காதலில் உள்ளங்கள் பந்தாடுதே 1

0
419

காதல்.1☺️☺️
அதிகாலைவேளை மணி ஐந்தை நெருங்கி கொண்டிருக்க பறவைகளின் ஒலி ரீங்காரமிட கருப்பு உருவம் ஒன்று பதுங்கி பதுங்கி காம்பவுண்ட் கேட்டை சத்தமில்லாமல் திறந்து வண்டியை நிறுத்தி விட்டுவிட்டு சுற்றிலும் பார்வையால் நோட்டம் விட்டது. எவரும் இல்லை என்று ஊர்ஜித படுத்திக்கொண்டு வீட்டின் பக்கவாட்டு சுவர்பக்கம் போய் மறைந்து கொண்டு சுவற்றில் தன் உடலை மறைத்து தலையை மட்டும் வெளியே எட்டி எட்டி பார்த்தது.

எவரையும் காணாததால் நெஞ்சில் கைவைத்து தேங்க் காட் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு மேல்பக்க பால்கனியை நோக்கியது.

‘இந்த கயிறு இவ்வளவு பெருசா இருக்கு இறங்கும் போது சின்னதா இருந்த மாதிரி இருந்தது இப்போ ஏறுமும் போது அனுமார் வாலாட்டம் போய்கிட்டே இருக்கே??!?…’ என்று மனதிற்க்குள் புலம்பியபடி கயிற்றை பிடித்து ஏறியது அந்த உருவம்.

“வயசுதான் ஏறிக்கிட்டே போகுது ஆனா இன்னும் பொறுப்புங்கறது கொஞ்சம் கூட இல்ல” என்று தன் ஈர கூந்தலை நுனியில் முடியிட்டு மாநிற மேனிக்கு காட்டன் சேலை கட்டி அகன்ற நெற்றியில் பெரிய வட்ட பொட்டுடன் மஞ்சள் பூசிய முகமாய் 45 வயதில் சராசரி உடல்வாகுடன் அந்த வீட்டில் வளைய வந்தார் மஞ்சுளா. பாண்டியனின் தர்ம பத்தினி.

விடியல் காலையில் தங்கள் தவ புதல்விகள் இருவரையும் எழுப்பும் வழமையான பணியை செய்ய அறைக்கு சென்ற மஞ்சுளா இரு மகள்களும் தூங்குவதை கண்டு வழக்கம் போல் தொடங்கும் தனது சுப்ரபாதத்துடன் ஜன்னலை திறந்து திரைச்சீலையை விலக்கி விட்டார்.

“மணி 5 ஆகப்போகுது இன்னும் எந்திரிக்கல… எப்பவும் இது ஒரு வேலையா போச்சி… காலைல ஒடணும், நடக்கனும், குதிக்கனுன்னு அலாரத்த வைச்சிட்டு சுல்லுன்னு வெயில் அடிக்கரது கூட தெரியாம அறைய இருட்டாகிக்கிட்டு தூங்கரது…!! இதுல நீ ஏன் எழுப்பலன்னு?? டெய்லி என்கிட்ட புலம்பிக்கிட்டு திரியரது… ஏய் எழுந்திரிங்கடி திட்டரது கூட கேக்கலயா மணி 5.30 ஆச்சி, எழுந்திரிங்க… என்று மகள்கள் இருவரையும் எழுப்பக்கொண்டிருக்க

“மா இன்னும் 2 மனிட்ஸ் மா பிளிஸ் மா” என்று இளைய மகள் அப்படியே போர்வையால் முகத்தை மூடிக்கொள்ள அடுத்த பெட்டில் இருந்து பெரிய மகளின் சத்தம் வராமல் இருக்க அவளிடம் சென்றார் மஞ்சுளா

“ஏய் எந்திரி டி …” என்று போர்த்தி இருந்த போர்வையை விலக்க வெறும் தலையணை மட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து.
“தியா எந்திரி டி…. அக்கா… அக்கா எங்கடி…. எங்க போனா….” என்று கத்தியபடி இளைய மகளை எழுப்பினார் மஞ்சுளா.

எழுப்ப எழுப்ப கண்ணை திறக்காத இளையமகள் பெரியவளை காணும் என்றதும் பதறியடித்து எழுந்து அமர்ந்தாள்.

