காத(லா)ல் பைத்தியம்

0
177

ஐப்பசி மாத காலை மழையோடு காற்றும் சில்லேன அவன் மீது மோத சுகமாய் கண் விழித்தான் அகிலன்..

“அம்மா, காபி தா டைம் ஆச்சு ஆபிஸ் கிளம்பனும்” என்று குரல் கொடுத்தவாறே சமையல் அறை பக்கம் வந்தான்..

வனஜா அவன் தாய் கோபம் என்றால் என்னவென்று தெரியாது.. அவன் தந்தை இறந்த பிறகு ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்து அவனை படிக்க வைத்தார் இன்று அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக சில வருடங்களில் ஒய்வு பெற இருக்கிறார்..

அகிலன், பிரபல ஐடி கம்பெனியில் ஹெச். ஆர், ஐந்தரை அடி ஆண் மகன் அழகன் என்று சொல்லி விட முடியாது ஆனால் அவன் கண்ணசைவிற்கு ஏங்கும் பெண்கள் அதிகம்.. ஆனால் அவன் யார் மீதும் ஈர்ப்பும் வராமல் கடிவாளம் கட்டிய குதிரை போல் தன் வேலை உண்டு அவன் உண்டு என்று இருப்பான்.. அவனுக்கும் கோபம் என்பது அவ்வளவு எளிதில் வராது.. அப்படியே கோபம் வந்தாலும் அதனை கட்டுப்படுத்தி கொண்டு பேசுவானே தவிர அடுத்தவர் மனதை புண்படுத்தியது இல்லை.. எல்லாம் அவள் ஒருத்தி வரும் வரை தான்.

ரஞ்சனா, 5 அடி அழகி அகிலன் வேலை செய்யும் கம்பெனியின் சி. ஈ. ஓ, வேலையில் கண்டிப்பு, பதவிக்கே உண்டான கர்வம், அவளை ரசிக்கும் ஆண்களை கண்டாலே அவளுக்கு அவ்வளவு கோபம் வரும், வழிந்து கொண்டு பேசும் ஆண்களை அடித்தும் இருக்கிறாள்.. ஆனால் அவளே ஒருத்தன் பின் அவன் காதலை பெற ஒட போகிறாள் என்று தெரிந்து இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்காது..

இவர்களை பற்றிய விவரம் போதும் என்று நினைக்கிறேன்.. இனி கதைக்குள் பயணமாவோம்.

வனஜா, “ஏன்டா ஒவ்வொரு நாளும் லேட்டா எழுந்து வந்துட்டு அரக்க பரக்க ஒடுறீயே இதுக்கு கொஞ்சம் முன்னாடி எழுந்து பொறுமையா கிளம்பலாம் இல்ல?.”

அகிலன், “அம்மா நைட் லேட்டா தானே தூங்கிறேன் அப்பறம் காலையில லேட்டா எழுந்துக்காம என்ன பண்றதாம்?”.

வனஜா, “நைட் முழுக்க ஆந்தை மாதிரி அந்த போனையே பார்த்துக்கிட்டு இருக்கறது, என்னவோ வெட்டி முறிக்கிறா மாதிரி தான்.. பேஸ்புக் வாட்ஸ் ஆப்னு யார் கூடயாவது பேசிக்கிட்டு இருக்கறது இதுக்கு இவ்வளவு பில்டப்.. நாளையலிருந்து சீக்கிரம் எழுந்துக்கல நான் பாட்டுக்கு உன்னை எழுப்பாமல் வேலைக்கு போய்டுவேன் அப்பறம் நீ தான் மாட்டிக்கிட்டு முழிக்கனும்.

அவர் அவ்வாறு சொன்னதும் “அய்யய்யோ அப்படியெல்லாம் பண்ணி வைக்காதீங்க ஏற்கனவே அந்த லூசு கிட்ட மாட்டிகிட்டு முழிச்சிகிட்டு இருக்கேன் இதுல லேட்டா போனா அவ்வளவுதான் இதையே காரணமாக வைத்து ஒரு நாள் புல்லா பேசியே சாகடிப்பா”

வனஜா,”ஏண்டா அந்த பொண்ணுதான் உன்னை விரும்புகிறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கால்ல அந்தப் பொண்ண பார்த்தா நல்ல பொண்ணு மாதிரிதான் பெரியது ஒய் டோண்ட் யூ?”.

அகிலன்,”அம்மா ப்ளீஸ் ஸ்டாப் இட் எனக்கு அவ மேல எந்த இன்ட்ரஸ்டும் இல்ல திமிர் பிடிச்சவ, இப்பவே இப்படி என்றால் இவள நானு லவ் பண்றேன்னு வச்சிக்கோ என்னுடைய தலை மேல ஏறி டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவா.. சோ இனி இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க நானே இங்கிருந்து எப்ப ரீலிவ் ஆயிட்டு உங்களையும் கூட்டிகிட்டு யூ.எஸ் போகலாம்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. “.

