காதலை தேடி… – 17

0
251

காதலை தேடி… – 17

நாட்கள் இறக்கை கட்டி கொண்டு பறந்தது. காவ்யாவும், வினோத்தும் தங்கள் உலகத்தில் மிதக்க ருத்ராவும், தீபக்கும் தங்கள் காதலை பொழுதொரு வண்ணம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தீபக்கின் தங்கை கல்யாணத்திற்கு சென்று வந்ததும் ருத்ரா தன் தோழிகளிடம் தன் காதல் விவகாரத்தை சொல்ல, ஏற்கனேவே அவர்களுக்கு சந்தேகம் இருந்ததால் பெரிதாக யாரும் அதிர்ச்சியடையவில்லை.

மூன்று மாதம் கழித்து அருளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அருளின் செய்தியை எதிர்பார்க்காத மதுரா, வேகமாக உள்பெட்டியை திறந்து பார்க்க அதில் “ஹாய்” என வந்திருந்தது. மதுரா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆனாலும் தன் மகிழ்ச்சியை மறைத்து கொண்டு, “எதுக்கு இப்போ மெசேஜ் பண்ணிருக்கீங்க? நீங்க என்னை வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் உங்கள நான் எந்த விதத்துலையும் சொந்தரவு பண்ணலையே”

“யார் சொன்னது நீ என்னை தொந்தரவு பண்ணலைன்னு? தினமும் தான் டார்ச்சர் பண்ணிட்டு இருக்க ராட்சசி”.

“ஹலோ….. இப்போ தானா வந்து பேசிட்டு இருக்கறது யாரு? நீங்களா? நானா?”

“மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க போலயிருக்கு”.

“இப்போ எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க. எதுக்கு எனக்கு மெசேஜ் பண்ணீங்க?”

“நாளைக்கு உன்ன நேர்ல பாக்கணும்” என அருளிடமிருந்து பதில் வந்தது.

“எதுக்கு?”

“சும்மா தான்….”

“இங்க பாருங்க நீங்க விளையாடுறதுக்கு நான் ஆள் கிடையாது. எனக்கு வேலை இருக்கு. உங்களுக்கு வேற எதுவும் சொல்றதுக்கு இல்லைனா நான் கிளம்புறேன்”.

“ஏய்ய்ய்… நான் சொல்றத கேட்டுட்டு போ”.

“சரி சொல்லுங்க…”

“அது உன்னை நேர்ல பாக்கணும்…”

“எதுக்கு?”

“ம்ம்ம்…. என்னை காதலிக்கிற பொண்ணு எப்படி இருக்கானு நேர்ல பார்க்க தான்..”

“அது முடிஞ்சு போச்சு…”

“சரி நீ காதலிச்சது முடிஞ்சு போச்சு… ஆனா நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேனே….”

“இது என்ன புது கதையா இருக்கு?”

“புது கதையெல்லாம் இல்ல… பழைய கதை தான்…”

“நீங்க சொல்றத நம்ப முடியல…”

“அடிப்பாவி… உன்னை காதலிக்கிறேன்னு சொல்றேன்… நம்ப முடியலன்னு சொல்ற?”

“பின்ன மூணு மாசமா என்னோட நியாபகம் இல்லாம திடிர்னு வந்து சொன்னா நான் எப்படி நம்புறது?”

“நீ என்னோட பேசிட்டு இருக்கும் வரை எனக்கு ஒன்னும் தெரியல… ஆனா எப்போ என்னோட பேசுறத நிறுத்தினியோ அப்போ தான் எனக்கு புரிஞ்சது… நானும் உன்னை காதலிக்கறேன்னு…நான் எங்க வீட்டுக்கு போய்ட்டு சென்னைக்கு வரும் பொது எனக்காக இராத்திரி முழுக்க தூங்காம நான் என்னோட அறைக்கு வந்துட்டேன்னு சொன்னதும் தான் நீ தூங்குவ. எனக்காக நீ ஒவ்வொரு விஷயமும் கவனிச்சுக்கிட்டது எல்லாம் நீ என்னை விட்டு விலகி இருக்கும் போது தான் நான் உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் நீ மெசேஜ் பண்ண மாட்டியானு போனையே பார்த்துட்டு இருந்திருக்கேன். இனியும் இந்த இம்சை வேண்டாம்னு தான் இந்த ராட்சசிகிட்ட பேசிட்டு இருக்கேன்…”

அருள் கூறி முடித்ததும் மதுராவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்க மேலும் சில பல மெசேஜ்கள் அனுப்பினான்.

