என்னுடைய முதல் முயற்சியான காதல் மட்டும் புரியவில்லை குறுநாவலில் தளத்திலும் பதிவுகளிலும் லைக் செய்து கமெண்ட் செய்து உற்சாகப்படுத்திய நட்புக்களுக்கு நன்றி…
காதல் மட்டும் புரிவதில்லை 12
அரவிந்தனும் பிரபாவும் பேசிக் கொள்ளவில்லை ….முதல் காதல் போல் முதல் சண்டையும் மறக்க முடியாது ….
யார் முதலில் பேசுவது என யோசித்து யோசித்து பேசாமல் இருந்ததனர் இருவரும் …….
ஒன்றும் பேசாமல் அலுவலகம் கிளம்பிச் சென்றாலும்
மனம் முழுவதும் பிரபாவதியே நிறைந்திருந்தாள்…
"போதும்டா ... டேய் தாங்கமுடியலடா"
..என்னடா …?
10 நிமிசத்துல 20 தடவை அந்த போனை ஆன் பண்ணி பாத்துட்ட….உன் பொண்டாட்டி கால் பண்ணா சத்தம் கேட்கும் டா….
பயபுள்ள… கண்டுபிடிச்சுடான்!!! நம்மள இன்னைக்கு ஃபுல்லா ஓட்டுமே!! என மைண்ட் வாய்ஸில் யோசித்து
” அப்படிலாம் ஒன்னும் இல்லடா, ஒரு முக்கியமான கிளையண்ட் கிட்ட இருந்து கால் வரணும் …அதஅதான்…
.எனக்கு தெரியாம யாருடா அது முக்கியமான கிளையண்ட் நம்ம பிசினஸ்ல… இத முதல்ல உன் பொண்டாட்டி கிட்ட போட்டு தரணும் ….
போட்டு தந்துட்டாலும் என மனதில் நினைத்து ஹி ஹி என சிரித்து சமாளித்தான்…. சிங்கம் மாதிரி இருந்த என்ன இப்படி சந்தி சிரிக்க வச்சுட்டாளே…
இது அரவிந்தனின் நிலை எனில் பிரபாவின் நிலையோ சொல்ல வேண்டியதில்லை… அலுவலகம் முடிந்து அவன் வரும் நேரம் வந்ததும் குட்டி போட்ட பூனையாய் வீட்டை வலம் வந்தாள்…
வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்டவுடன் வேகமாக ஓடி வந்து எட்டிப் பார்த்தாள்…அவர்கள் வீட்டையும் தாண்டி சென்றது வண்டி…அவனது வண்டி ஹாரன் சத்தம் போலவே இருந்தது என்ற நினைப்போடு வீட்டுக்குள் திரும்பினாள் ..ஹாலில் இருந்த அவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தது.
” யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது. அதான் பார்த்தேன்” என்று சமாளித்தாள் ..
“ஆமா, ஆமா, கூப்பிடது ஹாலில் இருக்கிற எங்களுக்கு கேட்காமல் மாடியில் இருந்த உனக்கு கேட்டிருக்கும்… அக்கா !!!இது தீபி….
எல்லா வண்டிக்கும் ஒரே மாதிரிதான் ஹாரன் சத்தம் இருக்கும் !!!
என அனைவரும் ஆளாளுக்கு ஓட்டினார்கள்..
“இந்த கொசுங்க தொல்லை தாங்க முடியல” என்றாள்.. அத நாங்க சொல்லணும் என்றார்கள் ஹோரஸாக…
வெகு நேரம் கழித்து வீடு திரும்பினான் அரவிந்தன்… இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் சாப்பிட்டாயா ?என்று கேள்வியுடன் எதிர்கொண்டனர்.. இது அடிக்கடி அவர்களுக்குள் நிகழும் நிகழ்வு என்பதால் சிரித்துக் கொண்டனர்…. அந்த நேரம் மன இறுக்கம் தளர்ந்தது….
சாப்டியா??? ..இது அரவிந்தன்…
வெயிட்டிங் ஃபார் யூ…இது பிரபா…
அரவிந்தன் சாப்பிட்டு முடித்ததும் பிரபா சாப்பிட்டு முடிக்க காத்திருந்தவனிடம் கண்களால் என்ன ?
என்றாள்…
தலையை இடம் வலமாக அசைத்து ஒன்றுமில்லை.. சாப்பிடு.. என சைகை செய்தான்…
பின் ஒரு விதமான மௌன நிலையில் இருந்தனர்..
பின் முயன்று வரவழைக்கப்பட்ட குரலில் சாரி என்றனர் இருவரும்…
பிரபாவை இழுத்து அணைத்துக் கொண்டான் அரவிந்தன்…
இனிமேலும் கேட்பியா??நான் வேறு யாரையாவது காதலிக்கிறேனா என…
அவனின் அணைப்பில் இருந்த பிரபாவும் ,இல்லை …என தலையை ஆட்டி மறுத்தாள்…
நான் முதலும் கடைசியும் காதலிக்கிற ஒரு பொண்ணு நீ மட்டும் தான்..புரியுதா???
ம்..தலையை ஆட்டி சரி என்றாள்..
நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பு உனக்கு புரியவில்லையா??
எப்படி புரியும்?
என்ன??
எப்படி புரியும் னு கேட்டேன்???என்னைக்காவது வாய திறந்து இது மாதிரி சொன்னா தெரியும்….
