கரு 24:
அவளுக்காக வெளியே காத்திருந்தவன் எதுவும் பேசாமல் கதவை மட்டும் திறந்துவிட்டான் அதில் ஏறி அமர்ந்தவள் பேச்சை தொடங்குவது எப்படியென்ற தயக்கத்தில் அவனை பார்ப்பதும் பிறகு தலை குனிவதுமாக இருக்க அதை ஓரக்கண்ணில் மனுபரதன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் இருப்பினும் அவளே பேசட்டும் என்பது போல் சாலையில் கவனம் பதித்திருந்தான் . ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவனை பார்த்தவள்
“ என்னை மன்னித்து விடுங்கள் ”
அவள் புறம் திரும்பாமலேயே “ எதற்கு ”
“ உங்களை நம்பாமல் இருந்ததற்கு , யோசிக்காமல் பேசியதர்க்கு ”
“ உனக்கு யோசிக்க தெரியாது என்பது எனக்கு தெரியும் ” என்று சிரியாமலே சொன்னவனிடம் கோபம் வந்தது இருந்தாலும் தவறு அவள் புறம் என்று வாயை மூடிக் கொண்டிருந்தாள்
“ என்ன எப்பொழுதும் எல்லாரையும் சுட்டெரிப்பவள் வாயை திறக்காமல் இருக்கிறாய் , நீ என்னை நம்பமாட்டாய் என்று எனக்கு தெரிந்திருந்தும் ஏதோ ஒரு மூலையில் என் மீது துளி நம்பிக்கை உனக்கு இருக்கும் என்று நினைத்தது என் தவறு தான் , எல்லாம் உன் முடிவு நீயே முடிவு செய்து என்னை கெட்டவனாக்கி விடுவாய் , உனக்கும் எனக்கும் இது தான் நடக்கிறது ” என்றவன் சிறிது நேரம் யோசித்தவன் “ முதல் கோணல் முற்றும் கோணல் , இல்லையா ” என்றவனின் குரலில் நிஜமாகவே அவளுக்கு தொண்டை அடைத்தது , இவன் கோபத்தை விட இவனின் வருத்தம் மிக ஆபத்து அதுதான் அவளின் உயிர் அறுக்கிறது
அவளின் மௌனம் அவனின் பேச்சை நிறுத்தியது “ என்ன பேச்சையே காணோம் “ என்றவன் அவள் புறம் திரும்ப கசங்கி இருந்த அவள் முகம் அவனை அதிர வைத்தது ஓரமாக காரை நிறுத்தியவன் அவள் தோள் பற்றி தன் புறம் திருப்பினான்
அவள் தாடையை பற்றி நிமிர்த்தியவன் “ தன்யா என்னை பார் , என்னடா ” என்றதும்
அடக்கி வைத்திருந்த அழுகை பெறுக அவன் தோள் சாய்ந்து கதரியவள் “ நான்தான் தப்பு ஐம் சாரி நான் நம்பி இருந்திருக்க வேண்டும் எனக்கு சந்தோஷியின் நிலையை தவிர வேறு எதுவும் தோன்றவே இல்லை , அப்பொழுதும் உங்கள் வார்த்தை வந்து வந்து போனது இருப்பினும் சரண் ஜெயிலில் என்றதும் எனக்கு குழப்பமாகிவிட்டது அதுதான் யோசியாமல் பேசிவிட்டேன் ” என்று அழுதவளை முதுகு தடவி சமாதப்படுத்தியவன்
“ சரி இப்போழுது நம்பாமல் இருந்ததற்கு சேர்த்து பெரியம்மாவிடம் நான் பேசும் பொழுது நம்பியது போல் இருந்து தப்பு செய்ததற்கு சரி செய்து விடு ”
உடல் விறைக்க நிமிர்ந்தவள் “ பெரியம்மா அய்யோ அவர்களை பற்றி நான் நினைக்கவே இல்லையே , அவர்களை எப்படி சரி செய்வது “ என்று பயந்ததும் அவளை முறைத்தான் , “ இல்லை நீங்கள் பார்த்து கொள்வீர்கள் , நான் நம்பிகிறேன் “ என்று அவசரமாக கூறியதும் அவனை மீறி சிரித்ததும் அவன் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது
சிரிப்பதை நிறுத்தியவன் “ அடடே நான் ஒரு அவசரக்காரன் “ என்றதும் புரியாமல் பார்த்தவளை
“ இல்லை பெரியம்மா பற்றி பேசாமல் இருந்தால் இன்னும் நீ என் கை வளைவிலேயே இருந்திருப்பாய் … ம்ம்ம் .. எல்லாம் போயிற்று ” என்றவனின் பேச்சின் பொருள் உணர்ந்ததும் அவள் சற்று முன் இருந்த நிலை தோன்ற திருப்பி படபடப்பு ஒட்டிக்கொண்டது அவசரமாக முகம் திருப்பியவள் தன்னை மரைக்க “ ஆசைதான் , பேசாமல் காரை ஓட்டுங்கள் சார் “ என்றதும்
“ என் ஆசையின் அளவு மிக அதிகம் தன்யா உனக்கு காட்ட எனக்கும் ஆசைதான் காட்டவா “ என்று அவளை நெருங்க அன்று போல் அவள் உயிர் துடிப்பு தொண்டை வழியே வெளியே வந்துவிடும் போல் இருந்தது
மெதுவாக அவளை திருப்பியவன் தன் விரல்களால் அவளின் இதழ் வளைவுகளை வருடி துடிக்க செய்தான் அதன் துடிப்பை அடக்க கண்களை மூடி அவள் தன் பற்களை அழுத்தி சிவக்க செய்ய அதன் அழுத்தம் தாங்காமல் உதடுகள் சிவந்ததும் அவள் உதடுகளை பிரித்தவன் கைகளை கட்டிக்கொண்டு அவள் கண்மணியின் அசைவுகளை பார்த்துக்கொண்டிருந்தான் அவன் தன்னை நெருங்கவில்லை என்றதும் லேசாக இமை பிரித்தவளை பார்த்து குறும்பு சிரிப்புடன் கண் சிமிட்டியவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவள் இதழ்களை சிறை செய்தான் .
தன் துணையை கண்டதும் அவன் இதழ்கள் அவள் இதழ் வழியே உயிர் வரை உரிஞ்சியது அவள் மூச்சிற்கு திணறுவதை பார்த்து சிறு இடைவெளி விட்டவன் மென்மையாய் பின் வன்மையை அவளில் கவி எழுதியவன் அவள் உடல் நடுகத்தில் தன்னிலை அடைந்து அவளை விட்டான்
மயக்கத்தில் மோனநிலையில் இருந்தவளின் கன்னம் தட்டி கை கால்களை தேய்த்து அவளை அணைத்து விழிக்க செய்தவன் “ என்னடா நான் ரொம்பவும் அதிரடியாக நடந்துவிட்டேனா சாரி ” என்றதும் தான் சற்றுமுன் அவனிடம் மயங்கியது நினைவு வர அவள் ரத்த ஓட்டம் முகத்தில் வந்தது போல் நாணம் கொள்ள அவளின் நாணத்தில் மயங்கியவன் மறுபடியும் அவளை நெருங்க அவளின் மருண்ட பார்வையில் தன்னிலை அடைந்தவன்
“ என் ஆசையின் அளவுகளை இதனால் தான் நான் காட்டவில்லை , இனி முடியாது தன்யா , பெரியம்மாவிடம் நான் பேசும் பொழுது நீ எந்த மறுப்பும் சொல்லக்கூடாது என்னை நம்புகிறாய் இல்லையா ” என்றதும்
அவளை மீறி கண்களில் நீர் திரள தலை அசைத்தவளை அணைத்தவன் “ பைத்தியம் , நீ எதற்கும் இனி கலங்கக்கூடாது “ என்றவன் “ அதற்கு நமக்கு நேரமும் கிடையாது ” என்று கண் சிமிட்டி அவளை சிவக்க செய்தான்
“ இதழ் வழி உயிர் நுழைந்து என்னில் கவிபாடும் கவிஞனே
என் நிலை இழந்து தடுமாறும் பொழுது
என் உயிர் மூச்சை இழுத்துக்கொண்டதும் இல்லாமல்
உன் மூச்சினை எனக்களித்து , நான் உயிர் தேடும்
என் கவிதை நீ என்கிறாய் , நான் கவியாக
உன் வரிகளில் மூழ்க நினைக்கவில்லை உன் ஆன்மாவாக
உன் உயிரில் மூழ்கி உறைவேன் ”