கரியை பூசியது போன்ற கார் இருளில் அரைவட்டமாய் இருந்த பிறை நீலவும் கூட வெளிச்சமாக ஒளிவீசி கொண்டிருந்தது. இரவு மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருக்க பின் இருக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தான் கேஷவ். கலைத்திருந்த அவனின் முகமும் கசங்கிய அவனுடைய சட்டையும் வேலை பளுவை சொல்லாமல் சொல்லியது
“சார் வீடு வீட்டுக்கு வந்துட்டோம்” என்ற டிரைவரின் குரல் கேட்டு கண்களை திறந்தவன் வீட்டில் காலிங் பெல்லை அழுத்த
அடுத்த நொடி கதவை திறந்தவளை பார்த்தவனுக்கு பெருத்த ஆச்சர்யம் தான் அவள் கதவை திறப்பாள் என எதிர் பார்க்காவில்லை
பகல் சாப்பிட கிளம்பிய சமயம் ஃபக்டீரியில் ஏற்பட்ட பிரச்சனை இதுவரை இழுத்தடித்ததில் அதில் சாப்பிட வருகிறேன் என்று கூறியதை மறந்தே போனான். மாணிக்கம் போன் செய்து அழைத்த பின்னரே நினைவு வர அதற்காக அவரிடம் மன்னிப்பை வேண்டியவன் டிரைவரை அனுப்பி சாப்பாட்டை எடுத்து வர கூறினான் இரவு எவறேனும் வருவர் பார்த்து பேசிக்கொள்ளலாம் என இருந்தவன் இவளை பார்த்ததும் பேச்சிழந்து போனான்…
அவன் கண்கள் காட்டிய ஆச்சர்யத்தை அவள் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை கண்களை கசக்கிய நிலையிலையே இருந்தாள். சோபாவிலே அமர்ந்த நிலையிலையே தூங்கி இருப்பாள் போலும் கண்ணோரம் வழிந்திருந்த மை, சிவந்து திறக்க முடியாமல் திறந்திருக்கும் கண்கள், லேசாய் கலைந்திருந்த கூந்தல் அவள் கன்னம், கழுத்து என்று உராய்ந்த நிலையில் முன்பக்க தோள்வளைவில் தவழ்ந்து கொண்டிருக்க,. மாலையில் சூடிய மல்லிகைசரம் சற்று வாடிபோய் இருந்தாலும் அவளுக்கு அது அழகாகவே இருப்பதாய் அவனுக்கு தோன்றியது.
‘ அட சே நேத்து தான் கழிவி கழிவி ஊத்தினா. இப்போ மனம் போற போக்கை பார்… அவ சரியான அடவடிடா ஆளுதான் சிறுசா இருக்கா பேச்சு ம்ஹீம் … என்று தலையில் குட்டி எண்ணத்தை தகர்த்தாலும் அவளின் காத்திருப்பில் மனதில் குற்ற உணர்வு எழந்துகொள்ள அவளின் முகம் பார்க்காமல் “அயம் சாரி” என்ற சொல்லோடு அவன் அறைக்கு செல்ல முன்னேறினான்.
“சாரி யா…. அடேங்கப்பா இந்த வாயிலிருந்து சாரியெல்லாம் வருது…..” என்று அவறை கண்டு புருவம் தூக்கியவள் ம்…. பரவாயில்லை” என்றாள் பெரியமனம் கொண்டவள் போல அவன் தோற்றத்தை பார்த்ததுமே அவன் களைப்பு மனதில் உணர்த்த சாப்பாடு எடுத்து வைச்சிருக்கேன்” என்றாள் பட்டும் படாமலும்.
‘வந்ததே லேட்… இதுல பாதி தூக்கத்துல வேற இருக்கா… இவளை போய் எப்படி வேலை வாங்குவது’ என மனது உறுத்த எனக்கு “சாப்பாடு வேண்டாம்” என்ற சொல்லோடு படியேற சென்றான்.
