காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 14

0
349

பகுதி 14

“என்னம்மா இது இப்படி நாக்குல நரம்பு இல்லாம பேசுரிங்க… உங்க மருமகளா வரப்போற பொண்ணுமா… அதை பார்க்கலானாலும் பரவாயில்லை,முதல்ல அவ ஒரு பொண்ணு மா. கொஞ்சம் பாத்து பேசுங்க கோவத்துல கண்டபடி பேசி உங்களோட தரம் தாழ்த்திக்காதிங்க. இந்த பிரச்சனை சுமுகமா போனபிறகு கல்யாணம் ஆகி அந்த பொண்ணு மருமகளா உங்க வீட்டுக்கு வந்தா இந்த மனக்கசப்பு போகுமா?… இல்ல உங்க மேலதான் நல்ல அபிப்ராயம் இருக்குமா??…”என்றார் சித்தார்த்தின் தாய் ராதா.

“இப்ப இதுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்… என் புள்ள உயிரே அந்தரத்துல ஆடுது…. இதுல இந்த கல்யாணம் ஒன்னுதான் குறைச்சல்!!! இனி யார் எப்படி போனா எங்களுக்கு என்ன?…”என்று துச்சமாய் வார்த்தைகளை அனலாய் அள்ளி வீச நெருப்பில் இட்ட புழுவாய் கவி துடித்துபோனால் இப்படிபட்ட மனிதர்களை கண்டு

“வில் யூ ஷெட்டப் யூவர் பிளெடி மவுத்…. நான்சென்ஸ்….” என்று கர்ஜனையாய் ஒரு சிம்மகுரல் கேட்க அனைவரும் திரும்பி பார்க்க பக்கத்தில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த அரவிந்தின் உதடு கிழிந்து இரத்தம் சிந்த நின்றிருக்க அவனுடன் கேஷவ்வும் சித்தார்த்தும் நின்றிருந்தனர்.

“அய்யோ அரவிந்தா…. என் புள்ளைய எப்படி அடிச்சிருக்கானுங்க… முகமெல்லாம் இரத்தமா இருக்கே…” என்று கத்தியபடி அரவிந்தின் தாய் அவன் பக்கத்தில் செல்ல

” அங்கயே நில்லுங்க…” என்று சீறியவனின் கண்கள் கோபத்தில் அக்னியாய் ஜொலித்தது “மரியாதையா நீங்க இப்போ கொட்டிய வார்த்தைகளை அள்ளி எடுத்துட்டு, அப்புறம் வந்து உங்க கிரிமினல் பிள்ளைய தொடுங்க” என்று ஆக்ரோஷமாய் கூறினான் கேஷவ் ….

“யாருங்க நீங்க?? என் பிள்ளைய கிரிமினல் சொல்றதுக்கு!?!.. அவனை பேசரதுக்கு என்ன தகுதி இருக்கு உங்களுக்கு?? அவன் தகுதி தராதரம் தெரியுமா உங்களுக்கு?” என்று அரவிந்தின் தகப்பனார் வரிந்து கொண்டு அவனுக்காக பேச எந்த எதிர்வினையும் காட்டாது குனிந்த தலை நிமிராது நின்றிருந்தான் அரவிந்த்.

“அப்படி என்னங்க சார் உங்க தகுதி, தராதரம் …. கொஞ்சம் எங்களுக்கும் காட்டுங்களேன்” என்று இரண்டு அரை விட்டு அவனை தள்ளிவிட்டவுடன் அதிர்ந்து போய் அனைவரும் பார்க்க

“அய்யோ, அய்யோ…. என் புள்ளைய அடிக்கிறேனே… கட்டையில போறவன்… அவன் கையில கட்ட முளைக்க… நல்லா இருப்பானா??? இதை கேக்க யாருமே இல்லையா?? இப்படி புள்ளைய போட்டு அடிக்கிறான்… பாத்துகிட்டு சிலை மாதிரி நிக்கிறிங்களே!?!.. போய் என்னன்னு கேளுங்க…” என்று அரவிந்தின் தாய் ஊரை கூட்டி ஒப்பாரி வைக்க

“ஹேய் என் பையனை அடிக்க நீ யாரு.. எங்க கண்ணு முன்னாடியே அடிககிற” என்று அரவிந்தின் தந்தை கோவத்தில் கத்தினார்…

“ஜஸ்ட் ஷட்டப்…. இப்போ நீங்க வாய மூடல?!?…. இன்னும் ரெண்டு அடி சேத்து உங்க சீமந்த புத்தரன் வாங்குவான். நியாபகம் வைச்சிகோங்க” என்று மிரட்டி விட

கப்சிப் என்று வாயில் கை வைத்தபடி அமைதி ஆனார் ஆனந்தின் தாயார்.

“நீ இன்னும் விஷயத்தை சொல்லாம… என் புள்ளைய அடிக்கிற… இது எல்லாம் அநியாயம்” என்று அரவிந்த்தின் தந்தை
ஆக்ரோஷமாய் பேசினார்.

