கோயம்பத்தூர்
காதல்-2
பசுமை மாறாத அந்த கரடுமுரடான ஊட்டி மலை பாதை சரிவுகளை அனாயசமாய் கடந்து கோயம்பத்தூர் மாநகரில் முக்கிய வீதியில் அமைந்திருந்த பெரிய காம்பவுண்ட் கிரில் கேட்டுகளின் முன்பு பைக்கை நிறுத்தினான் . நல்ல உயரம் அளவான உடல்வாகு மாநிறம் இப்படியே போனால் காவல் துறையில் அவனுக்கு வேலை நிச்சயம் அத்தனை அம்சமும் கொண்டவன் கேஷவ். ராஜராமன் ஆதிநாரயணியின் இளைய மகன். பைக்கை விட்டுவிட்டு வேகமாக கேட்டை திறந்து வீட்டினுள் நுழைய இருந்தவன் ஒரு நிமிடம் தாமதித்து பின் கண்களை இறுக்க மூடி மூச்சை இழுத்துவிட்டு எதுவந்தாலும் சரி என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தான். பரபரப்பாக” அம்மா…. அம்மா…… “என்று தன் அன்னையை தேடி குரல் கொடுத்தான்.
“அம்மா எங்க இருக்கிங்க?” என்று அழுத்தமான குரலிற்க்கும் பதில் இல்லாமல் போக வீட்டிற்க்கு வெளியே வந்தவன் யோசனையோடு தாயை தேடிக்கொண்டே வீட்டிற்க்கு பக்கவாட்டில் அமைக்கப்பட்ட தோட்டத்திற்க்கு சென்றான்.
குளிருக்கு இதமாக காலை கதிரவனின் வெப்பத்தில் தோட்டத்திற்க்கு நீர்பாய்ச்சி கொண்டிருந்தார் ஆதிநாரயணி அம்மா. 50வயது மதிக்கதக்கவர் பூசிய உடல் வாகு சாந்தமான முகம் ரிட்டையர்டு மிலிட்டிரி ராஜாராமனின் இல்லதரசி.
அவரை பார்த்தும் ஏதோ கண்ணாமூச்சி ஆடிய குழந்தை தாயை பார்த்தும் ஓடிச்சென்று அவரிடத்திலே ஐக்கியம் ஆகுமே அதே போல் நாரயணிஅம்மாவை கண்டதும் “அம்மா ….. அம்மா….” என்றபடி அவர் அருகில் சென்றவன் உங்களுக்கு “ஒன்னும் இல்லையே நீங்க நல்லாதானே இருக்கிங்க அம்மா?”. என்று அவரின் கன்னம், கைகளை தொட்டு பாரத்துக் கொண்டே கேட்டான்.
அவனை பார்த்த ஆதிநாரயணி அம்மா ஆனந்த ஆதிர்ச்சியில் முகமேல்லாம் பூரித்து போய் மகன் கேட்டதையும் கூட காதில் வாங்காமல் பூரிப்பு விலாகது அவனையே பார்த்து இருந்தார்.
தன்னையே பார்த்திருக்கும் தாயாரை
கன்னம் தொட்டு” அம்மா…” என்று ஓசையை உயர்த்த தன்நிலை பெற்ற நாரயணியம்மா “வா… வா… கேஷவ்” என்று மகிழ்வாய் அவனின் கரம் பிடித்தார்
அவர் மகனின் கரத்தை பிடித்ததும் வலிதாங்கமல் ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ என்ற மகனின் கை தொட்ட இடத்தை ஆதியம்மா பார்க்க சற்று தேய்த்தவாறு ரத்தம் கசிந்து இருந்தது “அச்சோ என்னப்பா இது காயம் எப்படி?” என்று பதற
“ஒன்னும் இல்லமா, ஒன்னுமில்ல பயப்படதிங்க இது ஒரு வால் இல்லாத குரங்கால வந்தது. எனக்கு ஒன்னும் இல்லை” என்று அவரை சமாதனபடுத்தினான்.
