காதல் கருவறை 21

0
919

கரு 21:

பெரியமாவை காண அந்த அறைக்குள் சென்றவள் அவர் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்ததை பார்த்தாள் , சந்தோஷி விஷயம் கேள்விப்பட்ட நிமிடத்தில் இருந்தே அவளுக்கு பெரியம்மாவிடம் எப்படி எல்லாவற்றையும் சொல்வது என்ற கவலை இருந்துகொண்டுதான் இருக்கிறது இருந்தாலும் இப்பொழுது மனுபரதன் இதில் தலையிட்டு பார்த்து கொள்வதாக சொன்னதில் இருந்து ஏதோ மனம் அமைதி அடைந்து இருந்தது அதனாலேயே பெரியம்மாவை பார்க்க தைரியமாக வரவும் முடிந்தது , அது என்னவோ இவ்வளவு நாட்களாக இல்லாத தைரியம் அவனின் வார்த்தைகளில் கிடைத்தது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது

என்னம்மா ஏன் அங்கேயே நின்றுவிட்டாய் அப்படி என்ன யோசனை ?, நான் சொன்ன வார்தைக்காக நீ . ரொம்பவே சிரமப்படுகிறாய் என்று தோன்றுகிறது

சாதாரணமான விஷயமாக நினைத்து இதை ஆரம்பித்து எவ்வளவு பெரிய விஷயங்கள் நடந்திருக்கிறது இதையெல்லாம் இவர் தாங்குவாரா என்ற கவலை அதிகரித்தது

என்ன தரு நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நீ யோசித்துக்கொண்டே இருக்கிறாய்

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மா , வேறு ஏதோ யோசனை

நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் நீயும் குணாவும் அடிக்கடி வெளியில் போவதும் வருவதுமாக ஏதோ பெரிய விஷயமாடா ?” கண்களில் பயத்தை தேக்கி கேட்டவரிடம்

அதெல்லாம் பயம் கொள்ள ஒன்றுமில்லை மா , எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் அதுவரை நீங்கள் எதை நினைத்தும் குழப்பி கொள்ளவேண்டாம்

என்னமோ மா , நீ சொன்னால் சரிதான் உன்னை தான் நான் அதிகம் நம்புகிறேன்

கண்டிப்பாக எல்லாம் சரியாகிவிடும் , சரி இப்பொழுது கொஞ்சம் வேலையும் பார்க்கலாம் சில கணக்குகளை நீங்கள் பார்வையிட்டால் கையெழுத்திட்டு பட்டுவாடா செய்யவேண்டும் வாருங்கள் என்று அவரின் கவனத்தை வேலையில் திருப்பியவள் அவளையும் அதில் ஆழத்திக்கொண்டாள்

எல்லாவற்றையும் முடித்து அவரை சிறிது ஓய்வு கொள்ள செய்தவள் தன் அறைக்கு செல்லாமல் தோட்டத்தில் உட்கார்ந்தாள்

அவளுக்குமே மன உளைச்சல் அதிகமாகி இருந்தது சந்தோஷியின் விஷயம் ஒரு புறம் என்றால் மனுபரதனிடம் குழையும் தன் மனம் அவன் நகர்ந்ததும் பழையதை யோசித்து தன்னை சாடுகிறது

எல்லாவற்றிற்கும் மேல் சந்தோஷியின் குழந்தையின் நிலையை நினைத்து மனம் வலித்தது யாரோ செய்த தவறுக்காக அந்த சிசு ஒன்றுமறியாமல் தண்டனை அனுபவிக்கிறது ,

எவ்வளவோ செல்வாக்கும் மதிப்பும் அதிகம் இருக்கும் குடும்பத்தின் வரவு தன் பிறப்பால் அல்லாடும் நிலையை அறவே வெறுத்தாள் , எப்பொழுது எல்லாம் சரியாகும் என்று அவளுக்கே ஆயாசமாக இருந்தது .

