காதலை தேடி… – 26

0
1305

வணக்கம் மக்களே!!! காதலை தேடி அடுத்த பதிவு போட்டாச்சு… படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க செல்லம்ஸ்ஸ்ஸ்ஸ்… மீ வெயிட்டிங்…

காதலை தேடி… – 26

“சரி.. உங்க கல்யாணத்துக்கு நான் ஒத்துக்குறேன்..” என சிவநேசன் சொல்ல ருத்ராவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அவளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டு கையில் தையல் போட்டு வீட்டிற்கு அனுப்பட்டாள். அதுவரை அவளுடனே இருந்த தீபக் அவளை வீட்டில் விட்டுவிட்டு கிளம்ப, “ஒரு நல்ல நாள் பார்த்து உங்க வீட்ல இருந்து வரச் சொல்லுங்க” என சிவநேசன் கூற மகிழ்ச்சியுடன் அடுத்த வாரம் கூட்டிவருவதாக சொல்லிச் சென்றான்.

“அப்பா… ரொம்ப தேங்க்ஸ் பா…” என ருத்ரா சொல்ல எதுவும் கூறாமல் தனது அறைக்கு சென்றார்.

சிவநேசன் சம்மதம் கூறியதும் தன் வீட்டிலும் தீபக் தன் காதல் விவகாரத்தை கூற பெரிதாக எந்தவித மறுப்பும் இல்லாமல் ஒப்புக் கொண்டனர். அடுத்த வாரத்தில் தன் அப்பா, அம்மா, தங்கை மற்றும் சிலருடன் தீபக், ருத்ராவை பெண் கேட்டு வந்தான். எந்தவித பிரச்சனையும் இன்றி வீட்டிலேயே தட்டை மாற்றிக் கொண்டனர். இன்னும் மூன்று மாதம் கழித்து திருமணம் வைத்து கொள்ளலாம் என தீபக் வீட்டில் சொல்ல அனைவரும் சம்மத்தித்து திருமணத்திற்கும் நாள் குறித்தனர்.

அனைத்தையும் தன் விருப்பப்படியே நடந்தாலும், தன் தந்தை தன்னிடம் பேசாமலிருப்பது மனதிற்கு வருத்தமாக இருந்தது. பலதடவை தானே சென்று பேசியும் அவர் பதில் பேசாது இருப்பது வேதனையாக இருந்தது.

ஒருவழியாக தன் வீட்டில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தாள் ருத்ரா. தோழிகளிடம் தொடர்பு இல்லாமல் இருந்த நாட்களில் நடந்த அனைத்தையும் கிருஷ்ணா கூற மதுராவிம் காதல் கைகூடவில்லையே என தன் தோழிக்காக வருந்தினாள்.

“என்ன கிருஷ்ணா நான் இல்லாதப்போ இவ்ளோ நடந்திருக்கு?”

“ஆமா ருத்ரா… என்ன பண்றது? ஆனா மது இப்போ பரவாயில்ல… அவளுக்கு கஷ்டமா இருந்தாலும் எங்ககூட இருக்கும் போது கொஞ்சம் சிரிக்குறா… சீக்கிரம் சரியாடுவா…”

ருத்ராவை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்த மதுராவும், காவ்யாவும் அவளை கட்டியணைத்து வாழ்த்து கூறினர்.

“காவ்யா, வினோத்துக்கு எப்போ தேர்வு முடிவு வருது?”

“இன்னும் மூணு நாள்ல ருத்ரா… அவனை விட எனக்கு தான் ரொம்ப பயமா இருக்கு…”

“கவலைபடாத.. எல்லாம் நல்லதே தான் நடக்கும்…”

இன்று வினோத்திற்கு தேர்வு முடிவு வெளிவரும் நாள்… காலையிலே சீக்கிரம் எழுந்த காவ்யா, வினோத்திற்காக கோயிலுக்கு சென்று வேண்டிக்கொண்டாள். இன்னும் அரைமணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும்… காவ்யாவின் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தது… தேர்வு முடிவு வந்து ஒரு மணிநேரமாகியும் வினோத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. காவ்யாவே வினோத்தின் கைபேசிக்கு அழைத்தாள்.