வெகுநாளுக்கு பிறகு மகனை காயத்துடன் பார்த்ததும் ஆற்றாமையால் ” கொஞ்சம் பாத்து வந்து இருக்கக்கூடாதாப்பா…. ?!?” என்று அதை தொட்டு பார்த்து கொண்டே வேற எங்காயச்சும் காயம் உள்ளதா என மகனை ஆராய்ந்து இல்லை என்றதும் சற்றே நிம்மதி ஆனவர்.
” இப்பவாவது வந்தியே ராஜா ஏன்டா கண்ணா என்னை கூட பாக்க வரல?? என்றவர் ” அப்பாவுக்கும் புள்ளைக்கும் சண்டைனா நடுவுல நான் என்னடா பண்ணேன்???” என்று மகனை காணாத ஆதங்கத்தில் கேட்டுக்கொண்ட அவனின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டார்.
தாயின் சோகத்தை கண்டவனின் உள்ளமும் கலங்க “உங்களவிட்டு என்னால மட்டும் எப்படிமா இருக்க முடியும்??” இன்னும் கொஞ்ச நாளைக்குதானே மா… பிளீஸ் மா…கஷ்டபடாதிங்க என்னால பார்க்க முடியல….” என்று அவரை அணைத்தவன் மனதில் ஏதோ தோன்ற அவரிடம் இருந்து விலகி “உங்களுக்கு ஒன்னும் ஆகலையே??” என்று கேட்க
அவன் கேட்டதும் “என்னடா ஆகனும்?!!… நல்லாதானே இருக்கேன்”. என்று ஆதிஅம்மா கூறினார்.
தாய்க்கு ஒன்றுமில்லை எனவும் அவனின் மனது சிறிது மட்டுபட தன்னை ஏன் அண்ணன் அவசரமாக அழைத்தான் காரணம் விலங்காமல் எது எப்படியோ தாய்க்கு ஒன்றுமில்லை என்ற தெளிவே தன் பிறவிகுணம் தலை தூக்க கொஞ்சம் தன்னை நிதானித்துகொண்டு “அது சரி நா என்னமோ, ஏதோன்னு அடிச்சி ,பிடிச்சி வந்தா நல்லா இருக்கேன்னு சட்டுன்னு சாதரணமா சொல்றிங்க!!…” என்றான் குறும்பாக
மகனின் குறும்பு பேச்சை அறிந்தவர் “சாதரணமா சொல்லாம வேற எப்படிடா சொல்றது.. நல்லா திடமா கல்லாட்டம் தானடா இருக்கேன்!!.. எனக்கு என்ன வந்துச்சி!?!.. நீ சொல்றத பாத்தாதன் இப்போ ஏதோ ஆகுராப்போல இருக்கு…” என்று அவனின் காதை பிடித்து திருகி விளையாட்டாய் கூற
“ஆ…. ஆ…. அம்மா வலிக்குது” என்று கத்தியவன் “அப்பாடா இப்போதான் உங்கள பாத்து பேசினதுக்கு அப்புறம் உயிரே வருது” என்று தாயை பக்கவாட்டில் இருந்து அணைத்தான்…. “அப்புறம் ஏன்மா ஜெய் என்னை உடனே வீட்டுக்கு வர சொன்னா ரொம்ப அர்ஜென்ட் எமர்ஜென்ஸின்னு சொல்லி உடனே பாக்குனமுன்னு என்னை கூப்பிட்டான் என்று தாயிடம் விஷயத்தை உடைக்க
“என்னன்னு தெரியலையே கண்ணா.. திடுதிப்புன்னு வர சொல்லி இருக்கான்!!! அவன் வேலையா?.. இல்லா உங்க அப்பா வேலையா?.. புரியலையே ராஜா!!.. ” என்று மகனின் கைகளை பிடித்தவர் “சரி எது எப்படியோ வீட்டுக்கு வந்துட்ட இல்ல உள்ள வா பிரெஷ் ஆகு நான் சாப்பிட எடுத்து வைக்கிறேன். அதுக்குள்ள ஜாகிங் போன உங்க அண்ண வந்துடுவான் அவன் வந்ததும் கேட்கலாம்.” என்றபடி உள் அழைத்து போக .
“இங்கயா இருக்க சொல்றிங்க!!?” மை காட் முடியவே முடியாது….. என்று அவன் வேகமாக தாயின் கையை விட்டு திரும்பி நடந்தான்.
