காதல் கருவறை 8

0
837

கரு 8:

சிறிது நேரம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை எப்படி அடித்தாள் என்று , அவளின் கை எரிந்ததில் இருந்து அவளின் கோபத்தின் அளவு புரிந்தது , அவனை அறைந்ததில் தவறில்லை என்று புத்தி கூறினாலும் அவனின் மனம் இனி இவனின் தாக்குதலை வேறு சமாளிக்க வேண்டும் என்று சோர்வுற்றது . அறை வாங்கியவனின் முகத்தில் எந்த ஒரு உணர்வும் தெரியவில்லை மிக மோசமாக தன் நிலை இருப்பதாக உணர்ந்தாள் தாருண்யா .

மனுபரதனோ தன் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டவில்லை , தன் கன்னத்தை தடவியவனின் கண்களில் மட்டும் அந்தவெறி அப்படியே இருந்தது ,

ஓகே மேடம் நீங்க உங்க கேபினுக்கு போங்க என்று அனுப்பிவிட்டான் .

தன் இடத்திற்கு வந்து கூட எதுவுமே புரியவில்லை , தன் குழப்பத்தை மேலும் அதிகரிக்க பிடிக்காமல் வேலையில் தன்னை மூழ்கடித்தாள் . அவனும் அவளை வேறு யோசிக்க விடாமல் வேலை கொடுத்துக்கொண்டே இருந்துதான் . எல்லாம் முடித்து மணி பார்த்தவள் அதிர்ந்தாள் மணி 7 ஆகி இருந்தது இன்று குணாவை 6 மணிக்கு சந்திப்பதாக சொல்லி இருந்தாள் இவனை பார்த்ததில் இருந்து அவள் வேலை ஒன்று கூட ஒழுங்காக நடப்பதில்லை என்று தோன்றியது , நேரம் ஆனது கூட தெரியாமல் அவ்வளவு நேரம் வேலையில் மூழ்கி இருக்கிறாள் , அப்பொழுதுதான் அவளுக்கு சுற்றுப்புறம் உரைத்தது அவளை தவிர அங்கு வேலை செய்திருந்த அனைவரும் கிளம்பி இருந்தனர் ஏதோ பயம் தோன்ற பார்த்திருந்தவளின் தொலைபேசி அழைக்க எடுத்தவளிடம்

உன்னிடம் பேப்பர்ஸ் சரி பார்த்து வர சொல்லி அரை மணி நேரம் ஆகிவிட்டது வருகிறாயா இல்லை இன்னும் கற்பனையில் மூழ்கி இருக்கப்போகிறாயா என்று கத்த வேறு எதையும் யோசிக்காமல் அவனிடம் தரவேண்டியதை அடுக்கி ஃபைலில் வைத்து அவன் அறைக்கு நுழைந்தவள் அவனை காணாது தேடினாள் , அந்த அறை இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் அவன் வேலை செய்யும் பெரிய அரையும் அதை ஒட்டி அவன் படுக்க சிறிய படுக்கை அறை அட்டாச்ட் ஆக இருக்கும் ஒரு தடவை இதை பற்றி பெரியம்மாவிடம் கேட்ட பொழுது சிலநாள் வீட்டிற்கே வரமாட்டான் அங்குதான் தங்குவான் முன்னெல்லாம் அலுவல் அறையை பயன்படுத்திக்கொண்டிருந்தான் பிறகு தான் இந்த வசதி செய்தான் என்று கூறினார் .

அவன் அறையில் இல்லாததும் அவன் அங்கு இருப்பதாக நினைத்து கதவை தட்ட பின் புறம் அவனின் குரல் நான் இங்கிருக்கிறேன் தன்யா என்றபடி கதவை லாக் செய்து விட்டு தன் கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்தான் .

