காதலை சொன்ன கணமே 11
தான் என்னவோ தப்பாக சொல்லிவிட்டோம் என்று புரிந்த போதும் என்ன என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்த சூர்யாவை ஒரு அனல் பார்வை பார்த்து வைத்தாள் சுபத்ரா. இவ்வளவு நேரம் நல்லாதானேயா இருந்தா? இப்போ என்னாச்சு என்பது போல முழித்தவன் “ஏன் ஜில்லு எழுந்திருச்சிட்ட? இங்க சாய்ஞ்சிருந்தப்போ நல்லா தானே இருந்துச்சு?” என்றான்.
பதிலேதும் சொல்லாமல் தன்னையே கொலைவெறியோடு பார்க்கும் அவளிடம் என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்று புரியாமல் முழித்தான் சூர்யா. பார்வைக்கு எரிக்கும் சக்தியிருந்தால் அவனை எரித்திருப்பாளோ என்னவோ. சுபத்ரா கோபமாக முறைத்தாள்.
“ஜில்லு! நீ எதுக்கு வேணா கோபப்பட்டுக்கோ. ஆனா இங்கே வந்து இப்படி சாய்ஞ்சு உட்கார்ந்துட்டு கோவப்படு. நல்லாருந்துச்சு. ஹி ஹி” அசடு வழிய சூர்யா சொல்ல சுபத்ரா கண்களை உருட்டி விழித்தாள். சரி இன்னைக்கு நைட்டு சமாச்சாரம் நடந்தாப்பல தான் என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டு தான் அப்படி என்னதான் கேட்டோம் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தான்.
அவனுக்கு தான் கேட்ட கேள்வியில் என்ன தப்பு இருக்கிறதென்று புரியவில்லை. ‘இவள் தானே நம்மிடம் வந்து என்னவோ எல்லாரும் வரிசையில் நிற்பது போல் பேசினாள். இப்போது அதைப்பற்றி கேட்டால் இவ்வளவு கோபம் ஏன். ஒருவேளை இதைத்தான் பொஸஸிவ்னெஸ் என்பார்களோ’ தனக்குத் தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டு ஒரு முடிவுக்கும் வந்தவனாய் அவள் புறம் திரும்பினான்.
“ஜில்லு!! என்ன கோவம்? நாந்தான் யாரையும் லவ் பண்ணலையே. மாமா பாரு அப்படியே ஃப்ரஷ்ஷா உனக்காக தானே வெய்ட் பண்ணியிருக்கேன். இதுக்குன்னே நீ என்னை செம்மையா கவனிக்கனும். நீ என்னடான்னா என்னை இப்படித் தள்ளி வச்சே பேசறியே? வா வா இங்கே வா.” என்றபடி சுபத்ராவின் கைகளைப் பிடித்து இழுத்து தன்னருகில் அமர வைத்தான்.
இவனது கைகளை அனாயாசமாகத் தட்டிவிட்டவள் அவனை ஒரு முறை முறைத்தாள். “உங்களுக்கென்ன பெரிய மன்மதராசான்னு நினைப்பா? வர்றவ போறவல்லாம் உரிமை கொண்டாடறா? ஒருத்தி எங்கிட்ட வந்து நீ எப்படி என் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்கிறா. இன்னொருத்தி ரெண்டு வருஷமா லவ் பண்ணாளாம். என்ன நடக்குது இங்க.” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க இவனின் சட்டையைப் பிடித்தபடி கேட்டாள்.
அவளது கரத்திலிருந்த தன் சட்டையை மெல்ல விடுவித்தபடி “ஜில்லு நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்ட போல. இங்க வா” என்று சுபத்ராவைப் பிடித்து இழுக்க அவள் இதை எதிர்ப்பாரக்காததால் தடுமாறி அவன் மேல் விழுந்தாள். தன் மேல் பூமாலையென விழுந்த சுபத்ராவை அப்படியே வாரி அணைத்துக் கொண்ட சூர்யா கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதென்று நன்கு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
இவனுடன் சண்டை அல்லவா போட வேண்டும் என்ற நினைப்பு மறந்தவளாய் தன் கோபங்கள் மறந்து அவன் அணைப்பில் நெகிழ்ந்து போனாள் சுபத்ரா. அவனது பிடி அவளது இடையைச் சுற்றி இறுகியது. அவள் தன் கோபத்தை மறந்து விட்டாள் என்பதே பெரிய நிம்மதியாக இருந்தது சூர்யாவுக்கு.