வனஜா,” எண்ணமோ போடா நீ இதே மாதிரி பேசிக்கிட்டே இருந்தா கடைசி வரைக்கும் நான் பேர பசங்கள பார்க்கவே மாட்டேன் போல இருக்கு”.

அகிலன்,” மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டியா அம்மா? எனக்கான பொண்ணு பிறந்து இருப்பா அவள நீயே கண்டுபிடிச்ச எனக்கு கல்யாணம் பண்ணி வை ஏன் எதுக்குன்னு ஒரு வார்த்தைக்கூட கேட்க மாட்டேன்.. இந்தப் பொண்ணுதான் அப்படின்னு நீங்க முடிவு பண்ணுங்க நான் தாலி கட்டுறேன்” என்று அவன் சொல்லி விட்டு ஆபீஸ் கிளம்பி விட்டான்.

அவன் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் ரஞ்சனா உள்ளே வந்தால்” என்ன அத்தை இன்னிக்காவது உங்க புள்ளை என்னை பத்தி நல்லதா ஏதாவது பேசினாரா? இல்லை எப்பவும் போல லூசு, அரை மெண்டல் இப்படி ஏதாவது திட்டிக்கிட்டு போயிருக்காரா?”.

வனஜா, ” எப்பவும் போல தான் உன்னை திட்டிக்கிட்டே தான் ஆபீஸ் கிளம்பி இருக்கான்”.

ரஞ்சனா,” எப்பதான் உங்க பையன் என்ன புரிஞ்சிக்க போறார்னு தெரியல.. சரி நீங்க வாங்க அத்தை உங்களை ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆஃபிஸ் போறேன்”.

இரண்டு வருடத்திற்கு முன்பு,

ரஞ்சனா சி.ஈ.ஓ வாக பொறுப்பேற்ற சமயம் அனைவரும் இவளுக்காக காத்திருக்க அகிலன் மட்டும் வேலையில் மும்முரமாக இருந்தான். அவர் வந்த சமயம் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு மறுபடியும் வேலையில் மூழ்கினான் ஆனால் மற்ற ஆண் பணியாளர்களோ ஏதாவது ஒரு காரணத்தை தேடிக்கொண்டு இவனை அடிக்கடி சந்திக்க விரும்பினர் இது அவளுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது இது சமாளிக்க எண்ணி தன்னை கடுமையாக காட்டி கொள்ள முயன்றாள் அது அவளுக்கு கை கொடுத்தது.. அவளை சந்திக்க காரணம் தேடியவர்களெல்லாம் அதன் பிறகு எப்படி தவிர்ப்பது என்று காரணம் தேடத் தொடங்கினர்.. ஆனால் அவள் கண்களுக்கு அகிலன் மட்டும் வித்தியாசமாக தெரிந்தான்.. அவன் பேச்சு அவன் நடவடிக்கை வேலையில் சுறுசுறுப்பு பெண்களிடம் ஒதுக்கம் இது எதுவோ ஒன்று ரஞ்சனாவை ஈர்த்தது.. அவனிடம் நட்பு பாராட்ட எண்ணி பேசச் சென்றவளை தீயென முறைத்தான்..

அகிலன்,” இங்க பாருங்க நீங்க என்னுடைய ஹையர் ஆபீஸரா இருக்கலாம் அதுக்காக நான் உங்ககிட்ட வந்து வழிந்து கொண்டே இருப்பேன்னு நீங்கள் நினைக்க வேண்டாம் ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் ஆனா என்கிட்ட இந்த மாதிரி பேசிட்டு வந்து நிக்காதீங்க எனக்கு எந்த பொண்ணு கூடவும் நட்பு வச்சிக்கனும்னு அவசியம் இல்ல நீங்க போகலாம் எனக்கு வேலை இருக்கு”.

அவனுடைய பேச்சு அவளை அவன் புறம் ஈர்த்தது.. அவளிடம் நெருங்க நினைக்கும் ஆண்களே அதிகம் அப்படியிருக்க தானாக வந்து நட்பு பாராட்டும் பொழுது இவ்வாறு பேசுவான் என்று சற்றும் எதிர்பார்ப்பார்க்கவில்லை..

அதுமுதல் அவனை ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள்.. ஒவ்வொரு நாளும் அவளுக்கு அவன் புதிதாய் தெரிந்தான்..

சில நேரங்களில் அவன் செயல் அவளை மிகவும் ஈர்த்தது.. பெண்களை ஓர் அடி தள்ளி வைத்து பேசும் கண்ணியம், கண்களை தவிர வேறு எங்கும் பார்த்து பேசாத குணம் இது எல்லாம் அவன் மேல் இவளை பித்து பிடித்து அலைய காரணமாக அமைந்தது.. அவனை பார்ப்பதற்கு காரணம் தேட தொடங்கினாள்.. ஆனால் இவளின் காதல் பார்வைகள் அவனை சென்று அடையவே இல்லை என்றே சொல்லலாம்.. இவ்வாறு ஒரு வருடம் சென்றிருக்க ஒருநாள் அவனை நோக்கி கையில் பூங்கொத்து ஒன்றை எடுத்து கொண்டு அவளின் பி. ஏ கீதா செல்வதை பார்த்தாள்.. காலையில் அவளின் முகம் பிரகாசமாய் இருப்பதை கண்டு என்னவென்று விசாரிக்க அவள் தன் காதலை சொல்ல போவதாக சொன்னாள்..

