உயிரே என் உலகமே
அத்தியாயம் 18
மனோகர் இசையை காண ஐசியு வார்டுக்குள் செல்ல அங்கு இசை இல்லை என்றவுடன் அவர் வெளியே வந்துஇனியனிடம்
” இனியா இசை உள்ள இல்லடா.”..
அதைக்கேட்ட இனியன் பதறிப்போய்
என்ன மாமா சொல்றீங்க இசை ரூம்ல இல்லையா..
ஆமாண்டா இசை உள்ள இல்ல ஒருவேளை ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போய் இருப்பார்களா என்று கேட்க
இல்ல மாமா காலையிலேயே எல்லாமே எடுத்துட்டாங்க.. டாக்டர்அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு போனாங்க.. என்று மறுபடியும் இனியன் சென்று உள்ளே பார்க்க அவள் அங்கு இல்லை என்றவுடன்
இருவரும் டாக்டரிடம் கேட்க சென்றனர் அதற்கு டாக்டர் வாய்ப்பே இல்லை இங்கிருந்து யாரையும் கூட்டிட்டு போக முடியாது அவங்க எங்க போனங்கனுன்னு தெரியல .
என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவளால் நடக்க முடியாது ன்னு சொன்னீங்க இப்ப எப்படி எழுந்து நடந்து போய் இருக்க முடியும் என்று கேட்டான் தேவா.
தேவா எனக்கு பயமா இருக்குடா யாராவது கடத்தி இருப்பாங்கன்னு எனக்குத் தோணுது
அப்படி இருக்காது மாப்பிள
இல்ல டா கண்டிப்பா இசை யாரோ கடத்தி இருக்காங்க என்று சொல்ல
அப்போது அங்கு வந்த கவி ஆமாண்ணா அண்ணி ய கருத்திட்டாங்க உங்களை யார் அண்ணிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வர சொன்னது.. வீட்ல வச்சு ட்ரீட்மெண்ட் பார்த்து இருக்க வேண்டியதுதானே…
இசையை யார் கடத்துனதுன்னு உனக்கு தெரியுமாடா என்று தேவா கேட்க
எனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே அண்ணி ய தெரியும் என்று ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தான் கவி
மும்பையில் பிரபல மருத்துவமனையில் இசை பணிபுரிந்து வந்தாள்
அப்போது ஒருநாள் சலீம் அவளை பார்க்க வர
ஹாய் சலீம் வாங்க என்றால் இசை
ஹாய் எப்படி இருக்கீங்க
நான் நல்லா இருக்கேன் சலீம் நீங்க எப்படி இருக்கீங்க
ஏதோ இருக்கேன்
அப்புறம் நான் கேட்ட செமியோட பைலை எடுத்துட்டு வந்துட்டீங்களா
அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இசை
சொல்லுங்க சலீம் என்ன பேசணும்
இசை செமி உன்னதான் அம்மான்னு கூப்பிடூரா ஏன் நம்ம ரெண்டு பேரும் சமீரா காக கல்யாணம் பண்ணிக்க கூடாது
அவனை உற்றுப் பார்த்து என்னால சமீராவுக்கு லைஃப் லாங் அம்மாவா இருக்கமுடியும் சலீம்
நீ புரிஞ்சுதா பேசுறியா இசை யாரும் யாருக்கும் அம்மாவா இருக்க முடியாது அதை இந்த சமுதாய ஒத்துக்காது நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு வேணாம் அவளுக்கு அம்மாவா நீ இருக்க முடியும்
லுக் சலீம் எனக்கு கல்யாணத்து மேல நம்பிக்கை இல்லை
எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை தயவுசெஞ்சு என்ன போர்ஸ் பண்ணாதீங்க
பைல் எடுத்துட்டு வந்தீங்களா
அவனும் தன்னுடைய லேப்டாப்பை அதிலிருந்து ஒரு நீல பைலை எடுத்து இசை இடம் தந்து விட்டு அந்த இடத்தை விட்டு சென்றான்
