காதலை தேடி… – 21

0
420

வணக்கம் தோழிகளே!!!! இதோ காதலை தேடி… அடுத்த பதிவு போட்டாச்சு… படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்கா…

கடந்த பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி!! நன்றி!!

காதலை தேடி… – 21

இரவு பதினோரு மணியாகியும் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் மதுரா. நொடிக்கொரு தரம் தன் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக அருளிடம் பேசி இரண்டு மாதம் ஆகின்றது. மதுராவிற்கு கோபம் குறைந்தாலும் தானாக அவனிடம் பேச தயக்கமாக இருந்தது. தினமும் அருளிடமிருந்து குறுஞ்செய்தி வராதா என மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பாள். பல நேரங்களில் அவனிடம் பேசலாம் என அவனது எண்களை அழுத்தியவள் அவன் கடைசியாக சொன்ன சொற்கள் நியாபகம் வர அவனிடம் பேசும் எண்ணத்தை மனதோடு புதைத்துவிட்டு வேறு வேளையில் கவனத்தை திருப்புவாள்.

அடுத்த நாள் வழக்கமாக அலுவலகம் செல்ல, மதியம் மூன்று மணி போல் அனைவரையும் வீட்டிற்கு கிளம்புமாறு அவர்களின் டீம்லீடர் சொல்ல, “என்னாச்சு
கிருஷ்ணா? ஏன் திடிர்னு எல்லாரையும் கிளம்ப சொல்றாங்க?”

“உனக்கு தெரியாதா என்ன விஷயம்னு?” – கிருஷ்ணா

“என்னனு தெரியாம தான உன்கிட்ட கேக்குறேன்” – மதுரா

ஒரு மூத்த அரசியல் தலைவரின் பெயரை சொல்லி “அவங்க இறந்துட்டாங்களாம். அதனால எல்லோரையும் கிளம்ப சொல்லிட்டாங்க. நாளைக்கும் ஆபீஸ் விடுமுறையாம். சரி சீக்கிரம் கிளம்புங்க. வீட்டுக்கு பத்திரமா போங்க”.

“சரி கிருஷ்ணா. நீ எப்படி போவ?”

“நான் ரேகா கூட போயிடுவேன்”.

அனைவரும் பரபரப்பாக தங்கள் வீட்டிற்கு கிளம்ப மதுராவும், காவ்யாவும் வண்டியில் வீட்டிற்கு கிளம்பினர். வண்டியில் செல்லும் போது மதுரா, அருளின் கைபேசிக்கு அழைத்தாள். அது எடுக்கப்படாமல் போக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். அவள் வீட்டிற்கு வந்து சேரும்வரை அருளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவளின் பயத்தை அதிகரிக்கும் விதமாக சில இடங்களில் கலவரம் நடப்பதாக தொலைக்காட்சியில் செய்தி வந்தது.

நேரம் செல்ல செல்ல மதுராவின் இதயம் தாறுமாறாக அடிக்க ஒருவழியாக அருளிடமிருந்து இரவு பத்து மணிக்கு, தான் பத்திரமாக இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. அவனின் குறுஞ்செய்தியை பார்த்த பின் தான் மதுராவிற்கு நிம்மதியாக இருந்தது.

“உங்ககிட்ட இருந்து எந்த பதிலும் வராததால் நான் ரொம்ப பயந்துட்டேன் அருள்”.

“கொஞ்சம் வேலையாய் இருந்ததால் கைபேசியை பார்க்கல”.

“ம்ம்ம்… சரி..” என அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் அவள் அமைதியாக இருக்க, “நீ பத்திரமா வீட்டுக்கு வந்துட்டியா?” என்றான் அருள்.

“வந்துட்டேன் அருள். கலவரம்னு மதியமே செய்தில சொல்லிட்டாங்களே. அப்படி என்ன வேலை? இவ்ளோநேரம் கிளம்பாம என்ன பண்ணீங்க?”

“அது… அடுத்த வாரம் ஐரோப்பால ஒரு மாநாடு இருக்கு. அதுல என்னோட ஆய்வு கட்டுரையை பத்தி பேசப்போறேன். அதுக்கு தான் தாயார் பண்ணிட்டு இருந்தேன்”.

“ஓ!!! சூப்பர் அருள். எப்போ கிளம்புறீங்க? எவ்ளோ நாள் அங்க இருப்பிங்க?”

“திங்கட்கிழமை கிளம்புறேன். பத்து நாள் மாநாடு”.

“ம்ம் சரி… நான் வேணும்னா விமான நிலையத்துக்கு வரட்டுமா?”

“அதெல்லாம் வேண்டாம்… நான் அதிகாலை மூணு மணிக்கு கிளம்பிடுவேன்…”

ஐரோப்பாவில் இருந்து சென்னைக்கு கிளம்பும் தேதி, நேரம், சென்னை வந்தடையும் நேரம் என அனைத்தையும் கேட்டுக் கொண்டாள் மதுரா.

பின் தனக்கு வேலை இருப்பதாக கூறி அருள் தன் வேலையை தொடர, அருளிடம் இரண்டு மாதம் கழித்து பேசிய சந்தோசத்துடன் நிம்மதியாக உறங்கினாள் மதுரா.


“அறிவில்லை உனக்கு? எத்தனை தடவ கால் பண்றது? மேடம் அவ்ளோ பிசியா இருக்கீங்களா?” என காவ்யாவை சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தான் வினோத்.

“நீ போன் பண்ணும்போது வண்டியில வந்துட்டு இருந்தேன். அப்புறம் மதுராவை வீட்ல விட்டுட்டு கிளம்பும் போது, கலவரமா இருக்கும்னு மது அம்மா தனியா போகவேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதனால அவங்க அப்பா வந்ததுக்கு அப்புறம் அவர் கூட வந்தேன். அதான் நேரமாகிடுச்சு. நான் அம்மாக்கு ஏற்கனவே தகவல் சொல்லிட்டேனே”.

“ஏய் லூசு… உங்க அம்மாக்கு தகவல் சொன்னா போதுமா? நீ உங்க அம்மாக்கு தகவல் சொன்னது எனக்கு எப்படி தெரியும்? நீ வரதுக்கு நேரமானதும் நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?”

“இப்படி பயந்துட்டு இருந்ததுக்கு எங்க அம்மா கிட்ட கேட்டுருந்தா அவங்களே சொல்லி இருப்பாங்களே?”

“எங்க அப்பாவும் இன்னைக்கு சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டாரு. அவர் இருக்கும் போது நான் எப்படி உங்க வீட்டுக்கு வர முடியும்?”

“இந்த சின்ன விஷயத்துக்கே இப்படி பயப்படுறியே… நீ எப்படி நம்ம காதலை வீட்டுல சொல்லி சம்மதம் வாங்க போற?”

“நான் மட்டும் இந்த பரிட்சையில பாஸ் பண்ணிட்டா அப்புறம் எங்க அப்பாக்கு எதுக்கும் பயப்பட மாட்டேன். தைரியமா எங்க அப்பா கிட்ட சொல்லுவேன்.. காவ்யாவை நான் காதலிக்கிறேன்… எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைங்கன்னு…”

“ம்ம்ம்… பார்க்கலாம்.. உன்னோட தைரியம் எந்த அளவுக்குனு…”

இவர்கள் மாடியில் பேசிக்கொண்டிருக்க, கீழே இருந்து காவ்யாவின் அம்மா வசந்தாவின் அழுகுரல் கேட்க பதறியடித்து கொண்டு இருவரும் கீழே ஓடினர்.

தேடல் தொடரும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here