உயிர் தேடும் ஓர் ஆத்மா… பகுதி 2

0
348


——-***

காயு.. காயு.. கூப்பிட்டுண்டே உள்ளே வந்து கொண்டிருந்தாள் காயத்திரியோட உயிர் தோழி வாசவி..

ஜானகி
வாடி வாசு…… அம்மா என்ன பண்ணிண்டு இருக்காள் அப்பறமா அம்மாவ ஆத்துக்கு வர சொல்லடி ….

ஹ்ம்…. சொல்றேன் மாமி காயு எங்க..?

அவ கிணத்தடில இருக்கா போய் பாரு..

ஹ்ம் மாமி..

காயத்திரியோட தோப்பனாரும் வாசவி தோப்பனாரும் ஓரே கோவில்ல அர்ச்சகரா இருகுறவாள்..

சிறு வயதுலேருந்தே தோழியானவள் வாசவி காயத்திரி எங்கு சென்றாலும் வாசு இல்லாமல் செல்லவே மாட்டாள்.. பள்ளி படிப்பு முதல் காலேஜ் வரை இருவரும் ஒன்றாகவே பயின்றவர்கள்..

ஹேய்.. காயு இங்க என்னடி பண்ணிண்டு இருக்க….

கிணத்துதிட்டின் மேல் அமர்ந்து கொண்டு எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்..

வாசு வந்து தட்டவும்..

ஹ்ம்.. வா வாசு..குரலில் சுரத்தே இல்லாமல் கூப்பிட்டாள்..

என்னடி.. காயு.. ஏன் ஒரு மாதிரி இருக்க..

அதெல்லாம் ஒண்ணுமில்லடி நல்லா தான் இருக்கேன்..

ஹ்ம்.. ஏண்டி
காயு.. நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வர்ளாமே… வர்ரது பெரிய இடமாமே..

நோக்கு யாரடி சொன்னா…

அதுவா… காலம்பற
கோமதிமாமியாண்ட உங்க அம்மாதான் சொல்லிண்டு இருந்தா……

உங்கஅம்மா ஏண்டி அவா கிட்டலாம் சொல்லிண்டு இருக்கா அவாளே பொறாமை புடிச்சவா….. வாசுகி பொலம்பவும்..

ப்ச்.. போடி அவாள் பொறாமை பட்டுடாவது நாளைக்கு வர்றா வா வராம இருந்தா சரி…

ஏண்டி … அசடு இப்படி சொல்லுற.. நோக்கு பிடிக்கல யா… அவாளை.

உன்கிட்ட சொல்லுறதுக்கு என்னடி..
நேக்கு பயமா இருக்குடி..

ச்சி அசடு.. இதுக்குயாராச்சும் பயப்படுவாளா.. லூசு…

வாசு….

ஹ்ம் சொல்லுடி.

உங்கிட்ட ஒன்னு சொல்லுவேன் அத நீ யார்கிட்டயும் சொல்லப்படாது சரியா..

நேக்கு ஒரு
பயங்கரமான கனவு ஒன்னு வந்துச்சிடி .. அந்த கனவுலவந்தவா காயு உன் சரீரம் வேணும்னு சொல்லுறா என் பேர அவா கரெக்ட்டா சொல்லுறாடி .. . அந்த கனவு வந்ததுல இருந்து கொஞ்சநாளாவே… யாரோ என்னை உன்னிப்பா பார்த்துண்டே இருக்குற மாதிரியே பீல் இருக்கு டி ..

நான் எங்கனா போறச்ச என் பின்னாடியே நிழல் போல தொடர்ந்து வரப்பல இருக்கு…..
இப்ப கூட உன்னாண்ட தான பேசிண்டு இருக்கேன்..ஆனாலும் என்ன யாரோ பார்த்துண்டே இருக்குறாப்ல தோணிட்டே இருக்கே டி…??? …..

என்னடி சொல்லுற…?

ஆமாடி.. ஒரு நாள் நா காலம்பற கிணத்தடில ஜலம் இறச்சிண்டு இருந்தேனா..

அப்போ தொப்னு கிணத்துல என்னமோ விழந்தது.. என்னென்னு உள்ளார பாத்தேன்… அங்க…??

ஹ்ம் சொல்லுடி அங்க என்ன இருந்தது…

அது … அது வந்து… காயு சொல்லிண்டு இருக்கிறச்ச அந்த உருவம் அவளையே பார்த்துண்டு இருக்கிறத காயுபார்த்துட்டாள்.. அதிர்ச்சியில் பேசமுடியாமல் விழி விரித்தாள்..