அவன் பேசிச் சென்றவார்த்தையை எண்ணி இசைக்கு கோபம் தலைக்கேற பீச்சுக்கு சென்றாள் .. அங்கு சிறிது நேரம் இருந்து பின் கோவிலுக்கு சென்றாள்.. கோவிலுக்கு சென்றும் அவள் மனம் அமைதி அடையவில்ல.. சலீம் பேசிய வார்த்தைகள் அவளை தாக்கியது முதன் முறையாக தன்னை தனக்காக நேசிக்க யாருமில்லையே என்று வருந்தினாள் இசை.. ஈசிஆர் ரோட்டில் இசைக்கு ஒரு பங்களா இருக்க இசை மன அமைதிக்காக அந்த வீட்டிற்கு அடிக்கடி செல்வாள் இன்றும் அவளுக்கு ஏனோ மன அமைதி தேவைப்பட அந்த வீட்டை நோக்கி காரில் புறப்பட்டாள் செல்லும் வழியில் பாதி தூரத்தில் கார் நின்றுவிட இசை சற்று குழம்பி காலைல தான பெட்ரோல் போட்டேன்.. அப்புறம் எப்படி இதை யாரோ வேணும் பண்ணி இருக்காங்க அவள் அந்த சாலையை பார்த்தால் அங்கு யாரும் இல்லாமல் இருட்டாக இருந்தது.. ஹண்ட் பாக் இல்லை.கார் முழுவதும் தேடி பார்த்தால்.. திடீர்னு யாரோ அவள் கண்ணை மூட அடுத்த நொடி இசை மயக்கமடைந்தாள்
அவள் கண் திறந்து பார்க்கும் போது ஒரு இருட்டு அறையில் நாற்காலியில் கைகள் மட்டும் கட்டப்பட்டிருந்தது தான்கடத்தப்பட்டு இருப்பதை உணர்ந்து இசை அமைதியாகவே இருக்க இதை அனைத்தையும் சிசிடிவி கேமரா மூலம் பார்த்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது
ஏனென்றால் இசை 72 மணி நேரம் வரையில் அசையாமல் கத்தாமல் கண்களை திறந்தபடி அமர்ந்து இருந்தால் அவளின் மன உறுதியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைத்தான் அவன் வேறுயாருமில்லை தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர் ரியாத் கான்
ரியாத் இசை இருக்கும் அறைக்கு சென்றான் பிளாக் கலர் டீசர்ட் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து சினிமா நடிகர் போல் இருப்பதை கண்டு இவன் எதுக்கு என்ன கடத்தனும் அவளின் குழப்பத்தைக் கண்டு சிரித்த முகத்துடன் அவள் அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து அவளை உற்றுப் பார்த்து ரொம்ப கற்பனை பண்ணாதே
உன்னை நான் அதுக்காக எல்லாம் கடத்தலை எனக்கு தேவையான ஒரு பைல் உன்கிட்ட இருக்கு அதை கொடுத்துட்டு நீ இங்க இருந்து போகலாம்
என்ன ஃபைல் என்று இசை கேட்க சலீம் கொடுத்த பைல்
அது எதுக்கு உங்களுக்கு
இங்க பாரு உன் மூளையை ரொம்ப குழப்பிக்காத சரியா
அந்த பைல் எங்கனு மட்டும் சொல்லு இசைக்கு ஒன்றும் புரியவில்லை ஒரு சாதாரண பைல் காக தன்னை கடத்தி வைத்து கேட்கும் அளவிற்கு அந்தப் பைலில் என்ன உள்ளது
எனக்கு தெரியல நான் அதை ஹாஸ்பிடல்ல என் டேபிள் மேலே வச்சிட்டு வந்துட்டேன்னு நினைக்குறேன்
லுக் இசை உங்க ரூம்ல அந்த பைல் இல்ல ஒழுங்கா சொல்லுங்க ..அந்த பைல் எங்க நீங்க அத படிச்சிட்டீங்களா என்று அவன் கேட்க “இல்லை என்று தலையை ஆட்டினாள் இசை
இங்க பாருங்க இசை அந்த ஃபைலை கொடுத்துட்டு நீங்க போலாம்
எனக்கு தெரியாது அது எங்க இருக்குன்னு எனக்கு தெரியல என்று அவன் கண்ணை பார்த்து சொல்ல
ரியாத் அதை நம்பாத அவளை மேலும் கொடுமைப்படுத்த எண்ணி அவன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் லைட்டர் மூலம் சிகரரேட் பற்ற வைத்த அவள் கையில் வைக்க அதன் வலி இசை உணர்ந்தாலும் அவள் எண்ணம் அந்த பைலில் இருந்தது.. ஆம் இசை அந்த பைலின் முதல் பக்கத்தில் படித்து விட்டால்..