அவளின் பயம் இப்பொழுது பல மடங்கு அதிகரித்தது , அவனின் அழைப்பு அதை அதிகரித்தது இதே போல் ஒரு தரம் அழைத்துதான் அவள் வாழ்க்கையை மாற்றினான் இன்றும் கூட அந்த வார்த்தைகள் மனதில் மாறாமல் ஒலித்தது இதற்கான தண்டனையை நீ நிச்சயம் அனுபவிப்பாய் தன்யா

எதிலோ மாட்டிக்கொண்டது புரிந்தது , எதிலோ என்ன எல்லாம் இவனின் திட்டம் தான் ,

ஆமாம் எல்லாம் என் திட்டம் தான் மேடம் , எங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாக அனைவரையும் அனுப்பி விட்டேன் , கதவை லாக் பண்ணிவிட்டேன் ஒரு முக்கியமான வேலை இருப்பதாக அதை நானும் நீயும் தான் பார்க்க வேண்டும் என்று உன்னை வேலை முடிந்ததும் கூட்டி வருவதாக நானே பெரியம்மாவிடம் கூறிவிட்டேன் இனி நீ என்னை அடித்ததற்கு உனக்கு தண்டனை ஆரம்பிக்கலாமா

நடு முதுகில் குளிர் பரவ நின்றவளுக்கு சர்வமும் பதரியது இருந்தாலும் தைரியத்தை வரவழைத்தவள் கதவை திறங்கள் , இது மாதிரி என்னை மிரட்ட உங்களுக்கு வெட்கமாயில்லை

உன்னிடம் இப்படி நடப்பதற்கு நான் எதற்காக வெட்கப்பட வேண்டும் மேடம் அல்லவா என்னை அடிப்பதற்கு முன் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும்

காலையில் இருந்து இந்த திட்டத்தை போட்டுதான் என்னை அதிக வேலை கொடுத்து வேறு எதையும் சிந்திக்காமல் இருக்க வைத்தீர்களா , ச்சீய் இப்படியெல்லாம் யோசிக்க உங்களுக்கு அவமானமாக இல்லை

உன்னிடம் அவமானம் எல்லாம் பார்க்க தேவையே இல்லை , ஏனென்றால் நீயே என்னை பொறுத்தவரை ஒரு அவமான சின்னம் தான் தாருண்யா என்றபடி முன்னேற

அவனிடம் சிக்காமல் இருக்க அங்கும் இங்கும் ஓடி கையில் கிடைத்த பொருளை அவன் மேல் தூக்கி எறிய அதையெல்லாம் ஏதோ குழந்தை விளையாடுவதாக எண்ணி தள்ளுபவர்களை போல் சட்டை செய்யாமல் நின்றான்

அங்கும் இங்கும் ஓடியதால் உடல் பலவீனம் அடைய மூளை வேலை செய்ய மறுத்தது அவளின் நிலையை தெரிந்து கொண்டவன் தேவையில்லாத போராட்டம் எல்லாம் வீண் என்றபடி அவளை நோக்கி முன்னேறினான்

தன்னை காத்துக்கொள்ள நினைத்தவள் அவன் கதவை விட்டு அவளை நோக்கி முன்னேறும் நேரத்தில் அவன் கைகளில் சிக்காமல் கதவை நோக்கி ஓட எத்தனிக்க அவளின் இருகைகளையும் பற்றி இழுத்து அவன் கதவில் சாய்ந்து தன்னிடம் அவளை இழுத்து தன் கைகளோடு சேர்த்து அவள் கைகளை முன்னாடி மடக்கி பிடித்தான்

இதுவரை அவனிடம் தள்ளி இருந்தே பேசியவள் , அவனின் இந்த ஒரு செய்கையிலேயே நிலைகுலைந்தாள் , கண்களில் கண்ணீர் வழிய உங்கள் பெரியம்மா உங்களின் இந்தக் செயலை அறிந்தால் நொந்துவிட மாட்டார்களா , அவர்களின் வளர்ப்பு பொய்த்து போய்விட்டதாக எண்ணமாட்டார்களா

பெரியம்மாவிடம் எந்த விஷயத்தையும் நான் கொண்டு போகமாட்டேன் , அதோடு என் வளர்ப்பை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை அப்படியே அது உன் விஷயத்தில் நடந்தாலும் அது என்னை பொறுத்தவரை தவறே இல்லை , மீறி அவர்களிடம் நீ விஷயம் சொல்லமாட்டாய் சொன்னாலும் கூட நீ என் பணத்திற்காக உன் மானத்தை அடகு வைத்துவிட்டாய் என்று கூறுவேன் என்று எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் உரைத்தவன் அவளை பிடுத்திருந்த கையை உதறி அவளை தள்ள அங்கிருந்த டேபிளில் இடித்துக்கொண்டவள் சேரை பிடித்தாள் .

