காதலை தேடி – 8
ஹாய் பிரண்ட்ஸ். .. காதலை தேடி அத்தியாயம் – 8 போட்டுட்டேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க தோழிகளே !!!!
திங்கட்கிழமை தன் தாய் தந்தையரிடம் ஆசிர்வாதம் வாங்கிய மதுரா அவர்கள் கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருந்தாலும் அருளிடம் இருந்து மேற்கொண்டு எந்தவொரு பதிலும் வராததால் சற்றே உற்சாகமிழந்து காணப்பட்டாள்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்” மதுரா என கிருஷ்ணா, ருத்ரா வாழ்த்தினர்.
என்ன மது இன்னைக்கு எங்க டிரீட்?
எங்க போகலாம்? நீயே சொல்லு கிருஷ்.
ம்ம் சாயங்காலம் ஆறு மணிக்கு ஐஸ்கிரீம் பார்லர் போறோம் ஓகேவா? காவ்யா, ருத்ரா உங்களுக்கு ஓகேவா?
எங்களுக்கும் ஓகே தான். சரி மதுரா எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அப்புறம் பாக்கலாம் என ருத்ரா கிளம்பு அனைவரும் தங்கள் வேளையில் மூழ்கினர்.
மதுரா மட்டும் தன் கவலையை மறைத்து வெளியில் சிரித்து கொண்டிருந்தாள். என்ன தான் அவள் மறைத்தாலும் காவ்யாவின் கண்கள் அவளை கண்காணித்து கொண்டே இருந்தது.
பதினோரு மணிக்கு ருத்ராவிடமிருந்து கேபிடேரியாக்கு வருமாறு மற்ற மூவருக்கும் மெசேஜ் வர அனைவரும் அங்கே ஆஜராகினர். அவர்கள் வருவதற்குள் ருத்ரா கேக் வெட்ட ஏற்பாடு செய்திருந்தாள். மதுராவிற்கு இவை அனைத்தும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஏதோ ஒன்று மனதிற்குள் அழுத்தி கொண்டிருந்தது.
மாலை அனைவரும் ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று அவரவர்க்கு பிடித்தமானதை ஆர்டர் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்க, மதுரா இரண்டு நாட்காளாக செல்லாத முகநூலுக்குள் சென்றாள். அருளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாது உள்பெட்டியை திறந்து பார்த்தால் “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றிருந்தது. அவனிற்கு எப்படி தெரியும் என யோசித்து கொண்டிருக்கையில் அவளின் பிரெண்ட் ரிக்வஸ்ட் அக்செப்ட் செய்திருந்தான். அவள் இருதினங்களாக முகநூல் செல்லாததால் அவளிற்கு தெரியவில்லை.
அருளின் பிறந்தநாள் வாழ்த்தை பார்த்தவளின் முகம் பிரகாசமாய் மாற உடனடியாக அவனிற்கு நன்றி என பதில் அனுப்பினாள்.
பின் அனைவரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பு காவ்யாவும், மதுராவும் தத்தம் நினைவுகளில் இருக்க அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர்.
இன்றுடன் வினோத்திடம் பேசி மூன்று நாட்களாகியது. அவனிடமிருந்து வந்த மெசேஜ் எதற்கும் காவ்யா பதில் அனுப்பவில்லை. காவ்யா அவளின் சிந்தனையில் மூழ்கியிருந்த அதே வேளையில் மதுராவிற்கு அருளிடமிருந்து பதில் வந்தது.
சம்பிரதாய கேள்விகளான சாப்பிட்டாயா? தூங்கலையா? என்று ஆரம்பித்தது இருவரின் உரையாடல்.
என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா அருள்?
உண்மைய சொல்லனும்னா என்னொட பிரெண்ட்ஸ்ல யாரோ தான் என்ன கிண்டல் பண்றாங்கனு நினைச்சேன்.