‘அப்ப இவ இவனுக்கு தான் லவ்வ சொல்ல போறாளா? கெட்டது குடி.. ரஞ்சனா ஓடுடீ ஓடு உன் வாழ்க்கை இப்ப ஊசலாடிக்கிட்டு இருக்கு’

கீதா, “அகிலன் சர்”.

அகிலன், “சொல்லுங்க கீதா என்ன விசியம்?”.

கீதா, “அது வந்து.. வந்து.. நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்”.

அகிலன், “என்ன விசயம் சீக்கரம் சொல்லுங்க.. எனக்கு வேலை இருக்கு”.

அவள் பூங்கொத்தை எடுத்து அவன் முன் நீட்ட அதை வெடுக்கென பிடிங்கி” கீதா என்ன இது? ஆபிஸ் டைம்ல என்ன பேச்சு வேண்டி இருக்கு “.

கீதா, “மேடம் ஒரு நிமிடம், அகிலன் சர் ஐ லவ் யூ.. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்”.

ரஞ்சனாவிற்கு தலையில் இடி விழுந்தது போல் ஆனது.. அவன் எதுவும் பேசாமல் நிற்க இவளோ அவனின் பதில் என்னவாக இருக்கும் என்று படபடப்புடன் பார்த்து கொண்டு நின்றிருந்தாள்..

அகிலன்,” கீதா நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்.. சோ என்னால உங்க காதலை ஏற்றுக் கொள்ள முடியாது”.

கீதா, “அழுது கொண்டே, நோ நீங்க பொய் சொல்றீங்க இதுவரை நீங்க யார்கிட்டயும் நிறைய நேரம் பேசி கூட நான் பார்த்தது இல்லை.. உண்மைய சொல்லுங்க”.

அகிலன், “நோ நான் சொல்றது உண்மை தான்.. அவ இந்த ஆபிஸ் தான் “.

கீதாவுக்கு மட்டுமல்ல நம்ம ரஞ்சனாவிற்கும் பெரும் அதிர்ச்சியே.. அவன் மீதான காதல் வேரூன்ற ஆரம்பித்து இப்பொழுது விருட்சமாக நிற்கும் வேலையில் இவன் சொன்ன ஒற்றை வார்த்தை அவள் மனதில் இருந்த விருட்சத்தின் வேரை அசைத்து பார்க்க ஆரம்பித்தது..

கீதா,” யா.. யார் அது?”.

அகிலன், “நம்ம சி. ஈ. ஓ தான்”.

இதை கேட்டதும் கீதாவிற்கு அதிர்ச்சியில் மயக்கம் வர ரஞ்சனாவோ சிறகில்லாமல் பறக்க ஆரம்பித்தாள்.. ‘அப்போ நான் மட்டும் இவனை லவ் பண்ணலையா? இவனும் என்னை லவ் பண்றானா? “.

கீதாவை மருத்துவ உதவி செய்வதற்காக அழைத்து சென்ற நேரம் அவள் இவனை காதலோடு பார்க்க அது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை அவன் சொன்ன அந்த வார்த்தையால்..

அகிலன்,” சாரி ரஞ்சனா எனக்கு வேற வழி தெரியலை அதனால தான் இந்த மாதிரி பொய் சொல்ல வேண்டியதா போச்சி.. உங்களை நான் நல்ல பிரண்டா பார்த்தேன் நீங்களும் என்கிட்ட அந்த மாதிரி நல்ல விதமா பழகினீங்க அதான் உங்க அனுமதி இல்லாம உங்கள காதலிக்கறதா பொய் சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க “.

ரஞ்சனாவிற்கு ஸ்தப்தமும் அடங்கியது போன்ற உணர்வு.. சிறிது நேரம் மெளனத்தில் கரைந்தவள் பின்னர் ஒரு முடிவெடுத்தவளாக” அகிலன் நீங்க சொன்னது பொய்யாக இருக்கலாம் ஆனா நான் உங்களை லவ் பண்றது நிஜம்.. எஸ் ஐ இன் லவ் வித் யூ.. இது இப்ப வந்தது இல்லை ஒரு வருடமா உங்களை எனக்கு பிடிச்சி இருக்கு”.

அகிலன், “சாரி எனக்கு இன்டிரெஸ்ட் இல்லை.. நான் அவ கிட்ட இருந்து தப்பிக்க தான் பொய் சொன்னேன் “.

