கரு 18:
தன் கண்கள் ஏதோ ஒரு நினைவில் நிலைக்கவிட்டபடி பேசினாள் “ எந்த விஷயம் யாருக்கும் குறிப்பாக உங்களுக்கு தெரியக்கூடாது என்று இருந்தேனோ அதை சொல்ல வேண்டிய நிலைமைக்கு என்னை நீங்கள் கொண்டுவந்துவிட்டீர்கள் ”
“ அன்று நீங்கள் வெளிநாடு செல்வதாக கூறி சென்ற பிறகு நான் என் அன்னையிடம் இந்த விஷயத்தை பற்றி பெரியம்மாவிடமும் மனோ மாமாவிடமும் சொல்ல சொன்னேன் அவர்கள் அதற்கு பெரியம்மா உடனே நிச்சயம் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் சரண் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் இப்பொழுது சொல்ல வேண்டாம் , சரண் வந்த பிறகு அப்பொழுதுதான் பேசியது போல் சொல்லிக்கொள்ளலாம் அவர்கள் நிச்சயம் உடனே செய்ய சொன்னாலும் வசதியாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள் , நீங்கள் வெளிநாடு சென்றது பற்றி என்னிடம் என்ன கூறினீர்கள் சரண் ?” என்றவளிடம்
“ பிசினஸ் விரிவாக்கம் விஷயமாக ஜெர்மனி போகிறேன் …” என்றவனை இடைமறித்து
“ வர ஒரு வருடமாகும் என்று கூறினீர்கள் , நானும் உங்கள் பிசினஸ் விஷயத்தை பற்றி எதுவும் கேட்கவில்லை சரியாக நான் அதை தெரிந்துகொண்டது உங்கள் கனவு களவு போகும் பொழுதுதான் அப்பொழுதுதான் என் மானத்தை விற்று அதை மீட்டு கொண்டு வந்தேன் ”
நீங்கள் கார் உதிரி பாகங்கள் இங்கு தயாரித்து அது அதிகம் விற்பனையாகும் கம்பெனிகளுடன் கானட்ராக்ட் போடுவதற்காக அதை பற்றி ஸ்டடி செய்து முக்கியமான கம்பெனியின் கான்டராக்டை பிடித்து விட்டீர்கள் அது பற்றி அப்பா சொன்ன பொழுது ஏதோ சாதித்துவிட்டீர்கள் என்று சந்தோஷம் கொண்டேன் அதை பற்றி நான் முழுதாக தெரிந்து கொண்ட பொழுது எல்லாம் முடிந்தது ”
“ அந்த கான்ட்ராக்ட் விஷயம் யாருக்கும் தெரியாது என் தந்தையிடம் மட்டும் சொல்லி இருந்தேன் உனக்கு அது எப்படி ..”
“ உங்கள் தந்தை தன் நண்பர் , தொழில் பார்ட்னர் மற்றும் சம்மந்தி என்கிற முறையில் என் தந்தையிடம் அனைத்தையும் கூறி இருக்கிறார் , வருமான வரி சோதனைக்காக உங்கள் ஆபிசிற்கு ஆட்கள் வருவதாக தெரிந்து கண்டவர் அந்த நேரத்தில் உங்கள் பேப்பர்ஸ் யாரிடமும் மாட்டிக்கொள்ள கூடாது என்று நினைத்து நீங்கள் அவரிடம் கொடுத்த கொடேஷன் பேப்பர்களை என் தந்தையிடம் கொடுத்து அவரின் ஆபீசில் வைத்திருக்க சொன்னார் அதை பற்றி யாருக்கும் தெரியாது வீட்டில் இருக்கும் எங்களுக்கு கூட என்பதால் அவர் அதற்கு பெரிய செக்யூரிட்டி போடவில்லை ”
“ உங்களிடம் கடைசியாக நான் பேசிய அன்று இரவு வெளியில் வைத்து ரகசியமாக கடத்தப்பட்டேன் அப்பொழுதுதான் இத்தனை விஷயங்களும் எனக்கு சொல்லப்பட்டது தவிர அந்த பேப்பர்ஸ் அவர்கள் கையில் இருந்தது அன்று அவர்கள் வைத்த கோரிக்கை ஒன்று நீங்கள் பிசினஸ் இல்லாமல் உங்கள் கனவை தொலைக்க வேண்டும் இல்லை என்றால் என்னை தொலைக்க வேண்டும் இரண்டில் ஒரு முடிவு , முதல் முடிவு உங்களை பைத்தியமாக்கி விடும் ஏனெனில் அது உங்கள் கனவு , லட்சியம் இரண்டாவது நம் இருவரின் திருமணம் நிறுத்தப்பட்டால் என்னிடம் இருக்கும் ஈடுபாடு குறைந்து நீங்கள் வேறு பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்வது சுலபம் என்பதால் நான் உங்களை விட்டு விலகுவதாக கூறினேன் அவர்கள் அதை நம்பவில்லை ”
“ அவர்களை ஏமாற்றிவிட்டு உங்களை திருமணம் செய்யக்கூடாது என்று நினைத்தார்கள் அதற்கு என்னை விலை பேசினார்கள் ” என்றவள் குரலில் வெறுமை மட்டுமே மிஞ்சியது “ சந்து ”.. என்று கூவியபடி அவளை கட்டிக்கொண்டு கதறினாள் குணா ..
