காதல் கருவறை 10

0
866

கரு 10:

நான் சரண் , சந்தோஷியோட அப்பாவும் எங்க அப்பாவும் பிசினஸ் பார்ட்னர்ஸ் , அவங்க எல்லாரும் சேர்ந்து எங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை பேசி வெச்சாங்க , அவளுக்கும் எனக்கும் இதுல ரொம்ப சந்தோஷம் நாங்க அவ்வளவா பேசிக்கலன்னா கூட எங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது எல்லாருக்கும் இந்த விஷயத்தை சொல்லி நிச்சயம் வெச்சுக்கலாம்னு அவங்க சொன்னப்ப நான்தான் என்னோட பிஸினஸ் விரிவாக்கத்துக்கு ஜெர்மனி போகணும் அது முடிய எப்படியும் பத்து மாசம் இல்ல ஒரு வருஷம் ஆகும் அது முடிஞ்சதும் கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு கேட்டேன் எல்லாரும் சம்மதம் சொன்னாங்க என்றவன் அன்று நடந்ததை நினைவு கூர்ந்தான்

சரண் தனியாக பேச வேண்டும் என்றதும் அவனை தன் அறைக்கு அழைத்து வந்தாள் சந்தோஷி , இருவரின் மௌனத்தை சரணே கலைத்தான்

ரொம்ப தேங்க்ஸ் சந்தோஷி என்றவனை கேள்வியாய் பார்த்தாள்

நான் வெளிநாடு போக நீ ஓகே சொன்னதுக்கு

நான் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவே இல்லையே என்றவளிடம்

நான் என் முடிவை சொல்லும்பொழுது உன்னை தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை அதில் என் முடிவுக்கு முழு சம்மதமும் என்னை பிரிகின்ற வலியும் தெரிந்தது தவிர என் வெற்றியை பற்றி இனி அதிக அக்கறை உனக்கு தான் உள்ளது கூடவே அளவில்லா காதலும் என்றபடி நெருங்கியவனிடம்

கா காதலா நான் எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது என்றவள் அவன் அருகாமையில் நிஜமாகவவே அதை உணரத்தான செய்தாள் .

இனி என்னிடம் உனக்கு என்ன தயக்கம் சஷி , காதலை பற்றி உனக்கு நான் சொல்லி தருகிறேன் என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு நான் வெளிநாட்டில் இருந்து வந்ததும் பி . ஹெச் . டியே செய்யலாம் என்று அவளை அணைத்தான் .

சற்று நேரம் அவனின் அணைப்பில் கட்டுண்டிருந்தவள் மெதுவாக தலை நிமிர்த்தி அவனை பார்த்து எனக்கு இந்த கல்யாணம் சரி வருமான்னு குழப்பம் இருந்தது ஆனாலும் உங்க மேல ஏதோ நம்பிக்கை அதான் சரி சொன்னேன் இப்ப இருக்கற நிம்மதியை நான் இது வரை அனுபவிச்சதே இல்லை , நீங்க வெற்றிகரமா உங்க வேலையை முடிச்சிட்டு வந்திரணும்னு நான் கடவுளை வேண்டிக்கறேன் சரண்

சஷி எனக்கு தெரியும் உனக்கான என் தேடலில் நட்பை தாண்டி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது , இனி எனக்கு கவலை இல்லை , கண்டிப்பா நான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் அது வரைக்கும் தினமும் உன்னை போன் அப்புறம் சோஷியல் நெட்வொர்க்கில் தொடர்பு கொள்ளுவேன் என்றவன் அவள் முகவாய் நிமிர்த்தி

ஒரு வருஷம் ஆகும் சஷி என் வேலை முடிய அது வரை உன் வாசனையை நான் உணர்கிறா மாதிரி ஒரு அடையாளம் கொடு என அவள் சுதாரிப்பதற்குள் அவள் இதழில் தடம் பதித்தான் , அதில் மயங்கியவளை அணைத்தவன் சிரித்தபடி

ஒரு வருடம் தானே சீக்கிரம் ஓடி விடும் என்று நினைத்தேன் ஆனால் இப்பொழுது ஒரு வருடம் என்று ஆயாசமாக இருக்கிறது என்றவன் ஒரு பெருமூச்சை விட்டு பின் தன்னை சமன்பண்ணி கொண்டு

நமக்காக எல்லாரும் கீழே காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவளை கூட்டி சென்றான்

இருவரின் பெற்றோர்களும் அவர்களின் முழு சம்மதமும் அறிந்து சந்தோஷப்பட்டனர் , சரண் ஊரில் இருந்து வந்ததும் நிச்சயம் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர் , அடுத்த வாரத்தில் அவன் ஜெர்மனி கிளம்பி விட்டான் .