அவன் வேண்டாம் என கூறயதும் சட்டென “நீ ப்ரெஷ் ஆகி வா… சாப்பாடு சூடு பண்றேன்” என்றாள் அவனை பார்த்தவாறு
அவளின் தோரனையான பேச்சே அவனுக்கு எரிச்சலல தர”வேண்டான்னு சொல்றேன்ல… சாப்பாடு வேண்டாம்”. என்றிட்டவன் நடையை தொடந்தான்
” நான் உனக்கு வேணுமா… வேணாடமான்னு கேக்கல… போயி டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்னு தான் சொன்னேன் “. என்றதோடு பேச்சு முடிந்தது என்று அவள் சமயலறையில் புகுந்து கொள்ள
அவளின் அதிகாரமான பேச்சு அவனை எரிச்சல் படுத்தினாலும் அதில் இருந்த ஏதோ ஒன்று அவனை கட்டிபோட்டு அவள் சொல்படி நடக்க செய்தது.
இதை மஞ்சுவும் ராதாதவும் பக்கத்து அறையில் இருந்து எவருக்கும் தெரியாமல் எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நீ சொன்னது மாறி நடக்குது ராதா”
“பின்ன புருஷன் வேலை செய்து களைச்சி வந்து சாப்பிடாமல் பட்டினியா படுத்தா எந்த பொண்டாட்டிக்கு புடிக்கும்.., அதான் நீயோ நானோ இருந்தா நம்மல செய்ய வைச்சிட்டு அவ ஒதுங்கி இருப்பா… இப்போ பாரு அவரு வேண்டான்னு சொன்னாலும், இவ அதிகாரமா சாப்பிட சொல்றா இவங்களை விட்டுதான் புடிக்கனும்”. என்று கூறி இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.
சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்தவன்அன்றைய நிலவரங்களை தன் லேப்டாப்பில் பதியவைத்தபடி இருக்க டைனிங் டேபிளில் இருந்த அனைத்தையும் எடுத்த வைத்தவள் அறைக்கு வருவதை பார்த்தவன்
“பாரவாயில்லை இவளுக்கும் எதோ கொஞ்சம் நம்ம மேல நல்லெண்ணம் இருக்கு.. செய்த உதவிக்கு நன்றி சொல்லனும்… அம்மா மட்டுமே அறிஞ்ச பசியை இவளுக்கு எப்படி தெரிஞ்சுது’என்று நினைத்திருக்க ‘கடவுளே இவளை ஏன் அம்மா மாதிரியே நடந்துக்குறான்னு நினைச்சேன் இவளுக்கு இருக்க வாயிக்கு அவங்க எல்லாம் இவகிட்ட நிக்கமுடியுமா பேசாம ஒரு தெங்ஸை சொல்லிட்டு படுத்துடனும்’ என நினைத்திருந்தான்.
அவள் அறையில் நுழைந்ததும் “தெங்க்ஸ்” என்றான்
“தெங்கஸா!?” எதுக்கு?” என்றாள் புரியாமல்
“எனக்காக வைட் பண்ணதுக்கு… அப்புறம் சாப்பாடு எடுத்து வைச்சதுக்காக” என்று மிகவும் சாதரணமாகவே கூறினான்.
“ஹோ… சாருக்கு தெங்க்ஸ் எல்லாம் சொல்ல வருமோ ம்…. என்று நக்கல் கலந்த குரலில் கேட்டவள்
இதையெல்லாம் காரணமா வைச்சிக்கிட்டு நான் உன்னை ஏத்துக்கிட்டு உன் கூட சமாதானமா போவேன்னு தப்பா நினைத்து கனவு காணத…
ஏதோ கலைச்சி போய் வந்து இருக்கியே… மாமியார் வீட மட்டமா நினைச்சிட கூடாதுன்னு இதெல்லாம் செய்றேன்”. என்று அவளுடைய செயலுக்கு நீண்டதொரு விளக்கம் கொடுத்து கொண்டிருந்தாள் அவளின் மனதிற்கும் சேர்த்தே.
“அதானே பிறவி குணம் எப்படி மாறும் இந்த அராத்துக்கு எல்லாம் ஒன்னும் குரைச்சல் இல்ல… எப்பவும் பட்டாசு போல படபடன்னு பேசிக்கிட்டே இருக்கனும் இல்ல என் உயிரை வதச்சிக்கிட்டு இருக்கனும்… இதுல அம்மா வேற இனக்கமா இரு, பொருத்து போ, மனசை கலங்கடிக்காத, வேதனை படுத்தாதன்னு போன்மேல போனு போட்டு கடுப்பு ஏத்துறாங்க டி உன்னை ரொம்ப அப்பாவின்னு நினைச்சி”.