சுபத்ரா வின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகை இவனை வாவா என்று இழுக்க தன் வசமிழந்த சூர்யா மெல்ல அவள் மீது தன் கைகளை தாராளமாகப் படரவிட்டான். அந்தக் கள்வனின் கைகள் செய்யும் மாயங்களில் துவண்டவள் அவன் மேல் கொடியென படர்ந்தாள்.
சூர்யா மெல்ல தன்னவளின் மெல்லிதழைக் கவ்வி இதழமுதம் பருகலானான். இந்த நொடி இப்படியே உறைந்து போகாதா என்பதாய் உணர்ந்தாள் சுபத்ரா. இவன் என்னவன். இவனுக்கு என் மேல் இல்லாத உரிமையா எனத்தோன்ற அவளும் ஒத்துழைத்தாள்.
உத்தரவு கிடைக்காதா என்று காத்திருந்தவனுக்கு இந்தா மொத்தமும் உனக்குத்தான் எடுத்துக் கொள் என்பதாய் சிக்னல் கிடைக்க காட்டானை கையில் பிடிக்க முடியவில்லை. அவன் ஆள இவள் அனுமதிக்க அங்கு இனிமையான தாம்பத்தியம் தொடங்கியது. வெளியே சின்னத் தூரலாகத் தொடங்கிய மழை மெல்ல வேகமெடுத்து பின் நல்ல பெரிய மழையாக அடித்துப் பெய்து பின் மெல்ல அடங்கியது.
ஆண்டு முடித்த களைப்பில் அவன் அவளைத் தன்னோடு அணைத்துக் கொள்ள பூமியாய்த் தாங்கியவள் காதலுடன் ஆரத்தழுவிக் கொண்டாள். இவனோ எங்கே நகன்று விடுவாளோ என்ற பயத்தில் இருந்தவன் போல் அவளை தன்னோடு நன்கு இறுக்கிக் கொண்டான்.
என்னவோ காலம் காலமாய் இவனுக்காகவே அவள் காத்திருந்ததைப் போல ஒர் எண்ணம் தோன்றியது. இதனால் தானோ தனக்கு இதுவரை யாரையுமே எந்த ஆண்மகனையும் பிடிக்காமல் இருந்ததோ? இதனால் தான் அப்பா இதுவரை திருமணம் என்ற பேச்சை எடுத்த போதெல்லாம் கொதித்தவள் இந்த முறை ஒன்றுமே பேசாமல் அடங்கிப் போனாளோ.
இருவரிடமும் சற்று நேரம் எந்த அசைவும் இல்லை. இருவரும் ஒருவிதமான உணர்ச்சிக்குவியலாக இருந்தனர். சூர்யாவின் முகம் பார்த்து பேசக்கூட நாணமாக இருந்தது சுபத்ராவிற்கு. கள்ளனிவன். தனது இதயத்தை கொள்ளையிட்டுச் சென்றானே.
அப்படியொன்றும் பேரழகன் என்றெல்லாம் இல்லை தான். ஆனாலும் அவன் அவளுக்கு அழகன் தான். அவளவன். கருகருவென கூடையைக் கவிழ்த்தியது போன்ற கேசம், துறுதுறுவென அங்குமிங்கும் பாயும் குறும்பை மொத்தக் குத்தகைக்கு எடுத்ததைப் போன்ற கண்கள், கருகருமீசை, நல்ல ஓங்குதாங்கான உயரம், இவனெல்லாம் ஏன் இந்திய எல்லைக்காவல் படைக்கு போகவில்லை என்று தோன்றும் தோற்றம்.