தன் நினைவுகளில் இருந்து கலைந்தவன் அவளிடம் அதன் பிறகு என்னிடம் அவள் முதல் இரு மாதம் பேசினாள் பிறகு அவள் என்னிடம் பேசவே இல்லை தாருண்யா , என் தாய் தந்தையிடம் கேட்டால் நிச்சயத்திற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அவள் பெற்றோர் கூறியதாக கூறினார்கள் , சோஷியல் நெட்வொர்க்கில் அவளை தொடர்பு கொண்டாலும் பதில் இல்லை என் வேலை முடிய மூன்று மாதம் ஆனது ,”

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்தவனுக்கு அவள் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதும் அதனால் அவள் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும் அவளை பற்றி எனக்கு தெரிந்தால் நான் மனம் உடைந்து போவேன் என்று சொல்லவில்லை என்று கூறினார்கள் , அவளை பற்றி படி படியாக விசாரித்து இங்கு அவள் உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து அவளை பார்த்து இந்த பத்து நாட்களாக பேசி கொண்டிருக்கிறேன் , என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவள் என்னை அவள் வாழ்வில் இருந்து போய் விட சொல்கிறாள் என்றான்

இப்பொழுது இன்னமும் குழப்பமாயிற்று தாருண்யாவிற்கு , அப்படியென்றால் சரண் அந்த குழந்தையின் தந்தை இல்லை பின் அவன் யார் அவன் போன பிறகு என்ன நடந்தது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை சந்தோஷியாக சொன்னால் மட்டும் தான் தெரியும் என்று யோசித்தவள் அவள் பேச வேண்டும் என்றால் சரணின் உதவி தேவை என்று நினைத்தவள் அவனிடம் பேச ஆரமித்தாள்

சரண் நீங்க சொல்வதை பார்த்தால் உங்களிடம் அவள் தொடர்பு கொள்ளவே இல்லை என்பது தெரிகிறது , குணா உங்களை பார்தததும் கோபம் கொண்டதற்கு காரணம் உங்களுக்கும் சந்தோஷிக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதனால் தான் என்று நிறுத்தியவள் அவனையும் அமைதியாக இருந்த குணாவையும் ஒரு நொடி பார்த்தவள்

குணாவின் கோபம் நீங்கள் அவள் பின்னால் சுத்தினீர்கள் என்பதற்காக அல்ல அவளிடம் உள்ள உங்களின் தொடர்புக்காகதான் கோபம் கொண்டாள் , அதற்கு இப்பொழுது நீங்கள் காரணம் இல்லை என்றாலும் அவளிடம் இருக்கும் அந்த தொடர்பு அவளே பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை , அவள் ஒரு பெண் குழந்தைக்கு தாய் என்று நிறுத்தி நிதானமாக சொன்னாள்

என்னது என்று கிட்டத்தட்ட கத்தியபடி எழுந்தவன் சூழ்நிலை முன்னிட்டு தன்னை சமன் செய்து அமர்ந்தான் அப்பொழுது கூட அவனால் அவர்கள் சொன்னதை ஏற்க முடியவில்லை சந்தேகமாக அவன் பார்ப்பதை பார்த்த தாருண்யா ஆதி முதல் அவர்கள் விசாரித்த அனைத்தையும் கூறி சந்தோஷியின் நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் வரை சொன்னாள் ,

பெருமூச்செடுத்து தன்னை சரி செய்து கொண்டவன் அவளை பார்த்து இது நிச்சயம் பொய் இல்லை என்பதை நீங்கள் சொன்னது வைத்து புரிந்து கொண்டேன் , ஆனாலும் அவள் என்னை ஏமாற்றி இருக்கிறாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை , எவ்வளவு ஆசைகள் கனவுகள் எல்லாம் காற்றோடு போய்விட்டது என்று கலங்கியதை பார்த்த இரு பெண்களுக்கும் நெஞ்சம் கலங்கியது அவளை எவ்வளவு உண்மையாக நேசித்திருக்கிறான் என்று தோன்றியது இருந்தாலும் அவனின் உதவி நிச்சயம் தேவை என்று முடிவு செய்த தாருண்யா

என்ன சரண் அவளை விரும்புவதாக சொன்னது எல்லாம் பொய் தான் போல

யார் பொய் சொன்னது அவள் என்னை ஏமாற்றியது போல் நான் அவளை ஏமாற்றாமல் இருந்ததற்காக இந்த பட்டமா