“கொஞ்சம்…. கொஞ்சம் அமைதியா இருங்க சார்….. இப்போ காட்டுறேன் பாருங்க உங்க பையனோட தராதரத்தை…. அப்புறம் சொல்லுங்க உங்க பையனை போலீஸ்க்கு கூட்டிட்டுபோய் லாடம் கட்டலாமா…?!?இல்ல இந்த மாதிரி ஏமாத்தி கல்யாணம் பண்றவன கட்டையால அடிச்சே கொல்லலாமான்னு சொல்லுங்க?!?..” என்றவன் “சித்தார்த் show ம்” என்றான் கேஷவ்

“அங்கிள் நீங்க நினைக்கிறப்போல எல்லாம் இவன் நல்லவன் இல்ல.. பக்கா கிரிமினல், இவன் என்னன்ன பண்ணி வைச்சி நம்மல கழுத்தருத்து இருக்கான் பாருங்க”. என்று அவனிடம் இருந்த செல்லில் எடுக்கப்பட்ட விடியோவை மாணிக்கத்திடம் காட்டினான் சித்து

அதிர்ச்சியாய் பார்த்த மாணிக்கம் “நான் இவனை பத்தி நல்லா விசாரிக்க சொன்னேன சித்து எப்படி, எப்படி இதுல தப்பு நடந்துச்சி?!?!… அப்போ அவன் கொடுத்த ரிப்போர்ட் எல்லாம் போலியா??

“அதையும் அவன் வாயாலையே சொல்லுவான்.. கேளுங்க அங்கிள்….”என்று கூறிய கேஷவ் “டேய் சொல்லுடா” என்று கை ஓங்கினான்…

பயந்தவன் போல் கேஷவ்வின் அடிக்கு சற்று சுதாரித்தவன் “அந்த ரிப்போர்ட் உண்மை தான்… ஆனா அந்த அரவிந்த் நான் இல்ல” என்று மென்று விழுங்கி கூறியவன் தானே தொடர்ந்தான்.

“நான் வேலை பார்த்த கம்பெனியில என்கூட அரவிந்த்ன்னு இன்னொருத்தனும் வேலை செஞ்சான்….. அங்க நாங்க கண்டுபிடிச்ச சாப்வேர இன்னொரு கம்பெனிக்கு யாருக்கும் தெரியாம அதோட டிடெயல்ஸ் நான் விற்றதை அயர் அபிசியல்ல கண்டுபிடிச்சி என்னை வேலைய விட்டே துறத்திட்டாங்க….. ஆனா இது எங்க வீட்டுக்கு தெரியாது….. தெரியாத மாதிரி பாத்துக்கிட்டேன் என்னோட டிட்டெயல்ஸ் நான் வேலை பார்த்த போஸ்ட் எல்லாத்தையும் அரவிந்த்ன்னு பெயர் ஒற்றுமைய வைச்சி எனக்கு சாதகமா யூஸ்பண்ணிக்கிட்டேன்…..” என்று கூற

முதல் பதிலிலேயே அதிர்ந்த மாணிக்கம் அடுத்து அடுத்து அவன் கூறியவற்றில் பூலோகமே சுழன்றது அவருக்கு.

.1 மணி நேரத்திற்க்கு நேரத்திற்க்கு முன்னர்.

கோவிலில் இருந்து வெளியே வந்த சித்தார்த் பின் பக்கம் இருந்த சமையல் செய்யும் இடத்திற்கு சென்றான்…

“டேய் கோபி எல்லாம் ரெடியா? சமையல்ல ஒரு குறை இருக்க கூடாது” என்று கூறியபடி அங்கு விதவிதமாய் செய்யப்பட்டு இருந்த பதார்த்த வகைகளை சுவை பார்த்தபடி சில பல திருத்தங்களை கூறிக்கொண்டிருந்தான்.

“ம் பர்வெக்ட்டா இருக்கும் டா.. யூ டோண்ட் வொரி மச்சான்…” என்று கூறிய கோபி “கேக்கனும்ன்னு நினைச்சேன் மச்சான் கல்யாண மாப்பிள்ளைக்கு ஏதாவது பிராப்ளமாடா ?!?!”…

“என்ன டா சம்மந்தம் சம்மந்தமில்லாம பேசுற?!?… கல்யாண மாப்பிள்ளைக்கு என்ன பிராப்ளம் இருக்க போகுது !!அதுவும் முகூர்த்த நேரத்துல!!?!…”

“இல்ல மாச்சான் அவருக்கு ஏதோ பிராப்ளம் தான் நினைக்கிறேன்… ரொம்ப பதட்டமா இருந்தாரு அந்தபக்கம் இந்தபக்கம்ன்னு பாத்துக்கிட்டே மூனுபேர் கூட போனாரு, நானும் கூட மாப்பிள்ளை ன்னு கூப்பிட்டேன். பட் நோ ரெஸ்பான்ஸ் காதுல விழாதமாதிரியே போனாருடா…. சரி அவங்க பிரெண்ட்ஸ்சா இருக்குமுன்னு நானும் குக் பண்றதுல பிசியாகிட்டேன்”..

