என் நினைவினில் உன் காதல்

0
145

அறை எங்குமே அமைதி.

தன் கையில் இருந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டினான் அவன் மனோ ரஞ்சிதன்.

காலமும் அவன் நினைவோடு தன் பக்கத்தை பின்னோக்கி புரட்டியது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் கொடைக்கு டூர் செல்லும் நாளன்று நிகழ்ந்தது.

ஆரம்பத்தில் இருந்தே எனக்கு அவளை மிகவும் பிடிக்கும்.

அவளின் அந்த கண்கள், அவள் பொதுவாக என்னிடம் பேசும் வார்த்தையானது அதிகம் படிப்பு சம்பந்தமாகவே இருக்கும்.

ஆனாலும் அவள் மொத்த வகுப்பில்.. என்னிடம் மட்டும் பேசுவது எனக்குள் ஒரு தன்மையை ஏற்படுத்த தான் செய்யும்.

இருந்தும் அவளிடம் என் மனதை சொல்ல தயக்கம் , அவள் அதன் பின் என்னிடம் பேசாது போய் விட்டால் ?

அவளிடம் நான் பேசும் ‘இந்த சைன் காஸ்’ போன்ற பேச்சே எனக்கு போதும் என்று அமைதி கொண்டேன்.

மதிய உணவு இடைவெளியில் அவள் என்னிடம்,
“இந்த ட்ரிப்க்கு நீ வரல்ல…” எனக்கேட்டாள்.

என்ன கான்ஃபிடன்ஸ் என் மேல்?
என்னை வா என்று அழைக்காமல், வருவாயா? என்று கேள்வி எழுப்பாமல் என்னிடம் கெஞ்சும் அவளின் கண்கள் , இதற்காகவே நான் போக வேண்டும் என்ற முடிவில் கிளம்பிவிட்டேன்,

அந்த டிரிப்பில்,
சுற்றி உள்ளவர்களின் தூண்டலால் அவளிடம் என் காதலை சொல்ல செல்கிறேன்…..

அங்குள்ள சில பூக்களை பறித்து அவளின் முன்பு நான் நீட்ட…
அவ்வளவு தான் பதில் ஏதும் சொல்லாமல் ஓடி விட்டாள்.
என்னால் தாங்க முடிய வில்லை …

அடுத்து நாங்கள் வீடு திரும்பும் வரையுமே அவள் என்னை பார்க்கவே இல்லை.

‘ சரி நாளை அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணியவாறு நாளைய பொழுதில் நான் பள்ளி செல்ல அவள் வரவில்லை .

அன்று மட்டும் இல்லாது ஒரு வாரம் வரவே இல்லை , அவள் தோழியிடம் காரணம் கேட்டால் சிரித்து கொண்டே மழுப்பி விட்டாள்.

சில நாட்களுக்கு பிறகு அவளை நான் காண எனக்கு ஆச்சர்யம் !

ஆம், துள்ளி குதித்து கொண்டு வரும் அவள் பாதங்கள் இன்று ரோஜா இதழ் பட்ட பனி போல் மெல்ல நடையிட்டு வருகின்றது…

அவளுக்குள் பெண்மை வந்து விட்டது என்பதை நானாய் அறிந்து கொண்டேன்.

அன்று மதிய உணவு இடை வேளையில் அவளிடம் நான் பேச நெருங்க அன்றைய நாளின் இரண்டாவது ஆச்சர்யம்…

எப்போதும் அவள் இதழுக்கு முன் அவள் விழியே என்னிடம் பேசும்.

ஆனால், இன்று அவள் விழிகள் என்னை தூரம் ஒதுக்கி வைத்தது .

மீண்டும் அவள் என்னிடம் பேசாமல் விலகி ஓடினாள்.
துடித்து விட்டேன்.. இப்படியே பள்ளியை விட்டு நின்று விடலாமா என்று கூட எண்ணினேன்.

மேலும் அன்று என்னை உசுப்பேற்றிய நண்பனை கொன்றால் தேவலாம் என்றது என் மனம்.

ஆனாலும் அவளை பார்த்து கொண்டே என் மிஞ்சிய காலத்தை தள்ளினேன்.

இது காதலா என்று எனக்கு தெரியாது.
வருடங்கள் இரண்டு கடக்க…

பதினொன்றாம் வகுப்பின் சேர்க்கை மிக தாமதமாகவே நடை பெறும் எங்கள் பள்ளியில்.