அதில்
44 அட்டெம்ப்ட்ஸ் ஆன் நாக்பூர் அண்ட் ஹைதராபாத் என்று இருக்க அதனுடன் ஒரு பெண் டிரைவ் இருந்தது
இசைக்கு தன்னை கடத்தியதற்கான காரணம் ஓரளவு புரிய ஆரம்பித்தது கையில் 10 தடவைக்கு மேல் சூடு வைக்க
வலியை பொறுத்து கொண்டுஅப்படியே அமர்ந்திருந்தாள்.
இப்ப கூட ஒன்னும் இல்ல இசை அந்த பைலை எங்க இருக்குன்னு சொல்லுங்க அவன் கண்களை உற்றுப் பார்த்ததில் இருந்து அவள் அறிந்து கொண்டது என்ன நடந்தாலும் என்னை கொள்ளாமல் இந்த இடத்தைவிட்டு கண்டிப்பாக அனுப்ப மாட்டான் பைலைக் கொடுத்தாலும் கொள்ளவான் கொடுகலைநாளும் கொள்ளுவான்என்பதை அறிந்து
நீங்க எவ்வளவு தூரம் பண்ணாலும் என்னோட ஒரே பதில் என்கிட்ட அந்த பைல் இல்ல அது ஹாஸ்பிடல்ல இருக்கு
ஏய் என்னடி என்ன பைத்தியம் நினைச்சியா நீ அங்க இருந்து கிளம்பிய உடனே நாங்க அங்க செக் பண்ணிட்டோம்.. அங்க இல்லை
ஆம் அவன் சொல்வது சரியே இசை அந்த பைலை எடுத்து தன்னுடையபேகில் போட்டுக் கொண்டால்.. ஆனால் கடைசியாக அவள் காரில் அவளுடய பாக் இல்லை… அந்த பைல் கண்டிப்பாக கோயிலில் தான் இருக்கும் என்று நம்பினாள்
வெளியே வந்த அவன் இசையைஎவ்வாறு கொடுமை படுத்தலாம் என்று சிந்திக்க அவளுக்கு பிரீஸ் ஆகுற மாதிரி ஒரு இன்ஜக்ஷன் போட சொன்னன் . இந்த இன்ஜெக்ஷன் யாருக்கு செலுத்த படுகிறதோ அவர்கள் உண்மைகளை மட்டுமே பேசுவார்கள்
இதை அறிந்த இசை தன் மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த உண்மையை வெளியே வராத அளவிற்கு தன் மனதை கட்டுப்படுத்தி கொண்டிருந்தாள்
அவன் வந்து மறுபடி கேட்டும் அவள் மறுபடியும் அதே பதிலையே சொன்னாள்
இதை அனைத்தும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் சலீம் அவள் படும் வேதனையை பார்க்க முடியவில்லை
அவள் அங்கு அடைக்கப்பட்டு ஏழு நாட்கள் ஆகின்றது பசி அவளை வாட்ட ஆரம்பித்தது.. இந்த ஏழு நாட்களே இசைக்கு தண்ணீர் மட்டுமே தரப்பட்டது. அவளின் மன உறுதியை கண்டு ரியாத் அசந்து தான் போனான். ஏனென்றால் அவனுக்கு கூட சிறு வயது முதல் தீவிரவாதத்தில் ஈடுபட மன வலிமைகள் நிறைய பயிற்சிகள் தரப்படும் ஆனால் இசையின் மனநிலை அவனுக்கு அச்சத்தைத் தந்தது
அவளை மன நோய்க்கு ஆளாக எண்ணி அவன் ஹை பிரேக்குவேணசி (frequency)ஒரு சவுண்ட் போட முதலில் அதை சமாளித்து இசையினால் அடுத்தடுத்த நாட்களில் அதை சமாளிக்க முடியவில்லை
தலை வலிக்க ஆரம்பித்தது கடைசியாகப் அவளுக்கு பன்னிரண்டாவது நாளில் உணவு தரப்பட்டது.. அதிலும் கண்ணாடியை அரைத்து சாப்பாட்டில் கலந்து கொடுக்க பசி மயக்கத்தில் இருந்த இசை கட கடன அனைத்தையும் சாப்பிட்டு முடித்த பிறகு ஏதோ ஒன்று அவள் தொண்டை கிழிப்பது போல் வலிக்க அங்கு வந்தான் ரியாத் என்ன இசை மேடம் ரொம்ப பிசியோ இன்னொரு பிளேட் சாப்பிடுகிறீர்களா என்று சிரித்த முகத்துடன் கேட்க