‘ரொம்ப சைட் அடிக்காத சுபத்ரா. போதும். அசடு வழியாத’ என்று மனசாட்சி குரல் கொடுக்க பார்வையை வேறு புறம் திருப்பி சன்னல் வழியே வெளியே வெறித்துப் பார்க்கத் தொடங்கினாள். அதுவரை கண்களை மூடி மோன நிலையில் இருந்த சூர்யா இதுவரை நடந்ததெல்லாம் கனவு தான் கண்டோமோ என்ற சந்தேகம் எழ கண்விழித்துப் பார்த்தான். தன்னருகில் வெளியே வெறித்துப் பார்த்தபடி அழகுப் பதுமையாக படுத்திருந்த தன்னவளைப் பார்த்தான். பார்த்த விழிகளை அகற்ற வழியின்றி போனது.
‘எனக்கே எனக்கா’ என்று பாடத் தோன்றியது. பட்டணத்தில் படித்தவள் கிராமத்து வாடையே இல்லாமல் வளர்ந்தவள், இவள் எப்படி தன் குடும்பத்துக்கு ஒத்துவருவாளோ என்ற பயம் இருந்ததென்னவோ கடந்த காலநினைவாகவே இப்போது தோன்றியது. இவளையா அப்படி நினைத்தோம் என.
பெண் பார்க்கச் சென்ற அன்றே தன் மனம் தனக்கு துரோகம் செய்து அவளிடம் சென்று விட்டது புரிந்தது. இருந்தாலும் எங்கே தனக்கு அவளைப் பிடித்துவிட்டது என்று காட்டிக் கொண்டால் அவள் அதை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு தன்னை தன் குடும்பத்திடம் இருந்து பிரித்து விடுவாளோ என்ற பயம் பலமாக ஆட்டிப்படைக்க சற்று தள்ளியே நின்றான்.
அவளைக் காணும் போதெல்லாம் இவன் உள்ளம் அப்படியே தன்னை மீறி ஒர் குத்தாட்டம் போடுவதை அவனால் தடுக்க இயலவில்லை. என்ன ஒரு அழகி. தன்னுடைய அழகைப் பற்றி அவள் உணராமல் இருப்பதே பேரழகாக இருந்தது. பட்டணத்துப் பெண் என்றால் கூடவே இலவச இணைப்பாக வரும் பழக்க வழக்கங்கள் எதுவுமின்றி ரொம்ப சாதாரணமாக பழகும் குணம் இவளுக்கு.
யாருடனும் அதிகம் சேராத தன் தங்கை சுமித்ரா கூட இவளுடன் அப்படி ஒட்டிக்கொண்டாளே. இவளுடன் நிச்சயம் முடிந்து பின்பு அலைபேசியில் பேசத் தொடங்கியவள் பின்பு எப்போதும் வீட்டில் அண்ணி புராணம் தானே பாடினாள். என்னதான் தனக்குப் பிடிக்காத மாதிரி காட்டிக் கொண்டாலும் தானும் இவளது பேச்சை அத்தனை முறை ரசித்து இருக்கிறோம்.
இவளுக்குத் தன்னைப் பிடிக்காதோ என்ற பயம் சூர்யாவுக்கு முதலில் இருந்தது தான். இருக்காதா பின்னே? தான் நல்ல ஐய்யனார் மாதிரி கருப்பும் உயரமுமாக இருக்கிறோம். இவளோ சுண்டினால் ரத்தம் வரும் போல் சிவப்பு. பார்க்கவே ஜவுளிக்கடையில் நிறுத்தியிருக்கும் பொம்மை போல் இருக்கிறாள். இவளுக்கு எப்படி தன்னைப் பிடிக்கும் என்று சந்தேகம் அவனுக்கு.