“இரண்டுபேரும் சேர்ந்து என்னை தவிக்க விடுறிங்கல?? இது எல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?? நீங்களாம் ஆம்பளைங்க அதனால தானே நீங்க உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுத்துக்கிட்டு இங்க ஒருத்திய அல்லாட வைக்கிரிங்க..” என்று வருத்தமாக ஆரம்பித்தவர் கண்ணீருடன் முடிக்க
“அம்மா பீளிஸ் மா” என்று கன்னம் பற்றியவனின் கையை இயலாமையால் தள்ளியவரை பாவமாக பார்த்தவன். “அம்மா பிளீஸ் மா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்”. என்று சமாதனபடுத்த முயன்றான்.
மகன் சொன்னதை கேட்பான் தன் கண் கலங்கினால் தங்காமல் உள்ளே வருவான் என்று நினைத்து “சரி அப்போ உள்ள வா… நீ சொல்றதை நான் கேட்கிறேன்”. என்று அழைத்து போக அவரை விட்டு விலகி நின்றவன்.
“வேனாமா நான் பிரெண்ட் வீட்டுக்கு போறேன். ஜெய் வந்ததும் சொல்லுங்க நான் வரேன்”. என்றான் பிடிவதமாக
“என்ன ராஜா இது…. சொந்த வீடு இருக்கு உள்ள வந்து ஒரு வாய் சாப்பிட கூட இல்லாம பிரெண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்றியே?” என்று கவலையும் வருத்தமுமாய் கேட்க
“அவரு ஏதாவது சொல்லுவாரு மா… வீண் வாக்குவாதம் உங்களுக்குதான் கஷ்ட்டம்”. என்று தந்தையை நினைத்து கூற
கணவனை கூறியதும் கோவம் கொண்ட மனம் “ஹோ அவரு….. உனக்கு அப்பாடா நியாபகம் இருக்கட்டும்… வாய தொறந்து அப்பான்னு சொன்னா முத்து உதிர்ந்திடுமோ அவராமே அவரு சரி அப்பா சொன்னா என்ன உன்னை இவ்வளவு தூரம் தூக்கி ஆளாக்கி உன் சொந்த கால்ல நின்னு அவர எதிர்த்து பேசுற அளவுக்கு வளத்துவிட்டவருக்கு உன்னை பேசக்கூட உரிமை இல்லையா?? இல்ல தகுதி இல்லையா?? என்று கோபமாய் பேசி கண் கலங்கி அவங்க அவங்களுக்கு அவங்க வீம்புதான் முக்கியம் என்னை யார் பார்க்க போறா??” என்று கூறி திரும்பி போக
“அம்மா சாரி மா….. இங்க பாருங்களேன்.. என்று அவரை அவன் புறம் திருப்பி அப்படியெல்லாம் இல்லமா… அப்பாவுக்கு என்னை பார்தத்தும் டென்ஷன் வரும் அதான் சொன்னேன் மா… இப்போ என்ன நான் உள்ள வருனும் அவ்வளவு தானே சரி வரேன். அவர் என்னை என்ன சொன்னாலும் அமைதியா இருக்கேன். சரியா?? சிரிமா இப்போ சிரியேன் உன் முகத்துல சிரிப்ப பாத்தாதான் உள்ள வருவேன். என்று கூறிட சிரித்தமுகமாக ஆதிநாரயணி அம்மா மகனை வீட்டிற்க்குள் கூட்டிச்சென்றார்.
(யார் என்ன சொன்னாலும் தன் முடிவில் இருந்து தளராதவன் அன்னையின் ஒரு சொல்லிற்க்கு மட்டுமே தளர்ந்து வளைந்து கொடுப்பான் அன்னையின் முந்தனையை சுற்றியே வளர்ந்தவன்)
“வா கேஷவ் என்று அவனை அழைத்து சென்றவர் போ ராஜா உன் ரூமுக்கு போய் பிரெஷ் ஆகிட்டு வா என்று அனுப்ப
மேல் தளத்தில் இருந்து “க்கும்” என்றும் கனைக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்த்தனர்.
