” பிரபா !!!!(இதுதான் நம்ம நாயகியோடு பேர்) என்னடி ,எருமை பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டு விட்டு அவள் முதுகில் ஒரு அடி வைத்தாள் …
“வரவேற்பு ல மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க… நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க ?வா!போகலாம்… என்று பிரபா வைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றாள் …..பிரபாவதி யின் பெரியப்பா மகள் தீபிகா …. அக்கா என்றாலும் 5 மாதம் தான் வித்யாசம் …. போன மாதம் தான் கல்யாணம் முடிந்து இருந்தது அவளுக்கு …
மாப்பிள்ளையை பெண் வீட்டு பிள்ளைகள் ஆளுக்கொரு ஆரத்தி எடுத்து வரவேற்பது அவர்களது ஊர் பழக்கம் ...இப்பொழுது முதல் அல்லது கடைசி ஆரத்தி யை பெண் எடுப்பது பேஷனாகி வருகிறது .... ஆரத்தி சுற்றினால் திருமண வீட்டாருக்கு கண்படாதுஎன்பது நம்பிக்கை.... சூடம், வெற்றிலை நீர் ,கும்பம் என்பது பாரம்பரிய ஆரத்தி... அதனுடன் சேர்த்து தங்களது கைவண்ணத்தையும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் ...நவீன காலத்து பெண்கள்... பெண் வீட்டார்கள் எடுக்கும் ஆரத்திற்கு ஏதாவது பரிசு கொடுப்பது மாப்பிள்ளை வீட்டாரின் வழக்கம்...
பாரம்பரியமான ஆரத்தியுடன் சேர்த்து தனது கைவண்ணத்தில் 21ஆரத்தி செய்திருந்தாள் மணப்பெண் பிரபாவதி…
"முதல் ஆரத்தி யாவது எடுத்திருக்கலாம் ..அதை விட்டுட்டு கடைசி தான் எடுப்பேன் ,அடம்பிடிச்ச... முதல் ஆரத்தி யாவது எடுத்து முடித்து விட்டு உள்ள போயிருக்கலாம்... இப்ப பாரு ஒரே டென்ஷன்" ....என பிரபாவதியின் காதில் கூறினாள் தீபிகா....இது எதையும் காதில் வாங்கும் மனநிலை யில் பிரபா..
பேசிக்கொண்டே மண்டபத்தின் வாயில் அருகில் பிரபாவை நிறுத்தி அவள் கையில் அழகான ஆரத்தி தட்டை கொடுத்தாள் தீபிகா...
.. “இந்த 180 நாட்களில் ஒரு தடவை கூட என்னை பார்க்கணும் தோணல… நான் மட்டும் லூசு மாதிரி நாட்களை எண்ணிக் கொண்டும், வெளியே எங்க போனாலும் அவன் ஆபீஸ் வழியா போகிறது, எங்கயாவது பாக்க மாட்டோமானு சுத்திகிட்டு இருந்தேன்… இந்த பதினைந்து ஆரத்தி சுத்துற வரைக்கும் சார் னால வெயிட் பண்ண முடியாதா??? வெயிட் பண்ணட்டும்.. அதுவரைக்கும் நான் கொஞ்சம் சைட் அடிச்சுகிட்டு இருக்கேன்..என நினைத்து தான்மணப்பெண் என்பதையும் மறந்து மணமகனை பார்த்துக் கொண்டு இருந்தாள்… நான் தான் வெட்கமே இல்லாம அவன பார்த்துகிட்டு இருக்கேன்..ஆனா இவன் பெரிய துரை மாதிரி என்னை பார்க்க மாட்டாராம்…என மனதினுள் மூழ்கியிருக்க மண்டபத்தின் வாயிலில் ஒரே சலசலப்பு …ஹோ என ஒரு சத்தம்…..
என்னவா இருக்கும் ???பொறுத்திருந்து பார்ப்போம்??? இந்த காதல் மட்டும் புரிவதில்லை!!!
!!!!