கத்திரிக்கா தின்ன வயிறு வெடிக்க வெடிக்க

0
48

வணக்கம் கடைசில என்னையும் கதை எழுத வெச்சிடாய்ங்கலே….

இருந்தாலும் பரவாயில்ல… கமண்ட்ஸ் சொல்லி டார்சர் பண்றது போதலன்னு கதை சொல்லி டார்சர் பண்ண வந்துருக்கேன்.

ஒன்லி திஸ் டைம்.

ஏன்னா என் மூளை சூப்பர்ஸ்டார் போல எப்போ வேல செய்யும் எப்டி வேல செய்யும் னு யார்க்கும் தெரியாது. ஏன் எனக்கே தெரியாது.

நிறுத்து, யார் நீ, எந்த ஊரு, என்ன பேரு எதுமே சொல்லாம பக்கம் பக்கமாக பேசுறே னு நீங்க காண்டாகுறது புரிது.

நான் அஞ்சலி, அஞ்சலி சுரேஷ்…
எல்லாரையும் போல ரமணிம்மா நாவல்ல தொடங்கியது இப்போ இங்க வந்து நிக்கேறன் இப்டி.. என் சின்ன முயற்சி, முதல் முயற்சி. உங்களோடு பகிர்ந்துக்க வந்துருக்கேன்…..

கதைக்குள்ள போக முன்னாடி இப்போவே சொல்லிட்றேன். எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.

நோ வெப்பன்ஸ்….

வழக்கம் போல நான் தான், என் வீடு தான். ஸ்கூல் எக்ஸாம் முடிஞ்சதனால என் 2 நாத்தனாரோட 4 பசங்களும் என் வீட்டில் டேரா போட வந்தாங்க. எங்க வீட்டுல ஒரு வழக்கம், வளர்பிறை சமயம் நிலா சோறு சாப்டு மொட்டமாடில தூங்குறது. (மல்லாக்க படுத்து விட்டத்த இல்ல இல்ல வானத்த பாக்குறதுல என்னா சொகம். அதும் வெட்டவெளில என்னா காத்தோட்டம்)

சாப்பாட்டு கடைய முடிச்சிட்டு படுத்த உடனே 4 ல 1 அத்த அத்த தூங்கறதுக்கு முன்னால ஒரு கதை சொல்லுன்னுச்சு.

என் மை.வா: வாடா பாண்டா குட்டி, உனக்கு விதவிதமா சமச்சு போட்டு, ஊட்டி விட்டு னு ஆயா வேல பாக்கறது பத்தலனு கத வேற சொல்லனுமா??? எல்லாம் என் நேரம் ?‍♀️
???

ஆனா முடியாதுனு சொல்ல முடியாதே….
சரி னு யோசிச்சி பாத்தேன். என் பாட்டி என் சின்னவயசுல சொன்ன ஒரு கதை அரகொறயா ஞாபகம் வந்துச்சு. அப்பாடா தப்பிச்சேன், பால வாத்த பாட்டி (அய் இது நல்லூருக்கே . தெலுங்கு பட டைட்டில் போல) ?? கொஞ்சம் தானே ஞாபகம் இருக்கு.என்னடா பண்றது னு யோசிச்சேன். சரி பாத்துக்கலாம்.

என் மை.வா: நாங்கலாம் யாரு…ஸ்கூல்/காலேஜ் எக்ஸாம்ல எழுதாத கதயா,

சரி னு சொல்ல ஆரம்பிச்சேன்.

இப்போ அந்த கதய உங்களுக்கும் சொல்ல போறேன்.

கத்தரிக்கா தின்ன வயிறு வெடிக்க….. வெடிக்க…..

இதான் கதயோட டைட்டில்….

ஒரு ஊர்ல ஒரு அப்பா அம்மா. அவங்களுக்கு ஒரேயொரு பையன்.

அப்பா நம்ம சண்முகசுந்தரம் அய்யா போல அந்த ஆத்தா மகமாயி அருளால எல்லாரும் நல்லா இருக்கனும் னு நெனைக்ற நல்லவரு. அம்மா அதுக்கு அப்டியே ஆப்போசிட்டா, 16 வயதினிலே ஸ்ரீதேவி அம்மா வடிவுக்கரசி போல ஒரு பஜேரி. இந்த 2 துருவத்துக்கும் பொரந்தவன் தான் நம்ம குமுதா ஃப்ரண்டு பால்டப்பா ல அவன மாதிரி ஒரு மக்கு புள்ள..

