காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 15

0
401

நினைவு எனும் ஆழிப்பேரலையில் தத்தளித்து கரைசேர முடியால் முழ்கி இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தற்கான தடம் இருக்க கண்கள் மூடி கார் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பார்கவி.
திடீரென்று கேஷவ் இட்ட சடன்பிரேக்கால் கண்ணாடியில் சட்டென தலை லேசாய் இடித்துக் கொண்டதும் விழிதிறந்து பார்க்க ராஜராமன் இல்லம் வந்திருந்தது…..

அவள் இடித்துக்கொண்டது தெரிந்து மன்னிப்பு கேட்க மனம் பதைத்தாலும் இருவரும் கடைபிடித்த மௌனத்தை கலைக்க மனமின்றி ஸ்டியரிங்கில் கையை வைத்தபடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் கேஷவ்

வாசலிலேயே திருமண ஜோடியை வரவேற்க குடும்பம் முழுவதும் நின்றிருக்க ஒருவித மிரட்சியுடன் கண்களை அழுந்தமாக மூடித்திறந்தாள். அனைவரும் அவர்களுக்காக காத்துக்கொண்டிருப்பது கருத்தில் பட இயந்திர பொம்மையாய் இருப்பவளின் கண்கள் படபடத்துக்கொண்டது… அவள் இறங்குவதற்கு சித்தார்த் கார்கதவை திறந்துவிட அடுத்தபக்க கதவை திறந்துகொண்டு கேஷவ் வெளியேவந்தான்…

என் மங்கை நீ – திருமாங்கல்யம் மின்னிட முப்பெரும் தேவியரும் உடுத்த ஆசைப்படும் – கூரைப்பட்டு சரசரக்க கண்ணனின் பூங்குழலும் இசைக்கமுடியாத உன் மெட்டிஒலியின் ஓசை வீடெங்கும் ஒலிக்க உன் மணாளனின் கை கோர்த்து திருமணக்கோலம் பூண்ட என் திருமகளே வரும் நாளும் இன்றே….

“சாந்தா…. சாந்தா… ஆலம் ரெடிபண்ணிட்டியா பொண்ணு மாப்பிள்ளை வந்துட்டாங்க சீக்கிரம் வா…” என்று உள்ளே குரல் கொடுத்த ஆதி அம்மாவின் கையில் ஆலத்தை எடுந்து வந்து சாந்தா கொடுக்க, “வாங்க, வாங்க ஏன் அங்கயே நிக்கிறிங்க… இங்க வந்து ஜோடியா நில்லுங்க, இந்த ஊரு கண்ணே உங்கமேலதான் பட்டு இருக்கும்”. என்று ஆலத்தை சுற்றியபடியே “இந்த ஊரு கண்ணு என்ன!! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு அத்தன அம்சமா இருக்கிங்க ரெண்டுபேரும்” என்றவர் சுற்றி முடித்து “இது எடுத்துட்டு போய் முச்சந்தில ஊத்திடு சாந்தா” என்று அவரிவிடம் கொடுத்தனும்பினார் ஆதி.

இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டுதான் இருந்தனர் … இருந்தும் கண்ணுக்கு தெரியாத திரையாய் பிரம்மாண்ட சுவராய் ஒரு மாய பிம்பம் மனதில் தோன்றி இருவருக்கும் இடையே விஸ்வரூபமாய் எழுந்து நின்றது… இன்று இந்த நிமிடம் இந்த நொடி நடப்பதையெல்லாம் நினைவில் கிரகித்துக்கொள்ள முடியாமல் இருவரும் சோர்வாய் நின்றுகொண்டு இருந்தனர்…

“மகாலட்சுமி மாதிரி இருக்க மா… வா மா மருமகளே வா வலது காலை எடுத்துவச்சி உள்ள வா” என்று ஆசையாய் தலை வருடி அழைத்து சென்ற மாமியர் கவியின் மனதில் உயர்ந்து நின்றார் … விளக்கேற்றி முடிக்கும் தருவாயில் கூட நல்ல நல்ல நிலையிலே ஓரளவு பலத்துடன் நின்றவள் கைகூப்பி தொழுதுக் கொண்டிருக்கும் வேலையில் துவண்டு அப்படியே விழ இருந்தவளை மலர்மாலை போல அருகில் இருந்த கேஷவ் ஏந்திக்கொள்ள அனைவருக்கும் அவளுக்கு என்ன ஆனதோ என்றிருக்க இந்த காட்சியை கண்ட பிள்ளைகளை பெற்றவர்களுக்கு மட்டும் மனதில் குடியிருந்த சிறு கலக்கமும் மறைந்தது… அவர்களின் வாழ்க்கை சீக்கிரமே இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

