காதல் மட்டும் புரிவதில்லை 6

0
333

காதல் மட்டும் புரிவதில்லை 6

ஹாய் என பத்து பேரும் கோரஸாய் சொல்ல அவர்களுக்கு நடுவில் சிரித்த முகமாய் நின்றிருந்தான் அரவிந்தன் ….. அவனைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றாள் பிரபா …..

இப்ப தான் நம்ம கிட்ட முகத்த சிடுசிடு என காட்டினார்…. இப்ப என்னடானா 32 பல்லை காட்டி சிரிக்கிறான் …இவனை எந்த கேட்டகிரியில் லிஸ்ட் போடறதுன்னு தெரியலையே என்று மனசாட்சியுடன் பேசி விட்டு ஹாய் என்றாள்,அவர்களிடம்…

….அவர்கள் அரவிந்தனின் நண்பர்கள்…. ஓகே நம்மளை நாமளே அறிமுகம் செய்து கொள்வோம் ….

இது ஒரு அழகிய நட்பு வட்டம் நாங்க மூணு பசங்க ரெண்டு பொண்ணுங்க காலேஜ்ல ஒரே கேங்கு …இப்ப எல்லாருக்கும் கல்யாணம் ஆகி எங்க பாட்னர்ஸ் ம் அந்த நட்பு வட்டத்தில் வந்துட்டாங்க …நீங்களும் எங்க கூட சேரனும் னு நாங்க ஆசைப்படறோம் என்றான் பிரபு.. அவன் தான் அரவிந்தனின் உயிர் நண்பன்….

பிறகு ஒவ்வொருத்தராக தன்னை அறிமுகம் செய்து கொண்டார்கள்… அந்த கேங்கை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது …அவர்களது கலகலப்பான பேச்சினால் தன்னையும் அந்த நட்பு வட்டத்தில் சேர ஆசைப்பட்ட தருணத்தில்

பிரபாவின் எதிரே நின்றிருந்த அரவிந்தன் அவளது வலது பக்கம் வந்து அவளது தோளில் கை வைத்து அவளைத் தன் பக்கம் நிறுத்தி இது பிரபாவதி …என்னோட வைஃப் … இனி நம்ம கேங்கில் இவளும் ஒருத்தி என்று ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான்….

அரவிந்தனையும் பிரபாவதியும் அனைவரும் கலாய்த்து கொண்டிருந்தனர் புதுமாப்பிள்ளையும் பெண்ணையும் கலாய்த்துக் கொண்டு இருந்தனர்….

ஆனால் அது எதுவும் பிரபா கருத்தில் பதியவில்லை …அவன் அருகில் நிற்பது ஆனந்த அவஸ்தையாக இருந்தது .திருமணத்தின் போது கூட எல்லா சடங்கையும் சேர்ந்து செய்ய வேண்டி இருந்தது ..ஆனால் இது புது விதமாக தோன்றியது பிரபாவதிக்கு….

சரி நாங்க கிளம்புறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள் ….அவர்களை வழியனுப்ப அரவிந்தனும் கீழே இறங்கினான்…. அதன் பிறகுதான் பிரபாவதிக்கு மூச்சுவிட முடிந்தது…

பின் அழகிய இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் கீழே இறங்கி வந்தாள்… அதற்குள் மண்டபத்திலிருந்து பெரியவர்கள் அனைவரும் வந்திருந்தனர்…. பிரபாவின் அருகில் வந்து அவளது மாமியார் லலிதா அழகிய முல்லை அவளுக்கு சரத்தை சூட்டிவிட்டார்கள்…

பிறகு அவளை பார்க்கவே சங்கடப்பட்டு சாரி மா என்றார்கள்..எதற்கு இந்த சாரி என்று புரிந்துகொண்டு அவர்களை சமாதானப்படுத்த பிரபாவதி நீங்க எதுக்கு என்கிட்ட சாரி கேக்குறீங்க என்றாள்… மாமியார் லலிதாவும் இல்லை மா…சித்ரா …ஏதோ தெரியாம…என ஆரம்பித்தார். ..என்ன பிரச்சனைனா என்று ஆரம்பித்ததும்…

அத்த.. வேண்டாத பழசு எதையும் உங்க யார் மூலமாகவும் இருந்தும் தெரிஞ்சுக்க விரும்பல…அவசியம் னா அது அரவிந்தன் வாயால் தெரிஞ்சுக்கணும்னு என்றாள் பிரபா…

அச்சச்சோ பெயரை சொல்லி விட்டேனே பிரபா… உனக்கு நாவடக்கம் ஒன்னும் இல்லாம போச்சு என்றது மைண்ட் வாய்ஸ் …பிரபாவின் புரிதலை எண்ணி மன ஆறுதல் அடைந்து சிரித்து விட்டு நகர்ந்தார் லலிதா…

ஹாலில் டிவி பார்ப்பது போல் அமர்ந்திருந்த அரவிந்தன் மாமியார் மருமகள் இடையே நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.. இவள் பிரச்சினையை புரிந்து கொள்ளக் கூடியவளாக தான் இருக்கிறாள் என்று பெரும் நிம்மதி பரவியது அவனுள்…

அதன் எதிரொலியாக பிரபாவை நோக்கி சினேக புன்னகையை சிந்தினான்… ஆனால் பிரபாவோ அவன் புன்னகைக்கு நேர் எதிராக ஒரு முறைப்பை பதிலாக தந்தாள் அவளது முறைப்புக்கு என்ன அர்த்தம் எதற்கு இந்த முறைப்பு?! என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் அரவிந்தன்…

இந்த காதல் மட்டும் புரிவதில்லை!!!!Screenshot_2019-03-17-20-03-56-1264405446|498x500

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here