“நான் சொன்னேனா நான் அப்பாவி, என்னை பொருத்து போ…. நீ இல்லன்னா வாழ்க்கை இல்லைன்னு, சொன்னேனா .., உன்னை தான் புடிக்கலன்னு சொல்றேனே… அப்புறம் நீங்களா நினைச்சிக்கிட்டு ஒரு முடிவு எடுத்திங்கனா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று எரிச்சலாய் பதிலுறைத்தாள்.
‘ஷப்பா பதிலுக்கு பதில் பேசியே திறனும் இல்ல தல வெடிச்சிடும்… உன் ஒருத்திய சமளிக்க முடியலேயே டி என்று நினைத்தவன் “நீ நேத்து பேசினதுக்கு ஜென்மத்துக்கு உன் பக்கம் கூட திரும்ப கூடாதுன்னு நினைச்சேன் இப்போ வேற வழியே இல்ல பேசிதான் ஆகனும்” என்றுவன் முகத்திலூம் குரலில் மாறுபாடு இருக்க அவள் அருகில் வந்தான்
அவனின் குரலில் இருந்த மாற்றம் அவளை பயம் கொள்ள வைக்க அவன் அருகில் வரவும் விதிர்த்து போனவள் இரண்டு எட்டு பின்னால் வைத்தாள்.
அவளை நெருங்கி ஒவ்வொரு எட்டை அழுத்தமான அடியை வைத்தவன் “உன்கிட்ட தெங்கஸ் தானே சொன்னேன்… என் கூட வந்து வாழு சொல்லி உன்னை கைபுடிச்சி இழுத்து கட்டிபிடிச்சி கன்னத்துல முத்தம் வைச்சேனா???” என்று கேட்டுக்கொண்டே முன்னேறே இவள் பின்னாள் இருந்த சுவற்றில் மோதி சாய்ந்து நின்றாள் அவளின் முகத்தை ஒருவிதமாக பார்த்துக்கொண்டே இருபுறமும் கைகளை ஊன்றி அவளை நடுவில் நிறுத்தினான் கண்கள் அவளின் விழிகளை தான் சந்தித்துக் கொண்டிருந்தது .
அவன் கைகளில் இருந்து தப்பிக்க இந்த பக்கம் அந்த பக்கம் என கபடி ஆட நினைத்தவள் அவன் மேல் மோதி விடுவோமோ என்ற பீதியில் அப்படியே சிலையாய் சமைந்து இருந்தாள்.
அவளின் படபடப்பில் எச்சிலை விழங்க அது அவளது பளபளப்பான தொண்டையில் இறங்கியது முகம் வியர்த்து வழிந்தது கண்களில் மருட்சி என்ன செய்ய போகிறானோ என்ற பயத்துடன் இருக்க அவளது முகத்தை அளந்தவனின் கண்கள் அழகிய கழுத்தில் பதிய அதில் தெரிந்த புது மஞ்சள் தாலியை அவளை தொடாமல் ஒற்றை விரலை கொண்டு வெளியே எடுத்தவன்.
“இது ஒன்னு போதும் நமக்குள்ள என்ன உறவு இருக்குன்னு சொல்ல.., நீயோ நானோ நினைச்சாலும் இதை மாத்த முடியாது நடந்தது இல்லனும் ஆகாது புரியுதா…. நானும் நீ நினைக்கிறா மாதிரி மட்டமான் ஆளும் கிடையாது தையாதக்கான்னு குதிக்கம வாய மூடிக்கிட்டு போடி” என்று அவளை பார்த்து கூறிவிட்டு சோபாவில் படுத்துக்கொள்ள
‘இதை சொல்லத்தான் இவ்வளவு கிட்ட வந்தான் அப்படா கொஞ்ச நேரத்துல பிபியை ஏத்திட்டானே சே…. இவங்கிட்டு கொஞ்சம் கவனமாத்தான் இருக்கனும் என்று நினைத்துக்கொண்டவள் மெத்தையில் படுத்துக்கொண்டாள்’.
மாலை வேலையில் ஓய்வாய் கணவன் மனைவி இருவரும் தோட்டத்தில் அமர்ந்து சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்த உரையாடல் அங்கு இங்கு என சுற்றி கடைசியில் இளைய மகனிடத்தில் வந்து நின்றது.