“சரி இரு மச்சான் ஒரு போன் பண்ணிட்டு வந்துறேன்” என்றவன் தந்தைக்கு அழைக்க அது பிசி என்று வர தியாவுக்கு அழைத்தான்…

அவன் அழைப்பை உடனே ஏற்றவள் விம்மி விம்மி அழ அவள் அழுவதில் பதட்டமானவன் “வது… வது… ஏன்மா அழுகுற?… ஏதாவது பிராப்ளமா?.. என்ன ஆச்சிமா?… ஏதாவது சொல்லுமா??” என்று பதறியபடி பேச.

“சித்து, சித்து இங்க என்னன்னமோ நடந்துடுச்சி…. என்று மறுமுறை விம்மியவள் மாப்பிள்ளைய காணும்…அக்கா அழுதுகிட்டே இருக்கா… அப்பா அம்மா பதட்டமா இருக்காங்க…. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கண்டபடி பேசுறாங்க… இங்க ஒரே குழப்பமா இருக்கு..”. என்று ஒருவழியாய் திக்கி திணறி அழுதுகொண்டே கூறினாள் தியா

“என்ன மாப்பிள்ளைய காணுமா?!?!” என்றான் அதிர்ச்சியாய்

“ஆமா சித்து அரவிந்த யரோ கடத்திட்டாங்களாம்…. ஏதோ டாக்குமெட்டாம் அதை உடனே கொடுத்தாத விடுவாங்களாம்…. இங்க பிரச்சனையா இருக்கு அக்காவ பாக்கவே கஷ்டமா இருக்கு அவ கல்யாணமே வேண்டன்னு இருந்தா அப்பாவுக்காக இந்த கல்யாண்த்துக்கு சம்மதிச்சிட்டு அந்த பொம்பளையோட ஏச்சையும் பேச்சையும் கேட்டுக்கிட்டு இந்த நிலைமையில நிக்குறா” என்று கேவியபடியே கூற

அதை ஜீரணிக்க திணறியவன் நண்பன் கூறியது நினைவில் வர விஷயம் ஏதோ தவறாக இருப்பதை ஊகித்து சற்று அவளுக்கு சமாதனம் கூறி அவளை தேற்றி “நீ தைரியமா இரு நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துறேன்” என்றான்.

“நீ உடனே இங்க வா சித்து பீளிஸ் அவள பாக்கவே கஷ்டமா இருக்கு” என்று அவளும் சிறு பிள்ளையாய் அடம்பிடிக்க

“வது என்ன இது சின்ன பிள்ளைபோல?!?!” இப்போதான் நீ தைரியமா கவி கூடவே இருக்கனும் அவளுக்கு ஆயிரம் பேர் இருந்தாலும் நீ கூட இருக்காபோல வராது… அழுகரத முதல்ல நிறுத்து, போனை வைச்சிட்டு நீ அவ கூட போய் இரு கவிய தனியா விடாத புரியுதா… நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துறேன் சரியா” என்றான்.

அவன் கூற்றில் சற்று தெம்பு வர “சித்து நீ சீக்கிரம் வந்துடு” என்றபடி போனை கட் செய்தவள் கவியுடன் சென்று நின்று கொண்டாள்.

போன் பேசி முடித்தவன் கோபியிடம் வந்து “மாப்புள அங்க உண்மையிலேயே பிரச்சனை தான்டா…. அரவிந்த கடத்திட்டாங்கன்னு ஒரே கலேபரமா இருக்காம்”

“என்னடா இது!!! புதுசா இருக்கு…!!! அவனே ரெண்டு பேர்கூட போனான் அவனை கடத்திட்டாங்களா?!?! இதுல ஏதோ தப்பா இருக்கு மச்சான் நீ என்னடா நினைக்கிர???” என்று கோபி தன் சந்தேகத்தை சித்துவிடம் தெருவிக்க

“ஆமா மாப்புள இதுல என்னமோ இருக்கு… அரவிந்தும் அவன் கூட வந்த ரெண்டு பேரும் எந்த பக்கமா போனாங்கன்னு தெரியுமா??? நீ கவனிச்சியா” என்று அவனிடம் விசாரித்தான் சித்து.

“இந்த பக்கமாதான்டா வந்தாங்க…” ஆனா என்று இழுத்தவன் சிறிது யோசித்து வா போய் பாக்கலாம் ஏதாவது தெரிய வரவும் வாய்ப்பிருக்கு இங்க இருக்க இண்டு இடுக்கு சந்து பொந்துன்னு எல்லா இடமும் தெரியும் வா மச்சா அவனை விடகூடாது “… என்றான் கோபி

சித்து பைக்கை ஓட்ட பின்னால் அமர்ந்தபடி வழியெங்கும் பார்வையை செலுத்தி வந்தான் கோபி “மச்சா இங்க இரண்டு மூனு குடோன் இருக்குடா அதுலாம் யூஸ் பண்ணாம மூடிதான் வைச்சி இருக்காங்க, என் சந்தேகம் என்னன்னா ஏன்டா அத இவனுங்க யூஸ் பண்ணி இருக்க கூடாது!?!”…

“நிச்சயம் வாய்ப்பு இருக்கு மாப்புள… ஏன்னா அங்கிள்கிட்ட இருக்க டாக்குமண்ட்ஸ்ஸ டிமெண்ட் பண்ணிதானே இப்படி ஒரு டிராமவ ஆடிக்கிட்டு இருக்கானுங்க, கன்பார்மா இங்க எங்கேயோ இருந்துதான் அவனுங்க காய் நகத்திக்கிட்டு இருக்கானுங்க” என்று கூறியபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்த சித்துவின் பைக் பின்னால் இரும்பில் ஆனா ஆயுதம் ஒன்று தாக்க இருவரும் நிலை குலைந்து விழுந்தனர்….