சரியாக ஒரு வாரம் ஓடி இருந்தது , தாருண்யாவிற்கு தான் நேரம் செல்லவில்லை நடுவில் குணா வந்து கேட்ட பொழுது மனுபரதனிடம் அனைத்தையும் கூரியதும் அவன் சரி செய்து கொள்வதாக சொன்னதையும் கேட்டு குணாவிற்குமே நிம்மதி வந்தது

அவளை பொறுத்தவரை அவள் அண்ணன் அசகாய சூரன் எல்லாவற்றையும் முடித்துவிடுவான் கண்டிப்பாக சந்தோஷி வாழ்க்கை மலர்ந்துவிட்டது என்றே நம்பினாள் அதையே சொல்லவும் செய்தாள்

அக்கா , மனோ அண்ணா இனி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் நாம் பயப்படவே தேவையில்லை கண்டிப்பா எல்லா பிரச்சனையும் சரியாகி விடும் என்றபொழுது கூட அவளுக்கு மனதில் ஒரு ஓரத்தில் சிறு உறுத்தல் வரவே செய்தது

அதனால் மீண்டும் தன் டிடெக்டிவ் நண்பனை தொடர்பு கொண்டவள் சந்தோஷிக்கு நடந்ததை சொல்லி விசாரிக்க சொன்னாள் ஆனால் பதில்தான் பூஜ்யமாக இருந்தது அவனுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றான் எல்லாம் க்ளியராக இருக்க அவர்கள் கவனமாக தடயங்கள் இல்லாமல் செய்திருக்கிறார்கள் மேலும் இதுபற்றி சந்தோஷியே சொன்னால்தான் உண்டு என்று முடித்துவிட்டான்

மனுபரதனால் எந்த அளவு உண்மைகளை கண்டுபிடிக்க முடியும் என்று அவளுக்கு இப்பொழுது குழப்பமாக இருந்தது இதில் மேற்கொண்டு எதுவும் கெட்டதாக இருக்க கூடாது என்று கடவுளை வேண்டியவளுக்கு அடுத்த நான்கு நாட்கள் முள் மேல் இருப்பது போல் தவிப்பாய் இருந்தது

நான்காவது நாள் அந்த உறுத்தலுக்கு விடை வந்தது அது சரியா தவறா என்று அவள் அறியவில்லை ஆனால் அவள் நம்பிக்கை பொய்ததாக மட்டும் தோன்றியது .

இரவு வெகு நேரம் தூக்கம் வராமல் இருந்தவள் காலையில் சிறிது தாமதமாக எழுந்தாள் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கீழ் இறங்கியவள் பார்வையில் மனுபரதனின் கார் தென்பட அவசரமாக அவன் அறையில் தேடியவளுக்கு அவன் எங்கும் தென்படவில்லை , தங்கத்திடம் கேட்டவளுக்கு அவன் விடியற்காலையில் வந்துவிட்டு தன் வேலைகளை முடித்துக்கொண்டு சீக்கிரமாக அலுவலகம் சென்று விட்டதாக கூறினாள்

அதையறிந்து கொண்டவள் அவசரமாக தங்கத்திடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அவன் அலுவலகம் விரைந்தாள் .

சிறிது நேரம் அறை வாயிலில் கதவை தட்டி விட்டு காத்திருந்தவள் பதில் வராததை கண்டு அவளே கதவை திறக்க உள்ளே மனுபரதன் சாய்வாக கண்களை மூடி அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு அவனை தொந்திரவு செய்ய மனம் வராமல் அப்படியே திரும்ப செல்லஎத்தனிக்கும் பொழுது

நீ கேட்க வந்ததை தெரிந்து கொள்வதை விட எனக்கு தூக்கம் பெரிதில்லை தன்யா என்றவனின் பேச்சு அவளை நிறுத்தியது

அவசரமாக அவனிடம் வந்தவள் என்னவாயிற்று மதன் அவர்கள் யார் என்ன என்று தெரிந்ததா எல்லாம் சரியாகிவிட்டதா , சந்தோஷி யாரிடமும் ஒன்றும் பேசவில்லை சரணை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை ?” என்று கேள்விகள் அடுக்கியவள் அவளின் அழைப்பை கவனிக்கவில்லை ஆனால் அதை கவனிதவனின் மனம் சிறிது இளகி பின் நடப்பை நினைத்து இறுகியது