என்ன ஆதி என்ன சொல்றான் உன்புள்ள அங்க சௌரியம்லாம் எப்படியாம் என்று ஆரம்பிக்கும்போதே கணவரை பார்க்கும் பார்வையை முறைப்பாக மாற்றி பார்த்துக் கொண்டிருக்க துரை போன்லாம் பண்றாரா அந்த பொண்ணை வெளியே கூட்டிட்டு போறானாமா என மகனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவளில் பேச்சை ஆரம்பித்து மனைவியை பார்க்கலானார்
பேச்சின் முடிவில் மனைவியின் முகத்தை கண்டவர் ஏன் இப்படி முறைக்கிறா என்று என்னும் போதே ஆதியே மௌனத்தை உடைத்து பேச ஆரம்பித்தார்.
அது என்ன எப்ப பார்த்தாலும் உன் புள்ள உன்புள்ளன்னு வாய்க்கு வந்தபடி பேசுரிங்க…. சத்தமா சொல்லிடாதிங்க அக்கம் பக்கம் நாலு பேர் கேட்ட சிரிக்க போறாங்க” என்று நக்கலாக கேட்டாலும் அப்பாவும் மகனும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு இன்றைக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற எண்ணம் வர… தந்தைக்கும் பிள்ளைக்கும் மனதில் பாசம் இருந்தாலும் சுமூகமாக பேசாதது அவருக்கு வருத்தமே அதற்காகவே பேச விழைந்தார்..
முன்னதான் உங்க சொல்பேச்சை கேக்காம திரிஞ்சன்னு, சொன்னிங்க ஏதோ ஆத்திரத்துல சொல்றிங்கன்னு விட்ட இப்போ ஒரு கம்பெனிக்கு எம்.டி 2000 பேருக்கு சம்பளம் தர அளவுக்கு உயர்ந்து இருக்கும் முதலாளி.. இன்னும் ஒரு படி மேல போய் நாம சொன்ன சொல் மீறாம ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான் இதுக்கும் மேல அவன் என்ன பண்ணனும்னு எதிர்பாக்குறிங்க என்று தன் மொத்த கோபத்தையும் ஆதங்கமாக வெளிக்காட்டினார்.
அட கடவுளே நாம அவனை என்ன சொல்லிட்டோம் என்று இவள் அப்படி மூச்சை பிடித்துக்கொண்டு பேசுகிறாளே என்று ஆயாசமாக எண்ணி இருந்தாலும் என்னடி என்னடி உன் பிரச்சனை அவனை எப்படி இருக்கான்னு ஒரு வார்த்தை தானே கேட்டேன் அதற்கா இவ்வளவு பேச்சை பேசுகிறாய் என்று பாவம் போல முகத்தை வைத்து கூறினாலும்
கணவரை செயலை எடுத்து காட்டியே ஆகவேண்டும் என்று முனைப்புடன் இருந்த ஆதிக்கு சற்று எரிச்சல் மேலிட
அதை கூட எப்படி கேட்டிங்க ஏதோ ரோட்டில் வரவன் போறவன் புள்ளையை பாத்து உன் புள்ளை எப்படி இருக்கான்னு கேக்குறா மாதிரி இல்லை கேட்டிங்க இதுவரையில் உங்களுக்கு பிடிக்காமல் நடந்துகிட்டான்னு அவகிட்ட பேசமா தண்டிச்சது பத்தாத இப்பவும் அதே தண்டனைய தறிங்களே என்று எரிச்சலில் அரம்பித்து கோபத்தில் துடித்து இயலாமையில் கண்கலங்க கேட்கும் மனைவியை கண்டதும் இதயம் துனுக்குற்றவர்
பச்….. என்று வாயிவிட்டு தன் அதிருப்பதியை வெளியிட்டாலும் மனைவியின் சுடுசொல் மனதை ரணமாக்கியது. இத்தனை வருட குடும்ப வாழ்வில் தன் செயலுக்கு அர்த்தம் உண்டு என அமைதி காத்த மனைவியின் கண்ணீர் அவரை அசைக்க இங்க பாரு என்ன பாரு ஆதி என்னை புரிஞ்சிகிட்டது அவ்வளவுதானா முடியலடி இத்தனை வருசம் என் கூட வாழ்நத உன்னாலையே என்னை புரிஞ்சிக்க முடியலனா ரொம்ப வலிக்குது டி நான் செய்யுற ஒவ்வொன்னும் அவன் நல்லதுக்குன்னு எடுக்குற உனக்கே என்னை புரிஞ்சிக்க முடியல அவனுக்கு எங்க புரியபோகுது நாம இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று எழுந்து கொள்ள