நாங்கள் இருவருமே முதல் க்ரூப்பை தேர்வு செய்தது கடவுள் செயலே..

இதற்காக கடவுளுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் என் மகிழ்ச்சி தீராது.

பின்னே வேறு வேறு பிரிவு எடுத்து வகுப்பில் சில நேரங்களிலாவது அவளை காணும் சந்தோசத்தை யாராவது தட்டி பறித்து கொண்டுவிட்டால்?

வகுப்புகள் தொடங்கிய சில காலத்தில் ,
இந்த நாள்…

அவள் மீண்டும் என்னிடம் பேசிய நாள்…
இருவருமே மூன்றாவது இருக்கையின் முனையில்…

இயற்பியல் ஆசிரியர், நேற்றைய பாடத்தின் முக்கிய கேள்வியை அவளிடம் கேட்க …. அவள் முழித்த முழியில், எனக்கு சிரிப்பு தான் வந்தது…

ஆம் , நேற்றைய தினம் அவள் வகுப்புக்கு வரவில்லையே…

மேலும் இந்த ஆசிரியரின் பிரிவு மதிய உணவின் போது தான்…
அந்த கால இடைவேளையில் படித்து விடலாம் என்று எண்ணி கொண்டிருந்தவளுக்கு இப்படி திடீர் ஷாக் கொடுத்தால்…

பாவம் அழுதே விட்டாள்.

வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் அவளை காண வெகு சீக்கிரமே வந்து விட்டேன்.

இன்னமும் அழுது கொண்டு தான் இருக்கிறாள்.

படபடத்த இதயத்துடன் அவளை நெருங்கி… ” இதுக்கு போய் யாராவது அழுவாங்களா” எனக்கேட்டேன்.

“இல்ல, நேத்து அம்மாக்கு உடம்பு சரி இல்ல அதான் என்னால வர முடியல அதோட, எப்படியும் இன்னக்கி மதியத்துக்குள்ள படிச்சிடலாம்னு இருந்தேன்.
சார் காலைலயே வந்ததும் பயம் வந்துடுச்சு.. அதோட என் கிட்ட கேள்வி கேட்டுற கூடாது கடவுளேனு வேண்டிக்கிட்டு இருக்கும் போதே அவர் என்கிட்ட கேட்டுட்டார்”

குழந்தை போல் பேசும் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்ய என்று தெரியவில்லை எனக்கு.

“சரி ,இதுக்கு நீ அழுதா எல்லம் சரி ஆய்டுமா என்ன ? அழாம படியேன்”

அவள் என்னிடம் மீண்டும் பேசிய மகிழ்ச்சியை யாரிடமாவது சொல்லி சந்தோச பட வேண்டும் போல் இருந்தது.

” அதுலாம் அஞ்சு நிமிசத்துல படிச்சிடுவேன். ஆனா இந்த தெளசன் டைம் இம்போசிஷன்…
இத நினைச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு. அம்மாக்கு வேற உடம்பு சரி இல்ல வீட்டு வேலைய முடிக்கவே நேரம் சரியா இருக்கும் இதுல நா எப்படி ஆயிரம் தடவ எழுத…”

” இவ்வளோ தானா நா இன்னக்கி ஃப்ரீ தான் கொடு நா எழுதி தரேன்.”

“இல்ல உனக்கு இல்ல… வேண்டாம்…..”

இத்தனை நாளாய் பேசாமல், இன்று தனக்கு தேவை படும் போது அவள் என்னிடம் பேசுவதாய் நான் எண்ணி விட கூடாதே என்று அவள் நினைப்பது எனக்கு தெளிவாய் தெரியவே அவளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாய்…

“என்ன வேண்டாம் நா உன் ஃப்ரண்ட் இல்லயா.. உனக்கு நா ஹெல்ப் பண்ண் கூடாதா..? ” எனக் கூறிய பின்னே அவள் முகம் தெளிவடைந்தது.

அவளை என்னிடம் பேச வைத்ததற்கு அந்த கடவுளுக்கே ஆயிரம் நன்றி மடல் எழுதலாம்.. இந்த இம்போசிஷன் எழுத மாட்டேனா?..

அதன் பின் என் வாழ்வு பசுமையாய் செழித்து வளர்ந்தது.