இருவரையும் பார்த்த ராஜராமன் மனைவியிடம் “என்ன துறைக்கு இப்போதான் வழி தெரிஞ்சதா?!?.. வீட்டுக்கு வர்றத்துக்கு??” என்று மகனை குறிப்பிட்டு கேட்க
அவரின் கேள்வியில் தாயை பார்த்தவனை கொஞ்சம் இரு என்று சைகை காட்டி கணவரிடம் “என்னங்க அவனே இப்பதான் வரான் வந்தவுடனேவா புள்ளைய பேசுரிங்க?” என்று ஆதிநாரயணி மகனுக்கு பரிந்து பேசினார்.
நான் என்னடி கேட்டேன்…. தப்பா ஒன்னும் கேட்டா மாதிரி தெரியலையே…. வழி தெரிஞ்சு இருக்கான்னு தானே ஆச்சர்யமாய் கேட்டேன் என்றவர்
“போட்டோ புடிக்கிறேன். வீடியோ எடுக்குறேன்னு ஊரெல்லாம் சுத்திட்டு இருந்தவருக்கு வீட்டுக்கு வர்றத்துக்கெல்லாம் நேரம் கிடச்சிருக்கு ம்…பாரவயில்ல என்னவாம் துரைக்கு ??” என்று அவனை கேட்டபடி கம்பிரமாகவும் அதே சமயம் நிமிர்ந்த நடையுடனும் மாடியில் இருந்து கிழே இறங்கி வந்தார் ராஜாராமன்
அதற்க்கும் அமைதியாய் தன் மகன் நிலத்தினை பார்த்தபடி தலை குனிந்து இருக்க அதை பார்த்த ஆதிநாரயணி மகனிடம் நீ போட ராஜா போ என்று அனுப்பி வைத்துவிட்டு “உங்களுக்கு இப்போ என்னங்க பிரச்சனை அவன் இங்க வந்ததா?? இல்ல வராம இருக்கரதா?? இவ்ளோ நாள் கழிச்சி புள்ள இப்பதான் வீட்டுக்கு வந்திருக்கான் ஏன் இப்படி குத்தி குத்தி பேசுறிங்க??” என்று கோவம் கலந்த வருத்தத்துடன் கேட்க
“ஆதி….” என்று சத்தமாய் அழைத்து நிறுத்தியவர் “என்ன பேசுர….. நீ செல்லம் கொடுத்தே அவனை கெடுத்து வச்சிருக்க ஆதி…. அதான் சொல் பேச்சி எதுவும் கேட்காம அவன் இஷ்டப்படி இருக்கான். நான் எது சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியா செய்றான். படிக்கிறப்போ நான் சொன்ன காலேஜ் வேண்டான்னு சொன்னான். அவன் விருப்பட்ட காலேஜ்ல படிச்சான். பிரண்டஸ் சர்க்கல் அதுவும் மோசம் ஒன்னும் உருபட்டாபோல தெரியல காலேஜ்ல பாதியிலேயே பிரச்சனை அதையும் மீறி அங்கயே படிக்க வைச்சேன். சி ஏ படிச்சான் அதற்கு தகுந்தாப்போலவா வேலைல இருக்கான் சொல்லு?? உத்தியோகம் புருஷ லட்சணம்ன்னு கேள்வி பட்டதில்லையா ஆதி ?? எனக்கு போட்டோகிராபிதான் புடிக்குன்னு அதுல சுத்திட்டு இருக்கான். எடுத்து அவனுக்கு சொல்ல வேண்டிய நீயும் பாத்துக்கிட்டு இருக்க!!” என்று மனைவியிடம் கோவமாக கூற
“தப்புதான்….. அவன் படிச்சதுக்கு பொருத்தமான வேலைக்கு போகல… நான் என்னன்னு சொல்றது அவன்கிட்ட…. எனக்கும் கஷ்ட்டம் தான் உங்க சொல்ல கேக்காம இருக்கரது… இப்படி சுத்தரது… ஆனா அவனுக்கும் ஒரு மனசு இருக்குங்க அவன் விருப்பப்படி இருக்க உரிமை இல்லையா சொல்லுங்க…. பசங்க அவங்களுக்கு எது விருப்பமோ அததானேங்க செய்றாங்க அதுக்குன்னு பெத்தபுள்ளைய ஒதுக்கி தள்ள முடியாதே இது அவனோட வாழ்க்கை அதுல