உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி..7

0
251


அம்மாடி காயு என்னடா ஆச்சு … அடியே ஜானுகி வாடி குழந்தை மயங்கி விழுந்துட்டாடி …காயுவை உள்ள கூட்டிண்டு போனார்கள் வாசுவும் ஜானகியும் ….

அனைவரும் பதட்டம்மாவே இருக்கவும் ….

அகிலாண்டேஸ்வரி .. சரி சரி சாம்பு நல்லா நாள் பாத்துட்டு உனக்கு தகவல் சொல்லுறேன் ..

சாம்பு அமைதியாய் நிற்க்கவும் ..

என்ன நான் சொல்லுறது காதுல விழுதா இல்லையா… அகிலா கோவமாய் கேட்கவும்..

ஹ்ம்ம்… சரிங்க மா உங்க விருப்பம்படியே நடக்கட்டும்.. சாம்பு கவலையாய் பதில்கூறினார்.. ..

ஹ்ம்ம்… வாங்க எல்லாரும் கிளம்பலாம் .. அனைவரையும் வெளியே போக சொல்லிவிட்டு .. அகிலாண்டேஸ்வரி மட்டும் தேங்கி நின்றாள்…
காயு இருக்கும் அறைக்குள் நுழைந்து..
உள்ளே சென்றாள் எல்லாரையும் வெளியே போங்க .. நான் காயு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு சொல்லவும் …

ஜானகியும் வாசுவும் காயுவை திரும்பி திரும்பி பார்த்த படியே வெளிய வந்தார்கள்…

காயத்திரி மயங்கிய நிலையில் கிடக்க..
ஓர் வித பயத்தோட மெதுவா காயுவிடம் நெருங்கினாள்… அவளின் தலையில் நடுங்கிக்கொண்டே கை வைக்க போகையில் .. சட்னு காயு கண் திறக்கவும் …. அகிலாபயந்து வேர்த்து விறுவிறுத்து போனாள்….

காயு நிதானமாய் எழுந்து உக்கார்ந்தாள் … அகிலாவை கூர்மையாய் பார்த்த படி நீ எதுக்காக வந்து இருக்கேனு தெரியும்..

உன்னால என்னிடம் நெருங்க கூட முடியாது ..
வெளிய போய்டு இல்ல இப்பவே இந்த நிமிஷமே உன் உயிரை எடுக்க கூட தயங்க மாட்டேன்…. போ போய்டு கோபாவேச கத்தவும் …

அகிலாண்டேஸ்வரி அடிச்சி பிடிச்சி பயத்தோட வெளிய ஓடிவர கதவில் இடித்து கொண்டு கீழே விழுந்தாள் …

முட்டத்தில் இருக்கும் அனைவரும் அகிலாண்டேஸ்வரி விழுந்ததும் என்னமோ ஏதோ னு பதட்டதுடன் ஓடி வந்தார்கள்…..

சாம்பு பதட்டத்துடன் ஓடிவந்து அம்மா என்ன ஆச்சு எழுந்துருங்கோ….

ஜானகி ஜலம் கொண்டுவா ….

ஹ்ம்ம்ம் … மெதுவாய் எழுந்த அகிலா … ஜானகி கொண்டு வந்த தண்ணியை வாங்கி மொடக் மொடக்கென்று குடித்தாள்…

சத்த காத்தாரா உக்காருங்கோ… நா சூடா பில்டர் காபி போட்டு எடுத்துண்டு வறேன் … ஜானகி சொல்லிண்டே போகவும் …

எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேணாம் … நா சொல்லுறத மட்டும் செய்யுங்க… போதும் அகிலாண்டேஸ்வரி சொல்லவும் …

இன்னும் இவா சொல்லுறதுக்கு என்ன இருக்குனு … சாம்புவும் ஜானகியும் அகிலாண்டேஸ்வரி முகத்தை பார்தார்கள் ..

அகிலாண்டேஸ்வரி ரிஷிபன் குடுத்த மை யை ஜானகியிடம் நீட்டினாள்….
இதை உங்க பொண்ணு தலையில் தடவிட்டு வாங்க … மத்ததது அப்றம் சொல்லுறேன்….