இன்னமும் என்னை நம்பலையா நீங்க? – மதுரா
என்னோட வண்டி நம்பர், பிரெண்ட்ஸ் பத்தி நீங்க சொன்னதவச்சு பார்க்கும்போது உண்மை தான் சொல்றீங்கனு தோணுது. ஆனா உங்கள யாருனு தான் நினைவு வரல. ஒருவேளை உங்க போட்டோ பார்த்த நியாபகம் வரும்னு நினைக்கிறேன்.
லேபிள் தன் தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அருளிற்கு அனுப்பினாள்.
உங்க கூட இருக்குற மத்தவங்கள பார்த்த மாதிரி இருக்கு. இதுல நீங்க யாரு?
பச்சை கலர் சுடிதார்ல இருக்க பொண்ணு தான் நான்.
ம்ம்ம் எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கு. – அருள்
ரொம்ப சமாளிக்காதிங்க அருள். உங்களுக்கு நியாபகம் இல்லனு தெரியும்.
ஹிஹிஹி.. கண்டுபிடுச்சுட்டிங்களா? எனக்கு கொஞ்சம் நியாபகசக்தி கம்மிங்க.
பனைமரத்துல பாதி உயரம் படைச்ச கடவுள் கொஞ்சம் அந்த மண்டைகுள்ள மூளையும் வச்சுயிருக்கலாம்.
ஹலோ.. யாருக்கு மூளை இல்லனு சொல்ற? பார்க்க வாத்து மாதிரி இருந்துட்டு என்னையே கலாய்க்குறீயா?
என்னது வாத்தா? மிஸ்டர் ஒட்டகசிவிங்கி. நீங்க ஒவரா வளந்துட்டு என்ன வாத்துனு கிண்டல் பண்றீங்களா?
நீங்க, வாங்க என மரியாதையாய் ஆரம்பித்த உரையாடல் நீ, வா என மாறியது. நள்ளிரவை தாண்டியும் இருவரும் பேசிகொண்டிருக்க எப்பொழுது தூங்கினர் என இருவருக்கும் தெரியாது.
இரவு வெகு நேரம் விழித்திருந்ததால் காலையில் கண்கள் சிவந்திருக்க குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொண்டு கிட்சனிற்கு வந்தாள் மதுரா.
தன் அன்னைக்கு சமையலில் உதவியவள் அருளிடம் பேசிய உற்சாகத்திலே அலுவலகம் கிளம்பி சென்றாள்.
காவ்யா, அந்த கொசுவ (டீம் லீடர்) ஏதாவது பண்ணனும் டி. இன்னைக்கு காலைல என்னோட ரிப்போர்ட்ல மிஸ்டேக் இருக்குனு சொல்லி மெயில் அனுப்பினான். சரி எந்த இடத்துல கரெக்ஷன் பண்ணனும்னு கேட்டதுக்கு நீயே கண்டுபிடுச்சு சரி பண்ணுன்னு சொல்லிட்டான். இன்னைக்கு முழுக்க உட்கார்ந்து முண்ணூறு பக்கத்த படிச்சு பார்த்து கண்ணெல்லாம் எரியுது. இதே அந்த திவ்யாவோட ரிப்போர்ட்டா இருந்தா எவ்ளோ தப்பு இருந்தாலும் ஒன்னும் சொல்லமா சிரிச்சுகிட்டே டெலிவர் பண்ணுவான் என கிருஷ்ணா புலம்பி கொண்டிருந்தாள்.
சரி விடு கிருஷ். அந்த கொசுவ மருந்தடிச்சு விரட்டிடலாம் என மதுரா சொல்ல கண்டிப்பா ஏதாவது பண்ணனும் மது.
ஏய் கிருஷ்! விடு இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற? அடுத்த வாரம் எங்காவது வெளிய போகலாமா? என ருத்ரா கேட்க காவ்யா மாலுக்குப போகலாம் என்றாள்.
ருத்ரா பீச் என சொல்ல ஆளாளுக்கு ஒரு இடம் சொல்ல கடைசியாக சினிமாவுக்கு போகலாம் என முடிவு செய்தனர்.