விழுந்த இருவரும் கண்மூடி கண் திறக்குமுன் இருவரையும் 3 தடியர்கள் சரமாரியாய் தாக்க அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் திணறியபடி எழுந்த நின்ற சித்துவையும் கோபியையும் விடாமல் அடிக்க பறந்து வந்த ஒரு கட்டை அடித்தவர்களை தாக்கி கிழே விழுந்தது….

அடித்துக் கொண்டிருந்தவர்கள் அப்படியே ஷாக் அடித்தாற்போல நிற்க டேய் “என்னடா கட்டை தனியா பறந்து வருது..ஏதாவது பேய் பிசாசு இருக்குமோ!!” என்று சுற்றிலும் பார்வையை அலையவிட்டபடி அவர்களில் ஒருவன் கண்களில் கலவரத்துடன் கூற.

அவனை முறைத்தபடி “டேய் நாயே பேயாவது?? பிசாசவது?? எவனாவது தூக்கி போட்டு இருப்பாண்டா யாருன்னு பாருங்கடா அங்க” என்றான் மற்றொருவன்

அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சித்துவும் கோபியும் கொஞ்சம் சமாளித்து திருப்பி தாக்க தேடிச்சென்ற மற்றோருவன் கையை முதுகுக்கு பின்னால் திருப்பி அடித்தபடி வந்தான் கேஷவ்…

“நீங்களா” என்று அவனை அடையாளம் கண்டுக்கொண்ட சித்தார்த்தை “ஹலோ நண்பா…அங்க பாருங்க அடிக்க வர்ராங்க” என்று கூற ஆளுக்கு ஒருவராய் அடித்து வெளுத்து விட்டனர் அந்த மூன்று தடியர்களையும்…

“அடேய் நாயே யாராவது ஒருத்த சிக்குனா அவன் யாரு அவன் பேக்ரவுன்டு என்னன்னே தெரியாம அவனை போட்டு இந்த அடி அடிப்பிங்களாடா தடி மாட்டு முண்டங்களா ????” என்று கோபி ஒருவனை மண்டியிட வைத்து அவன் தலையிலையே நங்கு நங்கென்று கொட்ட

அவன் கொட்டியதின் வலியில் கத்தியவன் தலையை தேய்த்து விட்டபடியே “நான் மட்டுமா அண்ணே அடிச்சேன் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தானே அடிச்சாங்க… அவங்கள மட்டும் வீட்டுட்டிங்க” என்று அவனால் முடிந்தது அவர்களுக்கும் அந்த கொட்டை சமபங்காக பிரித்து தர பரிந்துரைக்க

“நான்கூட ஸ்கூல் டேஸ்ல கிரிக்கெட் விளையாடியது குறி தப்பும்ன்னு நினைச்சேன்.. பட் பரவாயில்ல அந்த அளவு மோசம் இல்லை பக்காவாதான் விழுந்து இருக்கு” என்று பக்கத்தில் முட்டி போட்டவனை ஒரு அடி வைத்த கேஷவ் “சரி இவனுங்க எதுக்கு நண்பா உங்கள அடிச்சிக்கிட்டு இருந்தானுங்க?!?!”

“அதானே பாஸ் எங்களுக்கும் தெரியல!!…” டேய் யாருடா நீங்க எதுக்குடா எங்கள அடிக்க வந்திங்க…. சொல்லுங்கடா, சொல்லுங்க இல்ல…..” என்று பக்கதில் அவன் பைக்கில் பட்டு கிழே விழந்த இரும்பு பைப்பை எடுத்து சித்து அவர்களின் தலையில் அடிக்க ஓங்க

“சார் ,சார் அடிச்சிடாதிங்க சார் உண்மையெல்லாம் சொல்லிறோம் சார்” என்று பயத்தில் கத்தினான் அவர்களில் ஒருவன்…

“அப்படி போடு அருவால… எண்டா மாப்புள இவனுங்க பார்க்க தான் டெரர் பீசா இருக்கனுங்க… ஆனா மூனும் சரியான காமெடி பீசுகடா..”என்று அவர்களை கோபி கிண்டலடிக்க

“ஏய் நீ வேற கொஞ்சம் அடங்குடா…” என்று கோபியை அடக்கிய சித்தார்த் “யாருடா உங்கள எங்களை அடிக்க சொன்னது சொல்லுங்கடா” என்றான்

“அரவிந்துதான் சார் உங்கள அடிக்க சொன்னது”

