குற டைம் ஆச்சி போலாம் அனு கையை இழுத்துகொண்டு உள்ளே போனாள்…

உள்ளே போனதும் அனுவின் பார்வையில் கார்த்திக் தென் பட்டான்… அவன் யாரை பார்க்கிறான்னு தெரிந்துத தும் மயூரின் மேல் சொல்லமுடியாத காழ்ப்புணர்ச்சி எற்படுத்தியது..
அனுவிற்கு

கார்த்திக்கோ மயூரியே பார்த்துகொண்டு இருந்தான்.. மயூரியோ முகிலனை தேடினால் .கார்த்திக் குள் சந்தேகம் யாரை தேடுறா…

. மயூரி முகிலனை பார்த்ததும்.. அவள் முகம் மலர்வதை கார்த்திக் வன்மத்தோட பார்த்துகொண்டிருந்தான்….

“. அனு ….. வா டி முகிலன் வந்துட்டாரு… சொல்லிய படியே முகிலன்னிடம் சென்றாள்..

. மயூரியை பார்த்ததும் முகிலன்க்கு பேச்சே வரவில்லை…. அவள் அழகில் மெய் மறந்து நின்றான்… இவளை இப்படியே அள்ளிகொண்டு போய்டுனும்..போல இருக்கே முகிலன் கண்ட்ரோல்…. ப்ப்பா என்னமா மயக்குற ஆளா இப்படி கிறங்க அடிக்குறாளே. …. அவன் பார்வை அவளின் உதட்டின் மேல் சென்றது….

அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் உதட்டை கடித்து வெக்கத்தில் சிவந்து நின்றாள்….IMG-20190301-WA0023|690x388

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here