“என்னமா!!! என்ன சொல்ற… அக்காவ காணுமா?!!..” என்று அதிர்ச்சியாய் கேட்டாலும் தியாவின் கண்களில் ஒரு பயம் தெரிந்தது “அய்யோ ஆயிரம் முறை சொன்னேன் இந்த வேலையெல்லாம் வேனா அம்மாக்கு தெரிஞ்சா முதுகுல டின்னு கட்டிடுவாங்கன்னு… எருமை, எருமை சொல்ல சொல்ல கேக்காம போயி இருக்கு” என்று மனதினில் அக்காவை திட்ட வெளியில் “என் கூடதானமா படுத்தா எங்க போனா பாத்ரூம்ல பாத்தியா வெளியே பாத்தியா என்று அடிக்கிக்கொண்டே போக

அதில் எரிச்சலானவர் தியாவை தலையில் கொட்டி “ஏய் உன் கண்ணு முன்னாடிதானே தேடுறேன்.
இங்க பாரு அவ எப்படி தலையாணைய போட்டு வைச்சிட்டு போயிருக்கா….. அவ நல்லா ஏமாத்திட்டு போயிருக்கா!!! இங்க பாத்தியா? அங்க பாத்தியான்னு? கேக்குற” என்று அவளை கோவமாக கேட்க

அன்னையின் தக்குதலுக்கு உள்ளான மண்டையை தேய்த்தபடியே “பொண்ணா பெத்து வைச்சிருக்க?!?… பேய பெத்து வச்சிருக்கிங்க… அவள காணுண்ணா என்னை கொட்டுறிங்க!! அவள கொட்ட வேண்டியதுதானே??” என்று கேட்டுக்கொண்டே தலையை தடவிட்டு கொண்டாள்

“ரொம்ப பேசுன வாயிலயே போடுவேன் உனக்கு தெரியாம வெளியே போக மாட்டா சொல்லு? எங்க போனா சொல்லு டி தடிமாடு??? எப்பா எந்திரிச்சி போனா?? அய்யோ இவ எங்க போனா?? எதுக்கு போனான்னு?? ஒன்னும் தொரியல… உங்க அப்பாவுக்கு தெரிஞ்ச உங்கள ஒன்னும் கேக்க மாட்டாரு என்னதான் புடிச்சி உளுக்கு உளுக்குன்னு உளுக்குவாறு” என்று புலம்பியபடி இளையமகளை அதட்ட

“மா நெஜமா தெரியதுமா… அவ எங்க போனா… என்ன செய்ய போறா… ஒன்னும் தெரியாது… என்று கூறியவள் சொல்லிடலாமா, இல்ல இல்ல வேனா இவ்வளவு நேரம் தெரியாதுன்னு சொல்லிட்டு இப்போ சொன்ன அவளுக்கு விழவேண்டியது எல்லாம் எனக்கு விழும் இதை அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணுவோம்’ என்று மனதில் மைன்ட் வாய்ஸில் கணக்கு போட்டவள்

‘ அய்யோ இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ வந்திருக்கக்கூடாதா!??!.. இல்ல இவங்கதான் கொஞ்சம் லேட்டா வரக்கூடாதா??!…’ என்று கடவுளிடம் உள்ளுக்குள் சண்டையிட்டு கொண்டிருக்க

“உன்னை தாண்டி ஏய் தியா எங்கடி பாத்துட்டு இருக்க…? நான் நாயா கத்திட்டு இருக்கேன் கொஞ்சங்கூட மதிக்காம எங்கயோ வேடிக்க பாத்துட்டு இருக்க?!” என்றார் மஞ்சுளா

அவர் திட்டவும் சுயத்தை அடைந்தவள் “ஹீ.. ஹீ.. நாய் பாஷ தெரியாது மா அதான் கவனிக்கல” என்று சட்டென கூறிவிட

“வாயிடி வாய் இந்த வாய் இல்லனா உங்கள எல்லாம் நாய் தூக்கிட்டு போய்டும். நான் அவள காணுமுன்னு அல்லாடிகிட்டு இருக்கேன் இந்த நேரத்துல உனக்கு கிண்டல் கேக்குதா வீட்டுக்கு கொஞ்சமாச்சும் அடங்குறிங்களா..?” என்று மீண்டும் திட்ட

“அம்மா அது இல்ல மா… அவ எங்க போனான்னு யோசிட்டு இருந்தேன் மா… நீங்க என்ன சொன்னீங்கன்னு கவனிக்கலமா” என்று கூறியவள் ‘அய்யோ என்னை யாரவது காப்பாத்துங்களேன்.’ என்று கடவுளிடம் மனசீகமாக மன்றாடி கொண்டிருந்தாள் தியா

அப்போது பல்கனி பின் பக்க கதவின் தாழ் திறக்கும் சத்தம் கேட்க யோசனையுடன் கதவின் எதிரே போய் நின்றார் மஞ்சுளா.

‘அப்பாடா வந்துட்டா போல… ஆத்தா மகமாயி எந்த சேதாரமும் இல்லாம லைட்டா அம்மா கையால செய்கூலிய மட்டும் வாங்கிகொடுத்துடு ஆண்டவா’ என்று உள்ளுக்குள் கூறிய இளையவள் அன்னையின் பின்புறம் போய் நின்றுகொண்டாள்.

கதவு திறந்ததும் மேலே ஏறி வந்த உருவத்தை பார்த்ததும் நெஞ்சடைத்து அதிர்ந்து போய்விட்டார் மஞ்சுளா.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous Postபகுதி-9
Next Postகாதல்-2
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here