காலங்கள் இரண்டு வேகமாய் கடக்க நாங்கள் எங்கள் கல்லூரி படிப்பை தொடங்க ஆரம்பித்த தருணம்…

என் காதலை ஒரு வாலிபனாய் நான் உணர்ந்த தருணம்.
+2 விற்கு பிறகு அவள் வீட்டில் கல்லூரி படிப்பதெல்லாம் குதிரை கொம்பு தான்.

அதோடு அவளோ, வீட்டின் ஒரே பிள்ளை. காலாகாலத்தில் கல்யாணம் செய்து வை , என்று யாராவது சங்கு ஊதி விட்டால், அவள் அம்மா தலையாட்டி விடுவார்.

ஆனாலும் ஒரு நம்பிக்கை.

எங்கள் பள்ளி ஆசிரியரான அவள் தந்தை அவளை மேல் படிப்பு படிக்க வைக்க நினைத்தால் அவர் சொல்லுக்கு கட்டு படுவார் இவள் அன்னை.

ஆனால் அவர் சம்மதிக்க வேண்டுமே..

எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊருக்கு தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். வயது பெண்ணை அவ்வாறு அனுப்புவது என்பது ஒரு தந்தையின் பார்வையில் இருந்து யோசித்தால்????

விடை காண இயலவில்லை என்னால்.

பள்ளி நண்பர்களோடு கல்லூரியை அடைந்தேன்.
பார்க்கும் முகமெல்லாம் அவளே எனக்கு தெரிகிறாள்.
அதோ அந்த பச்சை கலர் சுடிதார் அணிந்த பெண்ணும் கூட அவளாய் தெரிய …
சிரிப்புடன் தலையை தட்டியவாறு , எங்கள் அறையை தேடி உள்ளே நுழைய கால் வைத்த நொடி…
அதே பச்சை சுடிதார்… அவளின் முகமே ….. அவளே…. எப்போதும் போல் புருவத்தை இரு முறை தூக்கி என்னை கண்ட விதம்…
அய்யோ,

முதல் முறை.. அப்படியே அவளை கட்டி அணைக்க வேண்டும் போல் ஒரு கிளர்ச்சி …

எனக்காக அடம்பிடித்து இந்த கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். இத்தனை நாட்களும் எனக்குள் மட்டுமே இருப்பதாய் நான் நினைக்கும் என் காதல்..

இன்று அவளுள்ளும்…. நினைக்கவே இனிக்கிறது..

அன்று என் நண்பனோடு வகுப்பை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

திடீரென்று எங்கிருந்து வந்தாளோ அந்த வளைவினில் ,

என் நெஞ்சின் மேல் வெண்பஞ்சாய் விழுந்தாள்.

தடுமாறி விழ போனவளை சட்டென்று இரு கரம் கொண்டு தாங்கி பிடிக்க ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் ஒன்றும் விளங்க வில்லை.

உடன் வந்த நண்பர்கள் நினைவு கொண்டு இருவரும் விலக ,

என்ன காரணத்திற்காக கீழே வந்து கொண்டிருந்தாளோ? அந்த நினைவே இன்றி வகுப்பை நோக்கி ஓடி விட்டாள்.

ஜன்னல் அருகினில் சென்று அவளை
காண குங்குமமாய் சிவந்திருந்த அவள் முகம் ஓராயிரம் விளக்கம் கூறியது எனக்கு…

அதன் பின் வந்த நாட்களில் அவளிடம் என் காதலை சொல்ல சொல்லி என் நண்பர்கள் கூறினாலும் முடியாது என்று விட்டேன்.

இன்னுமொரு முறை அவளை இழக்க நான் தயாராய் இல்லை.

தன்னை சுற்றி கேட்ட கரவோசைகளினால் நினைவில் இருந்து நிகழ்வுக்கு மீண்டான் .

அரங்கமே அழகு கோலம் பூண்டிருந்தது.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ஃபேர்வல் ஃபங்ஷன் அது.

இவனும் இன்னும் ஒரு பெண்ணும் தொகுத்து வழங்கி கொண்டிருக்கின்றனர்
அருகில் நின்று கொண்டிருந்த பெண் அவனை நோக்கி” என்ன?” என்று வினவ ,

ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டினான்.

கையில் இருந்த புத்தகத்தை நோக்கினான்.

அவனின் அவள் கொடுத்தது..