நினைவு தப்பி கண்மூடி மயங்கிய நிலையில் இருந்தவளை கைகளில் ஏந்திருந்தவனின் இதயம் தறிக்கெட்டு துடித்துக்கொண்டிருந்தது.. இது எந்த மாதிரியான உணர்வு என புரிந்துகொள்ள மறுத்து மூளை வேலை நிறுத்தம் செய்து விட அவளுக்கு என்ன ஆனதோ என்ற எண்ணம் மட்டும் அவனை ஆக்கிரமித்து இருந்தது… “என்னமா ஆச்சி…. என்னடா ஆச்சி…” என்று ஆளுக்கு ஒருவராய் அவளை பதட்டத்துடன் அழைத்துக் கொண்டிருந்தனர்…

“கேஷவ் இங்க, இப்படி படிக்கவைப்பா” என்று ஆதி கூற அவளை படுக்க வைத்தவன் என்னசெய்வது என்று புரியாமல் தாயை பார்க்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் மருமகளின் நிலை கண்முண்ணே விரிய விரைவாய் செயல்பட தொடங்கினார் அவர்.

“அம்மாடி கொஞ்சம் தணணீர் கொண்டுவா” என கேட்பதற்க்குள் தண்ணீர் குவளையோடு வந்து நின்றாள் தியா அதை வாங்கி தெளித்தும், கண்களை சற்று அழுத்தம்கொண்டு துடைத்தும் விட்டவர் கன்னத்தில் தட்டி கவி கவி இங்க பாருடா என அழைக்க கவியின் இடது பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த மஞ்சுளா “கவி இங்க பாருடா… இந்த அம்மாவ பாருடா.. என்னடா என்ன செய்யுது??” என்று மகளின் தலையில் கைவைத்து நீவ கண்விழித்து பார்த்தவளின் கண்களில் முதலில் பட்டது அவளை கண்டதும் வெளியே செல்லும் கேஷவ் தான். தாய், தந்தை,அத்தை , மாமா ,தங்கை ,சித்து என அனைவரும் அவளை சூழ்ந்து இருக்க ஏதோ ஒரு வெறுமை என்னவென்று கூற இயலாத வெறுமை மனதை சூழ்ந்து கொண்டு ராட்சஸ ஆட்டம் போட ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தவள் எழுந்து உட்கார முயல அவளை கை தாங்களாய் பிடித்த மஞ்சுளா வசதியாக உட்கார வைத்தார்….

இளம் சூட்டில் பாலை கொண்டு வந்த ஆதி, “கவிமா இதை குடிடா காலையில் இருந்து சடங்கு, சம்பரதாயம் அது, இதுன்னு வெறும் வயிற்றுலையே இருந்துகிட்டு இருக்க இதை குடிச்சா கொஞ்சம் இதமா இருக்கும்.
இன்னும் பத்து நிமிஷத்துல சாப்பாடு ரெடியாகிடும் டா சாப்பிட்டினா புது தெம்பு வந்துடும்”. என்று பக்கத்தில் அமர்ந்து அவருக்கு பாலை புகட்ட வேண்டாம் என தடுக்க இருந்தவளும் அன்பாய் அனுசரனையாய் அவர் கொடுப்பதை தட்ட மனமில்லாமல் பருகியவளின் கண்கள் தாயையும் தந்தையையும் வெறித்து நோக்கியது…

அவளின் பார்வை சாட்டிய குற்றச்சாட்டினை அறிந்தவர்கள் “கண்ணா” என்று மாணிக்கம் ஆரம்பிக்க தலையை குணிந்துக்கொண்டவள் மௌனத்தையே கேடயமாக கொண்டு அவர்களின் பேச்சிற்க்கு தடை செய்தாள். சரி பெற்றவர்களுடன் இருக்கட்டும் என்று ஆதியும் உள்ளே சென்று சமயலறையில் தன் கை வண்ணத்தை காட்ட இரண்டு, மூன்று பதார்த்த வகைகளுடன் விருந்தை படைக்க முயன்று கொண்டிருந்தார்.


தங்கள் மகளின் மனதில் இருக்கும் கலக்கத்தையும் இறுக்கத்தையும் தெளிவிக்க பெற்றவர்கள் அவளிடத்தில் பேச முயல அதற்கு எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் போக தளர்ந்த மனதுடன் அவளுக்கு துணையாய் தியாவை விட்டுவிட்டு வெளியே ராஜாராமனோடு பேசிக்கொண்டிருந்த நவனீதன் ராத தம்பதிகளுடன் வந்து அமர்ந்தனர் இருவரும்.

“வாடா வா வா என்று பக்கத்தில் மாணிக்கத்தினை அமர்த்திக்கொண்ட ராஜாராமன் வாமா தங்கச்சி” என்றவர் “ஆதி காபிக்கொண்டு வா”என்று கூற

“இந்தங்க அண்ணா காபி” என்று அவருக்கு அளித்தவர் “அண்ணி எடுத்துக்கோங்க ,இப்போ எப்படி இருக்கா அண்ணி கவி” என்று ஆதி பேச்சை ஆரம்பிக்க.

“இப்போதைக்கு தேவலை.…. ஆனா ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேச மாட்டுறா… என்ன நினைக்கிறான்னே தெரியலை!!! பயமா இருக்கு அண்ணி” என்று உள்ளுக்குள் இருக்கும் பயத்தை பகிர்ந்தார் மஞ்சுளா

அவரின் நிலை கண்டு வருத்தப்பட்டவர் “அண்ணி நீங்க ஏன் இன்னும் கவிய நினைச்சி கவலைபடுறிங்க, நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கோங்க காலைல நடந்தத ஜீரணிக்க நம்மளுக்கே அவகாசம் தேவைபடும்போது அதனால பாதிக்கப்பட்டவ அவ அவளுக்கு நிச்சயம் கொஞ்சம் நாம இடம் கொடுத்துதான் ஆகனும் அண்ணி… இதையெல்லம் ஏத்துக்க நாள் ஆகும் அதுவரை நாமதான் அவளுக்கு ஆதரவாவும் அனுசரனையாகவும் இருக்கனும்”. என்று அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார் ஆதி…

அமைதியாய் கண்மூடி படுத்திருந்த கவி கண்களை திறக்க அருகில் அமர்ந்திருந்த தியா “கவி ஏதாவது வேணுமா? இல்ல ஜீஸ் குடிக்கிறியா? நான் போய் எடுத்துட்டு வரவா?”என்று கேட்டுக்கொண்டே எழபோனவளை வேண்டாம் என தலை அசைத்து நிறுத்தி எழுந்து அமர்ந்தாள் கவி.

“கவி எப்படி இருக்கு, இப்போ பரவாயில்லையா ??என்ற தியாவின் கேள்விக்கு காலையில் இருந்து உபயோகிக்கும் சமிக்ஞைலையே பரவாயில்லை என்பதை போல் தலை அசைக்க அக்கரையாய் அருகில் அமர்ந்தவள் அவள் கையை எடுத்து தனது கைக்குள் பொதுந்து கொண்டு அவறை பார்க்க பார்வையில் வெறுமை ஏமாற்றம் தவிப்பு என அத்தனையும் கலந்திருக்க “கவி நீ இப்படி பேசமா பிரம்மபிடிச்சவ மாதிரி உட்கார்ந்து இருக்கரத பாக்க கஷ்டமா இருக்கு… பீளிஸ் நடந்தத மறக்க டிரை பண்ணு உன்னை நீயே வருத்திக்கிறது நல்லா இல்ல உனக்கு நல்ல லைஃப் அமைஞ்சிருக்கு நல்ல மாமனார் மாமியார் கிடைச்சி இருக்காங்க எல்லத்துக்கும் மேல அந்த படுகுழியில இருந்து மாமா உன்னை காப்பாத்தி இருக்காரு” என்று அவள் கூற கோபமுகமாய் கை நீட்டி பேச்சை நிறுத்தியவள்

“பீளீஸ் தியா பீளீஸ் எதையும் கேக்குற மனநிலையில நான் இல்லை பீளீஸ் என்னை கொஞ்ச நேரம் தனியா விடு” என கூற கவி

“உன்னை” என்று தியாவும் இழுக்க விரக்தியாய் சிரித்தவள்

“என்ன ஏதாவது பண்ணிக்க டிரைபண்ணுவேன்னு பாத்தியா நான் அதையெல்லாம் கடந்து வந்துட்டேன் தியா இப்போ இருக்கரது ஒரு உயிருள்ள பொம்மை அவ்வளவுதான்” என்றவள் படுத்துக்கொள்ள எதுவும் கூறமுடியாமல் வருத்தத்துடன் தியா அறையை விட்டு வெளியேறினாள்…
…………………………………………….………………………………

“அவ படிக்கிறேன் இப்போ கல்யாணம் வேணா வேணான்னு தலபாடா அடிச்சிக்கிட்டா…
நான்தான் அவசர அவசரமா என் பொண்ணுக்கு நல்லது பண்றேன், நல்லது பண்றேன்னு அவளை படுகுழியில தள்ள இருந்தேன்… அதான் என் பொண்ணு என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசமாட்டன்றா” என்று ராதவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் மஞ்சுளா.

“மஞ்சு அப்படியே நீ நினைச்சி இருந்தாலும் உன் பொண்ணு நல்லா இடத்துல இருக்கனும்னு ஆசைப்பட்டு தானே இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ண.. அது தப்பா ஆனது உன்னால இல்ல அந்த வீணபோனவனாலதானே ஆச்சி… கவி மட்டுமா ஏமார்ந்தா??? நாமலும் சேர்ந்துதானே ஏமார்ந்தோம்… போக போக அவ புரிஞ்சுக்குவா…இவங்களா பார்த்தா நல்ல குடும்பமாதான் தெரியுது ஒரு உண்மைய சொல்லனும்னா என்னை விட அவங்க கவிய நல்லா பாத்துக்குவாங்க” புரியாமல் மஞ்சுளா ராதாயே பார்க்க “ஆமா மஞ்சு நீ புலம்பியத பார்த்து சித்துவுக்கு கவிய கேக்கலாம்ன்னு நினைக்கும்போதுதான் அவங்க பையனுக்கு நம்ம கவிய கேட்டாங்க கூட பழகிய எனக்கு உன் அழுகைய பார்த்துதான் கேக்கனும்னு தோனுச்சு ஆனா அவங்க நம்ம கவிய பிடிச்சதுனாலதுன் அவங்க மருமகளா வர சம்மதமான்னு கேட்டாங்க அவளை நல்லா பாத்துக்குவாங்க அவளோட எதிர்காலம் நல்லா இருக்கும்” என்று அவருக்கு அறுதலான வார்த்தைகளை கூறினார் ராதா

அறையில் இருந்து வெளியேறியவள் அன்னை இருக்கும் இடத்திற்கு வர பெரியவர்களின் சம்பாஷனை தெள்ளத்தெளிவாய் காதில் விழந்தது

‘என்னது இது என் காதுல விழந்தது எல்லாம் உண்மையா!!!!! அய்யோ கடவுளே… என் வாழ்க்கையிலே புட்பால் ஆட இருந்திங்களா ஆண்டி…. நீங்க எனக்கு அத்தையா இல்லை வில்லியா?!?! நல்ல வேலை ஆதி அத்தை மட்டும் மாமாக்கு அக்காவ கேக்கலன்னா என்ன நடந்திருக்கும். என நினைக்க அதை யோசிக்க கூட முடியாமல் தலையை உதறியவள் ‘ஆதி அத்தை நீங்க எங்க இருக்கிங்க உங்க கால காட்டுங்க நின்ன இடத்துலையே சாஷ்ட்டிங்கமா விழுந்து கும்பபிடுறேன் இனிமே நீங்கதான் என் குலதெய்வம் என் வாழ்க்கைய திருப்பி கொடுத்த வள்ளல்”. என்று அவரை மனதிற்குள்ளே புகழ்ந்தபடி அவரை தேடி அவர் பக்கத்தில் போய் நின்றவள் “அத்தை உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா அத்தை” என்றாள் சிரத்தபடி

அவளை பார்த்து சிரித்தவர் “கவி எழுந்துட்டாளா கண்ணா” என்றார்

“கொஞ்சம் தூங்குறேன்னு சொன்னா எனக்குதான் போர் அடிச்சுதா… அதான் ஏதாவது ஹேல்ப் பண்ணலாமேன்னு வந்தேன்” என்றாள்

“நீ என்ன படிக்கிற கண்ணா?” என்றார்
அவள் படிப்பை கூறியவள் “அத்தை இந்த வெஜிடேபிள் கட் பண்ணி தரவா??? இல்லை இந்த பூண்டை உறிக்க வா ?” என்று அதை எடுக்க

” வேண்டாம் டா… எல்லாம் முடிஞ்சிடுச்சி பாயசம் தான் பைனல் அதுவும் பண்ணிட்டேன். எல்லாரையும் சாப்பிட கூப்பிடு கண்ணா அது போதும்” என்று கூறவும் அனைவரையும் அழைத்தவள் இறுதியாய் கேஷவும் சித்துவும் இருக்கும் அறைக்கு செல்ல அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

“மாமா” என்று அறைகதவை தட்ட
“திறந்துதான் இருக்கு… வா தியா “என்றான் கேஷவ்

“மாமா அத்தை சாப்பிட கூப்பிட்டாங்க”என்று கூற சரி.என்று தலை அசைக்க சித்துவும் கேஷவும் டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்தனர். அனைவரின் உண்டு முடித்து மறுவீடு கிளம்ப தயராக இப்போதுதான் ரகளையே ஆரம்பம் ஆனது….

“நீ இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்க?அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்கடா…. நீயும் கிளம்புடா …”

“மா பீளீஸ் கொஞ்சம் நிறுத்துறியா மா????”

“என்ன கேஷவ் எதை நிறுத்தனும்?” என்றார் புரியாமல்

“என்னால எங்கயும் போக முடியாது…” அதுவும் அந்த ஆட்டோபாம் கூட போறதுலாம் செட்டே ஆகாது என்று மனதில் நினைத்தவன் “நான் எங்கயும் போகலமா” என்றான்

“கண்ணா மறுவீடு சாம்பரதாயம் டா… கல்யாணம் ஆனா எல்லா ஆம்பளைங்களும் போய்டு வர்ரதுதானே நீ என்டா இப்படி போகமாட்டேன்னு அடம்பிடிக்கிற”

“அம்மா இது எல்லாம் நார்மலா கல்யாணம் பண்றவங்க செய்யுறது எங்க கல்யாணம் நார்மலா நடக்கல சோ இது எல்லாம் என்னால முடியாது வேனும்னா மாமா வீட்டுக்கு அவளை அனுப்பி வைங்க எத்தனை நாள் வேனும்னாலும் இருந்துட்டு வரட்டும்”என்றான் காரமாக

“வாய்மேலேயே ஒன்னு போட்டேன்னா… கை மீறி வளந்த புள்ளையாச்சேன்னு பாக்குறேன். என்ன பேச வைக்காத கேஷவ்”என்று கோபமாய் பேச ஆரம்பித்து கெஞ்சலாய் முடித்தார்.

“அம்மா…” என்று மீண்டும் அவன் அழைக்க

“ஏன்டா கவிய உனக்கு பிடிக்கலையா? நங்க சொன்னதால் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்று வருத்தமாய் கேட்க

“ஷப்பா….. எனக்கு பிடிக்கலன்னா நீங்க என்ன சொல்லி இருந்தாலும் நான் அவ கழத்துல தாலி கட்டி இருக்க மாட்டேன் மா”

அவன் கூறிய வார்த்தை மகிழ்ச்சி அளிக்க “அப்போ உனக்கு பிடிச்சி இருக்கா கண்ணா?” என்று ஆசையாய் கேட்டார் ஆதி

“அப்படியும் சொல்லமுடியாதும்மா என்னோவோ என் மனசுல நீங்க சொன்னதும் மறுக்கமுடியல… அதுவும் இல்லாமா அந்த லேடி பேசின பேச்சிக்கு ஏதாவது பண்ணனும் தோனுச்சி மா” என்றான்

“அப்போ இது அந்த பொம்பள மேல இருந்த கோபத்தால நடந்த கல்யாணமா? என்றார் காட்டமாக

“பச்…. மா நீங்களே ஏதாவது நினைச்சிகாதிங்க எனக்கு அந்த லேடிய நாலு வார்த்தை நல்லா கேக்கனும்னு தோனுச்சி கேட்டேன்.அந்த பொம்பளைக்காக எல்லாம் நான் இவளை கல்யாணம் பண்ணல அதை தெளிவா புருஞ்சிகோங்க… ஏதோ ஒரு உணர்வு தாலி கட்ட சொல்லி தூண்டுச்சி இப்போ தெரிஞ்சிடுச்சி ல… கொஞ்சமாச்சி முகத்தை சிரிச்சா மாதிரி வைச்சிக்குங்க” என்று அன்னையின் கன்னத்தை வலிக்காமல் கிள்ளினான் கேஷவ்

“என்னடி சொல்றா உன் புள்ளை அவன் இன்னும் கிளம்பளையா?’ என்று கேட்டபடி அறையினுள் நுழையா

“அவன் என்ன சொல்றான்??? எப்போம்மா கிளம்பனும் அப்படின்னு கேட்டுக்கிட்டு இருக்கான் “என்றபடி அவன் உடைகளை பெட்டியில் அடுக்கிக்கொண்டே மகனிடம் வேண்டுதல் பார்வையை வைக்க

“அவங்க எல்லாம் ரெடியா இருங்காங்கடி… அம்மாவும் புள்ளையும் உள்ள கொஞ்சிக்கிட்டு இருக்கிங்களா சீக்கிரம் ஆகட்டும்” என்று தன் தோரணையில் உறைக்க

“அம்மா நான் கிளம்புறேன்… என்றபடி அவர் அடுக்கி வைத்திருந்த பெட்டியை கையில் எடுத்தவன் “இது திடீர் கல்யாணம் என்னால ஆபீஸ் எல்லாம் லீவ் போட முடியாது… அங்க இருக்க ஒன் வீக் வரையும் நான் ஆபீஸ் போய்தான் ஆகனும் மிஷனரி வேலை பாதில நிக்குது அதையும் பாக்கனும்… இப்போதான் ஆர்டர் ரீலீவ் பண்ணி இருக்கோம் சோ வொர்க் இருக்கு பா… என்றான் தந்தையிடம்

“அதுக்கென்னடா தராளமா போயிட்டு வா…
ஆனா இவினிங் 4 மணிக்கெல்லாம் வீட்டுல இருக்கனும்…. மருமகள எங்கயாச்சும் அழைச்சிட்டு போ” என்றவர் கிளம்பு என்பதோடு முடித்துக்கொள்ள அனைவரிடமும் விடைபெற்று மறுவீடு புறப்படட்டனர்.

கவியின் வீடு

“கவி தம்பிய கீழ அறைக்கு கூட்டிட்டு போ மா அவர் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகட்டும்” என்று மஞ்சுளா மகளிடம் கூற

அதிர்ச்சியாய் தாய் தந்தையரை பாரக்க

மஞ்சுள “கவி கவி மா எவ்வளவு நேரம் மாப்பிள்ளை நின்னுகிட்டு இருப்பாரு அவரை ரூமுக்கு கூட்டிட்டு போ” என்று மறுமுறை கூற

அய்யோ இவன் கூடவா என்று தன் விதியை நொந்தபடியே கவி முன்னால் செல்ல கேஷவ் அவளை தொடர்ந்து பின்னால் சென்றான்

‘கடவுளே எவனை என் வாழ்நாள்ள பாக்கவே கூடாதுன்னு வேண்டுதல் வைச்சேனோ அவன்கூடவே காலம்பூரா வாழுறா மாதிரி வைச்சிட்டடயே’ என்று உள்ளுக்குள் குமைந்தபடி கேஷவிற்க்கு அறையை காட்ட

‘ரொம்பதான் சோக கீதம் வாசிக்கிரா…. அந்த பொறுக்கி மேல அவ்வளவு லவ்வோ !!! அப்போ எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கனும் ஏதோ நடந்தது நடந்துடுச்சின்னு போகாமா அதையே புடிச்சி தொங்கிக்கிட்டு இருக்கா!!!!’ என்று எரிச்சலை வெளியே காட்டமுடியாமல் அறையில் நுழைந்ததும் பெட்டியை துக்கி கட்டில் போட்டான்

அவன் செய்கை அவன் மேல் இருக்கும் கோபத்திற்கு இன்னும் நெய்யை உற்ற என்ன திமிரு பெட்டிய தூக்கி கட்டில் மேல போடுறான் கொஞ்சம் கூட மரியாதை தெரியதவன்’ என மனதினில் அர்ச்சனை செய்ய

‘பாரு, பாரு ஒரு வார்த்தை பேசுறாராலா பாரு !!!!முறைக்கிற முழியை நோண்டி எடுத்திடனும் டி உன்னை…’ என்று அவனும் அவளை உள்ளுக்குள் வருத்துக்கொண்டிருக்க அவனுடைய முக பாவனையை கண்டவள் ‘இவனும் நாம செயயறதையே செய்யரானோ என எண்ணம் கொண்டவள்’ கதவை சாத்திக்கொண்டு வெளியேறினாள்…

‘அடியேய் உன்னை’ என்று அவன் கதவின் பக்கம் போக அவனுடைய கைபேசி ஒலி எழுப்பி அவனை அழைக்க எடுத்து பார்த்தவன் அதை சுவைப் செய்து காதில் பொருத்தினான்.

“ஹலோ கேஷவ்”

“ஹலோ சொல்லு ஜெய் எப்படி இருக்க?”

“என்னை விட்றா நான் எப்பவும் போலதான் இருக்கேன் நீ எப்படி இருக்க …. அம்மாக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் கால் பன்னேன். எல்லா விஷயமும் சொன்னாங்க.”

“ஹ்ம்ம்”

“என்னடா ஒரு வார்த்தைல பதில் சொல்ற … உன் வாழ்க்கைடா இது . அந்த பொண்ணை உனக்கு பிடிச்சிருக்கா இல்ல அம்மா அப்பா சொன்னாங்கன்னு அவங்க விருப்பத்தை மீற முடியாம கல்யாணம் பண்ணிகிட்டியா ?”

அதுதான் எனக்கே தெரியலையே ஏதோ ஒரு வேகத்துல கட்டிட்டேன் அவளை புடிச்சி இருக்கா இல்லையான்னு ஒன்னும் புரியலை டா அவ கண்ண பாத்ததும் என்னை அறியாம தாலி கட்டிட்டேன் டா என்று மனதில் நினைந்தவன் ஒரு வார்த்தையும் பதில் கூறாமல் மௌனமாய் நின்றிருந்தான்……..

என்னடா ஏதாவது பதில் சொல்லு இதுல உன் வாழ்க்கை மட்டும் இல்ல அந்த பொண்ணோட வாழ்கையும் சேர்ந்து இருக்கு . லைஃப் லாங் சேர்ந்து வாழ போறவங்க மனசு ஒத்துபோனாதான் வாழ்க்கை சக்கரம் மேடுபள்ளம் வந்தா கூட பேலன்ஸ் பன்னி ஓடும். என்றவன் அவன் பேச இடைவெளிவிட

ஆமா ஆமா ஏற்கனவே இரெண்டுபேரும் பாக்கும் போதுலாம் அடிச்சிக்கிறோம் இதுல மேடு பள்ளம் வந்து என் மேல இருக்க கோவத்துல என்னை தள்ளிவிடாம இருந்தா சரிதான் என்று மனதிற்க்குள் நினைத்தான்………

அமையதியா இருக்காத டா முதல் கோணல்னா முற்றிலும் கோணல் ஆகிடும்டா … புரிஞ்சிக்க ட்ரை பண்ணு . பழசையே நினைச்சிக்கிட்டு இருக்காத . அந்த பொண்ண புரிஞ்சிக்க முயற்சி பண்ணு . அவளை நல்லா பார்த்துக்கோ … உன்னையும் அவளுக்கு புரிய வை . முதல்ல அவகிட்ட ஃப்ரெண்டா பழக ட்ரை பண்ணு .

அவளை அடபோட நீ வேற முறைச்சி பாக்கசொல்லவே முழி ரெண்டும் வெளியே வந்து விழுந்திடும் போல இருக்கு என்று நினைத்தவன் “முயற்சி பண்றேன் டா என்னை நம்பி நல்லா வைச்சிக்குவேன்னு அவங்க பொண்ணை கொடுத்துருக்காங்க…. அந்த நம்பிக்கைய நிச்சயமா காப்பதுவேன் டா.. அப்புறம் நீ கேட்ட கேள்விக்கு ஒரே பதில் தான் அவளை சிம்பதினாலையோ இல்லை அம்மாவோட கட்டயத்தாலையோ கல்யாணம் பண்ணிக்கல டா” போதுமா என்றான் அண்ணன் கலக்கத்தை போக்க எண்ணி

அவன் பதிலில் நிம்மதி பெற்றவன் “இப்போதான்டா நிறைவா இருக்கு பிரக்டீஸுக்கு நேரமாச்சி நான் அப்புறம் பேசுறேன் டா” என்று போனை வைத்தான் ஜெய்.
………………………………………………………..

Sorry sorry pls try to understand my situation

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here