ம்..அதுவும் சரிதான்…என கல்யாணத்திற்கு முன் இருந்த வீட்டின் சூழ்நிலையையும் அவனது நிலையையும் விளக்கினான்..
எங்க அண்ணி மாலதியோட தங்கை தான் சித்ரா…
அது தெரியும் !!!
அண்ணியை பார்க்கிறதுக்காக காலேஜ் ஸ்டடி ஹாலிடேஸ் ல இருந்து சித்ரா அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவா… அப்ப இயல்பான நாங்க பேசி பழகுறத வச்சு எங்க அம்மாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு…..
என்ன யோசனை ???
கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு நான் சொல்றத கேளு …
கையால் வாயின் மீது விரலை வைத்து சிறு பிள்ளை போல் தலையாட்டினாள்..
அம்மா எனக்கும் சித்ராவுக்கும் கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும்னு அண்ணன் கிட்ட பேசினத சித்ரா கேட்டு இருக்கா… அதனால அவளுக்கு கொஞ்சம் interest இருந்திருக்கும் போல ..இந்த விஷயத்துல…
அப்ப உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா…
இல்லை என்றான் அவளை முறைத்தவாறே…
அப்புறம்!!?
சித்ரா வீட்ல ரொம்ப ஜாதகம் பார்ப்பாங்க எனக்கும் அவளுக்கும் ஜாதகப் பொருத்தம் சரியில்லை என இந்த கல்யாண ஐடியா வ டிராப் பண்ணிட்டாங்க… அதனாலதான் சித்ரா கல்யாணத்தன்னைக்கு இங்கே வந்து அழுது இருக்கா…
முதலில் எனக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது …அப்புறம் அம்மா சொல்லித்தான் புரிஞ்சுக்கிட்டேன்.. இது ஒரு பெரிய மேட்டரா நான் நினைக்கல… அதனால தான் உன் கிட்ட சொல்லல…
ஓகேவா!! போதுமா??
போதும்!! போதும்!!
என்னோட பாய்ண்ட் ஆஃப் வ்யூல இருந்து யோசிச்சு பாருங்க கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என்கிட்ட ஒரு தடவை கூட போன்ல பேசினது கிடையாது ..நேர்ல பார்க்கிறப்ப பேசுற ரெண்டு வார்த்தையோட சரி.. அதுவும் எங்க தீபிகாவும் உங்க அண்ணா பிரேமும் லவ் மேரேஜ்…. அவங்க லவ் பண்ணினதுல இருந்து கல்யாணம் பண்ற வரைக்கும் கூடவே இருந்து அவங்க லவ்ஸ் பார்த்தவ நான் …அதையும் தாண்டி கல்யாணம் முடிஞ்சு வந்த அன்னைக்கு ஒரே கலாட்டா…
என்ன நினைக்கிறது நான்!!
எதுக்கு நீயா எதுவும் நினைக்கிற!!? கேட்க வேண்டியதானே என்கிட்ட.. அப்பவே ?
அன்னைக்கு உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன் அப்ப நம்ம இந்த அளவுக்கு close இல்ல..அதான் கேட்கல…
அப்ப இப்ப??
இப்ப என்ன??
அப்ப close ஆஇல்ல ன்னு சொன்னியே ..இப்ப? எனக் கேள்வி கேட்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான்…..
நான் ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி பேச லேனா பிரேம் தீபி யோட லவ் மேரேஜ் னால வீட்ல இருக்கிற எல்லாரும் அப்செட்… அப்ப அண்ணி பற்றி தெரியாமல் எல்லாரும் ரொம்ப கவலையா இருந்தாங்க… சித்தப்பா சித்திய விட்டுட்டுப் போயிடுவாங்களோனு.. அவங்க கவலையாய் இருந்தது அம்மா அப்பாக்கும் கவலையைக் கொடுத்தது…. அம்மாவும் நானும் உன்கூட பேசுறத பார்த்துக் கவலைப் படுவார்கள் என்று தான் பேசல ..அதோட என்னோட பிசினஸ் ல நான் கொஞ்சம் பிஸி அதான் சாரி டா ….
நீ இதெல்லாம் பெரிய விஷயமாக நினைப்பேன் னு நான் நினைக்கல டா… என்றான் ….
அவன் கவலைப் படுவது பிடிக்காமல் சாரி எதுக்கு ?அப்பதான் எனக்கு அது பெரிய விஷயமாக இருந்தது… இப்ப இல்ல …அவளவனுக்காக அவனிடமே வக்காலத்து வாங்கி பேசினாள்… இதுவே காதல்… என இருவருக்கும் புரிந்தது
அவர்கள் இருவருக்கும் அவர்களின் காதலின் ஆழம் புரிந்தது… காதலில் ஏது ஒளிவுமறைவு ???எல்லாப் பிரச்சனையையும் பேசியே சரிசெய்து கொள்ளலாம் … அதைவிட நம்பிக்கையும் முக்கியம்..என்பதை உணர்ந்தாலே போதும்…
அவர்கள் இருவரும் காதல் வாழ்க்கையை சிறுசிறு ஊடல்களுடன் சந்தோஷமாக தொடர்ந்தனர்…. இந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்….
இந்த காதல் மட்டும் புரிவதில்லை…..!!