சண்முகம் அய்யாக்கு ரொம்ப நாளா ஒரு ஆச, அந்த பால் டப்பாக்கு ஒரு கல்யாணம் பண்ணும் னு. வடிவுக்கு இதுல இஷ்டம் இல்ல. கல்யாணம் பண்ணா புள்ள தன் கைவிட்டு போய்டுவானோன்னு பயம். வந்த வரன்க்கு எல்லாம் ஒரு காரணம் சொல்லி தட்டி கழிச்சாங்க. சண்முகம் அய்யா மரண படுக்கையில இருக்கும் போது கடைசி ஆசனு சொல்லி கேக்கறாரு. சரி னு வடிவு நம்ம ஸ்ரீதிவ்யா போல ஒரு பொண்ண தேடி கல்யாணம் பண்ணி வெக்கிது. (பால்டப்பாக்கு ஃபாரின் சாக்கலேட். ஹ்ம்ம், தல எழுத்து)

கொஞ்ச நாள்ள சண்முகம் அய்யா காலாவதி ஆய்டாரு சாரி சாரி காலமாய்ட்டாரு. அதுக்கு அப்புறம் வடிவு வந்த மருமகள ரொம்ப கொடும படுத்றா. புருசன் கூட பேசக்கூடாது, சிரிக்க கூடாது, நல்ல துணி உடுத்தக்கூடாது, வயிரார சோறு கிடையாது னு. நம்ம பொண்ணு போனா போகுதுன்னு விட்டுகுடுத்தா.

சண்முகம் அய்யா அவர்வீட்டு தோட்டத்துல கத்தரிக்கா வெத போட்டு வளத்தாரு. அது காய் விடமின்ன அய்யா காத்த விட்டுடாரு. (அய்யயோ வட போச்சே)

அந்த கத்திரிகாய தினமும் மாமியாருக்கும் புருசனுக்கும் மட்டும் சமச்சு தரனும் ஆனா அவ தொட்டு கூட பாக்க கூடாது. இப்டியே நாள் போச்சு. நீ சாப்டியா? என்ன சாப்ட னு கேக்க கூட அந்த பால்டப்பாக்கு தெரில….

ஒரு நாள் நம்ம வடிவு ஆத்தங்கறைக்கு குளிக்க போறேன். நீ சமச்சிட்டு வெளில வந்து உக்காறனும்னு சொல்லிட்டு போச்சு. கத்திரிக்கா வ சாப்டருவாளோன்னு தான் பக்கி அப்டி சொல்லிட்டு போச்சு. இது நீர்யான கணக்கா ஊறி, நீந்தி குளிச்சு முடிக்ககுள்ள நம்ம திவ்யா சமச்சிட்டு வெளில வந்தா மாமியார் இன்னும் வரல. இவளுக்கு ஒரு நப்பாசை. மாமியார் வரமின்ன கத்திரிக்காய டேஸ்ட் பாக்கலாம் னு போய் சாப்டுறா.. 2பீஸ் தான் சாப்டா அதுகுள்ள வடிவு பாத்துட்டா.

அவள அடிச்சி ஒரு சாக்கு பைல கட்டி புள்ளய கூப்டு வீட்ல உள்ள பழய சாமான கட்டி வெச்சிருக்கேன். அத ஆத்தங்கைறல கொண்டுபோய் எறிக்கனும் கூட வா னு கூப்டா. அவன்தான் அம்மா சொன்னதுக்கு மேல வேற எதயும் யோசிக்க தெரியாத முட்டாளாச்சே மூட்டய தூக்கிட்டு நடந்தான். ஆத்தங்கறை போன பின்னால் தான் தெரிஞ்சிது எரிக்க மண்ணெண்ணெய் கொண்டு வரலனு. புள்ளய திட்ணதும் அவன் கோச்சிட்டு போய்டான்.

திவ்யாக்கு மயக்கம் தெளிஞ்சு பாத்தா ஒரே இருட்டு. எங்க இருக்கோம்னே தெரில. ஆனா ஏதோ பேச்சு சத்தம் கேக்குது. கவனிச்சா நம்மல எரிக்க போறாங்கனு தெரிது ஆனா எப்டி தப்பிக்க தெரில. அப்போதான் வடிவு மூட்ட கட்டிதானே இருக்குனு வீட்டுக்கு போறா மண்ணெண்ணெ கொண்டுவர.

கெடச்ச கேப்புல தப்பிக்க நெனச்சு திவ்யா சுத்தி தேடுறா. கோணியோட குட்டி ஓட்ட வழியா ஆடு மேய்கறவன் தெரிறான். இவ கூப்டா சத்தம் கேக்குது உருவம் தெரில. பயந்துபோய்.இவ இருக்கும் மரத்துபக்கம் வரான். இவ அகெய்ன் கூப்டறா அப்போ மூட்டகுள்ளேந்து யான் சத்தம் வருதுனு தெரிஞ்சி மூட்டய பிரிக்கறான். திவ்யா நடந்தத சொல்லி உதவி கேக்றா. ஆடு மேய்க்கறவன் பயபட்றான்.

