காதலை தேடி – 9

0
261

ஹாய் டியர்ஸ்… அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன். போன அத்தியாயத்துக்கு லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி… அதே மாதிரி இதையும் படிச்சுட்டு லைக், கமெண்ட் தட்டிவிடுங்க டியர்ஸ்…

காதலை தேடி – 9

அன்று தீபக், ருத்ராவிற்கு உதவி செய்ததிலிருந்து இருவருக்குமான நட்பு இன்னும் நெருக்கமானது. ருத்ரா வீட்டிற்கு கிளம்ப நேரமானால் தீபக்கும் உடனிருந்து அவளுடன் கிளம்புவான்.

ஹாய் தீபக்…. என்ன இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?

முக்கியமான ரிபோர்ட் ஒன்னு டெலிவெர் பண்ணனும். அதுசரி நீ என்ன அதிசயமா எட்டு மணிக்கு வந்துட்ட?

ஓ அதுவா… இன்னைக்கு படத்துக்கு போகலாம்னு பிளான் பண்ணிருக்கோம்.

எத்தனை மணி ஷோ?

சாயங்காலம் ஆறு மணி.

வீட்டுல சொல்லிட்டியா ?

ஈவ்னிங் ஷோனு சொன்னா எங்க அம்மா என்னை பேயோட்டிடுவாங்க. அதான் காவ்யா கூட வெளிய போறன்னு சொல்லிருக்கேன்.

சரி சரி வீட்டுக்கு பத்திரமா போ. நானும் இணைக்கு நைட் ஊருக்கு கிளம்புறேன். சனிக்கிழமை தான் வருவேன்.

என்னது மூணு நாள் லீவா? உனக்கு மட்டும் எப்படி லீவ் கொடுத்தாங்க?

தங்கச்சிய பொண்ணு பார்க்கவராங்க. அதான் அம்மா வேலூர்க்கு வர சொல்லிருக்காங்க. உனக்கு தான் எங்க அப்பாவை பத்தி தெரியுமே. எப்போதும் குடி தான். மாப்பிளை வீட்ல இருந்து வரும்போது நானும் கூட இருந்த அம்மாக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்.

ம்ம் சரி… இந்த இடம் கண்டிப்பா அமைஞ்சிடும். கவலைப்படாம போய்ட்டு வா.

இந்த சம்பந்தம் முடிஞ்சுடுச்சுனா கல்யாணத்துக்கு கொஞ்சம் பேங்க்ல லோன் போடணும். அப்புறம் ஆபீஸ்லயும் லோன் போடலாம்னு இருக்கேன்.

ம்ம் நம்ம மேனேஜர் கையெழுத்து போட்டா சீக்கிரம் கிடைச்சிடும் தீபக். கவலைப்படாம வேலையை பாரு. எல்லாம் நல்லபடியா நடக்கும். தீபக்கிடம் பேசிவிட்டு ருத்ரா தன் இடத்திற்கு வந்து வேலையை தொடர்ந்தாள்.

ருத்ராவுடன் பேசியபின் சமாளிக்கலாம் என தைரியத்துடன் தன் வேளையில் மூழ்கினான்.

மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள் சுமார் பதினைந்து நிமிடத்தில் அந்த வணிக வளாகத்தை அடைந்தனர்.

படம் ஆரம்பிக்க இன்னும் அரை மணிநேரம் இருக்கவே அங்குள்ள கடைகளில் சுற்றி திரிந்து படம் ஆரம்பிக்க பத்து நிமிடம் இருக்கும்முன் தங்கள் இருக்கையை தேடி உட்கார்ந்தனர். படம் முடிந்து வெளியே வந்த போது மணி ஒன்பதரையை நெருங்கி கொண்டிருந்தது. காவ்யாவும், மதுராவும் ஒரு வண்டியில் சென்றுவிட ருத்ரா, கிருஷ்ணாவை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.

பாதி வழியிலேயே வண்டி நின்றுவிட என்ன தெய்வதென்று தெரியாமல் பக்கத்தில் ஏதேனும் வாகனம் பழுது பார்க்கும் கடை உள்ளதா? என ஒரு கடையில் விசாரித்து கொண்டிருந்தாள்.

ச்சே! நேரங்காலம் தெரியாமா இந்த வண்டி வேற படுத்துதே. ஏற்கனவே அம்மா வேற இரண்டு தடவ போன் பண்ணிட்டாங்க. அன்னைக்கு பத்து மணிக்கு போனதுக்கே அவ்ளோ திட்டு விழுந்தது.

இப்போ என்ன பண்றது என யோசித்து கொண்டிருக்கையில் தீபக்கின் நினைவுவர அவனது செல்பேசிக்கு அழைத்தாள். இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்காமல் போக இவன் வேற ஊருக்கு கிளம்பிறேன்னு சொன்னான். ஒருவேளை ஊருக்கு கிளம்பிட்டானோ.

பாப்பா உன்ன ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கேன். ஏதாவது பிரச்சனையா.

அது வண்டி பாதிலேயே நின்னுடுச்சு. என்ன பிரச்சனைன்னு தெரியல.

அய்யயோ… உங்க வீடு எங்க மா பாப்பா இருக்கு?

ராயபுரம் ணா…

இங்க இருந்து ராயபுரம் போகணும்னா இரண்டு பஸ் மாறனுமே பாப்பா… சரி எனக்கு தெரிஞ்ச கடை ஒன்னு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல மூடிடுவான். நீ இப்போ என்கூட வந்தா வண்டிய சரி பண்ணிடலாம்.