உன்னால் சரணிடம் பேசமுடியாது

ஏன் அவருக்கு என்னவாயிற்று ?, ஏன் இவ்வளவு குழப்பங்கள்

அவளிடம் நெருங்கி வந்தவன் அவள் கையை பிடித்து தன் கையில் வைத்து கொண்டு

நான் சொன்னேன் தன்யா நீ எது நடந்தாலும் என்னை நம்ப வேண்டும் என்று , எது நடந்தாலும் நம்புவாயா மஞ்சளழகி என்றவனின் பேச்சு அவளை குழப்பதான் செய்தது

மேற்கொண்டு அவனை கேள்வி கேட்க எண்ணி பேச ஆரம்பிக்கும்முன் அந்த கதவை வேகமாக தள்ளிக்கொண்டு சந்தோஷி உள்ளே நுழைந்திருந்தாள் அவள் முகமே சொல்லியது ஏதோ சரி இல்லை என்று கண்களில் வழிந்த கண்ணீர் நிற்கவே இல்லை மிகவும் அழுது களைத்திருந்தாள்

அந்த நிலையில் அவளை கண்டதும் சர்வமும் பதறியது தாருண்யாவிற்கு , “ என்னவாயிற்று சந்தோஷி ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் மனுபரதனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவனோ அவள் வந்ததையே கவனிக்காதது போல் ஏதோ ஒரு ஃபைலை பார்த்துக்கொண்டிருந்தான்

,” சொல்லுங்கள் மாமா , ஏன் இப்படி செய்தீர்கள் என்னை ஏன் பழிவாங்கினீர்கள்

அவளை அப்பொழுதுதான் கவனிப்பதுபோல் பார்த்தவன் வா டா , என்ன சந்தோஷி வந்ததும் வராததுமாக என்னை என்னென்னவோ சொல்கிறாய்

எனக்கு தெரியும் மாமா உங்களுக்கு என் விஷயம் எல்லாம் தெரிந்துவிட்டது என்று ஆனால் என்று ஆரம்பித்தவளுக்கு அழுகை முட்டியது

என்னை இப்படி செய்தவர்களை நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரியும் அதனால் சரணுக்கு எதுவும் தெரியவோ அவருக்கு எதுவும் நேரவோகூடாது என்றுதான் நான் உங்களிடம் எதுவும் கூறவில்லை ஆனால் இதில் அவர் எப்படி வந்தார் அவர் எந்த தவறும் செய்யவில்லை மாமா

நான் எதுவும் இதில் செய்யவில்லை சந்தோஷி

இல்லை நீங்கள் தான் என்று எனக்கு தெரியும் இதில் உங்களை தவிர இவ்வளவு சீக்கிரம் விஷயத்தை யாராலும் கண்டுபிடித்திருக்க முடியாது

பார்த்துக்கொண்டிருந்த தாருண்யாவிற்கு தலை சுற்றியது இங்கு என்ன நடக்கிறது சந்தோஷி , சரணுக்கு என்ன ?”

நான் முன்பே சொன்னேன் தாருண்யா இவருக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று ஆனால் நீங்கள் விபரீதங்களை யோசிக்கவில்லை இப்பொழுது எல்லாம் போயிற்று என்று அழுதவள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு கோபமாக அவளை ஏறிட்டு

என்னை கெடுத்தவர்களை இவர் ஏதோ செய்து இல்லை மொத்தமாக அவர்களை கொன்றுவிட்டார் அந்த பழியை சரண் மீது போட்டு விட்டார் இவர்தான் கம்பிளைன்ட் கொடுத்திருக்கிறார் அதை சரணும் ஒத்துக்கொண்டு விட்டார் , அவர் இப்பொழுது காவல் நிலையத்தில் இருக்கிறார் என்று கதரியவளுக்கு பதில் சொல்லக்கூட முடியாமல் மொத்தமாக இடிந்தாள் தாருண்யா

தன் பார்வையில் வெறுப்பை தேக்கி மனுபரதனை பார்த்தாள் அவன் பார்வையில் ஏதோ வந்து போனது கோபமா , ஏமாற்றமா , ஏக்கமா என்றுதான் வரையருக்கமுடியவில்லை

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here