ஆ.மே: அடியாத்தி, உன் மாமியார சமாளிக்க என்னால முடியாதும்மா. அவ ஊரயே அடிச்சு ஒலைல போட்டு. ஒத்த ஆளாவே மொத்ததியும் திங்கிற ஆளு நான் மாட்டேன்.

திவ்யா: அண்ணே, கொஞ்சம் உதவி செய்ண்ணே. என்ன உயிரோட எரிக்க பாக்குறா. நான் சொல்றபடி செஞ்சா யாருக்கும் பிரச்சினை இல்லண்ணே….

ஆ.மே: சரி சொல்லு நான் என்ன செய்யனும். ஆனா எனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது

திவ்யா: எனக்கு பதிலா உன் பட்டில இருக்கிற நொண்டி, நோஞ்சான் ஆடு எதனா மூட்டைல கட்டிறுண்ணே. பதிலா இந்த மோதிரம் வச்சிக்கண்ணே…

ஆ.மே: சரி சரி உன் மோதிரமெல்லாம் வேணாம். உசுரு பிரச்சினை அதுக்கா செய்றேன். யார் கண்லயும் படாம நீ போய்று.

அப்டி னு சொல்லி ஒரு ஆட்ட முட்டைல கட்டி வெச்சிட்டான்.

வடிவு குஷியா வந்து எண்ணெய் ஊத்தி எரிக்கறா. எரியும்போது படீர் டிபீர் னு வெடிக்கிது. வடிவு அப்போ ரொம்ப சந்தோஷமா

கத்திரிக்கா தின்ன வயிறு வெடிக்க வெடிக்க……

கத்திரிக்கா தின்ன வயிறு வெடிக்க வெடிக்க ன்னு

கரிச்சி கொட்டிட்டு போறா….

ஸ்டாஆஆஆப்✋?✋?

நல்ல ஃப்ளோ ல போற கதய டிஸ்டப் பண்ணின காண்டுல நான் என்ன டா? னு கேட்டேன்….

எரிக்கும்போது ஆடு மே… மே…னு கத்துமே. அப்போ தெரிஞ்சிராது அப்டினு என் நாத்தனார் பையன் கேட்டான்.

கரெக்ட் அதே பாண்டா குட்டி தான். குட்டி சாத்தான் எப்டி கோத்து விடுது பாருங்க…….

டேய் ஆட்டுக்கு இங்கிலீஷ் தெரியாது. அதனால மேவும் சொல்லாது, ஜூனும் சொல்லாது. எல்லாரும் வாயமூடிட்டு கத கேக்கறாங்கல உனக்கு மட்டும் என்னடா வெசம், வெசம், வெசம்
கம்னு கேள்டா….

நௌ பாக் டு ஸ்டோரி….

மூட்டை ல இருந்து தப்பிச்ச திவ்யா எங்க போறதுன்னு தெரியாம நடந்துக்கிட்டே இருந்தாலாம். நைட்டு ஆய்டுச்சு. காலும் வலிக்கிது. என்ன பண்ணலாம் னு பாக்கும்போது ஒரு பாழடஞ்ச மண்டபம் தெரிஞ்சிதாம். அங்க தங்கிட்டு காலைல பாக்கலாம் னு போனா…

அந்த பாழடஞ்ச மண்டபத்துல கண்ணம் வைக்கும் களவாணிகள் அவங்க திருடி கொண்டு வந்த பொருட்கல பங்கு போட்டுண்டு இருந்தாங்களாம். திவ்யா கிட்ட போக போக அவ கொலுசு சத்தம் கேட்டு திருடங்க மோகினி பேய்னு நெனச்சு அப்டியே போட்டுட்டு ஓடிட்டாங்க. திவ்யா மண்டபத்துக்கு போய் படுத்து தூங்கிட்டா. காலைல எழுந்து பாக்கும்போது பக்கத்துல நெறய நகைகள், ரத்தினம், வைரம், பொற்காசு எல்லாம் இருந்துச்சாம்…

(மண்ணெண்ணெய் கிடைக்ற காலத்துல பொற்காசு ஏதுனு யாராச்சும் கேப்பீங்கனு பாத்தேன். என்னப்பா அவ்ளொ ஆழமாவா கதைக்குள்ள போய்ட்டீங்க. மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி)

திவ்யாக்கு அத பாத்ததும் பயம், ஆச்சரியம், கொழப்பம் எல்லாம் வந்துபோய் கடைசி ஒரு திட்டம் தோனுச்சாம்.

எல்லாத்தயும் எடுத்துகிட்டு புருசன் வீட்டுக்கு போனாலாம். வடிவுக்கு பக்குனு ஆய்டுச்சு.

பேய்னு நெனச்சு கத்ததொடங்கிட்டா… திவ்யா சமாதானம் பண்ணிட்டு நடநததெல்லாம் சொல்றா….