“என்னது அரவிந்த்தா?!?” என்று அதிர்ந்தான் சித்தார்த்

|அவனைதான் கடத்தி வைச்சிருக்கங்களாமே டா!!!” என்று வடிவேலுவின் மாடுலேசனில் சொன்னவன் ‘இதுல எந்த அரவிந்தடா நீ சொல்ற???… சே … சே… இந்த அரவிந்து தொல்லை பெருந்தொல்லையா இருக்கே” என்று கோபி இடையில் அவனை கலாய்க்க

“டேய் சிரியஸ்னஸ் புரியாமா காமெடி பண்ணிக்கிட்டு…” என்று கோபியை கடிந்துகொண்டவன் எந்த அரவிந்த் டா என்று அவர்களை அடிக்க மேலும் சித்தார்த் கை ஓங்க

“வக்கீல் வீட்டுக்கு மாப்பிளையா வந்து இருக்கானே அந்த அரவிந்த் தாங்க உங்கள அடிக்க சொன்னது” என்றான் பட்டென்று

சித்துவிற்கு அதிர்ச்சி என்றால் மாணிக்கம் வீட்டுக்கு கல்யாணத்திற்கு வந்த கேஷவ்விற்கும் அதிர்ச்சி ” என்ன சொல்றாங்க நண்பா இவங்க, மாணிக்கம் அங்கில் மாப்பிள்ளையா இதுக்கு காரணம்??”

“உங்களுக்கு அங்கிள தெரியுமா பாஸ்?” என்றான் சித்து

“ம்..”. என்று தலையை ஆட்டி ஆம் என்றவன் “அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு வந்துட்டு இருக்கும்போது வர்ற வழில தான் யாரையோ அட்டாக் பண்றத பாத்துட்டு வண்டிய நிறுத்தினேன். பார்த்தா நீங்க அதான் நானும் ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்”…..

“அப்படியா….!!! ரொம்ப தெங்க்ஸ்…. ஆங் உங்க பேரு”

“அயம் கேஷவ்” என்று கூற

“உங்க டிஸ்கஷன் இருக்கட்டும் பாஸ்… நாம அப்புறம் பேசலாம். இப்போ அங்க கல்யாணம் பாதியில நிக்குது ,அவனை கடத்திட்டாங்கன்னு நாடகம் வேற ஆடுறான்…. சரி இதுல நம்ம எப்புடிடா பிரேமுக்குள்ள வந்தோம்!?!” என்று கோபி தன் சந்தேகத்தை கேட்க

“கொஞ்சம் வைட் பண்ணு நண்பா… அதையும் அவனுங்க வாயாலையே சொல்லுவானுங்க கேட்போம்”.என்று கேஷவ் கூற மூவரில் ஒருவன் தொடர்ந்தான்

” அரவிந்த கடத்திட்டாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அங்க நடக்குதுறத கண்காணிக்க நாங்க அங்கதான் இருந்தோம்… போலீஸ்க்கு போறாங்களா, இல்லவேற ஏதாவது ஐடியா பண்றாங்களான்னு பார்த்துக்கிட்டே அரவிந்துக்கு அப்போ அப்போ தகவல் கொடுத்துட்டு அங்கயே சுத்திக்கிட்டு இருந்தோம்… உன்னையும் ஒரு கண்ணு பாத்துக்க சொல்லி அரவிந்த் சொல்லி இருந்தான். அப்போ தான் நீங்க ரெண்டு பேர் பேசுறது நாங்க கேட்டோம்… உடனே அரவிந்துக்கு தகவல் கொடுத்ததுக்கு உன்னையும் கட்டி தூக்கி வர சொன்னான் அதான் உங்க பின்னாடியே வந்தோம்”…எனறான் அந்த தடியன்.

“சரி இப்போ அவன் இருக்க இடத்துக்கு எங்கள கூட்டிட்டு போ” என்றான் சித்தார்த்

“நானும் வறேன்” என்று கேஷவ்வும் உடன் வர

“வாங்க பாஸ்… ஆனா யாருக்கும் தெரியாம வாங்க… அவனுங்க அலர்ட் ஆகிட போறானுங்க” என்று சித்தார்த் கூற பதினைந்து நிமிட பயணத்தில் தனியாய் இருந்த ஒரு பழைய வீட்டிற்குள் நுழைந்ததும் சித்துவின் செல்போனில் அனைத்தையும் பதிவு பண்ண ஆரம்பித்தனர்….

“என்னடா இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கானுங்க….”என்று கோபமாய் ஒரு கட்டையைய் தூக்கி எரிந்து எரிச்சலுடன் இங்கும் அங்கும் குட்டிப்போட்ட பூனையாய் நடை பயின்று கொண்டிருந்தான் அரவிந்த்

“அண்ணே கொஞ்ச நேரத்துத்துல வந்துருவானுங்கன்ணே ஆள் நடமாட்டம் இருக்கும் இடம் சந்தடி இல்லாம காரியத்தை முடிச்சிக்கிட்டு வரனும்ல நேரம் எடுக்கும்ணே”