ஜானகி அத வாங்க பயப்படவும்… இது ஒண்ணுமில்ல பயப்படாம வாங்குங்க… அகிலா எவளோ எடுத்து சொல்லியும் ஜானகி வாங்காமலிருக்க…

அகிலாண்டேஸ்வரி சாம்புவை அழுத்தம்மாய் ஓர் பார்வை பார்க்கவும்…

சாம்பசிவம் ஜானகியிடம் வாங்கிண்டு போ..னு கண் ஜாடை காட்டவும் …
ஜானகி பயந்துண்டே வாங்கிகொண்டு
காயு இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் .. அங்கே காயு இன்னுமும் மயக்கம்மாய் இருக்கவும்…

அவளை பார்த்து ஒரு பக்கம் பயம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அழுகையாய் வந்தது ஜானகிக்கு காயுமா…. அழுதுகொண்டே அருகில் சென்றாள்…

பக்கத்தில் அமர்ந்து அவள் தலையை கோதியவள்..
நோக்கு ஏன்டா மா இப்படி லாம் நடக்குறது…
நா என்ன பாவம் பண்ணேன் பகவானே என் குழந்தையை ஏன் இப்படி சித்திரவதை செய்யுறேள்…கண்கலங்கி கடவுளிடம் மன்றாடாடினாள்

… அவள் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் காயு நெத்தியில் விழவும் காயத்ரியிடம் அசைவு ஏற்பட்டது,

ஹ்ம்ம்.. அம்மாஆ…
காயுவிடம் அசைவு தெரியவும் .. கண் திறந்து ஜானகியை பார்த்தாள்.

காயுமா என்னடா ஆச்சு… மெதுவா மெதுவா எழுந்து உக்காரு…. ஜலம் கொண்டு வருவா… ஜானகி கேட்க…

அம்மா நேக்கு எதுவும் வேண்டாம்… நேக்கு என்ன ஆயடுத்து….. நா எப்படி இங்க வந்தேன்…

நோக்கு ஒன்னும் ஆகல நீ காலம்பற விரச எழுந்தியோனோ… அதான் நோக்கு மயக்கம் வந்துடுத்து…..

சத்த நாழி படுத்துண்டு இரு …. நா போய் நோக்கு சூடா காபி போட்டு எடுத்துண்டு வறேன்….

ஹ்ம்ம் …… அமைதியாய் ஜானகியை பார்த்தாள்…

என்னடா அம்மாவை புதுசா பாக்குறா மாதிரி பார்த்துண்டு இருக்க … படுத்துக்கோ … நா வந்திறேன்… சொல்லியவள் வெளியே வந்ததும் காயுவை திரும்பி பார்க்க ….

அவளையே தீர்க்கமாய் பார்த்து கொண்டிருந்தாள்… காயத்ரி..

அதை ஜானகி பார்த்ததும் பயத்தில் குப்புபென வேர்த்தது…. அங்கிருந்து விறு விறுவென நகர்ந்து சென்று விட்டாள்..

ஜானகி வெளியே வந்ததை அகிலாண்டேஸ்வரி பார்த்ததும் வேகமாய் அவளிடம்.சென்று . என்ன நா குடுத்தது தடவிட்டியா.. னு கேட்டாள்..

ஹ்ம்ம் தடவிட்டேன்… கண்கலங்கிய படியே சொன்னாள்…

நல்லது அப்பறம் எனக்கு இன்னொரு உதவியும் செய்யணும்..

இன்னொன்னுனா.. சாம்புவும் ஜானகியும் திரு திருனு முழிக்கவும் …

ஆமா … உங்க பொண்ணோட துணி , உச்சி தலை முடி … கால் நகம் துண்டு வேணும் எடுத்து கொடுங்கள் …..

அதிர்ச்சியோட பார்த்தனர் அங்கிருந்த அனைவரும் ….

சிவராமன்… சாம்பு காதில் குசுகுசுவென பேசினான்…
என்னடா சாம்பு
இந்த அம்மா பொண்ணு பாக்க வந்தாளா இல்லை பொண்ணுக்கு மாந்திரிகம் பண்ண வந்தாளா …
இவா நடந்துகிறதும் கேக்குறதுலம் பார்த்தா நேக்கு என்னமோ நன்னா படலயே டா எதுக்கும் யோசிச்சு பண்ணுடா சாம்பு நா சொல்லுரத சொல்லிட்டேன் அப்றம் உம்பாடு … சிவராமன் சொல்லவும்…

சிவா சொல்லுறதும் சரிதான் படுது
சாம்புவுக்கும் இதில் உடன் பாடு இல்லாமல் உறுத்தவும்.. அகிலாண்டேஸ்வரியிடமே கேட்டான் எதுக்கு மா இதெல்லாம் கேக்குறேள்….