வடிவு: ஹேய், நீ எப்டி உயிரோட, ஏது இந்த நகை பணமெல்லாம்..

திவ்யா: அத்த, நீங்க என்ன எரிச்சதும் 2 பேர் வந்து என்ன கூடிட்டு போய் ஒரு எடத்துல விட்டாங்க. அங்க நான் உங்க மாமனார், என் மாமனார், எல்லாரயும் பார்த்தேன். உங்க மாமனார் உங்கள பத்தி ரொம்ப பெருமயா சொன்னார்.

வடிவு மை.வா: கிழவன் என்ன பத்தி நல்லதா சொன்னானா?? வாய்பில்லயே!!!!!!

திவ்யா: உங்கள நல்லா பாத்துகிட்ட என்ன ரொம்ப புடிச்சு போனதாவும், அதுக்கு சன்மானமா இந்த நகை பணம் எல்லாம் தந்து, தங்க பல்லாக்குல கொண்டு விட சொன்னாங்க அத்த.

வடிவு: தங்க பல்லாக்குலயா???? எனக்கு ஒரு குரல் குடுத்திருந்தா நானும் பாத்திருப்பேன்ல

திவ்யா: அவசரபடாதிங்க அத்த, நான் பாதி தானே சொன்னேன். மீதிய கேளுங்க..

வடிவு: ம்ம், சொல்லு சொல்லு.

திவ்யா: உங்க வீட்டுகாரரு ரொம்ப வருத்தப்பட்டாரு. தான் நட்ட கத்திரிக்காசெடில வெலஞ்ச காய சாப்டவே இல்லனும், உங்கள நல்லா பாத்துக்கல, நெரய நகநட்டு செஞ்சு போடலன்னும்.

அதனால என்ன மாமா குடுங்க நானே கொண்டு போய் குடுக்கறேன்னு சொன்னேன்.

மாமா, அதெல்லாம், முடியாது நானே என் கையால என் வடிவுக்கு போட்டு அழகு பாக்கனும். எப்போ என்ன விடுவாங்களோ தெரிலயேன்னு கலங்கினாருத்த.

வடிவு: அய்யயோ…. அப்போ அவர் வர்ர வர நான் காத்திருக்கனுமா?

திவ்யா: இல்ல அத்த, நீங்க அங்க வந்தாகூட பரவால்லனு சொன்னாரு. நகை, பணமெல்லாம் தந்து அதே தங்க பல்லாக்குல கொண்டு வந்து விட்ருவாங்கலாம்.

நீங்க வரும்போது மரக்காம அந்த கத்திரிக்காவ செஞ்சு கொண்டுவர சொன்னாருத்த

அப்டினு சொல்றா… கெழவி உசாராய்ட்டுது. ஆகா, இவ நம்ம ப்ளான நமக்கே எக்ஸிக்யுட் பண்ண பாக்கறாடா னு. அதனால வேண்டாம் னு சொல்றாரா. ஆனா அந்த லூசு பால்டப்பா சொன்னதெல்லாம் உண்மைனு நம்பி திவ்யாவ கத்திரிக்கா செய்ய சொல்லி வடிவு கைல குடுத்து முட்டைல கட்ட போனானாம்.

வடிவோட நெலம திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி ஆய்டுச்சு…..உண்மைய சொல்ல முடியாம என்னடா பண்ணலாம்னு யோசிக்கறதுகுள்ள பால்டப்பா கட்டிவெச்சு எரிச்சிட்டானாம்…..

அதேபோல படீர் டிபீர் சத்தம்,

திவ்யா வடிவு சொன்னது போலவே சொன்னாலாம்

கத்திரிக்கா தின்ன வயிறு வெடிக்க வெடிக்க……

கத்திரிக்கா தின்ன வயிறு வெடிக்க வெடிக்க……

நீ என்ன சொல்றனு கேட்ட புருசன் கிட்ட இந்த மந்திரம் சொன்னாதான் உங்க அம்மா சீக்கிரம் உங்கப்பா ட போய் சேருவாங்க னு சொன்னாலாம்…

எங்க எல்லாரும் சொல்லுங்க…..

கத்திரிக்கா தின்ன வயிறு…….!!!!!!!!!

சொல்லி சொல்லி சிரிச்சிகிட்டே பசங்க தூங்கிட்டாங்க…….

பின் குறிப்பு: நான் என் பாட்டி கூட இருந்த அந்த நாட்கள நெனச்சு பாத்துகிட்டே ஏதேச்சயா திரும்பினா????

என் மாமியார்!!!!!!

பேயரஞ்ச மாதிரி என்னயவே பாத்துட்டு உகாந்திருக்காங்க….. அவங்க கண்ணுல அம்பூஊஊஊஊட்டு பீதி….

என் மை.வா: ஆஹா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே……

????????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here