காதலை தேடி – 10

0
270

காதலை தேடி – 10

ஹாய் டியர்ஸ்… அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன். போன அத்தியாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவரும் நன்றி… அதே மாதிரி இதையும் படிச்சுட்டு லைக், கமெண்ட் தட்டிவிடுங்க டியர்ஸ்…

அடுத்த நாள் ருத்ரா தன தோழிகளிடம், இரவு நடந்த அனைத்தையும் சொல்லி கொண்டிருந்தாள்.

“ருத்ரா, எனக்கு ஒரு சந்தேகம்?”

“என்ன சந்தேகம்?”

எனக்கு ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே? பக்கத்தில இருக்க என்ன விட்டுட்டு ஊருக்கு கிளம்புற தீபக் எதுக்கு கூப்பிட்ட?

ஐயோ பயபுள்ள சரியா கேள்வி கேட்குதே… எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டேனா? சரி சமாளிப்போம்…. என மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தவளை “அதுதானே. காவ்யா நீயா இவ்ளோ புத்திசாலியா கேள்வி கேக்குற?” என கிருஷ் கேட்க, ஆமா இப்போ அது தான் ரொம்ப முக்கியம். ருத்ரா நா கேட்டதுக்கு முதல்ல பதில சொல்லு.

அது… அது ரொம்ப நேரமாகிடுகிச்சு… நீ எப்படி தனியா வருவ? உங்க வீட்டிலேயும் திட்டுவாங்க… அதுதான் தீபக்கை கூப்பிட்டேன்.

அவளை நம்பாத பார்வை பார்த்த தோழிகளை எப்படி சமாளிப்பது என யோசித்து கொண்டிருக்க “நேத்து படம் சூப்பர்ல… என கிருஷ் பேச்சை மாற்ற…

ஜெயம் ரவி செம்மயா இருந்தாருல்ல?

ஆமா மது… அவருக்காகவே இன்னொரு தடவ அந்த படத்தை பார்க்கலாம் போல…

காவ்யாவும் சேர்ந்து கொள்ள ருத்ரா மனதிற்குள் கிருஷ்ணாவிற்கு நன்றி கூறிக்கொண்டிருந்தாள்.

அடுத்து வந்த ஒரு மாதமும் காவ்யா, வினோத்தின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர, மதுரா, அருளின் உறவிலும் எந்த மாறுதலும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

தன் பல்பொருள் அங்காடியை அடைத்துவிட்டு இரவு பதினோரு மணிக்கு வீட்டிற்கு வந்த சந்திரன் சாப்பிட்டுவிட்டு சரோஜாவை கூப்பிட்டு வினோத்தை கூப்பிட சொல்ல “ஏங்க அவன் மாடில படிச்சுட்டு இருக்கான்”.

பரவால்ல வர சொல்லு.

எதுக்கு இவரு கூப்பிடறாருன்னு தெரியலையே என்ன பிரச்சனை பண்ண போறாரோ என பயத்துடன் வினோத்தை அழைக்க, சொல்லுங்கப்பா என்று வந்து நின்றான்.

என்னடா பரிட்சைக்கு ஒழுங்கா படிக்குறீயா? இன்னும் இருபது நாள் தானே இருக்கு? கடைசி தடவ மாதிரி இந்த முறையும் கோட்டவிடாம ஒழுங்கா தேர்ச்சியாகுற வழிய பாரு.

சரிப்பா என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன்.

என்னது முயற்சி பண்றியா? பாத்தியா சரோஜா. இவன் என்ன சொல்றான்னு? முயற்சி பண்றானாம். அப்போ உனக்கு தேர்ச்சி அடையணும்னு எண்ணம் இல்லை. அப்படித்தானே?

நா அப்படிசொல்லல பா. நானும் கஷ்டப்பட்டு தான் படிச்சிட்டு இருக்கேன்.

