கண்ணில் கண்டதை எல்லாம் ரசித்தேன்
குழந்தையின் சிரிப்பு
குமரியின் வெட்கம்
பறவையின் பாடல்
பறந்து விரிந்த பூமி
சூரியனின் சுட்டறிகும் ஒளி
நிலவின் குளுமை
ஆர்ப்பரிக்கும் அருவியின் வீழ்ச்சி
அமைதியான நதியின் பயணம்
இன்னும் இன்னும் ரசிக்கத்தான் எத்தனை எத்தனை
இந்த பூமியிலே – ஏனோ ரசிக்கத்தான் நேரம் இல்லை
ஒரு நொடி நின்று உனையே நீ முதலில் ரசித்து பார்
ஒவ்வொரு நாளும் புதியதாய் பிறந்து வந்த மகிழ்ச்சி உண்டாகும்
ஒரு பிறப்பு, ஒரு வாழ்க்கை, ஒரு உயிர்
ரசனையோடு வாழ்வோம், மகிழ்வோம்.
Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]