ஒரு பெருமூச்சு விட்டவள் நீங்கள் ஏமாறவில்லை என்று நான் சொல்லவில்லை நீங்கள் காதலித்த பெண் ஒரு குழந்தையின் தாய் என்பது உங்களுக்கு எவ்வளவு ஏமாற்றம் தரும் விஷயம் என்று தெரியும் இருந்தாலும் அவள் குழந்தை ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிறது அப்பொழுது அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரியவில்லையா , நீங்கள் அவளை காதலித்தது உண்மை என்றால் அவளின் பிரச்னையை சரி செய்வது ஒரு வகையில் உங்களின் கடமை அல்லவா அப்படி இல்லை என்றாலும் கூட அவள் உங்களை பிரிந்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டீர்களா

நிச்சயமாய் செய்வேன் தாருண்யா , அவள் என்னுடன் இல்லை என்றாலும் கூட அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் அது என் கோபமும் இயலாமையும் அதிகம் ஆனதால் வந்த வார்த்தை , நிச்சயம் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்றதும் அவனின் கை பிடித்த குணா

அண்ணா மனிச்சிடுங்க நான் பேசியதை தவறாக எடுத்துக்க வேணாம் நீங்க தான் அந்த குழந்தையோட அப்பான்னு நெனச்சுதான் அப்படி பேசிட்டேன் என் பிரெண்ட் நல்லா இல்லையென்றே ஆதங்கத்துல பேசிட்டேன் என்றவளிடம்

பரவாயில்ல குணா , உன் நிலைமையில் நானும் அப்படி தான் யோசித்திருப்பேன் என்றவன் தாருண்யாவை பார்த்து அடுத்து என்ன செய்யலாம் தாருண்யா , எப்படி அந்த உண்மையை அவளை சொல்லவைப்பது

இப்பொழுது கூட அந்த குழந்தையின் தந்தை யார் என்பதை எனக்கு தெரிந்தவர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை அதற்கும் மேல் சந்தோஷி இதை பற்றி எவ்வளவு உண்மை கூறுவாள் என்பதும் தெரியாது , அதை விட அதை அவள் வாயாலேயே சொல்ல வேண்டும் அதற்கு நாம் வழி கண்டுபிடிக்கவேண்டும் யோசிச்சு முடிவு செய்வோம் இப்பவே எல்லாம் செய்ய முடியாது நம்ப திரும்ப மீட் பண்ணலாம் என்றவளிடம் சம்மதமாய் தலை அசைத்தான் .

நான் கொண்டு போய் விடவா

இல்லை வேண்டாம் எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு போறோம் என்றவளிடம் தன் நம்பரை கொடுத்து அவளின் நம்பர் வாங்கினான் .

அவன் கிளம்பியதும் அவனை வழி அனுப்பியவள் அதிர்ந்தாள்

அங்கு காலை ஆட்டியபடி காரின் முன்னால்சாய்ந்திருந்தான் மனுபரதன்

இவனை பார்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அதிர்ச்சி மட்டும் தான் என்று யோசித்தவள் தன்னை விட அதிகமாய் அதிர்ந்திருந்த குணாவின் கையை அழுத்தினாள் அதில் அவனுக்கு எதுவும் தெரிய கூடாதென்ற அழுத்தம் தெரிந்தது

அவர்கள் அவன் அருகில் வந்ததும் சும்மா பர்சேஸ் செய்துவிட்டு சாப்பிட வந்தோம் அண்ணா என்றாள் குணா

அப்படியா என்றவன் அவர்களின் வண்டியை பார்த்தவன் குணா நீ வீட்டுக்கு போமா , நான் அக்காகிட்ட கொஞ்சம் கணக்கு விஷயமாக பேச வேண்டி இருக்கிறது , கம்பெனி போய்விட்டு வரோம்னு அத்தைகிட்ட சொல்லிடு என்றான் பார்வை மட்டும் தாருண்யாவிடம் மட்டும் இருந்தது .

சரி என்றபடி அவளை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள் குணா

அவள் ஏறுவதற்காக கார் கதவை திறந்தவன் அவள் ஏறியதும் கதவை அறைந்து சாத்தி காரை கிளப்பினான்

கொஞ்சம் தூரம் சென்றதும் காரை நிறுதியவன் கையை கட்டி கொண்டு அவளை நிதானமாக பார்த்து சொல்லு யார் அவன் என்றவன் எந்த தோழியிடம் இருந்து அவனை பிரித்தாய் என்று மனதில் கத்தியை சொருகினான் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here