ரஞ்சனா,” ஓஓ ரியலி தப்பிக்க இந்த மாதிரி தான் சொல்லனுமா? அதுவும் ஆபீஸ்ல அவ்வளவு பொண்ணுங்க இருக்காங்க இல்லையா என்னை மட்டும் ஏன் சொன்னீங்க? அப்ப உங்களுக்கும் என்னை பிடித்து இருக்கு தானே? “.

” நான்சென்ஸ் சும்மா இந்த மாதிரி ஒளறிக்கிட்டு இருக்காதீங்க.. நான் அவகிட்ட இருந்து தப்பிக்க தான் அந்த மாதிரி சொன்னேன் “

” விளையாட்டுக்கு யார் வாழ்க்கை கூடவும் நீங்க விளையாடுவீங்களா.. நல்லா இருக்கே.. எனக்கு அதெல்லாம் தெரியாது இந்த நொடி முதல் நீங்க தான் என் வாழ்க்கை துணை.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழற வழிய பாருங்க.. வரட்டா அகில் “என்று ரஞ்சனா சொல்லிவிட்டு அவள் கேபினை அடைந்தாள்..

நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்கள் ஆக அகிலனிடம் எந்த மாற்றமும் இல்லை.. இவள் மட்டும் அவ்வப்போது அவனிடம் வலிய சென்று பேசுவாள்.. அவன் இவளிடம் தன் கடுமையான முகத்தையே காட்டுவான்..

இது சரிப்பட்டு வராது என்று முடிவுக்கு வந்தவள் தன் பெற்றோரிடம் அவள் விரும்பத்தை சொல்லி அகிலனின் வீட்டை நோக்கி புறப்பட வைத்தாள் வனஜாவின் சம்மதத்தை பெற..

வீட்டிற்கு வந்தவர்கள் எதற்காக வந்துள்ளனர் என்று புரியாமல் நின்றிருந்தார் வனஜா..

வனஜா, “என்ன விசயமா என்னை பார்க்க வந்து இருக்கீங்கனு சொன்னா நல்லா இருக்கும்”.

ராஜன், ரஞ்சனாவின் தந்தை “அம்மா நான் ரஞ்சனாவோட அப்பா இது என் மனைவி ரதி.. இப்ப நாங்க வந்த விசயம் என்னன்னா என் பொண்ணுக்கு உங்க பையன ரொம்ப பிடிச்சி இருக்காம் அதை அவர் கிட்ட சொல்லியும் பார்த்துட்டாளாம் ஆனா அவர் தான் எந்த பதிலும் சொல்லாம இவளை பார்த்தாலே திட்டி தீர்க்கறார்னு சொன்னா” என்று அவள் சொன்னதை அப்படியே ஒப்பித்தார் ராஜன்.

வனஜா,” இப்ப இதுக்கு நான் என்ன செய்ய முடியும் இது அவன் வாழ்க்கை அவன் தான் முடிவு பண்ணனும்.. அவன் ஏன் உங்க பொண்ண விரும்பமாட்டேன்றான்னு முதல்ல கண்டுபிடிங்க.. அவனுக்கு சம்மதம்ன்னா எனக்கும் சம்மதம் தான்.. அவன் சந்தோஷம் எனக்கு முக்கியம்.

ராஜன்,” சரிங்கம்மா அப்ப நாங்க வரோம்”.

வனஜா, “ஒரு நிமிடம், உங்க பொண்ணுக்கு உண்மையாவே அவன் மேல விருப்பம் இருந்தா நாளையலிருந்து அவன் ஆபிஸ் கிளம்பினதும் இங்க வந்து நான் சொல்ற சில வேலைகளை செய்யனும்.. அதுக்கு அப்புறம் நானும் உங்க பொண்ணுக்கு சப்போர்ட் பண்றேன்.”

சரி என்று தலையாட்டி விட்டு வீட்டிற்கு வந்ததும்,” ரஞ்சிமா தண்ணீர் எடுத்துக்கிட்டு வாடா “.

தன் தந்தையின் குரல் கேட்டு ஆர்வமாய் ஓடிவந்தவள் தண்ணீர் கொடுத்து விட்டு அவர் முகம் பார்க்க துவங்கினாள்..

அவரே பேச்சை ஆரம்பித்தார்,” ரஞ்சிம்மா இந்த இடம் உனக்கு வேண்டாம்.. அந்த பையனோட அம்மா ஒரு மாதிரி பேசுறாங்க.. எனக்கு என்னவோ இது சரிப்பட்டு வரும்னு தோணல.. நீ உன்னோட மனச மாத்திக்கறது தான் நல்லது”.