அவளை பார்த்து வெறுமையாக சிரித்தவள் “ இன்னும் முடியவில்லை குணா , நான் அவர்களிடம் .. மொத்தம் நான்கு பேர் அவர்கள் என்னை சூறையாட அனுமதித்தேன் , நிச்சயமாக என் பெற்றவருக்காக கூட செய்ய துணியாத காரியத்தை உங்கள் மேல் உள்ள காதல் செய்ய தூண்டியது , ஆம் நானாக அடிபணிந்தேன் , அன்றுமட்டுமல்ல நான் கர்பம் தரிக்கும் வரை இரவில் அந்த நரகத்தில் அடிக்கடி வாழ்ந்தேன் அதுவரை யாருக்கும் தெரியாது , நான் யாரிடமும் சொல்லவில்லை காரணம் உங்கள் பேப்பர்ஸ் அது வெறும் கொடேஷன் மட்டும் இல்லை உங்கள் முயற்சியின் வழிமுறைகள் ஐந்து வருடம் நீங்கள் அதற்காக சேமித்த குறிப்பு என்று எல்லாம் இருந்தது அவர்கள் சாமர்த்தியமாக அதன் போலியை எங்கள் ஆபிசில் வைத்திருந்தார்கள் அதனால் என் தந்தைக்கு கூட தெரியாது , வேறு வழி இல்லாமல் அந்த அவமானத்தை ஏற்றேன் எங்கு செலகிறேன் என்று கேட்ட என் பெற்றோரிடம் தோழி வீட்டில் இருந்ததாக பொய் உரைத்தேன் ”
“ நான் கெடுக்கப்பட்டேன் என்றால் போராடியிருப்பேன் என் மானத்தை காப்பாற்றி இருப்பேன் இல்லை உயிர் விட்டிருப்பேன் நான் விலை பேசப்பட்டேன் சரண் நானே என்னை விலைபேசிவிட்டேன் , என் சிசு வளர்ந்ததும் அவர்கள் அந்த பேப்பர்ஸை என்னிடம் கொடுத்துவிட்டார்கள் நான் கர்பம் என்பதை அறிந்து என் பெற்றோர்கள் மனதில் இறந்துவிட்டனர் ”
“ எவ்வளவோ கெஞ்சியும் அவர்களிடம் எந்த காரணத்தையும் சொல்லவில்லை உங்கள் தந்தையிடம் கல்யாணத்தை நிறுத்த சொல்லி எல்லாவற்றையும் என் தந்தை சொன்னார் , அவர்களை அவர் நம்பவில்லை வேண்டுமென்று ஏமாற்றுவிட்டதாக சண்டையிட்டார் என் தாய் மட்டும் நான் குழந்தை பெற வேண்டும் என்று சோனாவை என்னை பார்த்து கொள்ள சொன்னார் , தன் பையனை , தன்னை ஏமாற்றிவிட்ட காரணத்தால் உங்கள் தந்தை என் தந்தையின் தொழிலை முடக்கிவிட்டார் , அவரால் நஷ்டத்தை தாங்க முடியவில்லை ஏற்கனவே என் விஷயம் அவர்களை நடைபிணமாக்கியது இதுவும் சேர அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் ”
“ இது எதையும் என்னால் தடுக்க முடியவில்லை வெறும் பார்வையாளராய் பார்த்துக்கொண்டிருந்தேன் , அவர்கள் இறந்த சமயம் பழிவெறியில் உங்கள் தந்தை என்னையும் குழந்தையையும் தேடிக்கொண்டிருந்தார் , அப்பொழுது தான் இவளை சோனாவிற்கு தெரிந்தவர்கள் மூலமாக இங்கு சேர்த்தேன் , என் மாமா மனோ வரும் பொழுது இங்கு நடந்ததை எதையும் அவரால் யூகிக்கமுடியாதபடி எனக்கு சுரணை அற்று போனதாக இருந்தேன் , அவர் அதனால் அவசரமாக என் தந்தையின் பிசினஸ் செட்டில் செய்து என்னை இங்கு கூட்டி வந்துவிட்டார் , மேலோட்டமாக