அவன் புன்னகை மாறாத முகத்தைக் கண்ட இசைக்கு புரிந்து போனது அவன் சாப்பாட்டில் ஏதோ கலந்து இருக்கிறான் ஒரு வேலை விஷயமாக இருக்குமோ என்று அவன் கண்களை உற்று பார்த்தாள்
விஷம்லாம் கலக்கல கேலி குரலில் கூற உங்களை அவ்ளோ சீக்கிரம் சாக அடிக்க மாட்டேன்
பயப்படாதீங்க சாப்பாட்டில் லைட்டாக க்ளாஸ் ஸ்பீச் கலந்தேன் அவ்வளவுதான் இது அனைத்தும் அவள் எதிர்பார்த்தது தான்.. அந்த பைல் மட்டுமே உங்க கைக்கு கிடைக்க கூடாது என்று மனமார வேண்டிக் கொண்டாள்.. சலீம் எப்ப பார்த்தாலும் உங்கள பத்தி தான் பேசிட்டு இருப்பான் நான் கூட உங்களோட ஃபேன் அகிட்டேன் உங்கள மாதிரி ஒரு ஆள் எங்க டீம் ல இருந்தா கண்டிப்பா எங்க மிஷன் சக்ஸஸ் ஆகும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்
ரியாத் நான் சொல்றதை கேளுடா இசை எப்போதும் பொய் சொல்ல மாட்டா கண்டிப்பா அந்த பைல் அவகிட்ட இல்லை என்றான் சலீம்
நீ சொல்ற மாதிரி அவகிட்ட ஃபைல் இல்லைனா அவன் நம்ம கிட்ட செஞ்சிருக்கலாம் சலீம் .. அவகிட்ட பைல் இல்லனே வச்சுக்கோ ஆனா கண்டிப்பா அவளுக்கு நம்ம மிஷன் பத்தி தெரிஞ்சிருச்சு.. செத்தாலும் சாவேன் உன்கிட்ட கொடுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா பாரு என்று சிசிடிவி கேமராவில் அவள் முகத்தை காட்டி சொன்னான் ரியாத். இவ மட்டும் இங்கே இருந்து தப்பிச்சென்றால் கண்டிப்பா நம்ம மிஷன் சக்ஸஸ் ஆக விடமாட்டாள் என்றான் ரியாத்
டேய் நான் போய் ஒரு தடவை பேசிப் பார்க்கிறேன் என்று சொல்ல
எதுக்கு என்றான் ரியாத்
இல்லைடா நான் கேட்டுப் பார்க்கிறேன் கண்டிப்பா அவ கிட்ட இருந்தா கொடுப்பா எனக்காக இல்லைனாலும் சமீரா காக கொடுப்பா என்று சொல்ல
சலீம் அவளை காண சென்றான் யாரோ கதவைத் திறப்பதை அறிந்து கதவை நோக்கினால் .. இந்த நாளுக்கு காக தான் அவள் காத்திருந்தாள் ..சலீம் அவள் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து இசை என்று சொல்ல அவன் கண்களை தீர்க்கமாக பார்த்தாள்
இப்ப கூட ஒன்னும் இல்ல நீ அந்த பைலை குடுத்துட்டு நம்ம ரெண்டு பேரும் வெளியில போய் கல்யாணம் பண்ணிட்டு நம்ம பொண்ணுக்காக வாழலாம் என்று சொல்ல
அவன் கண்களைப் பார்த்துக்கொண்டே அப்போ நீ தான் வேணும்னு அந்த பைலை என்கிட்ட கொடுத்து இருக்க
அவளின் திடீர் கேள்வியை அவன் சற்று தடுமாறி இல்ல அப்படி எல்லாம் இல்ல
பொய் சொல்லாத சலீம் நான் வேண்டாம்னு உன்ன ரெஜெக்ட் பன்னது னால அந்த பைலை என்கிட்ட கொடுத்து இங்க கடத்தி வந்து என்னை டார்ச்சர் பண்ண வச்சிருக்க அந்த பைலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது நீ தான் அந்த பைலை எங்கேயோ மறைச்சு வச்சு இருக்க என்று அவன் மீதே பழியைப் போட்டாள்
கேமராவில் பார்த்துக்கொண்டிருந்த ரியாத் சலீம் வருகைக்காக காத்திருந்து சலீம் வந்தவுடன் .. என் டா இப்படி பண்ண. என்றான் ரியாத்.. ரியாத் நா தெரியாம தான்டா பைலை அவகிட்ட கொடுத்தேன்.. இருவரும் வாக்கு வார்த்தையில் ஈடு பட