ரஞ்சனா, “அப்பா என்ன ஆச்சு ஏன் இப்படி பேசிட்டு இருக்கீங்க? அங்கு என்ன நடந்தது? நீயாவது சொல்லும்மா. “

அதன் பின்னர் ராஜன் அங்கு நடந்த அனைத்து விசயங்களையும் ஒன்று விடாமல் சொன்னார்.. அனைத்தையும் கேட்டவள்,” அப்பா நான் பார்த்த வரைக்கும் பேசின வரைக்கும் என்னோட மேம் அப்படி இல்லை.. அவங்க ஏதோ ஒரு காரணமா தான் இந்த மாதிரி பேசி இருக்காங்க.. நாளைக்கு தெரியும். “.

ரதி, “என்னடி சொல்லற? மேம்ன்னா அவங்க உன்னோட டீச்சரா?”.

ரஞ்சனா, “ஆமாம் நான் படிச்ச ஸ்கூல் தான் இப்பவும் வேலை பார்க்கறாங்க.. எனக்கும் வந்து இருக்காங்க.. அவங்களுக்கு கோபமே வராது.. சோ நீங்க கவலைப்படாம இருங்க.. கண்டிப்பா அங்க தப்பா ஏதும் நடக்காது.. தைரியமாக இருங்க”.

மறுநாள் காலை அவன் ஆபிஸ் சென்றதும் இவள் அவன் வீட்டு வாசலில் நின்றாள்.

இவளை பார்த்ததும்,” ஹே ரஞ்சு வா வா இப்ப தான் உனக்கு என் நியாபகம் வந்ததா? உள்ளே வா”.

ரஞ்சனா,” மேம் இப்ப நான் உங்க மாணவியாக வரல.. உங்க பையன லவ் பண்ற பொண்ணா உங்க வீட்டுக்கு மருமகளாக வர உங்க ஆதரவு தேடி வந்து இருக்கேன்”.

அதை கேட்டதும் முகத்தில் கடுமையை பூசி கொண்டவர் “உள்ளே வா, நான் சிலவற்றை சொல்லுவேன் நீ ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டால் செய்யனும்.. புரியுதா?. “

ரஞ்சனா,” புரியுது.. இப்ப நான் என்ன பண்ணணும் “.

வனஜா,” முதல்ல உன்னோட ஆபீஸ்க்கு போன் பண்ணி இன்னைக்கு நீ வரமாட்டேன்னு சொல்லு”.

அவளும் ஏன் எதற்கு என்று கேளாமல் சரி என்று ஒத்துக்கொண்டாள்.

வனஜா,” உள்ளே புடவை வச்சி இருக்கேன் அதை மாத்திக்கிட்டு வா.. புடவை கட்ட தெரியும்ல?.”

ரஞ்சனா,”தெரியும்.”

வனஜா,”அப்ப போய் சீக்கிரமா கட்டிட்டு வா”.

அவள் புடவை கட்டி வர அவளையே ஆர்வமாகப் பார்த்தார் வனஜா..

ரஞ்சனா,” அடுத்து என்ன பண்ணனும்?”.

வனஜா,” சமையல் ரூமுக்கு போ அங்க சில அயிட்டங்களை வெச்சிருக்கேன் அதை வச்சு அங்க இருக்கிற லிஸ்ட் படி சமையல் செய்யனும்.. இன்னைக்கு மதியம் அகிலன் சாப்பிட வருவான்..”

அகிலன் என்ற பெயரைக் கேட்டதும் பட்டாம்பூச்சியாய் துள்ளிக் கொண்டு செல்வனை மெய்மறந்து பார்த்துக் கொண்டிரு ந்தார்..

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் சொன்ன அனைத்தையும் செய்து டைனிங் டேபிளில் அடுக்கினாள்.. அவள் எடுத்து வைத்து செல்லவும் அகிலன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது..

அகிலன்,” அம்மா கதவை திறங்க நான் வந்துட்டேன்”.

வனஜா,” இதோ வரேன்”.

அகிலன்,” வாவ் அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெசல் வாசனையே ஆள தூக்குதே என்ன விசேஷம் என்னிக்கும் இல்லாம இன்னிக்கு வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கீங்க”.

வனஜா,” ஒன்னும் இல்லடா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு தெரிஞ்சவங்க வரர்தா இருந்தது நான் எதிர்பாராத விதமாக அவங்களால வர முடியல சரி வா நீ சாப்பிடு”.

அகிலன்,” யார் அந்த கெஸ்ட் எனக்கு தெரியாம அதுவும் இவ்வளவு சமையல் பண்ற அளவுக்கு?”.

வனஜா,” நம்ம தூரத்து சொந்தம் நீ இப்படியே பேசிட்டு இருக்க போறியா இல்ல சாப்பிட போறியா?”.

அகிலன்,” நோ அம்மா வாசனை வந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது தயவுசெஞ்சு ஏதாவது கண்ணால காட்டு”.

அவரும் சிரித்தபடியே அனைத்தையும் பரிமாற அதை‌ ரசித்தபடியே அவன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு உள்ளே நின்றிருந்தாள் ரஞ்சனா..

அகிலன்,” இன்னைக்கு என்னம்மா நீ சமையல் பண்ண மாதிரியே இல்ல வேற யாரோ பண்ண மாதிரி இருக்கு”.

