காதல் மட்டும் புரிவதில்லை 3

0
316
      "ஹோ! " என்ற சத்தம் கேட்டு பிரபாவும் தீபிகாவும் வாயிலை நோக்கினார்கள்.. 

வேற யாரு?நம்ம வானரங்கள் தான் காரணம்… சாரி சாரி பிரபாவின் தோழிகள்தான்….அடுத்ததாக ஆரத்தி சுற்றும் முறை பிரபாவினுடையது அதற்காகத்தான் இவ்வளவு அலம்பல்….

ஆரத்தியை கையில் ஏந்தி தனது நாயகனை பார்த்தவுடன் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது அவளுள்…

எத்தனை தடவை சுத்தனும்?சுத்திட்டு என்ன செய்யணும்? எந்த பக்கம் சுத்தனும்?என தீபிகாவின் காதில் கேள்விகளை அடுக்கினாள்….

மேக்கப்பையும் மீறி வேர்த்து வழிந்தது… பிரபாவும் தைரியத்துடன் இருப்பதாக காட்டிக்கொண்டு சற்று நிமிர்ந்து தன்னவனை பார்த்தாள்..

.” கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” என்று அவளது மனசாட்சி பாட்டு பாடியது. இவ்வளவு ரணகளத்திலேயும் உனக்கொரு குதூகலம் கேக்குதா ?என்ற மனசாட்சியை தட்டி உள்ளே போக வைத்தாள்…

“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் “என மனதினுள் டயலாக் விட்டுட்டு சாவி கொடுக்கும் பொம்மைபோல் தீபி சொன்னதை செய்தாள் தன்னவன் புன்னகை முகம் பாராமல் …இவனது கண்களுக்கு இவ்வளவு சக்தியா??என்ற ஆராய்ச்சி யில் மூழ்கினாள்..

அதன் பிறகு நடந்த எதுவும் பிரபாவின் கருத்தில் பதியவில்லை …. கற்பனை உலகில் நடப்பது போல் இருந்தது அவளுக்கு…

மண்டபத்தில் மேடையில் ஊரின் பெரியவர்களும் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய சுற்றத்தாரும் அமர்ந்திருந்தனர்.. பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்து அந்த அழகான கல்யாணம் புடவையை அவளது கையில் தந்தனர் .பிரபா ரெடியாகி வர்றதுக்கு முன்னாடி மேடையில் உள்ளவர்களைப் பற்றி தெரிஞ்சுக்குவோம்..

அங்க 2அம்மாக்களும் பேசிக்கிட்டு இருக்காங்க அவங்க நம்ம நாயகன் நாயகி யின் அம்மாமார்கள்… அதுல கிளிபச்சை கலர் சேலை கட்டி இருக்காங்க அவங்க மாப்பிள்ளையின் அம்மா லலிதா.. ரொம்ப அன்பானவங்க.. அதே அளவு கண்டிப்பானவங்க..

லலிதாவின் பக்கத்தில் நாயகனின் தந்தை கணேசன் வீட்டுப்பொறுப்பை லலிதாவிடம் விட்டு விட்டு தனது அலுவலகத்தின் முன்னேற்றத்தை தனது முன்னேற்றமாக சிரமேற்கொண்டு செய்து தன் சுயமுயற்சியால் முன்னேறியவர் …

அவரது அருகில் நமது நாயகன் சாயலில் அவரது அண்ணன் அண்ணி ரவீந்திரன் மாலதி… இருவரும் சென்னை ஐடி துறையில் வேலை பார்க்கின்றனர்…

நாயகனின் அருகில் முகம் முழுக்க சந்தோசமாக நின்று கொண்டிருப்பது தான் பிரபாவதியின் வின் குட்டி தம்பி பிரபாகரன்….. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்..

அருகில் அவர்களது தாயார் கவிதா.. ரொம்ப சாது ..மிகவும் அன்பானவர் …பிரபாவின் தந்தை பழனிமலை கண்டிப்புடன் பிள்ளைகளை வளர்த்த ஆசிரியர்….

அடுத்ததா நமக்கு ஏற்கனவே அறிமுகமான தீபிகா …மாப்பிள்ளை வீட்டில் நிற்பதா??பெண்ணின் வீட்டில் இருப்பதா??யாருக்கு வேலை செய்வது?? யாருடன் பேசுவது என தெரியாமல் இரண்டு பக்கமும் சமாளித்து கூடவே நமது பிரபாவையும் சமாளித்து கொண்டிருப்பவளை ரசித்தான் அவளது காதல் கணவன் பிரேம்…நாயகனின் சித்தப்பா பையன்…இரண்டு வருடமாக காதலித்து ஒரு வருடமாக வீட்டில் போராடி கல்யாணம் செய்து நம்ம நாயகன் நாயகி கல்யாணத்திற்கு காரணகர்த்தா ஆனவர்கள்…பிரேம்- தீபிகா கல்யாணத்தில் தான் நம் நாயகனுக்கு பிரபாவை மணக்கக் கேட்டார்கள்..

அழகான கடலின் நீல நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து சொந்தங்கள் சூழ மேடை ஏறினாள்நம்ம தேவதை பிரபா …இன்றைய நவ நாகரீக யுவதி.. பொறியியல் பட்டதாரி ..வீட்டின் முதல் பெண்… ரொம்ப சுட்டி… ஆனா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் அப்படிங்கற மாதிரி பொறுப்பு வந்துட்டா பிரபாவை யாராலும் பிடிக்க முடியாது ..பொறுப்பை நிறைவேற்றினால் தான் மூச்சே விடுவாள்..தீபி பிரேம் காதலை பார்த்து ஏராளமான கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் கல்யாண பந்தத்தில் அடி வைப்பவள்..

இரு கண்களைத் தவிர அனைத்து கண்களும் பிரபாவின் மீது தான் இருந்தது ..

அந்த இரு கண்களுக்குச் சொந்தக்காரன் தான் நமது நாயகன்… தனது நண்பனுடன் சேர்ந்து கூட்டு முயற்சியால் ஒரு நிறுவனத்தை நடத்தி வருபவன்.. யாருக்கும் அஞ்சாநெஞ்சன் ..வீட்டின் கடைக்குட்டி …செல்லம் ..ஆனால் இந்த கல்யாணத்தில் பிடித்தம் இல்லாதவன்..

அவனின் பெயர் கொஞ்சம் பொறுங்கள்!! நம்ம நாயகியே அவனுடைய பெயரை காத்திருந்துதான் கஷ்டப்பட்டு தான் தெரிந்து கொண்டாள்.. நீங்களும் வெயிட் பண்ணுங்க… நாயகனுக்கு பிடித்தமில்லாத இந்த கல்யாணம் நடைபெறுமா??? பிரபாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?? பார்ப்போம்!!!!
இந்த காதல் மட்டும் புரிவதில்லை!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here