என்னங்க….. நீங்க சொல்றது…. நான் உங்களை புரிஞ்சிக்கலையா என்னை தவிர்த்து யாருங்க உங்களை சரியா புரிஞ்சிக்குவா உங்களுக்கும் பாசம் இருக்கு அக்கரை இருக்கு அவன் நல்லா இருக்கனும்னு எண்ணம் இருக்கு இதை தெரியாதவளா நான் அவனுக்கும் உங்க மேல மரிராதை இருக்கு எல்லாமே எனக்கு புரியுது தெரியுது
ஆனா என் கண்களுக்கு நீங்க ரெண்டுபேரும் எதிர்ரெதிரா இரு துருவமா விலகி இருக்கா மாதிரி ஒரு பிரம்ம என் முன்னாடி சிரிச்சி சகஜமா பேச மாட்டிங்களான்னு ஒரு ஆசை இந்த கண்ணால பாக்க மாட்டோமான்னு ஒரு ஏக்கம்… என்றவர் கணவரின் கைபிடித்து உங்களை கஷ்டபடுத்தி உங்க மனச இரணபடுத்தி இருந்தா பிளிஸ் என்னை மன்னிச்சிடுங்க என்று அவரிடம் மன்னிப்பை வேண்ட
அவர் கூறவும் அவரின் வாயை தன் கைகளால் மூடி வேண்டாம் என தடுத்த ராஜாராமன் விடு ஆதி எப்பவுமே பெத்த மகன் மேல காட்டும் கரிசனத்தை உன்னை கல்யாணம் பண்ணிங்கிட்டவன் கிட்டயும் காட்டலாம் தாப்பு இல்லை என்று மனைவியை சகஜநிலைக்கு வர அவரை வம்பு கேலி செய்தவர் சற்று நெர மௌனத்திற்கு பிறகு அவன் மேல கோவம் இல்லை … என்றதும் மகிழ்வாய் கணவரின் முகம் பார்க்க அவன் தப்பை சரிசெய்யும் காலம் வரும் அப்போ அவன்கிட்ட நானே பேசுவேன்.
தப்பா என்ன தப்பு செய்தான்… என்று கேள்வி எழுந்தாலும் ஏற்கனவே காயபடுத்திய கணவரின் மனதை மறுபடி காயபடுத்த விரும்பாமல் அவரே கூறட்டும் என்று அமைதி காத்திர் ஆதி
இது எனக்கும் தண்டனை தான் ஆதி உனக்கு மட்டும் வலி இல்லை எனக்கும் வலிதான்.. எனவும் சட்டென தன் இரு உயிர் ஜீவன்களையும் நினைத்து ஆதியின் முகம் வாடிவிட அவரை தேற்றும் வகையில்
இந்த பேச்சை இதோட விட்டுவிடு ஆதி அடுத்து ஆகவேண்டிய வேலைகளை பார்… இன்னும் ரெண்டு நாள்ல கேஷவும் கவியும் இங்க வந்துடுவாங்க அவங்க அறைய தயார்படுத்தி வைச்சிட சொல்லு என்றவர் மனைவியை தவிர்த்து கலங்கிய மனதுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
“அவளா சொன்னால் இருக்காது..
அப்படி எதுவும் நடக்காது..”.
என்று நாடகபாணியில் தன் அதிரிப்பதியை காட்டுவது போல் பாடலை பாடிக்கொண்டு சித்துவை வெறுபேற்றிக்கொண்டு இருந்தான் கோபி…
ஏற்கனவே வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவள் செய்யும் அலும்பல் தாங்காமல் தான் விடிந்ததும் விடியாததுமாக ராதாவிடம் வேலை இருப்பதாய் கூறி வீட்டை விட்டு வந்தவன் இரவு மணி பத்தை நெருங்கியபோதும் வீட்டிற்கு செல்லும் எண்ணம் இல்லாமல் கோபியின் அறையில் இருக்க இந்த நிலையில் நண்பன் செய்யும் கேலியை கூட மனம் ஏற்காமல் அவனை எரிக்கும் அக்னி பார்வையோடு அமர்ந்திருந்தான் சித்து.