அவன் வார்த்தைகள் அவளை சாட்டையாய் சுழற்றி அடித்தன , இனி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முயற்சி செய்தவள் தன் எதிரே இருந்த டேபிளின் மேல் இருந்த பூ ஜாடியை கவனித்தாள் அதை உடைத்து போராடி ஒன்று அவனை வீழ்த்த வேண்டும் இல்லை தான் சாக வேண்டும் என்று முடிவெடுத்தாள் , யோசித்தவள் அடுத்த நொடி அதை கை பற்ற அடி எடுத்து வைக்க அதே நேரம் கிளிக் என்ற ஒளியுடன் அந்த கதவின் தாழ்ப்பாள் திறக்க அதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தாருண்யா .

கதவை நன்றாக திறந்தவன் நான்தான் சொன்னேனே இது உனக்கான தண்டனை என்று , உன்னை தொடுவது என் நோக்கம் இல்லை உனக்கான தண்டனைகள் மட்டுமே நான் யோசித்தது , இப்பொழுது உன்னை தொடுவதாக மிரட்டியது கூட உன் உடல் பலவீனத்தோடு விளையாட அல்ல , நீ அடித்து எனக்கு உடலில் வரவழைத்த வலியை மனதில் கூட வரவழைக்க முடியும் என்று உனக்கு காட்ட தான்

கற்பு என்பது என்னை பொறுத்தவரை மனதளவில் ஒருவனை சார்ந்திருப்பது மட்டுமே அதை உன் உடலில் இருந்து நான் எடுத்தாலும் கூட எனக்கு பெரியதாய் உனக்கு தண்டனை கொடுப்பதாக தோணாது , அதே இந்த ஒரு மணி நேரம் நீ மனதளவில் அனுபவித்த வலி அதுதான் உனக்கான என் தண்டனையின் கணக்கு , போ போய் என்னிடம் பேசுமுன் யோசித்து உன் கையையும் நாவையும் அடக்க பழகு என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டான்

சிறிது நேரம் நடந்தவற்றை ஜீரணிக்க சிரமப்பட்டவளால் நடந்ததை நம்பவே முடியவில்லை அவளுக்கு எந்த கேடும் நடந்துவிடவில்லை என்பதே அவளின் ஜீவனை மீட்டெடுத்து விட்டது மேலும் , தன்னை வருத்துவதற்காக அவன் இதை செய்திருக்கிறான் வெறும் பழி வெறி மட்டும் தான் இவனின் எண்ணமாக இருந்திருக்கிறது ,

கற்பு என்பது மனதளவில் தான் கண்ணு , ஒரு பொண்ணு அவ விருப்பம் இல்லாமல் கெட்டு போவது என்பது வெறும் உடம்பிற்கு நடக்கும் ஒரு சின்ன தீங்கு அவ்வளவு தான் அதே அவ மனசுல கெட்டுட்டானா அது தான் உண்மையாகவே கெட்டு போகறதுன்ன்னு அர்த்தம் என்று அவள் அன்னை அடிக்கடி கூறும் வார்த்தைகள் அதையே கூறி சென்றிருக்கிறான் .

மனதில் கெட்ட எண்ணத்துடன் அல்லது அறியாமையால் வாழ்பவர்களால் இப்படி ஒரு விஷயத்தை சொல்ல இயலாது அப்படியென்றால் இவன் எப்படி காமுகனாக இருக்க முடியும் . தனக்கு தெரிந்த மனுபரதன் பெண்டாடும் காமுகன் அப்படித்தானே தன் தோழி அழுது தன் காதலையும் வாழ்க்கையும் துறந்தாள் அது எப்படி பொய்யாகும் என்ற யோசனையில் இறுகி நின்றாள் நாயகி .

உன் கண்களில் சுடர் விடும் ஒளி ,

ஒளி ஏற்றும் தீபமா இல்லை தீப்பற்றும் தீக்கங்கா

விடை அறியேன் எனினும் ஒரு நிமிடம் கூட

அது தவறில் தாழ்ந்து நிலம் பார்க்கவில்லை

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here