உன்னோட சின்ன பசங்களாம் நல்லா படிச்சிட்டு வேலைக்கு போறாங்க. நா உன்ன வேலைக்கா போக சொல்றேன்? நல்லா படிச்சு ஒரு அரசாங்க வேலைக்கு தானே போக சொல்றேன்.

அருகிலிருந்த சரோஜா எதுவும் பேசாதே என கண்ணை காட்ட, வினோத் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

“நா இவ்ளோ பேசிட்டு இருக்கேன். அவன் பதில் சொல்லாம அமைதியா இருக்கான் பாத்தியா?” என சந்திரன் அதற்கும் பேச அவன் இந்த முறை ஒழுங்கா எழுதுவான். நீங்க வந்து தூங்குங்க”.

“எரும மாடு மாதிரி வளர்ந்துருக்கான். இன்னும் இவன உட்காரவைச்சு நான் தான் சோறு போடவேண்டியதா இருக்கு”.

“அப்பா, இப்போ கூட எனக்கு இந்த அரசாங்க வேலைல ஆர்வம் இல்ல. நீங்க ஆசைபட்டிங்கனு தான் இதுக்கு முயற்சி பண்றேன். நான் படிக்கும் போதே தேர்வாகியிருந்த வேலைல கூட சேராம உங்களுக்காக தான் எனக்கு பிடிக்கலைனாலும் படிச்சுட்டு இருக்கேன்”.

என்னைக்கும் எதிர்த்து பேசாதவன் இன்னைக்கு பேச ஒருகட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த சந்திரன் வினோத்தின் மேல் கையை நீட்டிவிட்டார்.

“என்னங்க தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைய அடிக்கிறீங்க?” என சரோஜா இருவருக்குமிடையே வர அவருக்கும் இரண்டு அடி விழுந்தது. எதிலும் தலையிடாமல் நின்று பார்த்து கொண்டிருந்த சுகுமார் ஏதாவது பேசுனா அப்பாக்கு இன்னும் கோபம் தான் வரும் என்று வினோத்தை மாடிக்கு அனுப்பினான்.

எல்லாம் முடிந்து படுக்க சென்ற சுகுமாருக்கு, பாலவிடமிருந்து அழைப்பு வந்தது.

உன்னோட மடிக்கணினி வேணும்டா. நா இப்போ வீட்டுக்கு வரட்டுமா??

இப்போ வேண்டாம் பாலா. நானே காலைல வந்து தரேன். வீட்ல அப்பா ஒரே பிரச்சனை. அண்ணணனை வேற அடிச்சுட்டாரு.

என்னடா சொல்ற? என்னாச்சு?

சுகுமார் நடந்ததை அனைத்தும் பாலாவிடம் கூற, சரிடா நீ காலையிலேயே கொடு.

பாலா நடந்த அனைத்தையும் காவ்யாவிடம் கூற காவ்யாவிற்கு வினோத்தை அப்போதே பார்த்து ஆறுதல் கூற வேண்டும் போலிருந்தது. தன் கைபேசியில் இருந்து பல நாட்களுக்கு பிறகு வினோத்திற்கு மெசேஜ் செய்தாள்.

ஆனால் கைபேசியை பார்க்கும் மனநிலையில் வினோத் இல்லை. பல முறை மெசேஜ் செய்தும் பதில் இல்லாததால் அவனிற்கு அழைத்தாள். இரண்டு முறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படாமல் போக யாருக்கும் தெரியாமல் மாடிக்கு சென்றாள். மறுபடியும் ஒருமுறை கைபேசியிலிருந்து அழைக்க இம்முறை அழைப்பை எடுத்த வினோத் பதில் பேசாமல் அமைதியாக இருக்க “ஹலோ வினோத். வெளிய வா. நான் எங்க மாடியில தான் இருக்கேன்”.

“காவ்யா இப்போ உன்கிட்ட பேசுற மனநிலைமைல நான் இல்லை. கொஞ்சம் என்னை தொந்தரவு பண்ணாம நீ போய் தூங்கு”.

“இப்போ நீ வெளிய வரலைனா நான் எகிறி குதிச்சு உன்னோட அறைக்கு வருவேன்”.