“என்ன பார்வை உந்தான் பார்வை”
என்று அவன் பார்வையை கண்டவன் அடுத்த பாட்டிற்கு தாவ அவன் கோவம் கொதிநிலைககு தாவ டேய் நீ அடங்கவே மாட்டியா என்றபடி மெத்தையில் இருந்த தலையணையை தூக்கி அவன் மீது எரிந்தான்
சிரித்தபடியே ஐ… என்று அவன் தூக்கி எரிந்ததை லாவகமாக பிடித்து சுழற்றிய தலையணையை மடியில் போட்டு அதில் கைகளை அழுத்திக்கொண்டு அதில் தன் முகத்தை தாங்கியவன் அவன் பக்கத்தில் அமர்ந்துகொண்டு “டேய் இது உனக்கே ஓவரா தெரியல… என்ன நடக்கா கூடாதது நடந்து போச்சுன்னு இப்படி இடிந்து போய் உட்காந்துகிட்டு இருக்க” என்று கேள்வியாய் வினவ
“அடி செருப்பால.., நானும் படிச்ச படிப்புக்கும், கூட பழகின நட்புக்கும் மரியாதை கொடுத்து நீ பண்ற லொல்லுக்கு அடங்கி இருந்தா…. அந்த அரை லூசு கேனத்தனமா வந்து பிரப்போஸ் பண்ணிட்டாலேன்னு ஆடிப்போய் உட்காந்து இருக்கேன்… இப்போ என்ன நடக்காதது நடந்துடுச்சுன்னு வெறுப்பா ஏத்துற” என்று கட்டிலை சுற்றி அவனை துறத்தியபடி இருக்க
ஒடுக்கொண்டே இருந்தவன் “சொல்றத கேளு மச்சி… டேய் மச்சா உன் மனசு புரியுதுடா.. அதுக்கு என்ன பண்ண முடியும் அவளுக்கு பயந்து வீட்டுக்கு போகம உட்கார்ந்து இருக்க… இதுவரைக்கும் எந்த பொண்ணும் வந்து உன்கிட்ட பிரப்போஸ் பண்ணதே இல்லையா சொல்லு.?” என்று நக்கலாக கேட்டு “அவங்க எல்லாத்தையும் எப்படி இஸியா எடுத்துகிட்டு விலகி விட்டியோ அதே போல இருடா.., ஆம்பளைய லட்சணமா கெத்தை மெய்ட்டெண் பண்ணுடா… தில்லா போட” என்று அவனுக்கு தைரியம் கொடுக்க
“டேய் அன்னைக்கே நான் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன் ம்ஹீம் அடங்க மாட்டேன்றா எப்பவும் அவ இருக்குற பக்கம் கூட போக மாட்டேன். இந்த ரெண்டு நாள வலிய வந்து வாலிண்டிரியா ஏதாவது பண்றா நான் விலக்கி விடுறா போல பேசினாலும் அதுலயும் ஏதாவது கண்டு பிடிச்சி என்னை சீண்டுறா டா”
‘இதுல வேற புதுசா மாமா மாமான்னு படுத்துறா’ என்று மனதிறக்குள்ளே நினைத்தவன்
“என்னை மீறி வர்ற கோவத்துக்கு அவளை அடிச்சிடுவேனோன்னு பயமா இருக்குடா” என்று தனது மனதில் இருக்கும் பயத்தினை அவனுக்கு உணர்த்த.
“உன் கஷ்டம் புரியுது மச்சி இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க” என்றான் நண்பனின் எண்ணத்தை கண்டு
“நாளைக்கு காலைல ஊருக்கு கிளம்புறேன் டா இனி இவ அட்டகாசத்தை என்னால தாங்க முடியாது” என்று வெறுப்பானான்.