பெண்பார்க்கச் சென்ற போது இவளிடம் இந்த திருமணத்தில் உனக்கு இஷ்டமா என்று கேட்ட போது நேரடி பதில் சொல்லாமல் ‘எனக்கு இப்போ இந்த கல்யாணம் வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா அப்பாதான் இப்போ உடனே நடத்தனும்னு சொல்றாங்க’ என்றாளே, அப்போதே அவனுக்கு நம்பிக்கை விட்டுப்போனது. இவளுக்கு நம்மைப் பிடிக்கவில்லை. இவள் எப்படி நம்முடன் வாழ்வாள்? ஆனால் நமக்கு இவளைப் பிடித்திருக்கிறதே. இதனாலேயே திருமணத்தை நிறுத்தி விடுவதாகச் சொல்லிச் சென்றவன் இவள் புறம் திரும்பாமல் நிச்சயப் பத்திரிக்கை வாசிக்கும் போது வேறு புறம் திரும்பி அமர்ந்து கொண்டான்.
அன்று முகூர்த்தப் புடவை எடுக்கப் போன போது தான் போக வேண்டாம் என்று தான் நினைத்தான். ஆனால் சுபத்ராவைப் பார்க்கும் வாய்ப்பை விட்டுவிட அவனுக்கு மனம்வரவில்லை. புடவை வாங்க நின்ற அவ்வளவு நேரமும் இவள் கண்கள் தன்னைத்தானே தேடியது? தனக்குப் பிடித்த பெண்ணுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதே ஒரு ஆணுக்கு அவ்வளவு பெரிய சந்தோஷம் தான் போலும்.
இவளை எப்போதடா கைப்படிப்போம் என்றிருந்தது சூர்யாவுக்கு. அந்தளவுக்கு சுபத்ரா அவனுள் புகுந்து அவனைப் படுத்தி எடுத்தாள். யாரும் நம்பக் கூட மாட்டார்கள், சூர்யா இப்படி ஒரு பெண்ணிடம் தலைகீழாக விழுந்து போனானெனச் சொன்னால். கல்லூரிக் காலங்களில் அவனை சாமியார் என்றே உடன்படித்தவர்கள் கிண்டலடிப்பதுண்டு.
ஏனோ யாரும் இவனை சலனப்படுத்தவில்லை. இவளைப் பார்த்துத் நொடி சாய்ந்து போறோமே என்ற வியப்பு தான் சூர்யாவிற்கு. திருமாங்கல்யம் சூட்டியபின் இவள் என்னவள், இவளது சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களுக்கு தானே பொறுப்பு என்று தோன்றும் போது சற்றல்ல ரொம்பவே கர்வமாகவே, சந்தோஷமாகவே உணர்ந்தான் சூர்யா.
சுபத்ரா அதிகம் பேசி அவன் பார்க்கவில்லை. அதனால் அவளை ரொம்ப அமைதியான பெண் என்றே நினைத்தான். ஆனால் சற்று முன்பு கோபம் வந்து என்ன ஆட்டம் ஆடினாள்!!!! இவனுக்குப் பெயர் வைத்துள்ளாளே. “காட்டானாமே” சூர்யாவுக்குச் சிரிப்பாய் வந்தது.
நம்மைப் பார்த்தால் காட்டானைப் போலவா உள்ளது? என்று அவளது கரத்தினருகில் தன் கரத்தை வைத்துப் பார்த்து விட்டு “ரொம்ப கருப்பாதான் இருக்கோமோ? ஆனா இவகிட்ட வச்சுப் பார்த்தா எல்லாரும் கருப்பாத்தான் தெரிவோம்’ என்று சொல்லிக் கொண்டான்.
தனக்குத் தானே பேசிக் கொள்ளும் தன் கணவனை விநோதமாக பார்த்தபடியே எழுந்து அமர்ந்து தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி இவரையே உறுத்துப்பார்த்தாள். “என்ன ஜில்லு!! மாமனை ஏன் அப்படி பார்க்கிற?” என்றபடி அவளது முகத்தில் விழுந்த முடிக்கற்றையை ஒதுக்க போக, அவனது கையைத் தட்டிவிட்டு அவனையே பார்த்தபடி இருந்தாள் சுபத்ரா….
ஜில்லு ஜில்லுனு இருக்காளா? சூடா இருக்காளான்னே தெரியலையே!!!!!!!!!!