“சரி வரேன் என வினோத் வெளியே வந்தான்”.

மதுராவின் அப்பா சண்முகம் ஒரு வரனை பற்றி விஜியிடம் பேசிக்கொண்டிருக்க, இனியும் தாமதிப்பது சரியில்லையென முடிவுக்கு வந்தவள் அருளிற்கு ஹாய் என மெசேஜ் செய்தாள். அருளிடமிருந்து உடனடியாக பதிலும் வந்தது.

“மதுரா என்ன இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க?”

“அப்படியா? நான் எப்பவும் போல தான் இருக்கேன் அருள்”.

“இல்லையே.. எப்பவும் நீ தான் அதிகம் பேசுவ… இன்னைக்கு நான் தான் பேசிட்டு இருக்கேன்…”

“வீட்ல கல்யாணத்துக்கு வரன் பார்த்துட்டு இருக்காங்க..”

“சூப்பர் மதுரா… உனக்கு பிடிச்சிருக்கா?” என அருள் கேட்க மதுராவிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. அருளும் மதுராவின் பதிலுக்காக காத்திருக்க பதிலும் வரவில்லை

ஒரு மணிநேரம் கழித்து அருளிற்கு பதில் மெசேஜ் அனுப்பினாள். “உங்களோட சரிபாதியாய் உங்ககூட வாழக்கை முழுக்க பயணிக்கணும்னு ஆசைப்படுறேன் அருள்…” என தன் மனதில் உள்ள காதலை ஒருவழியாக அருளிடம் வெளிப்படுத்திவிட்டாள். அருளிடம் கூறிவிட்டாளே தவிர அவனின் பதில் என்னவாக இருக்குமென தடதடக்கும் இதயத்துடன் காத்து கொண்டிருந்தாள்.

அவன் மெசேஜை பார்த்துவிட்டு பதில் கூறாமல் இருக்க, மதுராவிற்கே அவன் தன் காதலை ஒத்துக்கொள்வான் என்று தோன்றவில்லை. எப்படியோ தன்னுடய காதல் தன்னுள்ளே மரித்துப்போக அவள் தயாரில்லை. அருள் தன் காதலை ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும் மதுரா நினைக்கவில்லை. அவளை பொருத்தவரை அவள் காதலை உரியவனிடம் வெளிப்படுத்திவிட்டாள்.

அருளின் பதில் எப்படி இருந்தாலும் அவள் ஏற்றுகொள்ள தயாராகிருந்தாள். நான் ஒருத்தரை காதலிக்கறேன்னு சொன்னா, அவங்களும் திரும்பி காதலிக்கனும்னு அவசியம் இல்லையே. எதையுமே எதிர்பார்க்காதது தானே காதல் என பலவற்றை யோசித்தவளை அருளின் மெசேஜ் நிகழ்விற்கு கொண்டுவந்தது.

“சாரி மதுரா. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை. ஆனா நீ கடைசி வரைக்கும் என்னுடைய வாழ்க்கை பயணத்துல ஒரு தோழியாய் கூட வரலாம்”.

“நான் உங்களோட முடிவுக்கு மதிப்பு கொடுக்கிறேன் அருள். ஆனா காதலிச்சவரை என்னால நண்பனாக மட்டும் பார்க்க முடியாது. அப்படியே நான் பழகினாலும் ஏதாவது ஒரு கட்டத்துல என்னையும் மீறி என்னோட காதலை வெளிப்படுத்திடுவேன். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை உங்களுக்கு கொடுக்க நான் தயாராக இல்லை”.

“இன்னைக்கு தான் உங்ககூட பேசுறது கடைசி. இனிமே உங்கள எந்த விதத்துலையும் தொடர்பு கொள்ளமாட்டேன்” என சொல்லியவள் தன் கைபேசியை அணைத்துவிட்டு தலையணையில் முகம் புதைத்தாள். மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாய் வந்து கொண்டிருந்தது.

தேடல் தொடரும்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here