காதலை தேடி… – 16

0
244

ஹாய் செல்லகுட்டிஸ்…. காதலை தேடி அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்… சின்ன எபி தான் டியர்ஸ்… கோச்சுக்காம அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.. சீக்கிரம் பெரிய எபியோட வரேன் டியர்ஸ்… படிச்சிட்டு மறக்காம லைக்ஸ், கமெண்ட்ஸ் போடுங்க செல்லங்களா….

காதலை தேடி… – 16

ஏனோ ருத்ராவை தனியே அனுப்பிவிட்டு தீபக்கால் திருமண வேலைகளை பார்க்க முடியவில்லை. அவளிடம் இடத்தை கேட்டு கொண்டு தன்நண்பனின் மகிழுந்தை எடுத்து கொண்டு ஒரு மணி நேரத்தில் சென்றடைய வேண்டிய இடத்தை முக்கால் மணி நேரத்தில் சென்றடைந்தான். அவன் ருத்ரா இருக்கும் இடத்தை வந்தடையும் வரை ருத்ராவிற்கு பேருந்து கிடைக்கவில்லை.

அவளின் பக்கத்தில் சென்று வண்டியை நிறுத்தியவன் அதிலிருந்து இறங்க அங்கே அந்த நேரத்தில் தீபக்கை எதிர்பார்க்கத்தவள் திகைத்து நின்றாள்.

சாதாரண வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்தவனை எங்கே கண் சிமிட்டினால் மறைந்து விடுவானோ என கண்ணிமைக்காமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

அவன் அருகில் வந்தும் பார்த்து கொண்டிருந்தவளை அவளின் முகத்திற்கு நேரே சொடுக்கு போட நிகழ்காலத்திற்கு வந்தாள்.

“ஏய் தீபக்!!! நீ ஏன் வந்த? நான் தான் பத்திரமா சென்னைக்கு போயிடுவேன்னு சொன்னனே? காலைல கல்யாணத்த வச்சுக்கிட்டு நீ ஏன் வந்த?”

“இதுதான் நீ பேருந்துல இருக்கேன்னு சொன்னதா?”

“இல்ல… நான் இன்னும் இங்க தான் இருக்கன்னு சொன்னா, நீ அங்க எந்த வேலையும் செய்யாம என்னை பத்தி கவலைபட்டுட்டு இருப்ப. அதுதான் உன்கிட்ட பொய் சொன்னேன்”.

“சரி… வந்து வண்டியிலே ஏறு…”

“எங்க?”

“உன்னை சென்னையில விட்டுட்டு வரேன்…”

“சென்னையா? நீ என்னை பேருந்துல ஏத்தி விடு போதும்… ஏற்கனவே உன்னோட தங்கச்சிய பொண்ணு பார்க்க வந்தப்போ என்னால தான் நீ தாமதமா போன… மறுபடியும் இன்னைக்கு என்னால நீ கல்யாணத்துக்கும் தாமதமா போகவேண்டாம்… நீ கிளம்பு…”

“அதெல்லாம் தாமதமாகாது… காலைல ஒன்பது மணிக்கு தான் முகூர்த்தம். உன்னை சென்னைல விட்டுட்டு நான் காலைல ஆறு மணிக்குள்ள மண்டபம் வந்திடுவேன்… இப்போ பேசி நேரத்தை வீணாக்காம வண்டியில ஏறி உட்காரு”.

வண்டியில் ஏறாமல் தயங்கியவளை கட்டயாப்படுத்தி வண்டியில் ஏற்றியவன் சென்னைக்கு நோக்கி வண்டியை செலுத்தினான். தன்னால் தான் தீபக் தேவையில்லாமல் இந்த நேரத்தில் வந்ததால் குற்றஉணர்ச்சியில் பேசாமல் இருந்தவளை ஓரக்கண்ணால் அவன் ரசித்து கொண்டு வர அந்த மௌனமும் இருவருக்கும் பிடித்திருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காத பொழுது ரசித்து கொண்டு வர தீபக் மௌனத்தை களைத்தான்.

“உனக்கு தூக்கம் வந்தா தூங்கு ருத்ரா”.

“இல்ல… தூக்கம் வரல” என இருவரும் பேச்சை தொடர்ந்தனர்.

பேச்சு சுவாரஸ்யத்தில் மூன்று மணிநேரம் போனது இருவருக்கும் தெரியவில்லை. சென்னையை நெருங்கி கொண்டிருக்க வண்டியை ஒரு டீக்கடையில் நிறுத்தியவன், “நீ இங்கயே இரு.. உனக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்… என கடைக்கு சென்று டீ வாங்கி கொண்டு வந்தான்.

அமைதியாக டீயை குடித்து முடித்தவர்கள், தீபக் வண்டியை கிளப்ப “தீபக்.. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்…”

“என்ன கேளு?”

“காலைல கல்யாணத்த வச்சுக்கிட்டு என்னை வீடு வரைக்கும் விட ஏன் வரணும்?”

“என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டு உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் தானே பொறுப்பு”.

“அப்போ நீ என்னை பேருந்து ஏற்றி விட்டிருந்தா போதுமே.. அதைவிட்டுட்டு பாண்டிச்சேரில இருந்து சென்னை வரைக்கும் கொண்டுவந்து விடணும்னு அவசியம் இல்லையே”.

“தீபக் பதில் ஏதும் கூறாமல் சிரித்து கொண்டிருக்க, ஏன்னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்…”

தன் வெட்கத்தை மறைத்து கொண்டு “எனக்கு தெரியாது தீபக். என்ன காரணம்னு நீயே சொல்லு..”

“என்னோட தங்கச்சிக்கு விடிஞ்சா கல்யாணம்.. என்னோட தங்கச்சி கல்யாணம் எவ்ளோ முக்கியமோ அந்த அளவுக்கு என்னோட வாழ்க்கைல நீயும் முக்கியம்…”

“நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்ன தான் காதலா? நாம் செய்யும் சிறு காரியத்திலும் நம் காதலை உணரவைக்கலாம்” என உணர்த்தினான் அந்த காதலன்.

தீபக்கும் தன்னை காதலிப்பது தெரிந்தாலும் ருத்ராவிற்கு மனதின் மூலையில் சிறு சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. அதுவும் இப்பொழுது தீபக்கின் பதிலில் காணாமல் போனது.

பேசிக்கொண்டே ருத்ரா வீடு வந்துவிட, வண்டியில் இருந்து இறங்கிய ருத்ரா, “என்னோட நாத்தனாருக்கு கல்யாண வாழ்த்து சொல்லிடுங்க” என தன் சம்மதத்தை கூறினாள்.

தேடல் தொடரும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here