சொல்லுடி காயு என்ன இருந்தது அங்கே..

ஆஹன்…. என்னடி…..

காயுயுயு உன்னதாண்டி கேக்குறேன் பதில் சொல்லுடி…

அது.. வந்து..??

அடியே
காயு…. ஜானகி கூப்பிட்டாள்.. சத்த உள்ளாரா வந்துட்டு போடி…

அம்மா கூப்பிட்றா… டி நான் அப்பறம் வந்து சொல்லுறேன்…

சரிடி நேக்கும்வேல இருக்கு அப்பறம் வறேன்..

ஹ்ம்ம் சரிடி
உள்ளே சென்று விடவும்… அந்த உருவமும் மறைந்தது…

என்ன மா கூப்பிட்ட பேசிண்டு தான இருக்கேன் … காயத்திரி உள்ளாரா வந்து ஜானகியிடம் கேட்கவும்…

நா எங்க டீ உன்ன கூப்பிட்டேன் உன் தோழி தான் உன்ன தேடிண்டு வந்தாள்…

ஓ.அப்போ நீ கூப்பிடலையா..

என்னடி ஆச்சு நோக்கு.. அதான் இல்லனு சொல்லுறேன்லியோ….

ஹ்ம்ம்.. யோசனையோடவே நின்றாள் …
சரிடி
காயு.. வந்ததுதான் வந்துட்ட நா சத்த டெய்லர் கடை வர போய்ட்டு வரேன் நோக்கு ஜாக்கெட் துணி தைக்க குடுத்து இருக்கேன் வாங்கிட்டு வந்திறேன்.. நீ ஆத்த பாத்துக்கோ… கதவு அடைச்சிக்கோ டீ சட்னு வந்திறேன் . உன் தோப்பனார் வந்தா… அம்மா பக்கம் தான் போயிருக்க வந்துடுவா னு சொல்லு . உன்ன தனியா விட்டு போனேனு தெரிஞ்சா நேக்கு தான் திட்டு விழும்… என்னடி நான் சொல்லுறது விளுங்குதா…

ஹ்ம்ம் சரி மா … போய்ட்டு வா… நா பாத்துக்கிறேன்

அம்மா கூப்பிடலனு சொல்லுறாளே அப்போ யார் கூப்பிட்டு இருப்பா… அவள் யோசனையோடு இருக்க…

நான் தான் கூப்பிட்டேன்…காயத்திரி ஒரு குரல்சொல்லியது .

குரல் வந்த திசையை பார்த்தாள் பார்த்ததும் கண்கள் அதிர்ச்சியில் நிலைகொத்தி நின்றது… நீ.. நீ அந்த கனவுல வந்தவ தான… வாய்குழறி பேசவும்….

ஹாஹா…… ஹாஹா அசுர சத்தத்தோட சிரித்தாள்….

அந்த சிரிப்பின் எதிரொலியின் மூர்ச்சையானாள் காயத்திரி….

நடையை சாத்திவிட்டு… சாம்பசிவம் … ஆத்துக்கு வந்து கொண்டிருந்தார்.. அம்மாடி காயத்திரி …. ஆத்துக்குள்ளேற நுழையும் போதே மகள் கண்ணில் பட்டுடனும் சாம்பசிவத்துக்கு இல்லனா என்னமோ ஏதோனு பயந்து போயிடுவார்….
இந்த பயம் …
காயத்ரிக்கு எப்போ 20 வயது முடிந்து 21 தொடங்கியதோ அப்போ ஏற்பட்டது சாம்புவுக்கு…

மகளை கூப்பிட்டும் வராமல் இருக்கவும் பயத்தில் உள்ளாற ஓடினார்….

அங்கே மயங்கியநிலையில் கிடந்த காயத்திரியை … கண்டதும் … பதறிகொண்டே பகவானே என் குழந்தைக்கு என்ன ஆச்சோ அம்மாடி காயு …. எழுந்திரு டா

.ஜானகி ஜானகி ஜலம் கொண்டு வாடி உள்ளார குரல் கொடுத்து பார்த்தும் ஜானகி வரலன்னு தெரிஞ்சதும்…. அவரே உள்ளார ஓடி போய் ஜலம் எடுத்துண்டு வந்து காயத்ரி முகத்தில் தெளித்தார் …

அம்மாடி காயு.. கன்னத்தை தட்டினார்

ஹ்ம்ம்….. முனகினாள் சட்டென கண்விழித்தவள் … என் ஜென்மம் முடிஞ்சு வந்துருக்கேன்டா … பழி தீர்க்காமல் போமாட்டேன்….. ஹாஹா…… ஆகோரக்ஷமாய் சொல்லிக்கொண்டே மறுபடியும் மயங்கி விடவும்..