இதற்காக கடந்த 15 நாட்களாக காத்திருந்தால் இசை இருவரும் இருபது நிமிடத்துக்கு பிறகு கேமராவை பார்க்க இசை அந்த வீட்டை விட்டு தப்பித்து விட்டாள் 15 நாட்களாக அவளை காணவில்லை என்று யாரும் தேடவில்லை .. காரணம் அவள்தான்.. அவள் போனில் அழைத்தால் மட்டுமே அனைவரும் பேச வேண்டும் தானாக யாரும் அவளுக்கு கால் செய்யக்கூடாது குறுஞ்செய்திகள் வேண்டுமானால் அனுப்பலாம்.. முதலில் தப்பித்து வந்த அந்த கோவிலுக்கு சென்று பைலை தேடினால் அங்கு இல்லை .. கோவிலில் உள்ள அனைவரும் விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்து என்ன
செய்வது என்று யோசித்தாள் அப்போது அங்கு அம்மனுக்காக இருந்த ஒரு புடவையும் ஒரு மூதாட்டியின் முழுக்கை பிளவுஸ் கிடைத்தது அதை அணிந்து கொண்டாள்
பைல் எங்க என்று யோசிக்க
ஆரம்பித்தாள் எவ்வளவு யோசித்தும் எங்கு வைத்தோம் என்பது இசைக்கு மறந்துவிட.. அவள் முன் ஒரு தள்ளு வண்டி வந்து நின்று என்னம்மா இசை 15 நாளா எங்க போயிட்டா ஆளையே காணோம் என்று கேட்க
தன்னையும் காணவில்லை என்று தேட இந்த ஊரில் இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்று எண்ணி ஒன்னும் இல்லமா ஊருக்கு போயிருந்தேன்
..இசைமா அன்னைக்கு உன்னோட பைய நம்ம கடையில வச்சிட்டு போயிட நானும் வருவ வருவனு பார்த்தா நீ வரவே இல்ல இந்தா என்று கொடுக்க
அவள் அந்த ஹண்ட் பாகில்
ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க அந்த பைல் இருக்க அதை படித்துப் பார்க்க ஒன்றும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை உடனடியாக அந்த அம்மாவிடம் அம்மா தம்பி கிட்ட ஏதாவது லேப்டாப் இருக்குமா என்று கேட்க ஹான் இருக்குமா வா வீட்டுக்கு போலாம் என்று அவருடன் வீட்டுக்கு சென்றால் அங்குள்ள லேப்டாப்பில் அதை போட்டுப் பார்த்தால் ஓரளவுக்கு அவளுக்கு புரிந்தது அவர்களிடமே போன் வாங்கி மனோகருக்கு கால் செய்து மனோகர் ஒரு லாரி மூலம் இசையை திருச்சிக்கு வர சொல்ல அவளும் அவ்வாறே மும்பையை விட்டு தப்பித்து வந்து விட்டாள்
இதை கேட்ட இனியன் உணர் இன்றி இருந்தான் அவன் தோளில் கையை வைத்து அண்ணா என்று கவி சொல்ல
இது எப்படி உனக்கு தெரியும்
அது வந்து அண்ணா
சொல்லு டா எப்படி தெரியும்.. என்று இனியன் கத்த
நா ஒரு சி ஐ டி ஆஃபீஸ்ர். என்று சொன்ன அடுத்த நொடி அவன் கன்னத்தில் தன் கை தடம் பதிய அறைந்தான்..இனியன்
டேய் இனியா. என்று தேவா பதற..
இவன் மட்டும் முன்னாடியே சொல்லிருந்தா என் இசைய எப்படியாவது காப்பாத்தி இருப்பேன்… பாவம் டா எவளோ கஷ்ட பட்டு இருக்க… என்றான் இனியன்
அண்ணா நா சொல்றத கேளு
வேணாம் டா நீ எதுவும் சொல்லாத ..
டேய் மாப்பிள்ளை அவன் சொல்றதையும் கேட்போம்..