தேவையான பொருட்கள்
ஓட்ஸ் மாவு – 2 கப்
ரவா – 1 கப்
தயிர் – 1 கப
கேரட் – 1 நடுத்தர அளவு -துருவியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கொத்தமல்லி இலைகள் – பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காய போடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை :
தயாராக வைத்துள்ள பொருட்களை எடுத்து கொள்ளுங்கள் .
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவை எடுத்துக்கொள்ளுங்கள்.
ரவா சேர்த்து கொள்ளுங்கள்
தயிர் சேர்த்து
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு
துருவிய கேரட்
நறுக்கிய பச்சை மிளகாய் , கொத்துமல்லி இலைகள் , கறிவேப்பிலை சேர்த்து கிளறி கொள்ளவும்
தாளிக்க ஒரு சின்ன கடாயில் என்னை ஊற்றி சூடானதும்
சீரகம் ,கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து
அதோடு பெருங்காய போடி சேர்த்து கொதித்ததும்
இட்லி கலவையில் ஊற்றி
நன்றாக கலந்து கொள்ளுங்கள்
கலவை கெட்டியாக இருந்தால்
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து
இட்லி பதத்துக்கு வந்ததும்
பேக்கிங் சோடா 1/2 தேக்கரண்டி
சேர்த்து
நன்றாக கலந்துகொள்ளவும்
இட்லி தட்டில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து
இட்லி கலவையை அதில் அளவாக ஊற்றி
இட்லி பாத்திரத்தில் வைத்து
8 அல்லது 10 நிமிடங்கள் வேக விட்டு
வெந்ததும் இறக்கி ஆறவிட்டு
தண்ணீரில் நனைத்த கரண்டியால்
இட்லியை பிரித்தெடுக்கவும்

இட்லி ரெடி…

:pray::pray::pray::raised_hands::raised_hands: