சில்லுனு ஒரு லவ் ஸ்டோரி படிக்கலாம் வாங்க.
என் பேரு தீபிகா.சென்னையில பெரியஷ இன்ஜினியரிங் காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன்.எங்க குடும்பம் மிடில்கிளாஸ் தாங்க .அண்ணா தம்பினு நாங்க மூணு பேர் செம ரகள பண்ணுவோம்.எனக்கு கிடச்சது எல்லாமே சூப்பர்ங்க.அன்னைக்கு செமஸ்டர் லீவ் முடிஞ்சு முதல் நாள்.சிக்குன பஸ்ட் இயர் பசங்கள கலாய்ச்சுட்டு இருந்தோம் .அப்ப தான் அவன் சத்தம் இல்லாமல் தாண்டி போக பாத்தான்.புடிச்சு இழுத்துட்டு வந்தாங்க என் ப்ரண்ட்ஸ் .ஒய்ட் சர்ட் ப்ளாக் பேண்ட் மாநிறமா ஒல்லியா இருந்தான்.தலய நிமிராமலேயே பேசினான்.பாக்க பாவமா இருந்துச்சு .அவன என்ன ரேக்கிங் பண்ண சொன்னாங்க.அவன பெரிசா எதுவும் பண்ண தோணல அதனால சின்னதா ஒரு கவித சொல்லிட்டு போக சொன்னேன்.அமைதியா நின்னான்.என் ப்ரண்ட்ஸ் மிரட்டுனாங்க அப்ப அவன் தன்னோட தலய நிமிர்த்திப என்ன பாத்தான்.நேருக்கு நேரா என்ன கண் இமைக்காம பாத்தவனும் அவன் தான்.மெதுவா பேச ஆரம்பிச்சான்” என்ன இது பகல் நிலவின் மீது இத்தனை நட்சத்திர துகள்கள் ! உன் வாழ்க்கை கடிகாரத்திடம் சொல்லி விடு இனி உன் ஒவ்வொரு நொடியும் எனக்கே சொந்தம் என்று” அவன் சொல்லி முடித்ததும் கை தட்டல் அதிர அவன் அதை பொருட்படுத்தாமல் வகுப்பிற்கு சென்றுவிட்டான்.அன்று முழுவதும் அவனோட கவிதை என்ன ரோம்ப தொல்லை பண்ணுச்சு.காலேஜ் முடிச்சு வீட்டுக்கு போய் முகம் கழுவும் போது தான் கண்ணாடில என் முகத்த கவனிச்சேன் என் கன்னத்துல இருந்த முகப்பருக்கள தான் நட்சத்திர துகள்கள்னு சொன்னானோ?நிறைய குழப்பத்தோட காலேஜ் போனேன் .
காலையில் அவன் காலேஜ் வரும்போது யாரையுமே நிமிர்ந்து பாக்குறது இல்ல ஆனா அவன் என்ன தாண்டி போகும்போது அவன் கண்ணால என்ன ரசிக்கிறான்னு நல்லா தெரிஞ்சது .அன்று முதல் அவனோட முழு பார்வையும் என் பக்கம் திரும்பிருச்சு.கேண்டின் முதல் கிளாஸ் ரூம் வரை என்ன கவனிச்சுட்டே இருந்தான். இத வச்சு என் ப்ரண்ட்ஸ் என்ன கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.ரோம்ப டென்ஷன் ஆகி ஒரு நாள் அவன்கிட்ட”எதுக்குடா இப்படி என் பின்னாடியே சுத்துற.எல்லோரும் கிண்டல் பண்றாங்க.நான் சீனியர் நீ ஜீனியர் உனக்கு என்ன தான் வேணும் ?காலேஜ் வந்தா நல்லா படிச்சுட்டு வேலைக்கு போறத மட்டும் யோசி.தயவு செஞ்சு இனி என் பின்னாடி வராத “என்று நான் மட்டும் தான் பேசினேன்.அவன் பேசவே இல்ல. இனி வர மாட்டான்னு நினைச்சேன் ஆனா மறுபடியும் வந்தான் எங்க போனாலும் அங்க வந்து நின்னான்.
எனக்கு அவன் மேல வந்த கோபத்த விட அவன் எதிர்காலம் பற்றிய பயம் தான் அதிகம் ஆச்சு.ஒரு நாள் அவன கூப்பிட்டு பொறுமையா அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன் அவன் கவனிக்கவே இல்ல எனக்கு கோபத்த கட்டுப்படுத்த முடியல”டேய் உனக்கு பொறுமையா சொன்னா புரியாது .சரிடா நான் உன்ன லவ் பண்றேன் அதுக்கு முன்னாடி என் கண்ண பாத்து தைரியமா தீபிகா ஐ லவ் யு டின்னு சொல்லிரு போதும் .”என்றதும் அவன் என் முன்னாடி வந்து நின்னான் என் கண்ண பாத்தான் சொல்ல முயற்சி பண்ணி பாத்தான் முடியல.நான் அவன பாத்து” இன்னும் இரண்டு நாள் டைம் எடுத்துக்கோ .தைரியாமா சொல்லு இல்லைன்னா போய் நல்லா படி ப்ளிஸ் “என்று அவனை வேகமாக கடந்தேன்.அந்த ரெண்டு நாள்ல இருபது தடவை என் முன்னாடி வந்துருப்பான்.ஆனா சொல்ல முடியாம திரும்பி போயிருவான்.அவனால சொல்ல முடியாதுன்னு எனக்கு தெரியும் .அவனுக்கு நான் கொடுத்த ரெண்டாவது நாள் நைட்டு 11 மணி இருக்கும் நல்ல மழை பெஞ்சுட்டு இருந்துச்சு .தூக்கம் வராம உக்காந்து படிச்சுட்டு இருந்தேன்.அப்ப ஜன்னல் பக்கம் பாத்தேன் அவன் மழையில நனைஞ்சுகிட்டே என் வீட்ட பாத்துட்டு நின்னுட்டு இருந்தான்.அவன அடிச்சு விரட்டணும்னு குடையோட அவன தேடி போனேன்.அடிக்க கை ஓங்கினேன் நான் எதிர்ப்பார்க்கல அவன் என் இடுப்ப புடிச்சு அவன் பக்கத்துல இழுத்து ஒரு செகண்ட் இடைவெளியில் என் உதட்டோட உதடா கிஸ் பண்ணிட்டான்.அவன தடுக்க முயற்சி பண்ண முடியல அவன் என் உதடு வழியா அவன் உரிமைய காட்டிட்டு இருந்தான்.நீ என் காதலின்னு உணர்த்திட்டு இருந்தான்.குடைய காணோம் நான் நனைஞ்சுட்டு இருக்கேன் ஆனா குளிரல.அவன் என் உதட்டுக்கு விடுதலை தந்து”எனக்கு தீபிகா வேணும் .நான் சாகுற வரைக்கும் “சொல்லிட்டு போயிட்டான்.
அவன் போனதுகப்புறம் கூட நனைஞ்சுட்டு தான் இருந்தேன். மறுநாள் காலேஜ் போனேன்.எல்லாமே புதுசா இருந்துச்சு .இன்னும் எனக்குள்ள அந்த மழை சாரல் ஓயல.ப்ரண்ட்ஸ் கூட இருந்தாலும் கண்ணு அவன தான் தேடுது.அவன் அன்னைக்கு வரல.மறு நாளும் வரல.இந்த முறை எனக்கு பிரிவின் வலி புரிஞ்சது .மூணாவது நாள் வந்தான்.என்ன பாத்ததும் தலய கீழ போட்டுட்டு வேகமா போயிட்டான்.சாய்ந்திரம் அவன நேரா சந்திச்சேன்.அவன் கொஞ்ச நேரம் கழிச்சு”என்ன மன்னிச்சுருங்க.நீங்க கிடைக்க மாட்டீங்களோனு பயந்து அப்படி பண்ணிட்டேன்னு”சொல்லி கண் கலங்கிட்டான்.நான் அவன் முகத்த நிமிர்த்தி “உன் பேரு என்னடான்னு?”கேட்டேன்.அவன் என்ன பார்த்து “சிவா”அப்படினு சொன்னான்.நான் சிரிச்சேன் அவன் புரிஞ்சுகிட்டான் என் பக்கத்துல வந்து”யேய் தீபிகா ஐ லவ் யு டி”சொல்லிட்டு என்ன கட்டி புடிச்சுகிட்டான்.அதுகப்புறம் லவ் லைப் நல்லா போச்சு.அவனும் நல்லா படிச்சான் நான் நிறைய உதவி செஞ்சேன் .என் கிளாஸ்மேட் கெளதம் என்ன லவ் பண்றதா சொன்னான் நான் மறுத்தேன் ரோம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சான் .இந்த விஷயம் சிவாக்கு தெரிஞ்சு இரண்டு பேருக்கும் பயங்கர சண்டை வந்திருச்சு.ஜீனியர் பையன் சீனியர அடிச்சுட்டான்னு சொல்லி எங்க கிளாஸ் பசங்க நானும் சிவாவும் ஒண்ணா இருக்குற போட்டோவ பேஸ்புக் வாட்ஸ்அப்ல சேர் பண்ணிட்டாங்க.பிரச்சினை பெருசாச்சு.எங்க வீட்லயும் தெரிஞ்சு போய் பெரிய பிரச்சினை ஆகிருச்சு.படிக்கணும்னா அவன பிரிஞ்சாகணும்னு நிலைமை வந்துருச்சு எனக்கு.
காலேஜ் போனதும் அவன் தான் முன்னாடி நின்னான்.நான் அவன தாண்டி போக முயற்சி பண்ணினேன்.உடனே என் கைய புடுச்சு”நான் செத்ததுக்கு அப்புறம் தான் என்ன தாண்டி போக முடியும் .இதுவரைக்கும் உன்ன பெத்தவங்கள நம்பி வாழ்ந்துட்ட மிச்சம் இருக்குறத என்ன நம்பி கொடு நான் பாத்துக்குறேன் என் உயிர விட”இனி பேசுவதுக்கு எதுவுமே இல்லை அவனை கட்டி பிடித்தேன் கண்ணீருடன்.ப்ரண்ட்ஸ் தலைமையில் கல்யாணம் .ரெண்டு வீட்லயும் வெறுத்து ஒதுக்கிட்டாங்க.ப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து சின்னதா ஒரு வீடு புடிச்சு தங்க வச்சாங்க.ஒரே ரூம் டாய்லட் முதல் கிச்சன் வரை அங்கேயே .ஆனாலும் கஷ்டமே தெரியல.அவன் என்ன அப்படி பாத்துகிட்டான்.காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க எங்க ரெண்டு பேரையும் .வாழ்க்கை ஒரு கேள்வி குறி ஆச்சு.எங்க புரோபசர் ஒருத்தர் வேற காலேஜ்ல சீட்டு வாங்கி தந்தார்.புருஷன் பொண்டாட்டியா காலேஜ் போனோம் .அவன் பார்ட் டைம்ல வேலை பாத்து காலேஜ் பீஸ் கட்டினான்.அவன் வர நைட் 12 மணி ஆகும் .காத்திருந்து ஒண்ணா சாப்பிடுவோம்.சின்ன வீட்ல அவன் பக்கத்துல ஆனா கட்டுப்பாடா இருந்தோம் .படிப்பு முடிஞ்சதும் குழந்தைன்னு.அன்னைக்கு நல்ல மழை வீடு பூரா தண்ணி.ஒரு மூளையில ஒதுங்கி படுத்திருந்தோம்.ரோம்ப நெருக்கமா அவன் என் முகத்த பாத்துட்டே இருந்தான் .நான் அவன்கிட்ட “என்னடா வேணும்னு ?”மொறச்சேன்.அவன்”ஒரேயொரு தடவை உன் முகப்பருவை தொட்டு பாக்கவா?”என்றதும் சிரித்துவிட்டு சரின்னு சொன்னேன்.என் கன்னத்துல அவன் கை பட்டதும் ஒரு புயலே அடிச்சது.கொஞ்ச நேரத்துல எங்க கட்டுபாட இழந்து கலந்து போனோம் . நான் கர்ப்பம் ஆனேன் .
எங்க சூழ்நிலைக்கு குழந்தை பத்தி யோசிக்கவே முடியல.அன்னைக்கு காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் நான் அழுதுட்டு இருந்தேன்.அவன் என் கைய புடுச்சுட்டு என் வயித்துல படுத்துட்டு”நமக்கு இந்த பாப்பா வேணும் தீபிகா.இது நம்ம காதல் பரிசு.இத அழிக்குறது நம்ம காதல அழிக்குறது மாதிரி உன்னயும் பாப்பாவையும் நான் பாத்துக்குறேன்”என அவன் சொன்னதும் என் வயித்தில் ஏதோ ஒரு உணர்ச்சி ஏற்பட்டது .பத்து மாசம் ஒரு அம்மா மாதிரி என்ன பாத்துகிட்டான்.எனக்கு அம்மா ஞாபகமே வரல.அழகான பெண் குழந்தை பிறந்தா.அவ பேரு அவந்திகா.கவனிக்க ஆள் இல்லாததால் காலேஜ்க்கு தூக்கிட்டு போயிருவோம்.ப்ரண்ட்ஸ் நல்லா உதவி செஞ்சாங்க.நான் படிச்சு முடிச்சு.நல்ல கம்பெனில வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.பாப்பாவ பாத்துக்க ஆள் வச்சுட்டோம்.அவன இப்ப நான் படிக்க வச்சுட்டு இருக்கேன். நான் வேலைல பிஸி ஆனேன் ராத்திரி லேட் நைட் ஆகிரும்.சிவா கூடவும் அவந்திகா கூடவும் அதிக நேரம் இருக்க முடியல.நாளுக்கு நாள் எங்களுக்குள் சின்ன சின்ன உரசல்கள் வர ஆரம்பிச்சது.ஒரு நாள் ராத்திரி 9 மணிக்கு வந்தேன்.அவன் கோபமா இருந்தான்.என்ன பாத்துகிட்டே”இன்னைக்கு பாப்பாக்கு உடம்புக்கு சரியில்லை .உன் நம்பர்க்கு கூப்புட்டா யார் யாரோ எடுத்து பேசுறானுக.போதும் நீ வேலைக்கு போனது.ஒண்ணா உக்காந்து சாப்புட முடியல.பேச முடியல.கொஞ்ச நாள்ல எங்க முகமே மறந்திரும் உனக்கு .நான் வேலைக்கு போயிட்டு படிச்சுக்கிறேன்”என்றான் .கோபமாக நான் “நீ ஏண்டா இப்படி மாறிட்ட.சாதாரண புருஷன் மாதிரி.என்ன சந்தேகபடுறியாடா?என்ன எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்கவச்ச அப்ப எனக்கும் உன்ன படிக்க வைக்கும்போது எவ்ளோ சந்தோசமா இருக்கும் உனக்கு ஏண்டா புரியல நாய் நாய்”என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன்.
சிவா கோபமாக என்ன பாத்து” நானா உன்ன பாத்து சந்தேக படுறேன்.நீ என் பொண்டாட்டி இல்ல அம்மா டி புரிஞ்சுக்கோ.சின்ன வயசுலயே அம்மா இறந்துட்டாங்க .நான் பாசத்துக்கு ஏங்கி ஏங்கி தான்டி வளந்தேன்.என்னோட மொத்த ஏக்கமும் உன்ன பாத்த உடனே தீர போகுதுனு தோணுச்சு .அதனால தான் உன்ன சுத்தி சுத்தி வந்தேன்.உன்ன பிரிஞ்சு இருக்க முடியல.உன் கூடவே இருக்கணும்னு தோணுது தப்பா சொல்லுடி” அவன் கண்ணீர் அவனை மேற்கொண்டு பேச விடாமல் தடுக்க அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.இரவு 12 மணிக்கு மேல் ஆச்சு.அவன காணோம் .நானும் பாப்பாவும் வாசல்லயே உக்காந்திருக்கோம்.மழை வேற பலமா பெய்யுது.ரோம்ப பயமா இருக்கு.சிவா வாடா எனக்கு பயமா இருக்கு.அப்போது தூரத்தில் அவன் வருவது தெரிய ஓடி போய் அவனை கட்டிபுடித்து அவன் உதட்டோடு உதடு சேர்ந்து தனது அன்பை பறிமாறிக்கொண்டு இருந்தேன்.
[சரிங்க ப்ரண்ட்ஸ் இனி எங்க மிச்ச கதைய சொல்ல போறாங்க!]
நான்
உங்கள்
கதிரவன்!
[என்னோட வாட்ஸ்அப் நம்பர் 9600532669 ]