அம்மாடி காயு என்ன ஆச்சிடா … அப்பாவ கண்ணதுறந்து பாரு டா கலங்கினார்… எந்த ஜென்மத்து பாவமோ … என் குழந்தய இப்படி ஆட்டி படைக்குதே.. பகவானே …நீ தான் என் குழந்தையை காப்பாத்தணும்….

அம்மாடி காயு…. மறுபடியும் முகத்தில் ஜலம் தெளிக்க…..மெல்ல கண் விழித்தாள்…

அ.. அப்பா.. எப்போ வந்தேள்….நேக்கு என்ன ஆச்சு…..

நோக்கு ஒண்ணுமில்ல டா ….. மெல்ல எழுந்திரு… கைபிடித்து தூக்கி விடவும் …….

ஜானகி உள்ளே வந்துகொண்டிருந்தாள்

காயத்திரியை …. தூக்கி விட்றதை பார்த்துட்டு பதறிட்டு ஓடிவந்தாள் ஏன்னா…. என்ன ஆச்சு காயு ஏன் இப்படி இருக்கா..

நான் போறச்ச நல்லா தான இருந்தா… காயத்திரியை மேலும் கீலும் பார்வையால் அளந்த படி கேட்டுக்கொண்டிருக்க..

சாம்பு ஜானகியை அனல் பார்வையால் முறைத்து பார்த்தார்… உன்னாண்ட என்ன சொன்னேன்.. காயுவ எப்பவும் தனியா விடாதேனு சொன்னேனே இல்லியோ… எங்கே போயிருந்த தனியா விட்டுட்டு… கர்ஜிக்கவும்….

அது வந்துனா …. காயத்ரிய பொண்ணுபாக்க வரா இல்லியோ .. அதான் டெய்லர் கடையில ஜாக்கெட் தைக்க குடுத்து இருந்தேன்னா அத வாங்கிட்டு வரதுக்கு நாழியாகிடுச்சி …மன்னிச்சிக்கோங்கனா இனி ஒரு காலும் காயுவ விட்டு தனியா போகமாட்டேன் … ஜானகி கால்லவிழாத குறையாய் கெஞ்சவும்..

ஹ்ம்ம் சரி சரி நேக்கும் காயுக்கும் சூட காபிபோட்டு எடுத்துண்டு வா.. போ

ஹ்ம்ம் சரிங்கோ னா..
காயத்திரியை ஒரு வித பயத்தோடவே பார்த்துகொண்டே உள்ளாரா சென்றாள்…

காயத்ரி தூங்குற வரை அவள் பக்கத்திலேயே இருவரும் அமர்ந்து இருந்தார்கள்…

அவள் தூங்கியதும் கதவை சாத்திவிட்டு வெளியே வந்ததும் …

ஜானகி கேட்டாள்… ஏன்னா… நம்ம காயத்ரிகிட்ட கொஞ்சநாளாவே ஒரு மாற்றம் தெரியுதுனா நீங்க கவனிச்சேளா .

சாம்பு ஏதோ சிந்தனையில் இருந்தாலும் ஜானகி கேட்டதை காதில் வாங்கியவர் .. ஹ்ம்ம் ஆமா டி … அதுக்கு தான் உன்னாண்ட படிச்சி படிச்சி சொல்லிட்டு போறேன் தனியா விடாதே தனியா விடாதே னு … எங்கயாச்சும் என் பேச்சு கேக்குறியா டி . கோவம் படவும்….

அதான் அப்பவே மன்னிச்சிக்கோங்க னு கேட்டுட்டேனே மறுபடியும் என்மேல ஏன் கோவம் படறேள் . போங்கோ னா… ஜானகி முறுக்கி கொண்டு படுத்துவிட..

சாம்பு .. ஏதோ நினைத்தவர் .. ஹ்ம்ம் பெருமூச்சு விட்டார் எது நடக்கும்னு இருக்கோ அது தான் நடக்க போகுது …. யார் தடுத்தாலும் நிக்க போறது இல்ல…. பகவானே என் குழந்தையை நீ தான் காப்பாத்தணும் .. பகவானிடம் பாரத்தை இறக்கி வச்சிட்டு தூங்க சென்றார்…

நிசப்தம்….
ஆந்தையின் ரீங்காரம் மட்டுமே ஒலித்து கொண்டிருக்க…
நள்ளிரவு …நேரம்.. 1 ஆக 2நிமிடங்களே உள்ளன…
ஒரு பெண் அழுகுற குரல் கேட்கவும் சட்டென முழித்தாள்.. காயத்திரி…
யார் அழறது..

