காதல் தோல்வி

0
294

காதல்ல தோல்வி அடைஞ்ச ஒரு நண்பரோட உண்மையான கதை.அப்புறம் இதை யாரும் பின்பற்ற வேண்டாம்.படிச்சு பாருங்க .திகைச்சு போயிருவீங்க.

காலேஜ் கடைசி நாள் .தீபக் மட்டும் நித்யா சந்திக்குற அதே இடத்துல உக்காந்துட்டு இருந்தான் .நாலு வருஷத்து காதல்.இனி அடிக்கடி பாக்க முடியாது.அதனால எதாவது ஐடியா சொல்லுவான்னு காத்திருந்தான் .தூரத்தில் நித்யா வருவதை பார்த்தான் .
64493647_410937279636330_5732524916197031936_n|281x500

தனது தலைமுடிகளை சரி செய்து கொண்டான் .நித்யா அவன் பக்கத்துல வந்து உக்காந்து அமைதியா தன்னோட பேக்ல இருந்த கவர எடுத்து அவன்ட்ட கொடுத்தான் .அவன் வாங்கி படிச்சுட்டு அதிர்ச்சியா திரும்பி”என்ன நித்யா கல்யாண பத்திரிக்கை தர்ற.இன்னும் நாலு நாளையில கல்யாணம் இப்ப சொல்ற.இப்ப நான் என்ன பண்றது .பரவாயில்லை நித்யா .நம்ம ப்ரண்ட்ஸ்க்கு போன் போடுறேன் நமக்கு நாளைக்கே கல்யாணம் .நீ கவலைப்படாத”என்றதும் அவள் அமைதியாக “தீபக் .அமைதியா இரு.எனக்கு தெரிஞ்சு தான் ஏற்பாடு பண்ணி இருக்காங்க .உனக்கு தெரிஞ்சா ஒண்ணு சோகமா முகத்த வச்சுகிட்டு என்னையவே சுத்தி சுத்தி வருவ .

இல்ல சரக்கு அடிச்சுட்டு வந்து ரகளை பண்ணுவ.அதனால தான் சொல்லல .காலேஜ்ல லவ் ரோம்ப சகஜம் .காலேஜ் முடுச்சதுக்கு அப்புறம் ஒரு வாழ்க்கை இருக்கு தீபக் .அதுக்கு நீ எனக்கு இப்ப தயாரா இல்ல .உனக்காக காத்திருக்கவும் மனசு வரல .துபாய்ல வேலை.கை நிறைய சம்பளம் .நானும் அங்கேயே போக போறேன் .நீ இனி வேலை தேடணும்.அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் .வீடு கட்டணும்.அதுவரைக்கும் நான் காத்திருக்கணும்.ஸாரி என்னால முடியாது.நான் கிளம்புறேன் தீபக் .மறுபடியும் ஒரு பெரிய ஸாரி “என்றவாறு அவ கிளம்பி போய்ட்டே இருந்தாள் .

மூணு வருஷம் கழிச்சு தன்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு முதல் நாள் இந்தியா வந்தடைந்தாள்.கல்யாண வீட்டில் அனைவரும் திட்டினார்கள் “ஏம்மா ,உன் தங்கச்சி கல்யாணம் கடைசி நேரத்துல வந்திருக்கியேம்மா?”என்றதும் பதிலுக்கு அவள் “இல்லைங்க அவருக்கும் எனக்கும் லீவ் கிடைக்கல”என்று சமாளித்தாள் .மாப்பிள்ளை மண்டபம் வந்ததும் நித்யா ஆரத்தி எடுக்க சென்றாள் .மாப்பிள்ளையை பார்த்ததும் அதிர்ந்துவிட்டாள் அது தீபக் .வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள் .இரவு பதினோரு மணி இருக்கும் மாடியில் தனிமையில் நடப்பது எதுவும் புரியாமல் குழம்பி போய் நின்றிருந்தாள் .அப்போது அவள் பின்னால் யாரோ வருவதை கண்டு திரும்ப இருட்டில் இருந்து தீபக் வெளிச்சத்துக்கு வந்து அவள் முன் நின்று”என்ன நித்யா குழப்பமா இருக்கா .இவன் எங்கடா இங்க வந்தான்னு.நாலு வருஷம் பழகிட்டு நாலே நிமிஷத்துல தூக்கி எறிஞ்சுட்டு போயிருவீங்க .நாங்க உங்கள நினைச்சு நினைச்சு சாகணும் இல்ல.நீ என்ன தூக்கி எறிஞ்சப்ப ரோம்ப வலிச்சது ஒரு இரண்டு நாள் .அப்புறம் முடிவு பண்ணி வெறித்தனமா உழைச்சேன்.நல்ல வேலை.நல்ல சம்பளம் உன் புருஷன விட அதிகம் .அருமையா செட்டில் ஆகிட்டேன் .ஆனா இதேல்லாம் உனக்கு எப்படி தெரியும் ?உனக்கு தெரியணும் .அதனால தான் உன் தங்கச்சிய பொண்ணு கேட்டு வந்தோம் .நான் உன் தங்கச்சிய எப்படி தேவதை மாதிரி வச்சு வாழ போறேன்கிறத நீ பாத்துட்டே இருக்கணும் .என்ன இழந்த வலிய நீ உணர்ந்தே ஆகணும் “என்று வேட்டிய மடுச்சு கட்டிட்டு போய்ட்டே இருந்தான் .

(பொண்ணுங்க யாரும் என் மேல கோபபடாதீங்க)
என் வாட்ஸ்அப் நம்பர் 9600532669
நன்றி!வணக்கம் !
நான் உங்கள் கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here