பார்த்தால் என் தந்தை தொழில் நஷ்டத்திற்கு பிறகுதான் உங்கள் தந்தை பிரிந்ததாக தோன்றும் அவரும் அப்படித்தான் காய் நகர்த்தினார் அதனாலேயே மனோ மாமாவால் உங்கள் தந்தை ஏற்படுத்திய நஷ்டத்தை கண்டுபிடிக்கமுடியாமல் போயிற்று , நான் எடுத்த முடிவில் எல்லாவற்றையும் இழந்தேன் , என் பெற்றோர்களை கொன்றுவிட்டேன் ஆனால் உங்கள் கனவை காப்பாற்றிவிட்டேன் ”,
நான் கொடுத்த விலையின் பொருள் இந்த குழந்தை இதற்கு தந்தை யார் என்பது எனக்கும் தெரியாது அவர்கள் நால்வரில் யார் வேண்டுமானால் …” என்று ஆரமித்தவள் கதறி அழுதாள் இத்தனை நாள் சேமித்த அத்தனை அழுகையையும் சேர்த்து அழுதாள் …
“ நான் யாருக்கும் இதை சொல்லவில்லை அங்கு நடந்தது இங்கு யாருக்கும் தெரியாததால் இந்த ஆசிரமத்தில் வைத்தே இவளை வளர்த்து விட எண்ணினேன் அதற்கான காரணம் அனாதை என்கிற வார்த்தை மட்டும் தான் இவளுக்கு இங்கிருந்தால் வரும் ஆனால் என் பெண்ணாக இருந்தால் தந்தை யார் என்று என்னால் காண்பிக்க முடியாத அந்த நிலை என்னால் முடியாது , இந்த குழந்தை பெண்ணாக அவளுக்கு சாபமாகாமல் தப்பிக்கவே இத்தனையும் செய்தேன் , நான் உங்கள் கனவை காப்பாற்ற கொடுத்த விலையை திருப்பி தத்து என்ற பெயரில் உங்களுக்கே விற்கமாட்டேன் ” என்ற பொழுது அனைவரின் கண்களையும் கண்ணீர் கரைத்து விட்டது .
தாருண்யா அதிர்ந்திருந்தாள் ” இது என்ன மாதிரி காதல் ஒரு முறை பார்த்து அவனுடன் வாழ்க்கை என்று கனவில் இருந்த பெண் அவனுக்காக இவ்வளவு தூரம் போக முடியுமா அந்தளவு அந்த காதல் ஈர்க்குமா என்ன ?, எந்த மனிதரும் எந்த மானத்தை பூஜிப்போமோ அதை கூட காதலுக்காக விலைபேசிய இந்த பெண்ணின் காதல் மற்ற எல்லா காதலை விடவும் அதிகமாக தெரிந்தது “
அவளுக்கு தெரிந்த பெண்களில் ஒருத்தி ஒருவன் மேல் கொண்ட காதலால் ஓடி ஒளிந்தாள் இன்னொருவளோ காலத்திற்கும் அழியாத சிலுவையை காதலுக்காக சுமக்கிறாள் , வாழ்க்கையில் எப்பொழுதும் ஆண்கள் காதலுக்காக செய்யும் தியாகங்கள் கடலளவு பேசப்படுகிறது இதோ இந்த பெண்ணின் காதல் எதை வைத்தும் விலை பேச முடியாத வண்ணம் உயர்ந்து நிற்கிறது , இந்த பெண்ணின் காதலின் அளவை எப்படி வரை அறுக்க முடியும் “
தாருண்யாவிற்கு தெரியவில்லை காதல் என்பது வெறும் உணர்ச்சிகளின் கலவை அல்ல அது உணர்வுகளின் சங்கமம் , தன் தேவைகளை சுருக்கி பிள்ளைகளுக்கு உணவூட்டும் தாயன்பை போல் எதையும் கொடுக்க வைக்கும் அமுத சுரபி என்று ,”
காதல் அடைதல் உயிரியற்கை – அது
கட்டில் அகப்படும் தன்மையதோ – அடி
சாதல் அடைவதும் காதலிலே – ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்