வனஜா,” அதெல்லாம் ஒன்னும் இல்ல சாப்பாடு எப்படி இருக்கு? அதை சொல்லு முதல்ல”.

அகிலன்,” சீரியஸ்லி வெரி டேஸ்டி மா”.

வனஜா அவன் அறியாதவாறு சமையலறையில் இருக்கும் ரஞ்சனாவிடம் செய்கை காட்டினார்.. அவளும் வெட்கத்தை பூசிக்கொண்டு நின்றிருந்தாள்..

அவன் சென்ற பிறகு அவளை வெளியே அழைத்தவர்” இப்ப சொல்லு ரஞ்சனா நான் எதுக்காக இந்த மாதிரி பண்ணனு உனக்கு புரியுதா?’.

ரஞ்சனா,” நல்லா புரியுது இப்ப நீங்க என்ன செய்ய சொன்னது எல்லாம் அவருக்கு ரொம்ப பிடித்தமான விஷயம் அப்படித்தானே?”.

வனஜா,” அதேதான் அவனுக்கு பொண்ணுங்க புடவை கட்டினா பிடிக்கும் அதுவும் அவனுக்கு வரப்போறேன் பொண்டாட்டி மாடர்ன் டிரஸ் விட புடவை கட்டினா நல்லா இருக்கும்ன்னு எப்பவும் சொல்லுவான்.. அப்புறம் நீ பண்ண இந்த சமையல் இது எல்லாமே அவனுக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம்.. இதுல நான் தெரிஞ்சுகிட்டது என்னன்னா நீ புத்திசாலி மட்டுமில்லை கெட்டிக்காரியும் கூட.. என் பையனுக்கு ஏத்த பொண்ணு நீ தான்..”.

ரஞ்சனா,” ரொம்ப தேங்க்ஸ் மேடம்”.

வனஜா,” இது என்ன மேடம் என்ன அசிங்கமா ஒழுங்கா அத்தைன்னு சொல்லு” என்று சிரித்தார்.

அதன்பின்பு அவள் அலுவலகம் சென்றதும் இவள் வந்து அவனுக்கு பிடித்தது பிடிக்காதது என்று அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டாள்.. இது இவர்களிடையே நல்ல உறவை உருவாக்கியது.. அவள் இல்லாத சமயம் பெண்பார்க்கும் பேச்சை எடுக்க எப்பொழுதும் போல நழுவிச் சென்று விடுவான்..

அன்று ஆபீஸில் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. ரஞ்சனா அகிலனுக்காக பார்த்து பார்த்து தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்திருந்தாள்.. எப்பொழுதும் இல்லாமல் அன்று அவன் தாமதமாக வரவும் இவளுக்கு நிலை கொள்ளவில்லை நேராக அவன் இருக்குமிடம் சென்று நின்றாள்..அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்.. பொறுமை இழந்தவளாய்” அகில்” என்றாள்.

இவரள்தான் அழைக்கிறாள் என்று தெரிந்தும் தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்.. இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்று அவனிடம் அவள் காதலை சொன்னாலோ அதுமுதல் அவள் இவனை அழைக்கும் விதம் இதுதான்..

அவன் திரும்பிப் பார்க்கவில்லை என்று மறுபடியும் “அகில் ப்ளீஸ் நான் எப்படி இருக்கேன்னு கொஞ்சம் பார்த்து சொல்லு”.

“என்ன எப்பவும் போல தான் இருப்ப என்று எரிச்சலுடன் நிமிர்ந்தவன் அவளிருந்த நிலைகண்டு ஸ்தம்பித்துப் போனான்‌”.

” மயில் நிற பட்டு புடவை அணிந்து கொண்டு கண்களில் அஞ்சனம் திட்டிக்கொண்டு நெற்றியில் நட்சத்திரமாய் சிறிய கல் போட்டு அதற்குமேல் ஒளிக்கற்றையாய் சந்தனம் கழுத்தில் சிறிய நெக்லஸ் என்று அவளை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்”.

அவன் ரசிப்பதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் சுதாரித்துக்கொண்டு” அகில் நான் எப்படி இருக்கேன்னு கேட்டேன் இதுவரைக்கும் நீங்க அதுக்கு பதில் சொல்லவே இல்ல”.

அவனையும் அறியாமல் “சனா நீ ரொம்ப அழகா இருக்க இவ்வளவு நாளா இருந்ததைவிட”.

அவனை சனா என்ற அழைப்பு உள்ளுக்குள் ஏதோ செய்ய அவனை கட்டிக்கொண்டு “ஐ லவ் யூ அகில்” என்று தன்னிலை மறந்து சொல்லிக்கொண்டிருந்தாள்..