அந்த டீக்கடை அண்ணா பக்கத்துல எதுவும் கடை இல்லனு சொன்னாங்க…

அது அந்த ஆளுக்கு தெரியாது பாப்பா…. தோ அந்த சந்து தெரியுது பாரு அங்க தான் இருக்கு. இங்க இருந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகும் என ஒரு இருட்டு பாதையை காண்பிக்க ருத்ரா சுத்தரித்தாள். அவள் பதில் கூறுவதற்குள் தீபக்கிடமிருந்து அழைப்பு வந்தது.

ஹலோ தீபக்…

சொல்லு ருத்ரா…. என்ன இந்த நேரத்துல போன் பண்ணிருக்க?

அதுவந்து… ஒண்ணுமில்லை… நீ ஊருக்கு கிளம்பறேன்னு சொன்னியே கிளம்பிட்டியா?

ம்ம்… இப்ப தான் வீட்ல இருந்து கிளம்புறேன்… சரி நீ எங்க இருக்க? வீட்டுக்கு வந்துட்டியா?

அது… வரவழியில வண்டி நின்னுடுச்சு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல…இங்க பக்கத்துல கடையும் இல்ல… பக்கத்துல ஒருத்தன் நின்னுகிட்டு ஒருமாதிரி பாக்குறான்… எனக்கு பயமா இருக்கு தீபக் என்று சொல்லும்போது அவள் குரலில் உள்ள பதற்றத்தை கண்டுகொண்டவன் “சரி நீ இப்போ எங்க இருக்க சொல்லு?

அவள் இடத்தை கூறியவுடன் பத்து நிமிடத்தில் தன் வண்டியில் அங்கு வந்து சேர்ந்தான். தீபக் வரும்வரை அந்த ஆளும் அங்கேயே நின்று கொண்டு அவளிடம் பேச்சு கொடுக்க, ருத்ரா எதற்கும் பதிலளிக்காமல் அவனின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தவள் அவனை பார்த்தவுடன் வேகமாக அவனிடம் சென்றாள்.

ருத்ரா பேச வாய் திறக்கும் முன் “அறிவில்லை உனக்கு? சினிமா போறதுக்கு வேற நேரமே கிடைக்கலையா உனக்கு?” இந்த நேரத்துல அதுவும் இந்த மாதிரி இடத்துல தனியா நிக்குற? அப்படி என்ன உனக்கு சினிமா முக்கியமாப்போச்சு? என அவன் திட்டி கொண்டு போக “வண்டி இப்படி பாதியிலேயே நிக்கும்னு எனக்கு எப்படி தெரியும்?”

“எதிர் கேள்வி கேட்க தெரியுதுல்ல? அப்போ ஜான்சி ராணி தனியாவே போக வேண்டியது தானே? என்ன எதுக்கு கூப்பிட்ட?”

ஏற்கனவே பயத்தில் இருந்தவள் தீபக் திட்டவும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவள் அழுவதை பார்த்தவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அவளை பின்னாடி ஏற சொன்னான். அவள் ஏறாமல் யோசித்து கொண்டிருக்க, “என்ன வீட்டுக்கு போற எண்ணம் இருக்கா? இல்லையா?”

“அதுவந்து என்னோட வண்டிய என்ன பண்றது?” சற்று யோசித்தவன் பக்கத்தில் உள்ள கடையில் நாளை வந்து வண்டியை எடுத்து கொள்வதாக சொல்லி அங்கே வண்டியை விட்டுவிட்டு கிளம்பினர்.

உங்க வீட்ல போன் பண்ணி சொல்லிடு. நேரமாச்சுனு அவங்க பயப்படப்போறாங்க. சரி என தலையாட்டியவள் தன் அம்மாவிற்கு போன் செய்து வண்டி பழுதடைந்து விட்டதாகவும் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக கூறி செல்லை அணைத்தாள்.

ருத்ரா வீட்டிற்கு திரும்பும் முனையில் வண்டியை நிறுத்தியவன் “இங்கேயே இறங்கிடு ருத்ரா. இந்த நேரத்துல உன்னோட வீட்ல இறக்கிவிட்டா தேவையில்லாத பிரச்சனை வரும்”.

சாரி தீபக். என்னால உனக்கும் தேவையில்லாத சிரமம்.

அதெல்லாம் ஒன்னும் சிரமம் இல்ல.. நீ கிளம்பு… நாளைக்கு மறக்காம வண்டியை அந்த கடையில இருந்து எடுத்துடு.

அவள் கிளம்பாமல் இருப்பதை பார்த்து இன்னும் என்ன?

நீ ஊருக்கு போறத வேற கெடுத்துட்டேன். என்னை மன்னிச்சுடு.

இதுக்கு ஏன் இவ்ளோ கவலைப்படற? இப்போ கிளம்பினால் கூட காலைல போயிடுவேன்.

ரொம்ப நன்றி தீபக்… நீ மட்டும் சரியான நேரத்திற்கு வரலைனா என்ன பண்ணிருப்பேனோ.

நன்றியெல்லாம் வேண்டாம். இனியாவது கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ….
நா கிளம்புறேன்…

தன் வீட்டிற்கு வந்தவள் தன் தாயிடமும் தாமதமாக வந்ததற்கு சிலபல திட்டுக்களை பெற்றுக்கொண்டு தன் அறைக்கு வந்தாள்.

கட்டிலில் படுத்தவள் தற்பொழுது நடந்த அனைத்தும் படமாய் ஓட, “ஏன் தனக்கு ஒரு துன்பம் என்றதும் தீபக்கின் நினைவு வரவேண்டும் என சிந்தனையில் மூழ்கினாள்”.

தேடல் தொடரும்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here