“எனக்கு ஒன்னும் மட்டும் புரியலை மச்சி எப்படா சேன்ஸ் கிடைக்கும் உன்னை வைச்சி செய்யனுன்னு நினைச்சிட்டு இருந்தவ, உனக்கும் அவளுக்கும் எதிர் எதிர் திசை, நீ அமைதி, அவ அடாவடி உன் மேல லவ் னா மச்சா குழப்பமா இருக்கு.., ஒருவேல எதிர் எதிராக இருக்கரதுனாலதான் கந்தகம் மாதிரி இருப்பதால் தான் உன் பக்கம் அவளை ஈர்த்துச்சோ” என்று சந்தேகம் கேட்க
“அவ சொல்றதை பார்த்த சின்னவயசுல இருந்தே என்னை லவ் பண்றான்னு நினைக்கிறேன்டா” என்றவன் தலையை கோதி
“நான் ஒன்னு கேக்கவா நீ கோப படக்கூடாது?”
“நீ கேக்கர தோனியே சரியில்லையே டா” என்று குதர்க்கமாய் பார்த்து வைத்தாலும் “ம்” என்று அவனுக்கு சம்மதம் சொன்னான்.
“நீ ஏன் மச்சா அவளை” என்னும் போதே
நீ என்ன கேக்கவரேன்னு புரியுது… பீளீஸ் ஜஸ்ட் ஷடாப் கோபி நான் கேவத்துல ஏதாவது பண்ணிடபோறேன்” என்று அவனை உக்கிரமாக கத்திவிட்டு அறையை விட்டு செல்ல எத்தனித்தவனை ஒடிவந்து கைகளை பற்றிக்கொண்ட கோபி
“மச்சி மச்சி பீளிஸ் டா… கோபபடாத டா… சாரி டா மச்சா… தெரியத்தனமா கேட்டுடேன் சாரி டா…” என்று மன்னிப்பை வேண்ட
“உனக்கு கூடவாடா புரியல கோபி…. எனக்கு விதுவை அப்படி பார்க்க தோனலைடா… அவ குழந்தைதனமா இருக்கரவடா என்னால அவளை என் மனைவியா கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாது” என்று அவன் நிலையை விளக்கியவன்.
“அவ சின்ன பொண்ணு டா விவரம் தெரியாம ஏதோ கிறுக்குதனமா பேசுறா.. நான் ஒதுங்கி போறதைதான் அவ ஈர்ப்புன்னு தப்பா நினைச்சி அர்த்தம் பண்ணி இப்போ என்னன்னமோ லுசுத்தனமா உளறுகிறாள் என்று அவளுக்குமாய் நின்று பேசியவன் மெத்தையில் அமர்ந்து தலையை தொங்க போட்டுக்கொண்டான்.
அந்நேரம் அவன் அலைபேசி ஒலி எழுப்ப முதன்முறை திரையில் அவள் பெயர் பார்க்க வெறுப்பாய் இவள் வேறா என்று அதை கட்செய்து சைலண்டில் போட்டான்.
உடனே கோபியின் அலைபேசி குரல் கொடுத்து அவனை அழைக்க நண்பனின் முகம் பார்த்துக்கொண்டே அதை ஸ்வைப் செய்து காதில் பொருத்தினான்.
“ஹலோ தியா… என்ன இந்த நேரத்துல ?”
தியா என்று அவள் பெயரை கஏட்டதும் வெடுக்கென தலை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தான்.
“நடிக்காத கோபி… நான் எதுக்கு போன் பண்ணி இருக்கேன்னு உனக்கு தெரியாதா?”
“நீதானே போன் பண்ணி இருக்க.. தியா என்ன விஷயம்னு நீ சொன்னா தானே தெரியும்” என்று அவனும் பதிலுக்கு கடுப்படிக்க
“உனக்கு தெரியாது …. நான் நம்புறேன் நேரா விஷயத்துக்கே வரேன் உன் பிரண்டு அங்க தானே இருக்கான்”.
“யாரு சித்துவா?? அவன் இங்க வரவே இல்லையே தியா” என்று தடுமாற்றத்துடன் கூற
“கழுதை கெட்டா குட்டி சுவரு…. நீ இப்படி தடுமாறதலையே தெரியுது காலைல இருந்து உன் கூடதான் இருக்கான்னு போனை ஸ்பீக்கர்ல போடு” என்று கட்டளை பிறப்பிக்க
அவன் முகம் பார்த்துக்கொண்டே அவள் கூறியதை செய்ய “மரியாதையா கிளம்பி வீட்டுக்கு வா சித்து மாமா” என்று அவள் கூறவும்
பற்களை கடித்து விழித்தவன் அமைதி காத்தான்.