சில காலமாய் அவனுக்கும் அவளை பிடித்து தான் இருந்தது ஆனால் அவளின் பதவி இவனை அவளிடம் நெருங்க விடாமல் செய்து கொண்டிருந்தது அவளுக்கு புரிய வைக்கவும் அவனுக்கு விருப்பமில்லை தாய் சொல்லும் பெண்ணை திருமணம் செய்யவும் மனது ஒப்பவில்லை இருதலைக்கொள்ளி எரும்பாய் தவித்துக் கொண்டிருந்தான்..

முதலில் சுதாரித்துக்கொண்டு அவளை விலக்கி வைத்துவிட்டு இதெல்லாம் தப்பு உன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்காத இது நம்ம ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் நல்லது என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்..

அவன் சொன்னதின் அர்த்தம் புரிய அவனை பின் தொடர்ந்தாள் ரஞ்சனா..

தன் மனதை நிலையாக்க அலுவலகம் எதிரில் இருந்த காபி ஷாப்புக்கு சென்றிருந்தான்.. இவனையே பின்தொடர்ந்து வந்தவள் வரும் வண்டிகளை கவனிக்காமல் நடந்து கொண்டிருந்தால் அதில் ஒரு கார் இடித்து தலையில் அடிபட அகில் என்ற அழைப்போடு மயங்கி சரிந்தாள்..

சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்தவன் அவள் நிலை கண்டு துடிதுடித்துப் போனான்..” சனா என்ன பாரு என்ன விட்டு போகாதே நீதான் எனக்கு முக்கியம் என்ன பாரு என்கிட்ட பேசு ஏன்டா இப்படி பண்ண நீ ஏதாவது கேளு என்று புலம்பி கொண்டிருந்த வேளையில் ஆம்புலன்ஸ் வரவும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்..

மருத்துவமனையில் வாடிய மலராய் ஐசியூவில் இருந்தவளை காண சகியாமல் திரும்பி நின்றிருந்தான் அவனால் தான் இவ்வாறு நடந்தது என்று தன்னைத்தானே குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தான் அந்த நேரம் அங்கு வந்த ராஜன் ரதி மற்றும் வனஜா இவன் இருப்பதைக்கண்டு ரஞ்சனாவின் நிலையை விசாரிக்க அவன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அவசர சிகிச்சைப் பிரிவை கைகாட்டிவிட்டு சிறுகுழந்தையாய் அழுதுகொண்டிருந்தான்..

தன் மகளை காணச்சென்ற ராஜன் அவள் நிலை கண்டு ஆத்திரம் கொண்டார் நேராக அகிலனிடம் சென்று சட்டையை பற்றியவர் ” அவ என்ன பாவம் பண்ணா உன்னை காதலிச்சது தவிர? என் பொண்ண இந்த மாதிரி ஒரு நிலைக்கு தள்ளி வைத்திருக்கியே?அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் இந்த இடத்திலேயே உன்னை வெட்டிப் போட்டுட்டு தான் மறுவேலை”.

அகிலன்,” ஐயோ அவளுக்கு எதுவும் ஆகாது நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா நிறைய காலம் வாழ்வோம் அதையும் நீங்க பாக்க தானே போறீங்க”.

சில மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர்” உங்க பொண்ணுக்கு தலையில் பலமாக அடிபட்டு இருக்கு ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆபத்து நிலையை கடந்து வந்து விட்டார்கள்.. ஸ்கேன் பண்ணி இருக்கோம் அதோட ரிசல்ட் வந்த அப்புறம் தான் உடல்நிலை எப்படி இருக்கு என்று எங்களால் தெளிவாக சொல்ல முடியும்.. கொஞ்ச நேரம் கழிச்சு நீங்க போய் உங்களை தொந்தரவு பண்ணாமல் பார்த்துட்டு வரலாம்”.

மறுநாள் ஸ்கேன் ரிப்போர்ட் வரவும் அனைவரும் கலக்கமாய் மருத்துவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்” இங்க பாருங்க உங்க பொண்ணுக்கு தலையில் பலமாக அடிபட்டு இருக்கு அவங்களோட நிலைமை இப்போ எப்படி இருக்கு என்று கண் முழிச்சி அதுக்கு அப்புறம் தான் தெரியும் நல்லா இருந்தா கடவுள் புண்ணியம் இந்த ரிப்போர்ட் பொருத்தவரைக்கும் அவங்களுக்கு தலையில சின்னதா பிளட் கிளாட் இருக்கு.. அது கூடிய சீக்கிரம் சரியாயிடும் கவலப்படாம இருங்க..

அவள் கண் விழித்ததும் அவள் செயல்பாடுகள் சிறு குழந்தையை ஒத்திருக்கவும் என்னவென்று விசாரிக்க சென்றவர்களை சரமாரியாக அடிக்க தொடங்கினாள்” யாரும் என்கிட்ட வராதீங்க இன்று அந்த இடமே அதிரும்படி கத்தத் தொடங்கினாள்.. அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் பார்க்க அந்த நேரம் வந்த மருத்துவர் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகும் சரியாக மருத்துவம் எடுத்துக் கொண்டால் சில காலங்களில் பழையபடி மாறி விடுவார்கள் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்..

