என் காதலன் மிக நல்லவன்…..
பனங்காய் சுமக்கமுடியா குருவி தலையில் பாறாங்கல் வைக்கும்போதும் பார்த்து வைக்கிறேன் பயப்படாதே என்பவன்!!!
கந்தலாய் என்னை கசக்கி கிழிக்கப்போவதை கூட சொல்லிவிட்டே செய்வான்!!!
என் இடையை இழுத்து வளைத்து கண்ணத்தில் முத்தம் வைத்துக்கொண்டே கழுத்தில் கத்தி சொருகிய காலங்கள் யாவும் கண் முன்னே!!!
நீ பிடித்த என் கையை என்றும் விடமாட்டாய் என்ற என் நம்பிக்கை ஊர்ஜிதமானது,
என் விரல்களை இறுக பற்றிக்கொண்டு என் கண்களை பார்த்து “நாம் பிரிந்துவிடலாமா” என்று நீ கேட்ட அந்த வேளையில்….
சில்லு சில்லாய் சிதறினாலும்
ஒன்றாய், நூறாய் பலவாய் உன் முகம் மட்டுமே சுமக்கும் கண்ணாடி…
முழுதாய் இருந்தாலும், முகம் காட்டாது ….ரசம் போன பின்னே…..
அறிவாயா??????