“ஹலோ வினோத்… பாஸ் ஆகிட்டாதானே?”

……..
“ஹலோ.. ஹலோ… வினோத் கேக்குதா?”

“ம்ம்ம்… சொல்லு காவ்யா”

“பாஸ் ஆகிட்டாதானே?”

“அது… அதுவந்து.. இல்ல காவ்யா…”

காவ்யாவிற்கு இந்த பக்கம் தன் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. தந்தையிடம் இதை சொல்லி தானே அவள் அவகாசம் கேட்டிருந்தாள். இப்போது அவருக்கு என்ன பதில் சொல்வது…என யோசித்து கொண்டிருந்தவள், “சரி வினோத்… நீ ஒன்னும் கவலைப்படாதே… அடுத்த பரீட்சைல பார்த்துக்கலாம்…” என அவனிற்கு ஆறுதல் கூறி கைபேசியை அணைத்தாள்.

சோர்வுடன் அலுவலகம் வந்தவளை தோழிகளும் ஆவலாய் வினோத்தின் தேர்வு முடிவை பற்றி கேட்க, காவ்யா கூறியதை கேட்டு அவர்களுக்கும் அவளை நினைத்து வருத்தமாக இருந்தது. அன்று முழுவதும் வேலை செய்யமுடியாமல் மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்தவள் முதல் வேலையாக வினோத்தை மாடிக்கு வருமாறு அவனின் கைபேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனின் தம்பி சுகுமாரிடம் விசாரிக்க, அவன் கூறிய செய்து கேட்டு அதிர்ச்சியானாள்.

“அப்பாவுக்கும், அண்ணாவுக்கும் பயங்கர சண்டைக்கா. இந்த பரீட்சைல அண்ணா பெயில் ஆகிட்டான்னு அப்பா ரொம்ப கோபத்துல இருந்தாரு.. அதனால அப்பா இடுப்பு வார் (பெல்ட்) எடுத்து ரத்தம் வர அளவுக்கு அடிச்சிட்டாரு. அதனால் அண்ணா கோபப்பட்டு வீட்டை விட்டு கிளம்பிட்டாங்க..”

இதை கேட்டவுடன் காவ்யாவிற்கு என்ன சொல்வதென தெரியாமல், “எங்க போனான்? போன் பண்ணான?”

“எங்க போனாங்கனு தெரியல கா… போனும் அணைச்சுவச்சுட்டாங்க”

தன் அறைக்கு வந்தவள் இரவு முழுவதும் வினோத்தின் கைபேசிக்கு அழைத்து பார்த்தாள். பின் குறுஞ்செய்தியும் அனுப்பினாள். காலை எழுந்து அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தவள் தன் அன்னையிடம் “மா.. வினோத் பத்தி ஏதாவது தெரிஞ்சதா?”

“இப்போ தான் சரோஜா ஆண்டி சொன்னாங்க காவ்யா.. அவனோட சித்தி வீடு பெங்களூர்ல இருக்காம்.. அங்க போயிருக்கானாம்…இப்போ தான் அவங்க அம்மாக்கு போன் பண்ணி சொன்னானாம்..”

அவனின் அம்மாவிற்கு அழைத்தவன் தன்னை ஏன் அழைக்கவில்லை என காவ்யா யோசித்து கொண்டே தன் அலைபேசியை எடுத்து வினோத்திற்கு அழைக்க அப்பொழுதும் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

ஒருவாரம் இடைவிடாது வினோத்திற்கு போன் செய்தும் எந்தவித பலனும் இல்லை. மீண்டும் சுகுவிடமே வினோத்தை பற்றி கேட்க, “அக்கா.. அண்ணா புது நம்பர் மாத்திட்டாங்க… அம்மா தினமும் பேசுறாங்க.. இங்க வரச் சொல்லி அழறாங்க.. ஆனா அண்ணா வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க…” என சுகுமார் கூற, காவ்யாவினுள் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது. இருப்பினும் அவனின் புது எண்ணை வாங்கி கொண்டு வினோத்திற்கு அழைத்தாள். அவளின் எந்த அழைப்பிற்கும் வினோத் ஏற்கவில்லை. ஐந்து நாள் கழித்து அவனே காவ்யாவிற்கு அழைத்தான்.