அதைக்கேட்ட அனைவரும் கலங்க ஆரம்பித்தனர்.. அகிலன் தான் அவளை பார்த்துக் கொள்வதாகவும் தன்னை நம்பும் மாறும் கேட்டுக்கொண்டான்.. அவனை நம்பாத பார்வை பார்த்த ராஜன் “உன்ன நம்பி இன்னொரு தடவை எனக்கு உன்ன விட மாட்டேன்”.

அகிலன்,” சரி இந்த ஒரு தடவை என்ன நம்புங்க அவள மனசார என் மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன் இவளோட பதவிதான் இத்தன நாளா என்னோட காதல இவகிட்ட மறுப்பதற்கான காரணம்.. அதனால என்ன நம்புங்க உங்க பொண்ணு மறுபடியும் பழைய மாதிரி கொண்டுவந்து உங்கள் எல்லார் ஆசிர்வாதத்துடன் கல்யாணம் பண்ணி சந்தோஷமாக வாழ்வோம் அதையும் நீங்க பார்க்கத்தான் போறீங்க”.

அரைமனதாக ஒத்துக் கொண்டவர் அதன் பிறகு டிஸ்சார்ஜ் ஆனதும் தன் மகளை அகிலன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் கூடவே தன் மனைவியும் அனுப்பி வைத்தார்..

ஓரு வருடம் அவளை சிறு குழந்தையாக பாவித்து கொண்டிருந்தான் அவளும் இவனை தவிர வேறு யாரையும் நெருங்க விடவில்லை.. ஏனோ அவளுக்கு அவனைத் தவிர வேறு யாரையும் பார்க்கக்கூட பிடிப்பதில்லை அவன் பேசுவதை ஆர்வமாக கவனிப்பாள் அவன் கொடுக்கும் உணவை மட்டும் எடுத்துக்கொள்வாள்.. இது எவ்வாறு சாத்தியம் என்று அகிலன் மருத்துவரிடம் கேட்டதற்கு” அவர் உங்களை அந்த அளவிற்கு நேசித்த இருக்கிறார்.. இந்த காதல் பைத்தியக்கார தனமானது.. சிலகாலம் ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த காதல் அவரை எந்த நிலைக்கு வேணுமானாலும் எடுத்துச்சென்ற இருக்கும்”.

நாட்கள் செல்லச் செல்ல மருந்தின் உதவியாலும் அகிலனின் கவனிக்கவும் அவளுக்கு ஒரு நாள் பழைய ஞாபகங்கள் வரவும் தான் இருக்கும் இடம் அவன் ரசனையை ஒத்திருக்கவும் அதே நேரம் தன் வீடு இல்லை என்ற எண்ணம் தலை தூக்கி நின்றது.. என்ன நடக்கிறது என்று புரியாமல் மயங்கி சரிந்தாள் அந்த பேதை..

சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் இவள் இருக்கும் நிலை கண்டு வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. அவளை சோதித்த மருத்துவர் சிலகாலமாக அவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது எனக்கு தெரிந்தவரையில் இவருக்கு பழைய ஞாபகங்கள் வந்து இருக்கலாம் இவர் முழுதாக குணமடைந்து இருக்கலாம்.. தனக்கு என்னவாயிற்று என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதும் இவ்வாறு மயங்கிச் எழுவது சகஜம்தான் பொறுத்திருந்து பார்ப்போம் கவலை வேண்டாம்”.

அரை நாள் கழிந்தது ரஞ்சனா கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்தாள் அருகில் இருந்த அன்னை தந்தையை பார்த்து அம்மா அப்பா எனக்கு என்ன ஆச்சு?என்றதும் அவர்கள் இருவருக்கும் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது.. தன் மகன் பழையபடி குணமடைந்து விட்டாள் என்பதாலே அது..

மறுபுறம் திரும்பியதும் அகிலன் அங்கு நின்றிருப்பதைக் கண்டதும் அகில் நீங்க எப்படி இங்க? என்றதும் அவன் அவளை வாரி அணைத்து இருந்தான்..

அகிலன்,” சனா .. என்னோட சனா எனக்கு திரும்ப கிடைச்சுட்டா இனி மேலும் நான் காலம் தாழ்த்த மாட்டேன் இப்ப சொல்லு நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?”.

அவளும் சம்மதம் என்று தலையாட்ட ஒரு நல்ல நாளில் அகிலன் ரஞ்சனா திருமணம் இனிதே நடைபெற்றது.‌.

உண்மையான நேசத்திற்கு ஈடு இணை இல்லை.. தன்னிலை மறந்த தருவாயிலும் கூட அழியாதது..நேசித்த மனது எந்த சூழ்நிலையிலும் மாறாது இதற்கு எடுத்துக்காட்டு ரஞ்சனா..

முற்றும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here