“என் அவசரம் புரியாம அந்த மாணிக்கந்தான் லேட் பண்றான்னா இவனுங்களும் லேட் பண்றானுங்க….. நேரம் போக போக என் கையில கிடைக்க இருக்க பொன் முட்டை இடுற வாத்து என் கைய விட்டு போயிடும் டா… அவனுங்க என்னை கண்டுபிடிக்கறத்துக்குள்ள நான் நல்லவனா நடிச்சாகனும்டா” என்று பொறிந்தபடி எரிச்சலின் உச்சியில் இருந்த அரவிந்திற்கு போன் வர

“இவரு வேற” என்று சலித்தபடி “சொல்லுங்க சார்” என்றிட அந்த நபர் என்ன கூறினாரோ

“சார் உங்க வேலைய கொடுத்துட்டிங்கல்ல அதோட அதை மறந்துடுங்க எப்படியும் அந்த டாக்குமண்ட்ஸ் உங்க கைக்கு வந்திடும்.அதுக்கு நான் பொறுப்பு” என்றவன் “அய்யாக்கிட்ட சொல்லிடுங்க சார் இன்னும் ஒன் அவர்ல வந்துடும்னு” என்றபடி போனை வைத்துவிட்டு

“இவனுங்க வேற நைய்யி நைய்யினிட்டு சே….. “என்று போனை சோபாவின் மேல் விட்டெறிந்தவன்….

“ஒரு கல்லுல இரண்டு மாங்கவ அடிச்சிடலான்னு பாத்த அந்த மாணிக்கம் சரிபட்டு வரமாட்டான் போல இருக்கே… இவ்வளவு லேட் பண்றான் டேய் மைக்கேல் ஒரு போனை போடுடா அந்த ஆளுக்கு… நீ தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசத்துக்கும் உன் மாப்பிள்ளையோட உயிருக்கு ஆபத்து வர போகுதுன்னு சொல்லி அவனை பீதி ஆக்குடா… கல்யாணத்தை முடிச்சிட்டு லட்டு மாதிரி இருக்க பொண்ண கட்டிக்கிட்டு வீட்டோட செட்டில் ஆகி சொத்தை ஆட்டைய போடலான்னு பாத்தா நடுவுல இந்த நாதாரிங்க வேற அரெக் தூ…..” என்று துப்பினான் அவன்

“அண்ணே …”. என்று அந்த மூன்று தடியர்களும் உள்ளே செல்ல

“டேய் வந்துட்டானுங்கடா பசங்க…. எங்க டா அவனுங்க” என்று ஆர்வமாய் கேட்டான் அரவிந்த்..

இதோ வந்து இருக்கோம் டா” என்று “அவர்களின் பின்னால் இருந்து வந்தனர் மூவரும்

“ஓ….. ஷிட்” என்று தலையில் கை வைத்தவன் “டேய் புடிங்கடா இவனுங்கள” என்று கூறியதும்

“யாரை கண்ணு???? எங்களையா???” என்று கேட்ட சித்தார்த் முன்னால் வந்தான்…

” உன்னை புடிச்சி லாடம் கட்டதான் மாப்புள மாமியார் வீட்டுல இருந்து ஆளுங்க வந்து இருக்க்கோம்… கொஞ்சம் இந்த பக்கம் வர்ரிங்களா???” என்று இன்பெக்டர் வர

இதை சற்றும் எதிர்பார்க்காத அரவிந்த் ஆத்திரத்தில் அவன் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியால் சித்தார்த்தை குத்த பாய்ந்து வந்தவனை கையை தட்டி விட்டு கேஷவ்வும் கோபியும் அவனை அடி பிண்ணி எடுக்க வலியின் உச்சியில் இருந்தவன் ” சார் சார் என்னை அரஸ்ட் பண்ணுங்க சார் இவனுங்க அடிக்கிரானுங்க பார்த்துக்கிட்டு நிக்கறீங்க” என்று போலீஸையே திட்ட

“உன்னை….” என்று அவனை அறைந்தவர் “நீ இப்போ பண்ண வேலைக்கு அட்டம் டூ மர்டர்ன்னு கேஸ் போட்டு உள்ள தள்ளி 7 வருசம் களிதிண்ண வைக்கனும் இதுல நீ சொல்றியா??? போடா போய் ஜீப்ல ஏறு” என்று அவனை தள்ளி விட்டார் இன்ஸ்பெக்டர்..

“மச்சா நீ போலீஸ் கம்ளைன்ட் ஒன்னு எழுதி கொடுத்துடு மத்தத நான் பாத்துக்குறேன்.. நாயி ஜென்மத்துக்கும் வெளியே வராதபடி பண்ணிடுறேன்” என்று கூறினார் போலீஸ் நண்பர் சக்தி

” ரொம்ப தாங்கஸ் சக்தி” என்று போலீஸ் நண்பனுக்கு நன்றி கூற

“நான்தான் மச்சா தாங்கஸ் சொல்லனும்… இந்த கேஸ்ல நானும் வக்கில் சார்கிட்ட எவ்வளவோ அன்னிக்கு கேட்டேன் அவர் ஒரு போலீஸ் கம்பளைன்ட் கொடுத்திருந்தா விஷயம் இவ்வளவு தூரம் வந்து இருக்காது என்ன மறைக்கிறாருன்னு தெரியலை அவனுங்க என்ன தேடுறானுங்கனும் புரியலை எதுவோ ஒன்னு அவர்கிட்ட இருக்கு மச்சா” என்று இன்ஸ்பெக்டர் சக்தி கூறினார்.