“ஓகே நீ எனக்கு பயந்துகிட்டுதான் அங்க இருக்கன்னு எனக்கு நல்லா தெரியும்.., ஊருக்கு பெட்டி படுக்கையை கட்ட போற போலிருக்கு… சரி அது உன் விருப்பம்” என்றதும்
‘நான் கிளம்புவது இவளுக்கு எப்படி தெரியும்” என அதிர்ச்சியாய் பார்க்க
“என்ன இவளுக்கு எப்படி தெரியும்ன்னு நினைக்கிறியா மாமா உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் என்ன அர்த்தன்னு எனக்கு தெரியும் மாமா.., நான் என் மனசை சொன்ன அடுத்த நிமிடம் ஊருக்கு கிளம்ப தயாராகிட்டன்னு என் மனசு சொல்லுச்சி மாமா” என்று சிறு இடைவெளி விட்டாள்.
“நீ என்ன வேனா என்னை பத்தி நினைச்சிக்கோ.., உன் கண்ணுக்கு நான் லூசு மாதிரி தான் தெரிவேன்.., ஆனா என் காதல் உண்மை அது எப்பவும் மாறாது உன்னை என் மனசுல காதலன் என்பதை விட புருஷனா பார்க்க ஆரம்பிச்சகட்டேன்.., என்னைக்கு இருந்தாலும் என் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறும்னா அது உன் கையாலதான் இதை நல்லா புருஞ்சிக்க மாமா”..
விது என்று பற்களை நறநறவென்று கடிக்க
மொபைலை பிடிங்கி ஆப் செய்ய போக
என்ன கோபி மொபைல் அவன் கைக்கு போயிடுச்சா ஆப்பன்ன வாங்கி இருப்பானே…. ஸ்பிக்கர ஆப்பன்னு என் மாமா கூட பேசனும். என கூற பச் எனும் முத்த சத்தம் கேட்டு விதிர்த்தவன் அவன் கேட்டு விடுவானோ என்ற பதற்றத்துடன் பட்டென உடனே நார்மல் மோடில் போட்டு காதில் பொருத்தினான் சித்து.
ஹேய் அராத்து என்ன நினைச்சிட்டு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க கொஞ்சம் கூட வெக்கம் இல்லமா அறிவு இல்லை நார்மல் மோடுல போடுறதுக்குள்ள என்ன வேலை பண்ணுற என் சிடுசிடுக்கும் போதே
நான் முத்தம் கொடுக்க போய் தானே கோபிக்கு கேட்டுடும்னு ஸ்பிக்கர அவசரமா ஆப் பண்ண என்று கிங்கினியாய் சிரித்தாள். அவள் தன் மனதை அறிந்து கொண்டளே என்று ஆயாசமாக இருந்தாலும்
ஏய்… இன்னொரு வார்த்தை பேசின என்று அவளை அதட்ட
என்ன பண்ணுவ மாமா… உடனே கொடுத்த முத்தத்தை திரும்பி கொடுத்துடுவியா மாம் மீ வைட்டிங்”
உன்னை சீ
என்னை பொறுமையா திட்டிக்கலாம் இப்போ நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா மாமா
வீட்டு வர முடியாது என்று கோவமாக கூறினான்.
நீ வரலைனா இப்பவே கிளம்பி நான் அங்க வருவேன்
வந்து பாரு ஆண்டி காலை உடைச்சி அடுப்பில வைபபாங்க என்று கூறவும்
அவங்க ஏன் செய்யனும் நான் தான் என் புருஷன் இவ்வளவு நேரம் காணும் அதான் தேட போறேன்னு சொல்லிட்டு தான் வருவேனே என்றதும் சித்துவிற்கு பக்கென்று இருந்தது
ஏய் பிசாசு ஏன்டி இப்படி படுத்துற வறேன் போனை வை சே…. என்றவன் கட் செய்து கோபியிடம் கொடுத்தவன் படுத்துறா டா முடியில வரலனா வீட்டுல சொல்லிடுவேன்னு மிரட்டுறா என்று கூறி நான் கிளம்புற மாப்பிள்ள என்று விடுவிடுவென வெளியே கிளம்பி விட்டான்.