அவன் மனதில் தேக்கி வைத்திருந்த அவளின் நினைவுகளை

” என் நினைவினில் உன் காதல்”

என்று பட்டியலிட்டு அவனிடம் கொடுத்து இருந்தாள்.

அணுஅணுவாய் அவள் அவனை ரசித்ததை… அழகாய் வரைந்திருந்தாள்.

ஆம் வரையும் கலையில் தேர்ச்சி
பெற்றவளுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே…

அதை பார்த்தவன், அவளை அங்கும் இங்கும் தேடினான்.

அவன் அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணோ ,

“அடுத்ததாக நம்மை இசை மழையில் மூழ்க செய்ய வருகிறார் நம் சித்ரா…”
என்று கூற,

சட்டென்று அவளை புரியாமல் பார்த்து விட்டு தன் கையில் இருந்த அட்டவணை தொகுப்பை கண்டான்.

அதில் அப்படி எதுவும் இல்லாததால்.. மீண்டும் அவளை புரியாமல் நோக்கினான்.

அவனை பார்த்து கண்ணடித்தவள்,

“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் அதுல எழுதல..”
என்று கூறி விட்டு மேடையை கண் காட்டினாள்.

கல்லூரியில் அனைவருக்குமே,
ஏன்? அவர்கள் இருவருக்குமே ,

தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பது தெரியுமானாலும்…

எதோ ஒன்று அவர்களை தடுத்தது இத்தனை காலமும் .

ஆனால் இன்றோ அவள் தன் காதலை தெளிவான தொகுப்பில் தொகுத்து அவனிடம் நீட்டி தெளிவாய் விளக்கவே, கண்ணுக்கு தெரியாத தடையும் தகர்த்தெறிய பட்டது.

மேடை மேல் தோன்றிய நட்சத்திரத்தை கண்டான்.

அடர் நீல நிற பட்டு புடவை…, அளவான ஒப்பனை… அழகுற மிளிர்ந்தாள் அவன் சித்ரா

கரகோஷம் மேடையை அதிர வைக்க
மெதுவாக கண்களை மூடியவள்,
தொண்டையை லேசாக செருமினாள்.

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்..

என் கண்ணில் ஒரு தீ வந்தது
**அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்.. **

உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை…

இரவில் உறக்கம் இல்லை…
பகலில் வெளிச்சம் இல்லை…
காதலில் கரைவதும் ஒரு சுகம்

எதற்கு பார்த்தேன் என்று…
இன்று புரிந்தேனடா…

என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்…

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்

என்கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

அனைவரின் முன்னும் அவள் தன் காதலை அவனிடம் தெரிய படுத்தினாள்.

அவன் இதழ்களோ புன்னகையால் விரிந்தது.

கரகோஷமும் கைத்தட்டல்களும் அவர்களை சூழ புன்னகை வடிவாய் அவனை நோக்கினாள் சித்ரா.

அவளை அணைக்க துடித்த மனதை அடக்கி மேடை இறங்கி வந்த அவளின் அருகே சென்றவன், கைகளை மென்மையக அணைத்தான்.

மீண்டும் கைத்தட்டல் …
“கங்ராட்ஸ் ….மனோ……” என்று.

அனைவரிடமும் விடை பெற்று சென்றாலும் அவளின் கையை மட்டும் விடவில்லை ..
நீண்ட நாள் தவம் கை கூடியது போல் ஒரு நிம்மதி மனதில்.

“சீக்கிரம் ஒரு வருஷம் போகனும்” என்றவனை புரியாமல் பார்த்தாள்..

மெலிதாக சிரித்தவன்,

“என் தகுதியை கொஞ்சம் உயர்த்தி … உன் அப்பாட்ட வந்து பேச தான்…”
என்று கூறினான்.

“இந்த ஒரு வார்த்தை கேட்க… என்ன தவம் செய்தேனோ இந்த ஒரு நாளே போதும் ஏழு ஜென்மம் கேட்பேனோ….”

என்ற வரியை மெலிதாய் அவன் காதில் முனுமுனுத்தாள்.

இவர்களின் இந்த சுகமான காதலும் கை சேர்ந்தது.

தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ காதலர்களை பார்க்கும் அந்த கல்லூரி…

இன்று இவர்களையும் இணைத்து விட்டு அடுத்த ஜோடிக்காக வெயிட்டிங்..

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here