ஆனால் மதுராவோ எதுவும் கூறும் மனநிலையில் இல்லை. தன் காதலை அருளிடம் கூறியவள் அது நிறைவேறவில்லை என விலகினாலும் அதன் வலியை ஒவ்வொரு நொடியும் அனுபவித்து கொண்டிருந்தாள். தன் காதலின் ஆயுள் முடிந்துவிட்டது என நினைத்திருந்தவளுக்கு அருளின் பதில் மனதில் மழைச் சாரலாய் குளிர்வித்தது.

பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக மதுரா தூங்க, அங்கே அவளின் பதிலுக்காக அருள் தூங்காமல் விழித்திருந்தான்.

ஏற்கனவே தோழிகளிடம் தன் காதல் விஷயத்தை மறைத்ததால் வந்த பிரச்சனை மனதில் நிழலாட இதற்கு மேல் எதையும் மறைக்க அவள் விரும்பவில்லை.

மறுநாள் காலை அலுவலகத்தில் தோழிகளை சந்தித்த மதுரா, இரவு அருள் அவளிடம் பேசிய அனைத்தையும் கூறினாள். அவள் கூறியதை கேட்டவர்கள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க அனைவரின் முகத்தையும் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தாள். யாரும் பதில் கூறாமல் இருக்க, “நான் நாளைக்கு அருளை பார்க்க போகட்டுமா?”

“மது, எனக்கென்னவோ இது சரியாய் படலை…” – கிருஷ்ணா

“ஏன்?” – மதுரா

“என்ன காரணம்னு சொல்ல தெரியல… ஆனா ஏதோ சரியில்லாத மாதிரி தோணுது..” – கிருஷ்ணா

“இதுவே ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட காதலை சொல்லி அவ ஒரு மூணு மாசம் கழிச்சு சம்மதம் சொல்லியிருந்தா தப்புனு சொல்லுவியா?” – மதுரா

“நான் அருள் யோசிச்சு சொன்னதுக்கு சொல்லலை மது… என்னோட மனசுக்கு தோணுச்சு.. சொன்னேன்…இது உன்னோட வாழக்கை.. நீ தான் முடிவெடுக்கணும்…” – கிருஷ்ணா

அதற்கு மேல் யாரும் எதுவும் கூறவில்லை. அவர்களின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டவள் நாளை அருளை நேரில் சந்திக்க முடிவு செய்தாள்.

“காவி.. நம்ம இரண்டு பேரு மட்டும் தான் இன்னும் எதுலயும் சிக்காம முரட்டு சிங்கிளாவே இருக்கோம். எனக்கு எப்படியும் எதுவும் மாட்டாது… நான் அந்த வேலைக்கு சரி பட்டு வர மாட்டேன்… ஆனா உன்மேல தான் எனக்கு கொஞ்ச நாளா சந்தேகமா இருக்கு. தனியா சிரிக்கிற.. அடிக்கடி கனவு உலகத்துக்கு போடுற. கொஞ்ச நாளாவே நீ சரியில்லை..” – கிருஷ்ணா

காவ்யா எதுவும் கூறாமல் மவுனமாக இருக்க, “நீ ஒன்னும் சொல்லாததை பார்த்தால் எதுவோ இருக்கு போல?” – ருத்ரா

“ஆமா… உங்ககிட்ட மறைக்கணும்னு நினைக்கல.. ஆனா சொல்றதுக்கான சரியான சந்தர்ப்பம் அமையல…” என தன் காதல் கதையை தோழிகளிடம் பகிர்ந்து கொண்டாள்…

“அடிப்பாவி… மதுரா சொல்லலைனு அந்த குதிகுதிச்ச. இப்போ நீ மட்டும் என்ன பண்ணிருக்க?” – கிருஷ்ணா

“கிருஷ்… மது சொல்லலைனு கோபப்பட்டதுக்கு காரணம் அவ அந்த அருள் எப்படினே தெரியாம இரண்டு வருஷமா காதலிச்சது தான். ஆனா நானோ இல்லை ருத்ராவோ அப்படி இல்லை. நாங்க காதலிக்கிறவங்களோட நல்ல பழகி இருக்கோம். அவங்களை பத்தி எல்லாம் தெரியும்…” – காவ்யா

“அப்போ நான் மாட்டும் தான் உங்க குரூப்ல சேராம இருக்கேனா. ம்ம் சரி நடத்துங்க நடத்துங்க…” – கிருஷ்ணா

அந்த நாள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான மனநிலையில் இனிமையாக கழிந்தது.

அன்று இரவு “தான் நாளை அவனை சந்திக்க வருவதாக அருளிற்கு மெசேஜ் செய்தாள்”

அடுத்த நாள் சந்திப்பிற்காக இருவரும் தங்கள் தூக்கத்தை துறந்து இரவை கழித்தனர்.

தேடல் தொடரும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here