அவன் கோட்ட விடுவானா சொல்லுங்க நம்ம புள்ள அவனுக்கு புடிச்ச துறையில சாதிக்கனுமுன்னு ஆசைபடுறான் அதுக்கு நாம பக்கபலமா இருக்கலனாலும் பரவயில்லை எதுக்கெடுத்தாலும் நீ செய்றது தப்பு தப்புன்னு சொல்லி அவனோட தன்னம்பிக்கைய குறைக்க கூடாது… சரி அவன் நீங்க சொல்றத கேக்கவே மாட்டேன்னு சொன்னான சொல்லுங்க??” என்று கணவனுக்கு புரிய வைக்கும் நோக்கோடு கூற
“இப்படியே அவன் செய்றதுக்கும் சொல்றதுக்கும் நீ சப்போர்ட் பண்ணிட்டிரு அவன் உருப்பட்டுவான். நான் சொன்ன கேடு முடிய இன்னும் 1வாரம் தான் இருக்கு அவன் படிச்ச படிப்புக்கு தகுந்தா போல வேலைய தேடிக்கனும் புரியுதா??… இல்ல என் முடிவுதான் பைனாலா இருக்கும். அப்புறம் அய்யோன்னாலும் வராது… அம்மானாலும் வராது… உன் அருமை புத்தரனுக்கு புரியுரா மாதிரி எடுத்து சொல்லு” என்று கூறியவர் எஸ்டேட்டிற்க்கு செல்வதாக கூறி சென்றார்.
ஓட்டபயிற்ச்சிக்கு சென்ற ஜெயந்ந் வீட்டிற்க்கு முன்னால் நின்ற பைக்கினை பார்த்துவிட்டு புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் .
வெள்ளை டிரக்சும் வெள்ளை டீ சர்ட்டுடனும் இருந்தவன் துவாலையில் முகத்தை துடைத்தபடி அம்மா என்று அழைக்க காபியுடன் மகனிடம் வந்தார்.
புன்னகை மாறாமல் அவரை பார்த்தவன் “எதுக்கு டா தம்பிய வர சொல்லி இருக்க ?”
காபியை பருகிக்கொண்டே “வரசொல்லிதான் இருந்தேன் பரவயில்ல இவ்வளவு சீக்கிரம் வந்துட்டான்!!! . ம்… அம்மா அவன் எங்க?” என்று அன்னையை கேட்க
“அவன் ரூம்ல இருக்கான்ப்பா .. பிரஷ்ஷாக சொல்லி இருக்கேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே ஜெய்…” என்று மகனை கேட்க
“அது ஒன்னுமில்லை மா அவன்கிட்ட பேசிட்டு வந்து சொல்றேன்.” என்றவன் “நானும் ஆபிஸ் போகனும் பிரெஷ் ஆகிட்டு வரேன்”. என்றுவிட்டு அறைக்கு சென்றான்.
அண்ணன் தம்பி இருவரும் ஒரே சமயம் சாப்பாட்டு கூடத்திற்க்கு வந்தமர்ந்தனர். அண்ணனை பார்த்தவன் சிறு கடுப்புடன் “என்ன ஜெய் அவசரமா கூப்பிட்ட.??” எதுக்கு எமர்ஜென்ஸின்னு சொல்லி என்னை அவசரமா வரவெச்ச…??” என்று கடுபடித்த குரலுடன் கேட்க
“இப்போதானே வந்திருக்க சொல்றேன். உன்கிட்ட சொல்லாம இந்த வேலை செய்ய முடியாது… என்று கூறியவன் தாய் வரும் அரவம் கேட்டதும் வெளியே போய் பேசிக்கலாம் இப்போ சாப்பிடு” என்று கூற அவனும் சாப்பிட்டு விட்டு இருவரும் வேளியே போய்வருவதாக கூறி தம்பியின் பைக்கில் வெளியே சென்றனர்.
நெடுந்துர பயணமாய் சென்றவர்கள் ஒரு அழகான புல்வெளியில் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.
“இப்போ சொல்லுடா என்ன விஷயம் இப்படி காடு மேடு தாண்டி கூட்டிட்டு வந்து இருக்க ஏதாவது லவ் மேட்டரா? என்றான் கேஷவ்.