யோசனையுடன் இருந்த கேஷவ் “சக்தி நாம் கிளம்பலாம் அங்க நிலவரம் எப்படி இருக்குன்னு தெரியல…” என்று கேஷவ் கூற “நானும் இப்போ அங்கதான் போகனும்ன்னு இருந்தேன் இந்த கேஸ் விஷயமா வாங்க போலாம்… கான்ஸ்டெபிள் கோவிலுக்கு வண்டிய விடுங்க…” என்றதும் கேஷவ் அவன் வண்டியில் வர சித்துவும் கோபியும் பைக்கில் கிளம்பினர்……

மண்டபத்தினுள் நுழைந்ததும் கண்களில் கண்ணீருடன் அன்னையின் பக்கத்தில் நின்றிருந்த பார்கவி தெரிய இவளுக்கா கல்யாணம் என்று அதிர்ந்தான் கேஷவ்… அதிலும் அரவிந்தின் தாய் திட்டியது கேட்டதும் எங்கிருந்துதான் அந்த அத்தனை கோபம் வந்தோ இன்ஸ்பெக்டர் அழைத்து வந்துகொண்டிருந்த அரவிந்தை தரதரவென்று இழுத்து வந்து நிறுத்தியவன் தன் ஆத்திரம் மேலோங்க கத்தி அவரின் வாயை அடைத்தான்…
………………………………………………………………….

“இப்படி ஒரு தருதலை பிள்ளைய பெத்துட்டு என்ன பேச்சி பேசுறிங்க??? இப்போ பேசுங்க சார் உங்க பிள்ளையின் லட்சணத்தபத்தி… ஒரு பொண்ணு அதுவும் மணவரையிலும் வந்து உங்க வீடு மட்டுமே உலகம்ன்னு வரபோற பொண்ண எப்படி பேசினிங்க மா??? இப்போ பேசுங்க,இப்போ பேசுங்க???” என்று அவர்களை பார்த்து கேட்க

“அடப்பாவி பயலே!!!! உன்னை நல்லவன்னு நம்பி இங்க என்னன்ன ரகலை பண்ணிட்டேன்…. உன்னையும் சுமந்து பெத்தேனே இந்த வயித்துல!!!” என்று வயிற்றில் அடித்துக்கொண்டார் அரவிந்தின் தாயர்….

“உன்னையெல்லாம் அடிச்சே கொல்லனும் டா நாயே… எங்களை நம்பவைச்சி ஏமாத்திட்டியே டா!!!… ஊர்ல மான மரியாதையோட வாழற பரம்பரையில பொறந்துட்டு இப்படி தருதலையா வந்து நிக்கிரியே டா நாயே… நாயே வீட்டு பக்கம் வந்திடாத டா உன்னை இன்னையோட தலை முழுகிட்டேன். வாடி இப்படி ஒரு பிள்ளையே பிறக்கலன்னு நெனச்சிக்கிடடு இவனை தலைமுழுகனும்” என்று மனைவியை அழைத்துக்கொண்டு அங்கருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவனின் பெற்றோர்கள் சென்றுவிட
மாணிக்கத்திடம் தனியாக பேசிய இன்ஸ்பெக்டர் அவனையும் அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்க்கு சென்றுவிட்டார்

அனைவரும் கலைந்து செல்ல முக்கிய உறவினர்கள் மட்டுமே இருக்க” எல்லாம் உங்களாலதான் இந்த ஊரு முக்கியம் இந்த 1000 குடும்பம் முக்கியம்ன்னு சொன்னிங்களே, உங்க பொண்ணு முக்கியம்ன்னு உங்களுக்கு தெரியலையே….. ” என்று அவரின் சகதர்மினி மகளை அனைத்துக் கொண்டு அழ “மணமேடை வரை வந்த என் பொண்ணு கல்யாணம் பாதியிலேயே நின்னுபோச்சே” என்று அப்படியே அழுதபடி மயங்கி சரிந்தார்

“மஞ்சுமா… மஞ்சு…மஞ்சுமா… என்னடி இது இப்படி இடிஞ்சி போயிட்ட” என்று அவரை தாங்கிய மாணிக்கம் தியா கொண்டுவந்த தண்ணீரை தெளித்து மயக்கம் தெளியவைக்க மயக்கத்தில் இருந்து எழுந்த மஞ்சுளா “அம்மா, அம்மா”என்று பக்கத்தில் அழுதபடி இருந்த பார்கவியை அணைத்து கொண்டு அழுதார் “என் பொண்ணு கல்யாணம் நின்னு போச்சேங்க அந்த சாமிக்கு கூட கண் இல்லையே… கோயில்ல இருக்கரது எல்லாம் வெறும் கல்லா???… நான் கதறுறது எதுவும் அந்த கல்லுக்கு கேக்கலியே….” என்று வாய்க்கு வந்தபடி இறைவனை நிந்திக்க