அகிலாண்டேஸ்வரி சிவராமனை பார்த்து சொல்லலாமா வேண்டாமா என தயக்கம் காட்டவும்…

சாம்பு அவர்கள் தயக்கத்தை புரிந்துகொண்டு பரவாயில்ல மா நீங்க தாராளமா சொல்லுங்கோ …

இவா எல்லாம் எங்க குடும்பத்த சார்ந்தவா தான் நீங்க தயங்காமல் சொல்லுங்கோ…

ஹ்ம்ம் அகிலாண்டேஸ்வரி.. ரிஷிபன் செய்ய சொன்னது எல்லாம் ஒன்னு விடாமல் சொல்லி முடித்ததும் …

சாம்பு அதிர்ச்சியில் அப்படியே நெஞ்சை பிடித்து சரிந்து அமர்ந்துவிட..

ஜானகி பயந்து போனாள் ஏன்னா என்ன ஆய்டுத்து உங்களுக்கு…. பகவானே நாங்க என்ன பாவம் பண்ணோம் எங்களை ஏன் இப்படி சோதிக்கிறாய்… கதறவும்….

சிவராமன் சாம்பு அழாதே டா
நம்ம காயுக்கு ஒன்னும் ஆகாது டா பகவான் நம்ம குழந்தையை கை விட மாட்டான் நீ மனச தளரவிடாதே …

சரி எனக்கு நேரம் ஆகிடுச்சு இனிமே தான் நெறைய வேல இருக்கு நா ஜாதகம் பார்த்துட்டு கல்யாணத்துக்கு நல்ல நாள் குறிச்சிட்டு உங்களுக்கு தகவல் சொல்லுறேன் ….

அதுக்குள்ள நா கேட்டது எல்லாம் குடுத்து அனுப்புங்க …..
அப்போ நான் கிளம்பறேன்… சொல்லியவள் …… காயு இருக்கும் அறையை ஓர் முறை திரும்பி பார்த்துவிட்டு சென்றாள்..

வாயாற் படியில் நின்று அகிலாண்டேஸ்வரியே உக்கிரமாய் பார்த்துகொண்டிருந்தாள்…

அவர்கள் சென்றதும் … ஒவ்வருத்தரும் ஓர் மூலையில் கவலையோடு அமர்ந்து விடவும் …

வாசு மட்டும் மனசு கேக்காமல் காயுவை பார்க்கஅவள் அறைக்குள் சென்றாள்….
அங்கே அவள் கண்ட காட்சியில்…..பதறியவள் அம்மாஆஆ…. என்று அலறினாள்..

குருவே … அந்த திமிரு பிடிச்ச அகிலாண்டேஸ்வரிக்கு உண்மையாவே நீங்க உதவ தான் போறிங்களா…. முனியன் சந்தேகமாய் கேட்டான்…

ஹாஹாஹா…… முட்டாள்.. என்ன நீ புரிஞ்கிட்டது இவளோ தானா…

அப்படி இல்லை குருவே … நீங்களா தேடி போய் உதவி பண்ணுறேன்னு சொல்லிருக்கீங்க …. னா.. எதுவோ முக்கியமான காரணம் இருக்கனும்… ஆனா அது என்ன காரணம் தான் புலப்பட மாட்டேங்குது… முனியன் தலையை சொரிந்துகொண்டே கேட்டான்…

ஹ்ம்ம்ம் நீ சொல்லுறது சரிதான் முனியா… ஆதாயம் இல்லாமல் ரிஷிபன் எந்த ஒரு காரியத்திலும் இறங்க மாட்டான்….
நான் நெனைச்சுதுபோல நடந்துட்டா அந்த அகிலாண்டேஸ்வரி சம்பிராஜ்யமே என் கையில்குள்ள அடங்கிடும்… தீவிரமா யோசித்துபடியே ரிஷிபன் சொல்லிக்கொண்டிருக்கிருந்தான்…

குருவே வரும் வெள்ளிகிழமை அம்மாவாசை … வருகிறது……
நாம் பலி குடுக்க குழந்தையை தேடணும்… குருவே..

ஏன்டா முனியா … எப்பவும் நாம பச்சிளம் குழுந்தையை தானே பலி கொடுக்கிறோம்.. இந்த தடவ ஒரு கன்னி பெண்ணை பலி குடுத்தா என்ன…..??ரிஷிபன் சந்தேகம் போல கேட்டான்…

குருவே….. என்ன சொல்லுறீங்க ?? ரிஷிபனை அதிர்ச்சியோட பார்க்க..

ஹாஹாஹா… ஹாஹாஹா

கோரமமாய்… சிரிக்கும் ரிஷிபனையே ஓர் வித பயத்தோடு பார்த்துகொண்டிருந்தான்… முனியன்.

ஆத்மாவின் பயணம் தொடரும் …

.FB_IMG_1556521085253|259x194

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here