சரி. அப்போ அன்னைக்கு நம்ம மதுராவோட டிரீட்.
அடிபாவிங்களா.. இப்போ தானே நான் ஐஸ்கிரிம் பார்லர்ல டிரீட் கொடுத்தேன்?
சரி விடு மது. மாச கடைசில. நீயே கொடுத்துடு என மற்ற மூவரும் சொல்ல, வேற என்ன பண்றது? கொடுத்து தொலையிறேன் என ஒத்துகொண்டாள்.
அடுத்த புதன்கிழமை எல்லாருக்கும் ஓகேவா? டிக்கெட் புக் பண்ணிடுறேன். கடைசி நிமிஷத்துல யாரும் சொதப்பிடாதிங்க தெய்வங்களா…
ஹே மது. இந்த இரண்டு பேரையும் கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு என கிருஷ் உறுதி மொழி கொடுக்க அனைவரும் கிளம்பினர்.
எந்த வித அரவாரமுமின்றி அந்த வாரம் இனிதே முடிந்தது. மதுரா அருளிடம் பேசும் நேரம் நள்ளிரவையும் தாண்டி சென்று கொண்டிருந்தது. காவ்யா வினோத்தை பார்த்து இரண்டுவாரமாகியது. வினோத் தொடர்ந்து காவ்யாவிற்கு மெசேஜ், போன் கால் செய்து கொண்டிருந்தான். ஏதாவது காரணம் கூறி காவ்யாவை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றால் அங்கும் அவள் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
பாலாவிடம் மின்னூட்டி (Charger) வாங்குவது போல், வசந்தாவிடம் ஏதாவது கொடுப்பது போல் என எத்தனை முறை வந்தாலும் காவ்யாவை அவனால் சந்திக்க முடியவில்லை.
பாலா எங்க உங்கவீட்டு குட்டி பிசாசு? இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையா?
அதெல்லாம் அக்கா எப்போவோ வந்தாச்சு. உள்ளே ரூம்ல இருக்காங்க.
இவர்களின் குரல் கேட்டும் காவ்யா அறையை விட்டு வெளியே வரவில்லை. சிறிது நேரம் பாலாவிடம் பேசிக்கொண்டு காவ்யாவின் வருகைக்காக காத்திருந்தவன் அவள் வேண்டுமென்றே வராமலிருப்பது புரிய தன் வீட்டிற்கு கிளம்பினான்.
திமிரு பிடிச்சவ. இந்த இரண்டு வாரத்துல எத்தனை மெசேஜ், போன் கால் பண்ணாலும் எடுக்க மாட்டிங்குற. அன்னைக்கு தெரியாம நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்டும் என்னை வேணும்னே பார்க்காம தவிர்க்குறா என வினோத் காவ்யாவின் விலகலை தாங்க முடியாமல் புலம்பி கொண்டிருக்க அங்கே காவ்யவோ சுய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
இத்தனை வருஷமா இந்த வினோத் கூட பழகிட்டு இருக்கோம். ஏன் இந்த இரண்டு வாரமாவே அவன் முகத்தை பார்த்து பேசமுடியல? ஒருவேளை இதுக்கு பேருதான் வெட்கமா? ஐயோ காவ்யா உன்ன இப்படில யோசிக்கவச்சுட்டானே இந்த வினோ. இதுக்கு முன்னாடில எத்தனையோ தடவ வினோ தொட்டு பேசிருக்கான். இப்போ மட்டும் என்ன புதுசா இருக்கு? அன்னைக்கு மாடில நின்னு பேசுறப்ப வேற அந்த பார்வை பார்த்து வச்சானே. அத தாங்க முடியாம தானே கீழ ஓடிவந்துட்டேன். அதுசரி அவன் ஏன் அப்படி பார்த்தான்?
என காவ்யா சுய ஆராய்ச்சி நடத்தி கொண்டிருந்தாள்.
தேடல் தொடரும்…..