என்ன சத்தம் அது.. யாரோ அழறாப்ல இருக்கே….
இந்த நேரத்துல யார் அழறது அழறதுக்கு நேரங்காளமே கிடையாதா அவாளுக்கு ச்சே… சத்தம் வந்த திசையில் எழுந்து போனாள்…

காயத்திரி ஜன்னலில் திரையை விளக்கி ஓரமாய் நின்று வெளியே பார்க்க… கும்மிருட்டில் அவள் முன் ஒரு உருவம் நிழலாடியது போல அமானுஷியமாய் உணர்ந்தாள்.

நாய்கள் விடாமல் குறைக்கவும்.. பயத்தில் வேர்த்து கொட்டியது பெரியவா சொல்லிருக்கா எந்த நேரத்துலயும் பயம் இருந்தாலும் பயத்தை வெளிக்காட்டிக படாதுனு … காயத்திரி மனதுக்குள் மந்திரம் சொல்லிண்டே இருட்டில் பார்வையால் துழாவினாள்…

யாருன்னு சொல்லுங்கோ இங்கே ஒருத்தி காட்டு கத்தலா கத்திண்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு அழுதுட்டே இருக்கேளே…

சட்டுனு அழுற சத்தம் நிற்கவும்..

என்ன சத்தத்தையே காணோம்.. யாரா இருக்கும் ஒரு வேலை பேயா இருக்குமோ… பகவானே…
காயத்திரி பயந்து போனாள்…

நோக்கு தேவையாடி காயு எதுவோ எப்படியோ கத்திட்டு போறதுகள் இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டிதானே…தேவை இல்லாம ஜன்னல் பக்கம் எதுக்கு வந்த.. அவளையே திட்டிண்டு போ பூஜை அறைக்கு போய் சாமிய வேண்டிட்டு வந்து படு காலம்பற உன்ன பொண்ணு பாக்க வரானு அம்மா சொன்னாளே…. போடி போ அசமந்தம்… மனசாட்சி இடித்துரைக்கவும்…

ஹ்ம்ம்ம் ..
காயத்திரி.. அறையை விட்டு வெளியே வர கதவை திறந்தாள் ..

வாயிலில் முகம் மட்டும் தெளிவாய் தெரிய.. ஓர் உருவம் நின்று கொண்டிருக்க..
அதை பார்த்ததும் ..காயத்திரி அலறிய படியே மயங்கி விழுந்தாள்… .

அந்த உருவம் கீழே விழுந்த காயத்திரியை ஆசையோட தடவி பார்த்து விட்டு மறைந்தது…

அலறல் சத்தம் கேட்டு படக்குனு எழுந்த சாம்பசிவம்… பக்கத்துல படுத்துட்டு இருந்த ஜானகியை பார்த்தார்
அவ நல்லா தூங்கிட்டு இருக்கவும் யார் அழறியது வெளிய வந்து பார்க்க. காயத்திரி அவ அறை வாசலில் மயங்கி விழுந்து கிடந்ததை …. பார்த்ததும் பதறி அடித்து கொண்டு ஓடிவந்தார்… அம்மாடி காயத்திரி என்னடாமா என்ன ஆச்சு ஏன்டா இங்க விழுந்து கிடக்குற அம்மாடி கண்ணைத் திறந்து பாருடா… கன்னத்தை தட்டி கொண்டிருந்தார்..

அடியே..
ஜானகி… .. ஜானகி எழுந்து வாடி .. கத்தவும்…
ஜானகி அடிச்சு புடிச்சு எழுந்து ஓடி வந்தாள்…. பதறிட்டே ஏன்னா என்ன ஆச்சு… காயுக்கு … எதுக்கு இங்க விழுந்து கிடக்குறா…

நேக்கு தெரியலடி யாரோ அலறின சத்தம் கேட்டுதுனு வந்து பாத்தா நம்ம காயு இப்படி விழுந்து கிடக்குறா…. நேக்கு பயமா இருக்குடி நெஞ்சு வேற பட படனு அடிச்சிக்குது…

பயபடாதேள்.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது … னா
இருங்கோ நான் போய் ஜலம் கொண்டு வரேன்… உள்ளே ஓடினாள்…
ஜலம் கொண்டு வந்து காயத்திரி முகத்தில் தெளிக்கவும் …