சித்துவின் தாயும் கேஷவ்வின் தாயும் அவருக்கு அருகில் வந்தவர்கள் “உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா என் பையன் கேஷவ்விற்கு உங்க பொண்ண கொடுக்க சம்மதமா?”என்று கேட்டதும் அப்படி கேட்க வந்த சித்துவின் தாய் பேசவார்த்தையின்றி நின்றுவிட்டார்…

ஆச்சர்யமாய் அனைவரும் பார்க்க “நான் உங்க சமூகத்தை சேரந்தவங்க இல்ல… இருந்தும் ஏன் கேட்கறேன்ன உங்க பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு… உங்க பொண்ணோட கல்லம் கபடம் இல்லா குழந்தை முகம் எங்களுக்கு இப்படி ஒரு பொண்ணு பிறங்காதான்னு ஏங்கினோம். இப்போ மருமகளா வர மாட்டாளான்னு ஏங்குறோம்…” என்றவர் “என் பையன் உங்க பொண்ணை கண்கலங்காம கண்ணுக்குள்ள வச்சி தாங்குவான்… உங்க பொண்ணும் சந்தோஷமா இருப்பா உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் சம்மதமுன்னா இதே மணவரையில கல்யாணத்தை வைச்சிக்கலாம்”… என்று தடாலடியாய் அலுங்காமல் குலுங்கமல் ஒரு குண்டை தூக்கி போட இதை கேட்ட கேஷவ்விற்க்கு பேரதிர்ச்சி ‘இன்னைக்கு யார் முகத்துலடா முழிச்சேன் காலைல இருந்து ஷாக்குக்கு, மேல ஷாக்கா …. கொடுக்குறாங்க தாங்குமா இந்த மனசு’ என்று அவனுக்கு அவனே இரக்கப்பட்டவன் ‘எவ்வளவோ தாங்கிட்டோம்… இதை தாங்கமட்டோமா???” என்று தனக்கு தானே ஆறுதலை கூறிக்கொண்டவன் தந்தையின் பதிலுக்காக காத்திருந்தான்.

“மாணிக்கம் நானே கேக்கனுமுன்னு இருந்தேன்.. இவ கேட்டுட்டா உனக்கு சம்மதமா?? என்னமா தங்கச்சி என் மனைவி கேட்டதுல உங்களுக்கு சம்மதமா?? முதல்ல உன் பொண்ணுக்கு சம்மதமான்னு கேளு… எங்களுக்கு இந்த ஜாதி, மாதம் மேலல்லாம் பெருசா நம்பிக்கை ஒன்னும் இல்ல.. எங்களுக்கு நல்லவங்களா இருந்தா போதும் நீ என்னடா?? என்ன சொல்ற??என்று அவரும் தாட்பூட் தஞ்சவூர் என்ற ரேஞ்சிக்கு கேட்க

“அண்ணே ஜாதி… என்னன்னே ஜாதி அத பாத்து, பாத்து தானே இப்படி ஒரு சாக்கடையில போய் விழ இருந்தோம்… என் பொண்ண கடைசி வரை வச்சி வாழறவனா இருந்தா போதும்… மனசாட்சிக்கு பயப்புடுற நல்லவனா இருந்தா போதும்… உங்க பையனுக்கு கொடுக்க எங்களுக்கு பரிபூரண சம்மதம்” என்று மஞ்சுளா உணர்வுப்பூர்வமாய் கூற

“உன் புள்ளை கேஷவ் ஏற்கனவே ரெண்டு முறை என் உயிரை காப்பாத்தி இருக்கான்… இந்த முறை என் மானத்தை காப்பாத்த போறான்… உன் புள்ளை போல தங்கமான ஒரு பையனுக்கு என் பொண்ண கொடுக்கலனா, அதவிட என் பொண்ணுக்கு வேற எதுவும் நான் பெரிய துரோகம் செய்ய வேண்டாம்… என்று உள்ளிருந்து கூற அவரின் கைபிடித்து ஆறுதலாய் அழுத்தம் தொடுத்தவர்…

“நீங்க உங்க சம்மதத்த மட்டும் சொல்லிட்டிங்க, என் மருமக சம்மதத்த கேக்கல நானே என் மருமக கிட்ட கேக்குறேன்… ஏன்மா மருமகளே உனக்கு என் பையன் கேஷவ கல்யாணம் பண்ணிக்க சம்மதமா… சொல்லுமா …சும்மா செல்லுமா… பையனுக்கு நான் உத்தரவாதம் கொடுக்குறேன். உன்னை நல்லா பாத்துப்பான் மா … “என்று அவர் விளையாட்டாய் ஆனால் அதிலும் அழுத்தமாய் கேட்க

அன்னை தந்தையின் முகத்தில் இருந்த கலக்கம் உணர்ந்தவள் மௌனமாய் தலையை ஆட்டியதும் அடுத்த அரை மணிநேரத்தில் அமளிதுமளிபட்டது. மணவரையில் அய்யர் மந்திரம் ஓத அனைவரும் அட்சதை தூவ அவளின் பொன்னிற மேனியில் மங்கள நாணை பூட்டினான் கேஷவ்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here