“ஹலோ வினோத்… ஏன்டா என்கிட்டே கூட சொல்லாம போயிட்ட? நான் எத்தனை தடவை உனக்கு போன் பண்ணேன் தெரியுமா? நீ நல்லாயிருக்கியா? உங்க அப்பா உன்னை அடிச்சிட்டாராமே?”

“ம்ம்ம்.. அதெல்லாம் நியாபகப்படுத்தாதே காவ்யா…”

“சரி.. நீ எப்போ இங்க வருவ?”

“நான் இனி அங்க வரப்போறதில்லை காவ்யா”

“என்ன சொல்ற வினோத்? இங்க வரமாட்டியா? அப்பா கொடுத்த அவகாசம் முடிய இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு..”

“அதப்பத்தி பேச தான் உனக்கு போன் பண்ணேன்.. என்னால எங்க அப்பாகிட்ட இப்போ பேசமுடியாது… அவரை பார்க்க கூட எனக்கு பிடிக்கல.. அதுனால தான் நான் வீட்டை விட்டு வந்தேன்… நீயும் இங்க வந்துடு.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

“வினோத்!!! என்ன சொல்ற நீ? யாருக்கும் தெரியாம எதுக்கு கல்யாணம் பண்ணனும்? நான் ஏற்கனவே எங்க வீட்ல சொல்லிட்டேன்… நீயும் உங்க வீட்ல சொல்லிடு. இரண்டு வீட்டு பெரியவங்க சம்மதத்தோட நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

“அது நடக்காது காவ்யா”

“நீ இப்போ உங்க அப்பா மேல இருக்க கோவத்துல பேசுற… கொஞ்ச நாள் போகட்டும்.. அதுக்கப்புறம் உங்க வீட்ல பேசலாம்”

“நான் எப்போ பேசினாலும் எங்க அப்பா ஒத்துக்க மாட்டார் காவ்யா”

“அவர் கிட்ட பேசாம நீயே எப்படி ஒரு முடிவுக்கு வருவ?”

“எங்க அப்பாவை பாதி எனக்கு தெரியும்”

“முயற்சி பண்ணாம எந்த ஒரு விஷயத்தையும் இப்படி தான் இருக்கும்னு நாம முடிவு பண்ணக்கூடாது வினோத்”

“எனக்கு இந்த அறிவுரைல வேண்டாம்.. எண்ணை கல்யாணம் பண்ணனும்னா நான் சொல்றபடி தான் கேட்கணும்”

“வினோத், நீ இப்போ கோபத்துல பேசுற… கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு. எங்க வீட்ல என்னோட காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. அவங்களை ஏமாத்திட்டு என்னால இப்படி வந்து கல்யாணம் பண்ண முடியாது”

“இதுதான் உன்னோட முடிவா?”

“ஆமா வினோத்.. எங்க அப்பாவுக்கு நாம காதலிக்கிற விஷயம் தெரியும்.. அன்னைக்கு எனக்காக ஆறு மாசம் டைம் கொடுத்தவர் அதுக்கப்புறம் இதை பத்தி ஒருவார்த்தை கூட என்கிட்ட கேட்கலை. இப்படி அவர் என்மேல நம்பிக்கை வச்சிருக்கும் போது நான் எப்படி அவங்களை ஏமாத்திட்டு வரது?”

“அப்போ நீ என்னை மறந்திடு காவ்யா.. உனக்கு உங்க அப்பா தான் முக்கியம்னு சொல்லிட்ட.. இனிமே உங்க அப்பா பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ… குட்பாய்” என சொல்லி அலைபேசியை துண்டித்தான்.

வினோத்தின் பேச்சால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தேடல் தொடரும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here