அவளிடம் அசைவு தெரியவும்
அம்மாடி காயத்திரி என்னடா என்ன ஆச்சு சாம்பசிவம் கன்னத்தில் தட்ட காயத்திரி கண் முழித்து பார்த்தாள்…

என்னடா ஆச்சு ஏன் இப்படி விழுந்து கிடக்குற சாம்பசிவம் மகளின் தலைகோதிய படியே கேட்க…

காயத்திரிக்கு …. ஏன் எழுந்து வந்தோம்னு யோசனை பண்ணினாள்.. அது… அது யாரோ அழுற மாதிரி சத்தம் கேட்டுது அப்பா யார் அழுறாங்கனு ஜன்னல் பக்கம் பாக்க போனேன்னா…

நோக்கு ஏண்டி வேண்டாத வேலை கம்முனு இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டிதானே… என்னமோ அலுற சத்தம் கேட்டுச்சாம் எழுந்து வந்து
பார்த்தாலாம்…ஜானகிக்கு தூக்கம் கெட்டுடுச்சேனு கோவத்துல சிடுசிடுனு எறிஞ்சி விழவும்..

சூ.. ஜானகி என்ன இது குழந்தை எதையோ பார்த்துட்டு பயந்து போயிருக்கா… நீயும் எதுக்கு திட்டுற..

ஹுக்கும்.. குழந்தை தொட்டில போட்டு தாலாட்டுங்கோ… ஏழு கழுதை வயசாச்சு நாளைக்கு இவள பொண்ணு பாக்க வரா கல்யாணம் முடிச்ச பத்தாவது மாசமே புள்ளைய பெத்துக்குற வயசாச்சு … இன்னும் குழந்தைனு சொல்லிட்டு திரியுறேள் ஹுக்கும் தோள் பட்டையில் இடிக்க..

நீ சத்த சும்மா இருக்கியாடி ..எப்பப்பாரு நொய்நொய்னு கத்திட்டு சாம்பசிவம் மகளிடம் திரும்பினார்…

யாரு. அழுறதுனு பாத்தியா டா..

இல்லை அப்பா.. நா சத்தம் போட்டதும் அவா அழறது நிப்பாட்டிட்டா.. நேக்கு பயம் வந்துதுடுத்து.

..ஓ …

அதான் வெளிய வந்து பூஜை அறைக்கு போய் சாமிய சேவிச்சிட்டு வந்து தூங்கலாம்னு கதவை திறந்தேன்னா… ஏதோ ஒரு உருவம் நின்னுட்டு என்னையே பார்த்துட்டு இருந்ததது பா..ஆனா அந்த உருவம் என்னாட்டமே இருந்ததது அப்பா அது எப்படி…?.. அப்பா உங்களாண்ட இன்னொரு விஷயம் சொல்லணும்….

சாம்பசிவமும் ஜானகியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டனர்..

இருவர் பார்வையும் ஒரே நேரத்தில் கடிகாரத்தையும்.. காலண்டரையும் பார்க்கவும்..

சாம்பசிவத்துக்கு பயத்தில் வேர்த்து கொட்டியது…

அம்மாடி காயு எழுந்துரு எதுவானாலும் காலம்பற பேசிக்கலாம் போ பூஜை அறையில போய் பகவானே சேவிச்சிட்டு வந்து தூங்க போடா..

ஹ்ம்ம்ம்… சரிங்க பா…..

காயத்திரி எழுந்து போகவும்…

சாம்பசிவம் இடிந்து போய் அப்படியே அமர்ந்து விட்டார்..

எழுந்து போன காயத்திரி சட்டென திரும்பினாள்… அவள் பார்வையில் ஏதோ மாற்றம் வந்து போனது
சாம்பசிவத்தை பார்த்து சிரித்துக்கொண்டே .. நான் வந்துட்டேனு அறிந்து கொண்டாயோ … சாம்பு ஹாஹா…. கூர்மையான பார்வையில் பார்த்து கொண்டு இருக்கவும்

சாம்பசிவம் சடார்னு காயத்ரியை பார்க்க

அவரை பார்த்துக்கொண்டே பூஜை அறைக்குள் நுழைந்தாள்…

காயத்திரியை பார்த்து பயத்தில் மிரண்டு போனார் சாம்பசிவம்……

ஆத்மாவின் பயணம் தொடரும்……IMG-20190415-WA0005|690x387

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here