கவலை இல்லா மனிதன்

0
36

தினமும் ஒரு குட்டி கதை

‘கவலை இல்லாத மனிதன்”..
…………………………………….

உலகத்தை அறிந்தவன், உணர்ந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்” என்றான் ஒரு கவிஞன்.

போவதைக் கண்டு கலங்காமல், வருவதைக் கண்டு மயங்காமல், மெய் தளராமல், உண்மையும் பொய்யும் உணர்ந்தவன் அவனே, கவலை இல்லாத மனிதன்.

வாழ்க்கை என்பது நாடகமே, வந்து போனவர் ஆயிரமே, கொண்டு வந்தவர் யாருமில்லை, கொண்டு சென்றதும் ஏதுமில்லை இல்லை”..

துறவரம் துறந்த முனிவர் ஒருவர்”, ஒருநாள் ஆற்றங்கரையோரமாக உள்ள மரத்தடியில் தன் கையையே தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருத்தி, தன் தோழியிடம், ”துறவரம் துறந்த இந்த முனிவர் இவருக்கு உயரமாக வைத்துக் கொண்டு தூங்கும் சுகம் கேட்கிறது”. இவர் எல்லாம் என்ன சந்நியாசி? என்று கிண்டலாக சொன்னாள்…

தூங்க முயற்சித்த முனிவருக்கு தூக்கி வாரிப் போட்டது. தான் எளிமையாக இருக்க வில்லையோ, என்னும் சில சவுகரியங்களை என் உடலும்,மனமும் கேட்கிறதோ?..இந்தப்பெண் சரியாகத்தான் சொல்கிறாளோ?

நான் என்ன செய்வது? என்று கவலைக் கொண்டார்…
ஆழ்ந்து சிந்தித்து அருமையானஒரு முடிவெடுத்தார்.

“இனி எதையும் தலைக்கு வைத்து படுப்பதில்லை என்று…பொழுது சாய்ந்தது. தவம் செய்தார். பயிற்சிகள் செய்தார். அமைதியான மனதுடன் ஆராய்ந்து தூங்கினார். தலையை தரையில் வைத்தபடி…

அடுத்த நாள்!அந்த இரண்டு பெண்களும் அவ்வழியே வந்தார்கள். முனிவரை பார்த்தார்கள்.

முதலாமவள் சொன்னாள் ,

”பார்த்தாயா நேற்று நீ அவரை கிண்டல் செய்தாய், இப்போது அவர் தலைக்கு எதையும் வைக்கவில்லை. அநேகமாக உன் மீது கடுங்கோபத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.

சத்தியமாக உனக்கு இப்போது சாபம் நிச்சயம் என்று பயம் காட்டினாள். அதற்கு மற்றவள் ,அடி போடி நான் ஏதோ விளையாட்டாக சொன்னேன்.

அடுத்தவன் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்கும் இவர் என்ன பெரிய ஞானி – என்று சொற்களால் சுட்டாள்.

இப்போது அந்த ஞானிக்கு உண்மையாகவே கவலை வந்து விட்டது. தான் உண்மையிலேயே முற்றும் துறந்த ஞானியா? இல்லையா? என்று..

ஆம்.,நண்பர்களே..,

மற்றவர் சொல்வதைக் கேட்டாலும், விமர்சனம் வரும். கவலை வரும். சுயமான முடிவு எடுத்தாலும் விமர்சனம் வரும். கவலை வரும்..

உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதன்படி நடங்கள். உங்கள் வாழ்வுக்கும், மன அமைதிக்கும், சமூக நன்மைக்கும் எது தீங்கு விளைவிக்காமல் இருக்குமோ, அதன்படி வாழ்ந்தால்,உங்களுக்கு கவலை வராது.

ஆம்..,கவலைப் படுவதால் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்°…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here